செப் - 24- 2013
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம்
ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட
மாநிலங்களிலும் உணரப்பட்டது.நில அதிர்வு காரணமாக கட்டடம் குலுங்கியதால்
மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்..
இந்த நிலநடுக்கம்
பாகிஸ்தானின்தென்கிழக்கே250 கி.மீ. தொலைவில் உள்ளபலுசிஸ்தான் மாகாணத்தினை
மையமாக கொண்டு நிகழ்ந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரிக்டர் அளவு
கோலில்7.8 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்க்த்தில் 80 பேர்
பலியானார்கள். நேற்று7.7என்ற ரிக்டர் அளவில் பாகிஸ்தானை மையாக வைத்து
கடுமையான பூகம்பம் உருவானது.இந்த பூகம்பத்தில் 80 பேர் பலியானார்கள்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடாக
உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலி எண்ணிக்கைஅதிகரிக்கக்கூடும் என
அஞ்சப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.பாகிஸ்தானின்
பாலுசிஸ்தான் மாகாணத்தின்அவரான் மாவட்டத்தில் தான் பலி எண்ணிக்கை அதிகமாக
உள்ளதாக கூறப்படுகிறது.
கராச்சி, ஐதராபாத், லர்கானா மற்றும் சிந்து
மாகாணத்தின் ஒரு சில நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. லாகூர்,
ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களிலும்நில அதிர்வு உணரப்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில நிமிடங்கள் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் அலறியடித்து வெறியேறினர்.
சுனாமி - ஜப்பானியச் சொல். சு என்றால் துறைமுகம். நாமி
என்றால் அலை. துறைமுகத்தையே நாசப்படுத்தும் அலை என்பதால் சுனாமி என்பர். ஆனால் அந்த
சுனாமி துறைமுகத்தை மட்டுமல்ல. துணைக்கண்டத்தையே நாசப்படுத்துவது ஒரு புறமென்றால் இன்று
சுனாமி என்ற் வார்த்தை முழு உலகையும் அச்சுறுத்தக் கூடியதாக மாறிவிட்டது.
எந்த நிமிடத்தில்
என்ன நடக்கும்? என்று தெரியவில்லை. எங்காவது பூகம்பம் என்றால் இங்குள்ள கடற்கரைகளெல்லாம் வெறிச்சோடி
விடுகின்றன. கட்டிடங்கள் காலியாகி விடுகின்றன. மருத்துவமனைகள் மரத்தடிக்கு மாறிவிடுகின்றன.
டான்ஸ் ஆடுபவர்கள் எப்படியெப்படியோ ஆடியிடுப்பார்கள். ஆனால் மேஜைகளின் இந்த லேசான ஆட்டத்திற்கு
அனைவரும் ஆடிப்போய்விட்டனர்.
இந்த பூகம்பத்திற்கே இவ்வளவு பயம் என்றால் மறுமை வேதனை
எவ்வளவு மகாக் கொடியது? வியாபாரத்தில் ஏற்படும் சிறு நஷ்டத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு
பெருநஷ்டத்தை விட்டும் தவிர்ந்து கொள்வதற்காக என்னென்ன திட்டமெல்லாம் தீட்டுகிறோம்.
மறுமை வேதனையை ஞாபகப்படுத்தக்கூடிய இந்த பேரழிவுகள் எனும் சிறு வேதனையின் மூலம் ஏன்
படிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடாது. அவர்களுக்கு (மறுமையில்) பெருவேதனை வருவதற்கு முன்
இவர்களுக்கு (இவ்வுலகில்) சொற்ப வேதனை நாம் சுவைக்கச் செய்வோம். இவர்கள் (தங்களது பாவங்களை
விட்டு) விலகிவிடக்கூடும், என்பதற்காக! (அல்குர்ஆன் - 32:21)
எப்பொழுதாவது நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் அந்தச்
சமயத்தில் மட்டும் மக்களுக்கு அது பற்றிய சிந்தனை
இருக்கும், சில நாட்களுகுப் பிறகு மீண்டும் தங்களுடைய பழைய (பாவங்கள் நிறைந்த) வாழ்க்கைக்கு
திரும்பி விடுகின்றனர். அல்லது எங்காவது ஆபத்து நடந்தால் நமக்கென்ன? என்று இருந்து விடுகின்றனர்.
