Monday, 27 January 2014

புனிதம் நிறைந்த நிகாஹ்


:
وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ 


وَاسِعٌ عَلِيمٌ (32)



وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ 



أَجَلٍ كِتَابٌ


உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும் அவர்களை நாம் மனைவி மக்களுடையவர்களாகவே ஆக்கிவைத்திருக்கிறோம். (அல்குர்ஆன்- 13:38) நல்லவர்களுக்கு மனைவிமார்கள் இருக்கக் கூடாது என்ற கொள்கை நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. இறைத்தூதர்கள் இறைவனோடு மட்டும் தானே தொடர்பு கொள்ள வேண்டும். மனைவியோடு தொடர்பெதற்கு? என்று நினைக்கலாம். இறைத்தொடர்பு இறுதியாவதற்கு இணைத் தொடர்பும் அவசியம் என்பதை அவர்கள் உணரவில்லை.

முன்னர் வந்த நபிமார்களுக்கும் மனைவிமார்கள் இருந்திருக்கின்றனர். வழிகாட்டிகள் திருமணம் முடிப்பது மார்க்கத்திற்கு முரணல்ல, என்பது தவிர மனைவிமக்களுடன் வாழ்வது தான் மனிதனின் இயற்கை என்பதையும் இந்த வசனம் உணர்த்துகிறது.

1846- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ ، حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ ، عَنِ الْقَاسِمِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : النِّكَاحُ مِنْ سُنَّتِي ، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي , فَلَيْسَ مِنِّي ، وَتَزَوَّجُوا ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ.
 رواه ابن ماجه


நிகாஹ் எனது வழிமுறை, என்று கூறிய நபி (ஸல்( அவர்கள் வெட்கம், நறுமணம் பூசுவது, மிஸ்வாக் (பல் துலக்குவது), திருமணம் முடிப்பது ஆகிய நான்கும் நபிமார்களின் வழிமுறை என்றும் கூறினார்கள். அகசுத்தம், புறசுத்தம் இரண்டையுமே இறைத்தூதர்களின் இனிய பண்புகளாக இந்த நபிமொழி கூறுகிறது. குளிக்காமல் அழுக்குடன் துர்நாற்றத்துடன் இருப்பதையும் திருணம் முடிக்காமல் வெட்கக்கேடான காரியங்களில் ஈடுபடுவதையும் யார் தான் ஏற்றுக்கொள்ள முடியும்

எந்தக் கல்வியறிவும் இல்லாத மௌட்டீக காலத்தில் கண்ணியமிகு கஃபாவை வெட்கமின்றி நிர்வாணமாக வலம் வந்து விட்டு அது தான் புண்ணியம் நிறைந்தது, என்றும் கடவுள் அப்படித்தான் உத்தரவிட்டிருக்கிறார், என்றும் வியாக்கியானம் பேசிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து மானக்கேடானவற்றைச் செய்யும்படி அல்லாஹ் எப்பபோதும் உத்தரவிடமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கிறீர்களா?, என்று குர்ஆன் கேட்டது. (7:28)
பெண்களே ஷைத்தானுடைய ஆயுதம்:

عن أبي ذر قال : دخل على رسول الله صلى الله عليه و سلم رجل يقال له عكاف


بن بشر التميمي فقال له النبي صلى الله عليه و سلم يا عكاف

هل لك من زوجة قال لا قال ولا 

جارية قال ولا جارية قال وأنت موسر بخير قال وأنا موسر بخير قال أنت إذا من إخوان الشياطين لو 

كنت في النصارى كنت من رهبانهم ان سنتنا النكاح شراركم عزابكم

இஸ்லாத்தைப் போல் வேறெந்த மதமும் திருமணத்திற்கு ஆர்வமூட்டியிருக்க முடியாது. எல்லா வசதியுமிருந்து கல்யாணம் செய்யாமல் இருந்த அக்காஃர் (ரலி) அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கடுமையான வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள். 

