Tuesday, 27 August 2013



இந்தியாவில் இஸ்லாம்

ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒரு இறைத்தூதர் வந்திருக்கிறாரென்றால் இந்தியாவுக்கு வந்த இறைத்தூதர் யார்? என்றகேள்வி எழுகிறது. நூஹ் (அலை) அவர்களாக இருக்கக் கூடும், என்ற கருத்தை வலுவூட்டக் கூடிய ஆதாரங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். ஹிந்து மதத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் நாற்பது வருடங்களாக ஆய்வு செய்த A.J.A. Dubois என்ற ஆய்வாளர் Hindumanners Customs&Ceremonies என்ற நூலில், ஹிந்துக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பிரபல்லியமான நபர் Mahanuvu என்ற பெயரில் அறியப்படுகிறார். மகா என்றால் சிறந்த, மாபெரும் என்று பொருள். நூவ் என்பது இறைத்தூதர் நூஹ் நபியாவார், என்று கூறுகிறார். ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் தஹ்லவீ (ரஹ்) அவர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஸாபியீன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப் படும் சமுதாயத்தை ஆரியர்கள் என்று கூறுகிறார்கள். நூஹ் நபி எங்கு வாழ்ந்தார்கள் என்பதை திருக்குர்ஆன் தெளிவாகக் கூறாவிட்டாலும் பிரளயத்திற்குப் பின் அவர்களுடைய கப்பல் ஜூதீ என்ற மலைப்பகுதியில் ஒதுங்கியதாக கூறப்பட்டுள்ளது. தௌராத்தில் அராராத் என்ற இடம் கூறப்பட்டுள்ளது. அராராத் மலையின் ஒரு பகுதி தான் ஜூதி, இந்த இடம் இன்றைய இராக் நாட்டில் (ஈரான், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில்) உள்ளது. பிரளயத்தை விட்டும் தப்பிப்பதற்காக நூஹ் நபி கப்பல் கட்டியிருந்தார்கள். தன்னூரில் நீர் பொங்கினால் உடனடியாக கப்பலில் ஏறிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தன்னூர் என்றால் அடுப்பு என்ற பொருள் இருந்தாலும் திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஷௌகானீ (ரஹ்) அவர்கள் தன்னூர், இந்தியாவில் உள்ள ஒரு இடத்திற்குப் பெயர் என்று கூறியுள்ளார்கள். இந்த ஊரை நாம் தேடும் போது கேரள மாநிலத்தில் இருப்பதாக அறிகிறோம். Malapuram மாவட்டத்தில் Tanur என்று ஒரு ஊர் உள்ளது. நூஹ் நபியின் சந்ததிகளில் சிந்து, ஹிந்து ஆகிய இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களுடைய பெயரில் தான் இரு பகுதிகளும் அமையப் பெற்றிருப்பதாக வரலாற்றாசிரியர் யாகூத்தெ ஹமவீ கூறுகிறார்கள். (நூல்: அகர் அப் பீ ன ஜாகேதோ....)  இது தவிர நோவா (நூஹ்) தமிழன், என்றும் அவருடைய மக்களும் தமிழ்ப் பெயரையே கொண்டிருந்ததாகவும் தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆதாம் (ஆதம் அலை) பேசிய தமிழ் என்றும் ஔவை, ஹவ்வா (ஆதம் நபியின் மனைவி) இரண்டும் ஒன்றே என்றும் அவர்கள் கூறுகின்றனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப்பின் நான்கு வருடத்திற்குள்ளாகவே நபித் தோழர்கள் இந்தியாவுக்கு வர ஆரம்பித்துவிட்டனர். அரேபிய வியாபாரிகளும் இந்தியாவில் இஸ்லாம் பரவுவதற்குக் காரணமாக இருந்தனர். ஏறத்தாழ 25 நபித்தோழர்கள் இந்தியாவுக்கு வந்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.                                                          

No comments:

Post a Comment