ஆனால் உலகில் கொடுக்கப்டும் தண்டனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை என்றால் சுற்றி
இருப்பவர்களுக்கு பாவத்தை விட்டும் மீள்வதற்கான படிப்பினையாக அமைய வேண்டும். மேலும்
உங்களில் எவர்கள் சனிக்கிழமை வரம்பு மீறினார்களோ அவர்களைத் திட்டமாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
அப்பொழுது அவர்களுக்கு நீங்கள் சிறுமை அடைந்த குரங்குகளாகி விடுங்கள் என்று நாம் கூறினோம்.
எனவே அதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும் அதற்குப் பின் வருவோருக்கும் படிப்பினையாகவும்
(நம்மை) அஞ்சியவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் - 2:65,
66)
இன்று முழு உலகமும்
ஒரு கிராமம் போல் ஆகிவிட்டது. எங்கு என்ன நடந்தாலும் உடனடியாக உலகம் முழுவதும் தகவல்
பரவிவிடுகிறது. இன்று ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் தானே பூகம்பம் ஏற்பட்டுள்ளது,
என்று தைரியமாக இருந்துவிட
முடியாது. இந்தோனேஸியாவில் நிலநடுக்கமென்றால் இந்தியாவும் இலங்கையும் நடுங்குமளவுக்கு
அல்லாஹ்வின் தண்டனை அமைந்து விட்டது.
பல நாடுகளுக்கு
சுனாமி எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் எதுவும் நடப்பதில்லை. இது போன்று இவர்களுடைய
அதிகமான எச்சரிக்கைகள் பீதியைக் கிளப்புவதற்குத் தான் பயன்படுகின்றன. அல்லாஹ் நாடி
விட்டால் அறிவாளிகளின் அறிவையே மயக்கமடையச் செய்துவிடுகிறான். நீண்ட நேரம் ஆகியும்
சுனாமி வராததால் எச்சரிக்கையை வாபஸ் பெற்றனர். பிறகு சுனாமி ஏற்படாததற்கு ஒரு காரணத்தையும்
சொல்லிக்கொண்டிருக்கின்றனர். எச்சரிக்கை விடுக்கும் போது இந்த காரணம் தெரியாமல் போய்விட்டது.
குர்ஆனில் சுனாமி:
வஇயிதல் பிஹாரு ஃபுஜ்ஜிரத் சமுத்திரங்கள் ஓட்டிவிடப்படும்
போது, வஇதல்
பிஹாரு சுஜ்ஜிரத் கடல்கள் தீ மூட்டப்படும் போது - இவை உலக அழிவின் போது நிகழும் நிகழ்வுகள்.
இன்றைய கடல் கொந்தளிப்புகளை இந்நிகழ்வுகளின் நினைவூட்டலாகவும் சாம்பிலாகவும் உணர முடிகிறது.
ஹிஜ்ரி 20 ஆம்
ஆண்டு உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் நிலநடுக்கம் வந்தது. அப்பொழுது தங்களுடைய
காலால் அடித்து, பூமியே! நீ ஏன் நடுங்குகிறாய்? உமர் உன் மீது நேர்மையான ஆட்சி புரியவில்லையா? என்று கேட்டார்கள். உடனடியாக
நடுக்கம் நின்றுவிட்டது.
பிறகு ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டில்
நிலநடுக்கம் ஏற்பட்டது. அது நாற்பது நாற்கள் வரை நீடித்தது. ஹிஜ்ரி 223 ஆம் ஆண்டு கிரானடாவில் நிலநடுக்கம்
ஏற்பட்டது. முழு நகரிலும் ஒரே ஒரு மனிதர் தான் தப்பமுடிந்தது. அனைவரும் மாண்டுவிட்டனர்.
1917 ஆம் ஆண்டு
இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு லட்சம் பேர் மரணித்தனர்.
1993 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா
(அமெரிக்கா) வில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த இடத்தை மௌலானா பீர் துல்பிகார் ஸாஹிப்
தாமத் பரகாதுஹும் அவர்கள் நேரில் கண்டதை பின்வருமாறு கூறுகிறார்கள்: மூன்று நிமிடம்
நீடித்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய கட்டிடங்களெல்லாம் இடிந்து விழூந்து விட்டன. ஆனால்,
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த
இடத்திலிருந்து 20 மீட்டர் தூரத்தில் ஒரு பள்ளிவாசல் இருந்தது. அப்பள்ளியின் ஒரு செங்கல் கூட விழவில்லை.