அக்காஃபே! நீர் ஷைத்தானுடைய சகோதரர். கிருத்தவ மதத்தில் இருந்திருந்தால் அவர்களில் ஒரு துறவியாக இருந்திருப்பீர். திருமணம் செய்வது தான் நம்முடைய நெறிமுறை. உங்களில் மோசமானவர்கள் பிரமச்சாரிகள் தான். இறந்தவர்களில் கேவலமானவர்களும் பிரமச்சாரிகள் தான். ஷைத்தானிய செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? ஷைத்தானிடத்தில் திருமணமானவர்களைத் தவிர நல்லடியார்களுக்கெதிராக பெண்களை விட காரியமாகக்கூடிய ஆயுதம் வேறெதுவும் கிடையாது.

மணமுடித்தவர்களே பரிசுத்தவான்கள். (அவர்கள் தான்) அருவருப்பான பேச்சுக்களை விட்டும் விலகியிருப்பார்கள்.... இது போன்ற கடுமையான எச்சரிக்கைகளைக் கேட்ட அக்காஃப் (ரலி) அவர்கள் உடனடியாக அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டார்கள். (முஸ்னத் அஹ்மத் - 5/164)


பிரமச்சாரியம் சமூகத்தில் புண்ணியம் நிறைந்தது, என்று கருதும் சமூகத்தில் குடும்பத்துடன் வாழ்பவன். தான் பரிசுத்தவான், என்று பகிரங்கமாக அறிவிக்கிறது இஸ்லாம்.


இயலாமை, பாவம் ஆகிய இரண்டைத் தவிர வேறெதுவும் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காது, என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இஹ்யாவு உலூமித்தீன்) விபச்சாரத்தின் மீது ஆர்வம் கொண்டவன் நிகாஹ் முடிக்க மாட்டான். அவ்வாறே திருமணம் செய்து கொள்ள சக்தி பெறாதவனும் திருமணம் செய்து கொள்ளமாட்டான். மதத்தின் பெயரால் திருமணம் செய்யாமல் இருப்பது இஸ்லாத்தில் கிடையாது.

திருமணமாகாத நிலையில் அல்லாஹ்வை சந்திக்கக்கூடாது, என்பதற்காக என்னுடைய ஆயள் காலத்தில் பத்து நாட்கள் இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதையே நான் பிரியப்படுவேன், என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

மஆது பின் ஜபல் (ரலி) அவர்கள் தங்களுடைய மரண வியாதியிலும் கூட எனக்கு திருமணம் முடித்து வையுங்கள். நான் திருமணமாகாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பதை நான் வெறுக்கிறேன், என்று கூறினார்கள். (இஹ்யா)

போர்ப்பிரகடனம்:

தகிய்யுத்தீனுஸ்ஸுபுகீ (ரஹ்) அவர்கள், திருணம் முடிப்பது மனிதனுடைய இயல்பு. எனவே, அதை மார்க்க ரீதியாக கட்டாயமாக்கத் தேவையில்லை, என்றாலும் ஓர் ஊர்வாசிகள் திருமணத்தை வெறுத்து விட்டார்களென்றால் அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று போர்ப்பிரகடனம் செய்துள்ளார்கள். (அல்உலமாவுல் உஜ்ஜாப்)


காது செவிடாகிவிடும்:
இறையச்சத்திற்குப் பிறகு (ஸாலிஹான) சிறந்த மனைவியைத் தவிர வேறெதையும் தனக்கு நல்லதாக ஒரு முஸ்லிம் பெற்றுக்கொள்ளமாட்டார், என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். (இப்னுமாஜா)


ஒரு மனிதன் பாவத்தை விட்டும் விலகவேண்டுமென்றால் முதலில் இறையச்சம் தேவை. தக்வா இல்லாமல் பாவங்களை விட்டும் தப்ப முடியாது. நல்லடியார்கைளக் கூட ஷைத்தான் பெண்களின் மூலம் பாவத்தில் சிக்க வைத்துவிடுகிறான், என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, இறையச்சத்தை அடுத்து அவனுக்கு பொருத்தமான மனைவிதான் பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள தகுநத ஆயுதமாக பயன்படுத்துகிறான்.

