Wednesday, 4 June 2014

பொதுசிவில் சட்டம் - podu civil sattam




இந்நூல் பற்றி...


இஸ்லாமிய சட்டங்கள் அனைத்துமே முஸ்லிம்களால் ஏற்று அமல் செய்யப்பட வேண்டியவையே! எனினும் இஸ்லாமிய கிலாஃபத் (ஆட்சி) இல்லாததால் குற்றவியல் சட்டங்களில் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முடியவில்லை. 

பொருளாதாரம் தொடர்பான எல்லா சட்டங்களிலும் முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களையே பின்பற்ற வேண்டும். எனினும் அதில் ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றால் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலேயே அவற்றுக்கு தீர்ப்பு வழங்க வேண்டுமென்று நீதிமன்றங்களை நிர்பந்திக்க முடியாது. 

ஏனெனில், பொருளாதார ஒப்பந்தங்கள் முஸ்லிம்களுக்கிடையில் மட்டுமே நிகழாது. முஸ்லிம் அல்லாதவர்களுடனும் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் நடைபெறலாம். 

ஆனால், திருமணம், விவாகரத்து, குலா, வாரிசுரிமை, போன்றவை முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டுமே நடைபெறும் ஒப்பந்தங்களாகும். எனவே, இந்த விவகாரங்களை முடிந்தவரை முஸ்லிம்கள் தங்களுடைய ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டு தீர்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நீதிமன்றங்களுக்கு செல்லக்கூடாது. அப்படியே சென்றாலும் நீதிமன்றங்கள் இந்த பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய சட்டங்களின் படியே தீர்ப்பு வழங்க வேண்டும். இது தான் இன்று வரை உள்ள இந்திய வராலற்றின் நிலைபாடு. 

ஆனால், இஸ்லாத்தின் எதிரிகள் இந்த நிலையை மாற்றவேண்டுமென்று துடிக்கின்றனர். குறிப்பாக, தற்போது ஆட்சியமைத்துள்ள கட்சி பொதுசிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்பதை தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே பகிரங்கப்படுத் தியுள்ளது. மக்கள் இதற்காக ஆட்சியை இவர்களுடைய கையில் வழங்கவில்லை, என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்.


ஆனால், முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் தங்களுடைய தனியார் சட்டத்தை விட்டுவிட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏற்றுக்கொள்ளவும் கூடாது. அது ஏன் என்பதைத் தான் இந்த சிறிய நூல் விளக்குகிறது. 

பொது சிவில் சட்டத்தின் ஆபத்தான விளைவுகள் என்ன? என்பதையும் பொதுசிவில் சட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் அது எவ்வாறு முஸ்லிம்களை படிப்படியாக இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. 2003 ஆம் ஆண்டிலேயே இந்நூல் தொகுக்கப்பட்டு பெருபாலும் நிறைவுற்றிருந்தது. எனினும், அது அச்சாக முடியவில்லை. இப்பொழுது அல்லாஹ்வின் கிருபையால் தேவையான திருத்தங்களுடனும் அதிகப்படியான தகவல்களுடனும் வெளியாகிறது. அல்லாஹ் இந்நூலின் மூலம் தொகுத்தவனுக்கும் படிப்பவர்களுக்கும் நிறைவான இறைநம்பிக்கையுயம் நிரந்தரமான இக்லாஸ் எனும் மனத்தூய்மையையும் தந்தருள்வானாக!



விலை    :     20/-
கிடைக்குமிடம்  :காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி
                                                பேராசிரியர், யூசுஃபிய்யா அரபிக்கல்லூரி 
                 திண்டுக்கல்.
                 செல்: 9976926131, 8925231372

No comments:

Post a Comment