(ஜல்ஜலா... முஷாஹதாதோ வாகிஆத்)
இன்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மூலம் ஆயிரக்கணக்கான
கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கடற்கறைகளையும் நாசப்படுத்திவிட்டன. ஏறத்தாழ இரண்டு
லட்சத்து 22,000 பேர் இதில் மாண்டுபோயினர். தண்டனை கொடுக்கப்பட வேண்டிய இடத்திற்கு ஆயிரக்கணக்கானகி.மீட்டர்களுக்கு
அப்பால் இந்த ராட்சஸ அலைகள் தோன்றுகின்றன.
இறைக்கட்டளைப்படி புறப்படும் சுனாமி:
இந்தோனிசியக் கடலில் ஏற்பட்ட ராட்சஸ அலைகள் சுமார் 2000 கி.மீ. தூரத்தைக் கடந்து
வந்து தமிழகக் கரையைத் தாக்கின. 600 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை இந்த அலைகள். அவை கடலுக்கடியிலேயே
பயணிக்கின்றன. சுனாமி அலைகளால் நடுக்கடலில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
நடுக்கடலில் அதன் உயரம் ஒரு அடி மட்டுமே இருக்கும். வழியில் நடுக்கடலில் வரும் கப்பலையோ
படகையோ இந்த அலை எதுவும் செய்யாது. கடற்கரையைத் தாக்குவதற்காகவே அனுப்பப்பட்டவை அந்த
அலைகள். அல்லாஹ் எந்த இடத்தில் அழிவை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தானோ அவ்விடத்தை நோக்கியே
இந்த அலைகள் பயணிக்கின்றன. கடலுக்கடியில் ஒரு அடியாக இருந்த அலைகள் தாக்க வேண்டிய இடத்தை
அடைந்தவுடன் அவை 50 அடி வரை உயர்ந்து விடுகிறன்றன. நகரங்களையும் பட்டிதொட்டிகளையும் நாசமாக்கி விடுகின்றன.
கத்ரீனா, ரீடா:
உலகின் சட்டாம்பிள்ளையாக இருக்கும் அமெரிக்காவையும் இயற்கைச்
சீற்றம் விட்டு வைக்கவில்லை. அங்கு தான் நாஸாவும் உள்ளது. அதன் நிபுணர்கள்,
பூமிக்கு அடியிலும்
அதற்கு மேலேயும் உள்ள எதுவும் தங்களுக்கு தெரியாமல் போய்விட முடியாது, என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் கத்ரீனா, ரீட்டா புயல் வருவதை அவர்களால் அறியமுடிய வில்லை. அமெரிக்காவுடைய ஒரு பெரிய நகரத்தின்
மீது வெள்ளம் பாய்ந்தோடியது. முழு நகரமும் மூழ்கிவிட்டது. அதில் 25,000 பேர் இறந்து போயினர். ஒன்றரை
லட்சம் கட்டிடங்கள் தரைமட்டமாயின.
நிலநடுக்கம்
ஏன்?
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நிலநடுக்கம்
ஏன் ஏற்படுகிறது? என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் மூன்று காரணங்களைக் கூறினார்கள். 1.
பெண்கள் அந்நிய ஆண்களுக்காக
(வெளியே செல்லும் போது, திருமண நிகழ்சிகளுக்கு செல்லும் போது, பள்ளிக்கூடம், காலேஜ் செல்லும் போது) நறுமணம்
பூசும்போது நிலநடுக்கம் ஏற்படும். 2. பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் நிர்வாணமாக இருப்பதில்
கூச்சப்படமாட்டார்கள். (விபச்சாரம் பரவலாகி விடும். 3. மதுவும் இசையும் பரவலாகிவிடும். இவையெல்லாம்
நடக்க ஆரம்பித்துவிட்டால் நிலநடுக்கத்தை எதிர்பார்க்கலாம். (ஜல்ஜலா ... முஷாஹதாதோவாகிஆத்
- முஸ்தத்ரக் ஹாகிம் - 8575)
எந்த சமுதாயத்தில் வட்டியும் விபச்சாரமும் சர்வசாதாரணமாக
நடக்க ஆரம்பித்துவிடுமோ அவர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்கிக்
கொள்கிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத் - 3809)
இன்று இந்த இரண்டு பாவங்களும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.
