இன்றைய சந்தைச் சரக்கு சூனியம்
சூனியத்தை மறுப்பது ஒன்றும் சரித்திரத்திற்கு புதிதல்ல.
தங்களுடைய அறிவையே பிரதானமாகக் கொண்டு செயல்படக்கூடிய நபித்தோழர்களை வசைபாடிய வழிகெட்ட
கூட்டத்தினர் இதற்கு முன்பே சூனியத்தை மறுத்திருக்கின்றனர். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்
தோன்றிய முஃதஜிலா எனும் பிரிவினர் சூனியத்தை மறுத்திருக்கின்றனர்.
எனவே, இன்று சூனியத்தை மறுப்பவர்களை கண்டுகொள்ளத் தேவையில்லை. தங்களுடைய
வழிகேட்டுக் கொள்கைகளை சந்தையில் விலை போகச் செய்வதற்காக கையிலெடுத்த திட்டம் தான்
சூனியம்.
இலட்சக்கணக்கில் ஒப்பந்தம் செய்து வெற்றி பெற்றது போன்ற
ஒரு மாயையை உருவாக்கி நாடகமாடி தங்களுடைய உழுத்துப்போன கொள்கைகளை சந்தைப்பொருளாக்க
முற்படுகின்றனர். இவர் மீது சூனியம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதே உறுதியாகவில்லை. அப்படியே சூனியம்
செய்யப்பட்டிருந்தாலும் ஒரு நபருக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததை
ஆதாரமாக வைத்து குர்ஆன், ஹதீஸின் மூலம் ஆதாரப்பூர்வமான ஒன்றை மறுக்கலாமென்றால் இதன் பின்விளைவு
மிகக் கொடூரமாக இருக்கும்.
நபிமொழிகளுக்கு எதிராக சவால் விடுபவர்கள் நளை தன்னை நபி
என்று வாதிடமாட்டார்கள், என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அஜ்வா பேரீத்தம்பழத்தில் விஷம்
மற்றும் சூனியத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,
என்றால் சூனியத்திற்கு
எந்த தாக்கமும் இல்லை, என்று எப்படி சொல்ல முடியும், நபிமொழிகளை நாங்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்று மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக
அறிவிக்கட்டும். இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ஹதீஸ் மறுப்பாளர்களுடன் சேர்ந்து கொள்ளட்டும்.
அதற்காக உண்மையைப் போன்று பொய்யைச் சொல்லி மக்களை ஏன் வழிகெடுக்க வேண்டும்?
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையானால்
வஹியுடைய தகவல்களை மாற்றிச் சொல்லியிருக்கலாமே!, என்று கேள்வி எழுப்புபவர்கள் குர்ஆனை
அல்லாஹ், தானே பாதுகாப்பதற்கு பொறுப்பெடுத்துக் கொண்டதாக குர்ஆனில் கூறும் வசனம் ஏன்
கண்ணில் படவில்லை.
நபி (ஸல்) அவர்களுக்கு மனிதர் என்ற அடிப்படையில் ஏற்பட்ட
உடல் நலக்குறைவு போன்றவற்றின் மூலமும் கூட வஹியுடைய செய்தி பற்றி ஏன் சந்தேகம் வரக்கூடாது.
எந்த நிலையிலும் குர்ஆனுடைய ஒரு புள்ளி கூட மாறாமல் அல்லாஹ் பாதுகாத்து வைப்பான்,
என்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய
நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
இது போன்ற உப்பு சப்பில்லாத காரணங்களுக்காகவெல்லாம் நம்பகமான
தகவலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நபிமொழிகளை மறுக்க ஆரம்பித்தால் அறிவையே
பிரதானமாகக் கொண்டு வழிகெட்டுப்போன கூட்டத்தாருக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும்
கிடையாது.
சூனியம் உண்டா? இல்லையா? என்பது குர்ஆன், சுன்னாவுடைய ஆதாரங்களை வைத்துத்
தான் முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர பந்தயங்களை வைத்து அல்ல. இப்றாகீம் (அலை) அவர்கள்
நம்ரூதிடம் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும் என்னுடைய இரட்சகன் தான் என்று கூறிய
போது நானும் ஹயாத்தாக்கவும் செய்வேன், இறக்க வைக்கவும் செய்வேன், என்று கூறினான். இதற்காக நம்ரூதைக்
கடவுள் என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா?
கடவுளை மறுக்கும் நாத்திகர் இவரிடம் வந்து கடவுள் இருப்பது
உண்மை என்றால் இபபொழுதே என்னை மரணிக்கச் செய்ய வேண்டும், என்று பந்தயம் கட்டினால் ஏற்றுக்கொள்வாரா?
அவர் இறக்கவில்லையானால்
இறைவனே இல்லை, என்று இவரும் நாத்திகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு மேடை ஏறுவாரோ?
அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
குர்ஆன், ஹதீஸ் மூலம் சூனியத்தின் நிலைபாடு என்ன என்பது பற்றி யூசுபிய்யா
அரபிக்கல்லூரியின் பட்டவகுப்பு மாணவர்கள் செய்திருக்கும் ஆய்வுத்தொகுப்பின் சுருக்கம்
வருமாறு:
சூனியம் உண்டு என்பதற்கான ஆதாரங்கள்:
1-மனிதர்களின் கண்களை மருட்டி, அவர்களை திடுக்கிடும்படியாக்கி,
இன்னும் மகத்தான சூனியத்தை
அவர்கள் கொண்டுவந்தனர். (அல்குர்ஆன் - 7:116)
2-கணவனுக்கும் அவனது மனைவிக்கும் மத்தியில் பிரிவினையை உண்டாக்கும்
செயலை அவ்விருவரிடம் இருந்தும் கற்றுக்கொண்டனர். (அல்குர்ஆன் - 2:102)
சூனியத்தைப் பற்றி அல்லாஹ் கணவனுக்கும் மத்தியில் பிரிவினையை
ஏற்படுத்தும், என்று கூறுவதன் மூலம் சூனியத்திற்கென தாக்கம் உண்டு, என்பதை சாதாரணமாக சிந்திப்பவர்களும்
விளங்கிக் கொள்ளமுடியும்.
3-அதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர எவருக்கும்
இடையூறு செய்ய முடியாது. (அல்குர்ஆன் - 2:102)
சூனியம் அல்லாஹ்வின் நாட்டப்படி யாருக்காவது இடையூறு செய்யாது
என்றிருந்தால் இந்த குர்ஆன் வசனத்திற்கு என்ன தான் அர்த்தம்?
4-முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல்
தேடுகிறேன். (அல்குர்ஆன் - 113:4)
சூனியத்தின் மூலம் தீங்கு என்று ஒன்று இல்லையானால் அதிலிருந்து
பாதுகாப்பு தேடுங்கள், என்று நபியைப் பார்த்து அல்லாஹ் ஏன் கூறவேண்டும். அதற்காக ஒரு அத்தியாயத்தையே இறக்கி
வைத்திருக்கும் போது சூனியம் ஒன்றுமில்லை, என்று சொல்வது அவர் சூனியம் செய்யப்பட்டதன் விளைவோ என்னவோ
தெரியவில்லை.
5. நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன்
சூனியம் வைத்தான். ஒரு நாள் இதனை முறையிட்டார்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து கூறினார்கள்.
யூத சமுதாளத்தைச் சார்ந்த இன்ன மனிதர் உங்களுக்கு
சூனியம் வைத்திருக்கிறார். இந்த கிணற்றிலே இவ்வாறு முடிச்சுப் போட்டிருக்கிறார்,
என்று கூறினார். எனவே
நபியவர்கள் ஒருவரை அனுப்பி அதனை வெளியே எடுத்தார்கள். இன்னும் அந்த முடிச்சை அவிழ்த்தார்கள்.....
(புகாரி)
6. நபி (ஸல்) அவர்கள் ஏழு பெரும்பாவங்களை
விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள், என்று கூறிவிட்டு இணைவைப்பதற்கு அடுத்தபடியாக சூனியத்தைப் பற்றித்தான்
கூறினார்கள். (புகாரி)
சூனியத்தின் ஆணிவேர் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்
படவில்லை என்பதற்கு நவீன ஆய்வாளர்கள் எடுத்து வைக்கும் இறுதிவாதம் அல்லாஹ்வின் தூதராக
அனுப்பப்பட்டவர்களை அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு
அற்றுப்போகும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள், என்று எண்ணும் போது நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலத்தைவிட எதிரிகளின் ஆன்மீக பலம் அதிகம் என்ற எண்ணம்
ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும், என்பதாகும்.
6- சூனியம் என்பது தீய ஜின்கள்,
ஷைத்தான்களின் சக்தியைப்
பயன்படுத்தி செய்யப்படும் மாற்றமாகும்.இறைத்தூதர்
மூஸா (அலை) அவர்களின் உள்ளத்தைக் கூட அச்சம் பற்றிக் கொண்டது. (அல்குர்ஆன்-20;67)
சூனியக் காரர்களின் சக்தியை வெளிப்படுத்த முடியாமல் செய்திருக்கலாம்.
ஆனால் தன் தூதரின் மூலம் தன் சக்தியை வெளிப்படுத்த
நினைத்த இறைவன் சூனியத்தாக்குதல் மூஸ் (அலை) அவர்களையே பாதிக்கக்கூடிய அளவுக்கு இறுதிவரை விட்டுக் கொடுத்து தன் அற்புத ஆற்றலை இலேசாக வெளிப்படுத்தினான்.
மூஸா (அலை) அவர்களின் ஒரேயொரு கைத்தடியை பெரும் பாம்பாக மாற்றி உருவாக்கப்பட்டு நெளிந்து
கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பாம்புகளையும் விழுங்கச் செய்தான். அப்போது ஷைத்தானிய ஆற்றலான
சூனியம் தோற்றுப்போனது; பலவீனமானது. இறைவனின் ஆற்றலே உயர்வானது உண்மையானது. மூஸா (அலை)
அவர்கள் தான் இறைவனின் தூதர் என்பதை உணர்ந்து ஈமான் கொண்டார்கள். (அல்குர்ஆன்-20;73)
7-யூதர்கள் தங்களின் ஷைத்தானிய சக்தியின் அதிகப் பட்ச தாக்குதலாக
மிகப் பேராசைப்பட்டு உருவாக்கிய அந்த சூனியத்தை வெறும் 11 வசனங்களை ஓதுவதின் மூலம் சுத்தமாக
துடைத்தெறிந்தான். (அந்த வசனம் சூரத்துல் ஃபலக், சூரத்துன் னாஸ்) அப்போது அண்ணலாருக்கு
கொடுக்கப்பட்டுள்ள அற்புதமும் ஆன்மீக பலமும் கலங்கரை விளக்காய் பிரகாசித்தது.