சிறந்த மனைவியை அல்லாஹ்யாருக்கு வழங்கிவிட்டானோ அவருடைய பகுதி மார்க்கத்தில உதவி செய்துவிட்டான். மற்றொரு பகுதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளட்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்)

காமம் கண்ணைக் குருடாக்கும். காதைச் செவிடாக்கும். அறிவை மழுங்கடித்து விடும். அபூமுஸ்லிமுல் கவ்லானி (ரஹ்) அவர்கள், உடலுறவு கொள்வதின் பால் (பெண்ணின் மீது) உள்ள தேட்டமும் ஆசையும் மோசமானது. அந்த மோகம் வந்து விட்டால் சரியான யோசனையோ சிந்தனையோ இருக்காது. சொல்லப்போனால் அவனுக்கு காதே இருக்காது, என்று கூறினார்கள். (அல் உலமாவுல் உஜ்ஜாப்) 

அதாவது, அவனுக்கு சொல்புத்தியும் இருக்காது. சுய புத்தியும் இருக்காது. உபதேசத்தைக் கேட்கவும் மாட்டான். ஏற்றுக் கொள்ளவும் மாட்டான். அவனாகவே கூட தனக்கு நல்லது எது? கெட்டது எது? நாம் என்ன செய்கிறோம்? அதன் பின்விளைவு எப்படி இருக்கும்? என்றெல்லாம் போசிக்கவும் மாட்டான். எனவே, உங்களுடைய பெண்களுக்கும் விதவைகளுக்கும் திருமணம் முடித்து வையுங்கள், என்று கவ்லானீ (ரஹ்) தம்முடைய சமுதாயத்தாருக்கு கோரிக்கை வைக்கிறார். திருமணம் தான் ஒரு பெண் மானபங்கப் படுத்தப்படுவதை விட்டும் பாதுகாக்கும்.


கோட்டைப் பாதுகாப்பு:

எதிரி பலசாலியாக இருக்கிறான். தாக்குதலும் கடுமையக இருக்கிறது. எதிர்த்துத் தாக்குவதற்குத் தேவையான பலம் இவனிடம் இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தற்காலத்தில் குண்டு துளைக்காத மேடை, குண்டு துளைக்காத மாளிகை, வாகனம் இருப்பது போல் அந்தக் காலத்தில் எதுவும் கிடையாது. எனவே, இயற்கையாக அமைந்த தன்னுடைய கோட்டைக்குள் பதுங்கிக் கொள்வான்.

எதிரிகளின் தாக்குதலை விட்டும் காப்பாற்றக் கூடிய பாதுகாப்புக் கவசமாக கோட்டை இருப்பது போல் மானக்கேடான காரியங்கள், தவறான நடத்தைகளை விட்டும் விலக்கி வைக்கக் கூடிய கோட்டை என்றே திருமணத்தை குர்ஆன் வர்ணிக்கிறது. திருமணமான பெண்களைக் குர்ஆன் அல் முஹ்ஸனாத் கோட்டையில் (பாதுகாப்புக் கவசத்தில்) பாதுகாக்கப்பட்ட பெண்கள், என்ற பொருளைக் கொண்ட வார்த்தையால் திருமறை அழைக்கிறது. பார்வையை அந்நியப் பெண்களின் மீது ஓட விடாமல் பூமியோடு ஒட்டிவைக்கக் கூடிய கருவி என்றும் கெட்ட நடத்தைகளிலிருந்து மறைவிடத்தைப் பாதுகாக்கும் கோட்டை என்றும் நபி (ஸல்) அவர்கள் திருமணத்தை புகழ்ந்திருக்கிறார்கள். (புகாரி)

கேவலமான சமூகச் சீர்கேட்டை விட்டும் இநத சமுதாயத்தை பாதுகாக்க வேண்டுமானால் அது முறையாகன திருமணத்தின் மூலம் தான் முடியும்.