உலகின் பொருளாதாரமே வட்டியின் மீது தான் அஸ்திவாரமிடப்பட்டிருக்கிறது. விகாரமான அசிங்கமான
காரியங்கள் சட்டஅங்கீகாரம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. முளஃபராபாதில் ஒரு தடவை நிலநடுக்கம்
ஏற்பட்டது. அங்கு ஒருஹோட்டலில் இசைத்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதில் இளம் வயது
ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அப்பொழூது ஏற்பட்ட நிலநடுக்கத்தில அந்த ஹோட்டல்
புதையுண்டு போனது. பிறகு, மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டபோது அரைநிர்வாணத்தில் ஆண்கள்,
பெண்களுடைய சடலங்கள்
மீட்கப்பட்டன. (ஜல்ஜலா.... முஷாஹதாதோ வாகிஆத்)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது போல் இசையும் இன்று
பரவலாகிவிட்டது. அதைவிட்டும் தப்பிக்க நினைத்தாலும் தப்பிக்க முடிவதில்லை. பயணத்தில்
இருந்தாலும் இசை. பள்ளிவாசலுக்கு வந்தாலும் மொபைல் இசை. செல்போன் இசை எந்த இடத்தையும்
விட்டு வைக்கவில்லை. முஸ்லிமல்லாதர்கள் ஹரமுக்குள் வரக்கூடாது. ஆனால் அவர்களுடைய இசை
எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தவாஃப் செய்யும் போதும் செல்போன்
இசை. ஜியாரா செய்யும் போதும் கைபேசி இசை.
டைட்டானிக்:
இறைவனை மட்டுமே நினைக்க வேண்டிய பேரபாயத்தைக் கடந்து செல்லும்
கப்பல்களில் கூட நாடக அரங்கு, திரைப்படத் தியேட்டர், சொகுசு ஹோட்டல், நீச்சல் குளம் போன்றவை இருக்கின்றன.
டைட்டானிக் என்ற சொகுசுக்கப்பல் மூழ்கியது நவீன கப்பல் பயணத்தின் மிகப் பெரிய வடு.
மேற்கத்திலய பணக்கார நாட்டவர் அதை லேஸில் மறக்கமாட்டார்கள்.
அல்லாஹ்வை நினைக்க வேண்டிய
கடலில் ஆடம்பரமும் உல்லாசமும் உச்சகட்டத்தை அடைந்தால் அல்லாஹ்வின் கருணை எங்கிருந்து
கிடைக்கப்போகிறது? 1912 ல் டைட்டானிக் தன்னுடைய முதல் பயணத்திலேயே பெரிய பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
இதில் 1500 பேர்
இறந்தனர். அந்தக் கப்பல் மூழ்கிய இடத்தல் இன்றும் ஆராய்ச்சி நடக்கிறது. இன்றும் கடலுக்கடியில்
கிடைக்கும் பழைய அலங்காரப் பொருள்கள் எல்லாம் ரொம்பத் தலைக் கிறுக்கி ஆடாதே! என்று
மனிதனுக்கான எச்சரிக்கைகள். (வினவுஙக்ள் விடைதருவோம்)
பாவத்தில் மூழ்கிக்கிடப்பவர்களை
தலை தூக்கிப்பார்ப்பதற்கே இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இரத்த ஓட்டம் சீராக நடப்பதற்கு
இதயம் இயங்குகிறது. அவ்வாறே இறைதியானத்திலும் இதயம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
இதில் குறை ஏற்பட்டுவிட்டால் மாரட்பபு வருவது போல் நிலநடுக்கமும் ஏற்படுகிறது. நபி
(ஸல் அவர்களுடைய காலத்தில் ஒரு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. நபியவர்கள் தங்களுடைய கரங்களை
நிலத்தின் மீது வைத்தார்கள். நிறுத்து! இன்னும் உனக்கு நிலநடுக்கத்திற்கான உத்தரவு
வரவில்லை, என்று
கூறினார்கள். பிறகு தோழர்களை முன்னோக்கி, நீங்கள் பாவமன்னிப்பு தேடவேண்டுமென்று உங்களுடைய இரட்சகன்
விரும்புகிறான். எனவே நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று கூறினார்கள். பிறகு உமர்
(ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பொழுது உமர் (ரலி) அவர்கள்
மக்களிடம், நீங்கள் புதிது புதிதாக செய்யும் (பாவங்களினால் தான்) நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் நான் உங்களுடைன் ஒருபோதும் இருக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
(அல்உகூபாத்- 18)
உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு தடவை ஒரு
சட்ட மசோதாவை எழுதி தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பெரிய பெரிய நகரங்களுக்கு அதை அனுப்பிவைத்தார்கள்.