திருமண உறவு நீடித்திருக்க வேண்டுமென்பதற்காக இஸ்லாம் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறது. திருமணத்திற்குப் பின் கணவன் மனைவிக்கு மத்தியில் எவ்விதப்பிணக்கும் ஏற்பட்டு விடக்கூடாது, என்பதற்காக மற்ற நேரங்களில் தடுக்கப்பட்ட சில காரியங்களைக் கூட திருமணத்திற்காக மார்க்கம் சகித்துக் கொள்கிறது. அந்நியப் பெண்களை ஆண்கள் பார்க்கக் கூடாது. ஆண்களைப் பெண்கள் பார்க்கக் கூடாது, என்பது மார்க்கத்தின் தெளிவான சட்டம். தஙகளுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு ஒவ்வொருவருக்கும் குர்ஆன் உத்தரவிடுகிறது. ஆனால், ஒருவருக்கு பெண் பேசி முடிவு செய்யும் போது அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் ஆண் பார்க்க வேண்டுமென்று ஆர்வமூட்டுகிறது. 

ஏனெனில், என்ன தான் மற்றவர்கள் பார்த்து வந்து சொன்னாலும் அவர் ஒரு தடவை நேரில் பார்த்து விட்டால் முழு திருப்தி ஏற்பட்டு விடும். இல்லையானால் இவர் ஒரு கற்பனையில் இருப்பார். திருமணத்திற்குப் பின் முதல் தடவையாக பாக்க்கும் போது, தான் நினைத்தது போல் இல்லையானால் ஆரம்பம் முதலே வாழ்க்கை கசந்து போய்விடும்.

அதேபோல் இஸ்லாத்தில் சமத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண் பெண்ணிலிருந்தே படைத்திருக்கிறோம். உங்களை பல் கோத்திரங்களாகவும் பல குடும்பங்களாகவும் பிரித்தது உங்களில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத் தான். 

உங்களில் அல்லாஹ்விடம் மிகவும் மரியாதைக்குரியவர் உங்களில் இறையச்சத்தில் மிகைத்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் அறிந்தவனாகவும் தெளிவான விளக்கமுள்ளவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்)


அல்லாஹ் உங்களுடைய வடிவங்களையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை. எனினும், உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) ஆனால் நிகாஹுடைய விஷயத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் எல்லா வகையிலும் பொருத்தமாக சமமாக இருப்பதை மார்க்கம் வலியுறுத்துகிறது. 

விவசாயம் செய்பவருக்கு ஒரு குணம் இருக்கும். வியாபாரம் செய்பவருக்கு ஒரு குணம் இருக்கும். வியாபாரத்திலும் ஜவுளி வியாபாரிக்கு ஒரு குணம் இருக்கும். இறைச்சி வியாபாரிக்கு ஒரு குணம். இப்படி அவர்களுடைய நிலையைப் பொறுத்து பழுகும் முறையிலும் ஒன்றிணைந்து போவதிலும் சிற்சில வேறுபாடு இருக்குமென்பது யாவரும் அறிந்த ஒன்றே! 

கணவன் மனைவிக்கு மத்தியிலும் இரு குடும்பங்களுக்கு மத்தியிலும் ஒரே அணுகுமுறை இருந்தால் தான் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏதும் வராமல் இருக்கும். மனிதர்களி சுபாவங்களில் ஏற்படும் தடுமாற்றம்  குடும்பத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். எனவே தான் இரு குடும்பத்திற்கு மத்தியில் பொருத்தமாக இருந்தால் குடும்ப உறவு நீடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இல்லையானால் அல்லாஹ்விடம் அனைவரும் சமமானவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

ஜைது (ரலி) அவர்கள் உரிமை விடப்பட்ட அடிமை. ஜைனப் (ரலி) அவர்கள் உயர் குலத்தைச் சார்ந்த பெண். எனினும் (அல்லாஹ்வின் ஒரு திட்டத்தை நிறைவேற்றுதற்காக) முதலில் இருவருக்கும் மத்தியில் திருமணம் முடித்து வைக்கப்பட்டது. எனினும், இரண்டு பேரின் மனோநிலையில பெரிய மாற்றம் இருந்தது. அடிமைக்கும் உயர்குலப் பெண்ணுக்கும் மத்தியில் நடைமுறையில் ஒத்துப்போகவில்லை. கடைசியாக அந்த உறவு பிரிவில் (தலாக்கில்) தான் முடிந்தது. 