அதில் அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்கள்: எங்காவது நிலநடுக்கம் ஏற்பட்டால் நீங்கள்
நான்கு காரியங்களைச் செய்ய வேண்டும். 1. ஆரம்பமாக அல்லாஹ்விடம் தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பு
தேடவேண்டும். இஸ்திக்பார் செய்யவேண்டும். நாம் செய்த பாவங்களை அல்லாஹ்வுக்கு முன்னிலையில்
ஏற்றுக்கொள்ள வேண்டும். 2. நீங்கள் தனித்தனியாக அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். கெஞ்ச
வேண்டும். வீட்டிலோ அல்லது மஸ்ஜிதிலோ தனித்தனியாக துஆ செய்ய வேண்டும். 3. விரும்பினால் அனைவரும் மைதானாத்திற்கு
சென்று துஆ செய்யலாம். 4. உங்களுடைய செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் ஸதகா செய்ய வேண்டும்.
தர்மம் வரக்கூடிய பேராபத்துகளை நிறுத்திவிடுகிறது. (அல்ஜவாபுல் காஃபீ- ஐல்ஐலா)
நல்லவர்களுக்கும்:
சுனாமி, பூகம்பம் போன்ற பேராபத்துகளில் ஏராளமான நல்லவர்களும் சிக்கிக்கொள்கிறார்களே!
என்ற கேள்வி எழலாம். ஆனால் உலகில் தீமைகள் மிகைத்துவிட்டால் வரக்கூடிய அழிவு நல்லவர்களையும்
விட்டுவைக்காது. தீமைகள் நடக்கும் போது அதைத் தடுப்பதற்கு முனைய வேண்டும். நமக்கென்ன?
என்று இருந்துவிட்டால்
அது நல்லவர்களையும் தாக்கும். சமூகத்தில் பாவங்கள் மலிந்து விடுவதைப் பார்த்தபின்பும்
மக்கள் அவற்றைத் தடுக்கவில்லையானால் அநியாயக்காரன் அநியாயம் செய்வதை பார்த்த பின்பும்
அவனைத் தடுக்கவில்லையானால் அல்லாஹ்வின் வேதனை அனைவரின் மீதும் வருவது நெருக்கமாகிவிடும்,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அபூதாவூத்)
எனவே, இது போன்ற ஆபத்துகள் வருவதற்கு முன் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும்
காரியத்தில் ஈடுபடவேண்டும். அப்படி ஏதாவது ஆபத்து உலகில் எங்காவது நிகழ்ந்து விட்டாலும்
அது உலகின் மற்றமக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒர்
இடத்தில் வேதனை இறங்கினால் அது நல்லோர் பொல்லோர் எல்லோருக்கும் அது வேதனையாகி விடாது.
நல்லவர்களுக்கு அது அந்தஸ்தை உயரச்செய்து விடும். மரணிப்பவர்களில் அதிகமானோர் நோன்பாளிகளாக
இருக்கலாம். திடீர் மரணம் கூட ஷஹிதுடைய அந்தஸ்தைத் தேடித்தந்துவிடும். எனவே,
எங்கு வேதனை வருகிறதோ
அங்குள்ள அனைவரையும் பாவிகளாக எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு மனிதரும் தங்களைத் தாங்களே
குற்றவாளிகளாகக் கருத வேண்டும். அல்லாஹ்வின்பால் மீள வேண்டும்.
No comments:
Post a Comment