கணவன், மனைவிக்கு மத்தியில் பிரச்சினை ஏற்படக்கூடாது, என்பதற்காக சில சமயம் தேவை ஏற்பட்டால் மனைவியிடம் பொய் சொல்வதும் மார்க்கத்தில் ஆகுமாக்கப் பட்டுள்ளது.


 ஒரு தடவை ஷஅபீ (ரஹ்) காஜீ ஷுரைஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்து குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். இருபது வருடமாக என்னை கோபப்படுத்தும்படியான எதையும் என்னுடைய மனைவியிடமிருந்து நான் பார்க்கவில்லை, என்று ஷுரைஹ் கூறினார்கள். அது எப்படி? என்று ஷஅபீ அவர்கள் கேட்டதற்கு, முதலிரவில் நான் இரண்டு ரக்அத் தொழுதேன். என்னுடைய மனைவியும் என்னைப் பின்பற்றி தொழுதாள். நான் அவள் மேல் கை வைப்பதற்கு முன் என்னைத் தடுத்து கொஞ்சம் பொறுங்கள்! நான் இந்த வீட்டுக்குப் புதியவள். எனக்கு உங்களுடைய குணம் பற்றி எதுவும் தெரியாது. எனவே, உங்களுக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அவற்றைச் சொல்லுங்கள்! நான் அதை அப்படியே செய்கிறேன். எதையெல்லாம் நீங்கள் விரும்பமாட்டீர்கள், என்பதையும் சொல்லிவிடுங்கள்! நான் விட்டுவிடுகிறேன், என்று கூறினாள். அன்றிலிருந்து இன்று வரை 20 வருடமாக ஒரேயொரு தடவையைத் தவிர எனக்கு வெறுப்பான எதையும் கண்டதில்லை. அந்த ஒரு தடவையிலும் நான் தான் அவளுக்கு அநியாயம் செய்திருந்தேன், என்று ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்

3151 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا هِشَامٌ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي 

بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَتْ كُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ 

وَسَلَّمَ عَلَى رَأْسِي وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخٍ وَقَالَ أَبُو ضَمْرَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ 

عَلَيْهِ وَسَلَّمَ أَقْطَعَ الزُّبَيْرَ أَرْضًا مِنْ أَمْوَالِ بَنِي النَّضِيرِ

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும் போதே) மணந்து கொண்டார்கள் இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துக்ளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன். தண்ணீர் இறைப்பேன். அவரது தோல் கமலையைத் தைப்பேன். மாவு குழைப்பேன்... ... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இரண்டு மைல் தொலைவில் இருந்தது... ... (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது. (புகாரி - 5224,  கிதாபுந்நிகாஹ்) 

கணவன் மனைவியுடைய மற்ற தேவைகளை நிறைவேற்றி வைப்பது போல் அவளுடைய பாலியல் தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி வைக்க வேண்டும். பெண்கள் அதை வெளிப்படையாக பேச மாட்டார்கள். தன்னுடைய தொழிலிலில் முழுமையாக மூழ்கிக்கிடந்து இந்த அவளுடைய தேவையை மறந்து விடக்கூடாது. அவ்வாறே நஃபிலான வணக்கங்களில் அதிகமாக ஈடுபட்டுவிட்டு மனைவியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. 

அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்களுடைய மவையிடம் மாமனார் மகனைப் பற்றி விசாரித்த போது அவர் மிக மிக நல்ல மனிதர். நம்மிடத்தில் வருவதே இல்லை. இரவெல்லாம் நின்று வணங்குகிறார். பகலெல்லம் நோன்பு நோற்கிறார், என்று கூறினார். இந்த தகவல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தது. 

நபியவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அழைத்து விசாரித்து விட்டு, அப்படி செய்யாதீர்கள். (தொடர்ந்து நோன்பிருக்க வேண்டாம்.) நோன்பு வைக்கவும் செய்யுங்கள். நோன்பை நோற்காமலும் இருங்கள். இரவில் வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள். ஏனெனில் உங்களுடைய உடலுக்கு செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது. உங்களுடைய கண்களுக்கு செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது. உங்களுடைய மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது. உங்களுடைய விருநதாளிக்கு செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது. (புகாரி - 5199)

No comments:

Post a Comment