Monday, 22 September 2014

இன்றைய சந்தைச் சரக்கு சூனியம்


இன்றைய சந்தைச் சரக்கு சூனியம்

சூனியத்தை மறுப்பது ஒன்றும் சரித்திரத்திற்கு புதிதல்ல. தங்களுடைய அறிவையே பிரதானமாகக் கொண்டு செயல்படக்கூடிய நபித்தோழர்களை வசைபாடிய வழிகெட்ட கூட்டத்தினர் இதற்கு முன்பே சூனியத்தை மறுத்திருக்கின்றனர். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தோன்றிய முஃதஜிலா எனும் பிரிவினர் சூனியத்தை மறுத்திருக்கின்றனர்.

எனவே, இன்று சூனியத்தை மறுப்பவர்களை கண்டுகொள்ளத் தேவையில்லை. தங்களுடைய வழிகேட்டுக் கொள்கைகளை சந்தையில் விலை போகச் செய்வதற்காக கையிலெடுத்த திட்டம் தான் சூனியம்.

இலட்சக்கணக்கில் ஒப்பந்தம் செய்து வெற்றி பெற்றது போன்ற ஒரு மாயையை உருவாக்கி நாடகமாடி தங்களுடைய உழுத்துப்போன கொள்கைகளை சந்தைப்பொருளாக்க முற்படுகின்றனர். இவர் மீது சூனியம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதே உறுதியாகவில்லை. அப்படியே சூனியம் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு நபருக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததை ஆதாரமாக வைத்து குர்ஆன், ஹதீஸின் மூலம் ஆதாரப்பூர்வமான ஒன்றை மறுக்கலாமென்றால் இதன் பின்விளைவு மிகக் கொடூரமாக இருக்கும்.

நபிமொழிகளுக்கு எதிராக சவால் விடுபவர்கள் நளை தன்னை நபி என்று வாதிடமாட்டார்கள், என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அஜ்வா பேரீத்தம்பழத்தில் விஷம் மற்றும் சூனியத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், என்றால் சூனியத்திற்கு எந்த தாக்கமும் இல்லை, என்று எப்படி சொல்ல முடியும், நபிமொழிகளை நாங்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்று மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்கட்டும். இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ஹதீஸ் மறுப்பாளர்களுடன் சேர்ந்து கொள்ளட்டும். அதற்காக உண்மையைப் போன்று பொய்யைச் சொல்லி மக்களை ஏன் வழிகெடுக்க வேண்டும்?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையானால் வஹியுடைய தகவல்களை மாற்றிச் சொல்லியிருக்கலாமே!, என்று கேள்வி எழுப்புபவர்கள் குர்ஆனை அல்லாஹ், தானே பாதுகாப்பதற்கு பொறுப்பெடுத்துக் கொண்டதாக குர்ஆனில் கூறும் வசனம் ஏன் கண்ணில் படவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு மனிதர் என்ற அடிப்படையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு போன்றவற்றின் மூலமும் கூட வஹியுடைய செய்தி பற்றி ஏன் சந்தேகம் வரக்கூடாது. எந்த நிலையிலும் குர்ஆனுடைய ஒரு புள்ளி கூட மாறாமல் அல்லாஹ் பாதுகாத்து வைப்பான், என்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

இது போன்ற உப்பு சப்பில்லாத காரணங்களுக்காகவெல்லாம் நம்பகமான தகவலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நபிமொழிகளை மறுக்க ஆரம்பித்தால் அறிவையே பிரதானமாகக் கொண்டு வழிகெட்டுப்போன கூட்டத்தாருக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

சூனியம் உண்டா? இல்லையா? என்பது குர்ஆன், சுன்னாவுடைய ஆதாரங்களை வைத்துத் தான் முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர பந்தயங்களை வைத்து அல்ல. இப்றாகீம் (அலை) அவர்கள் நம்ரூதிடம் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும் என்னுடைய இரட்சகன் தான் என்று கூறிய போது நானும் ஹயாத்தாக்கவும் செய்வேன், இறக்க வைக்கவும் செய்வேன், என்று கூறினான். இதற்காக நம்ரூதைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா?

கடவுளை மறுக்கும் நாத்திகர் இவரிடம் வந்து கடவுள் இருப்பது உண்மை என்றால் இபபொழுதே என்னை மரணிக்கச் செய்ய வேண்டும், என்று பந்தயம் கட்டினால் ஏற்றுக்கொள்வாரா? அவர் இறக்கவில்லையானால் இறைவனே இல்லை, என்று இவரும் நாத்திகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு மேடை ஏறுவாரோ? அல்லாஹ் பாதுகாக்கட்டும்.

குர்ஆன், ஹதீஸ் மூலம் சூனியத்தின் நிலைபாடு என்ன என்பது பற்றி யூசுபிய்யா அரபிக்கல்லூரியின் பட்டவகுப்பு மாணவர்கள் செய்திருக்கும் ஆய்வுத்தொகுப்பின் சுருக்கம் வருமாறு:  

சூனியம் உண்டு என்பதற்கான ஆதாரங்கள்:
1-மனிதர்களின் கண்களை மருட்டி, அவர்களை திடுக்கிடும்படியாக்கி, இன்னும் மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டுவந்தனர். (அல்குர்ஆன் - 7:116)

2-கணவனுக்கும் அவனது மனைவிக்கும் மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் செயலை அவ்விருவரிடம் இருந்தும் கற்றுக்கொண்டனர். (அல்குர்ஆன் - 2:102)
சூனியத்தைப் பற்றி அல்லாஹ் கணவனுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும், என்று கூறுவதன் மூலம் சூனியத்திற்கென தாக்கம் உண்டு, என்பதை சாதாரணமாக சிந்திப்பவர்களும் விளங்கிக் கொள்ளமுடியும்.

3-அதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர எவருக்கும் இடையூறு செய்ய முடியாது. (அல்குர்ஆன் - 2:102)
சூனியம் அல்லாஹ்வின் நாட்டப்படி யாருக்காவது இடையூறு செய்யாது என்றிருந்தால் இந்த குர்ஆன் வசனத்திற்கு என்ன தான் அர்த்தம்?
4-முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அல்குர்ஆன் - 113:4)
சூனியத்தின் மூலம் தீங்கு என்று ஒன்று இல்லையானால் அதிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள், என்று நபியைப் பார்த்து அல்லாஹ் ஏன் கூறவேண்டும். அதற்காக ஒரு அத்தியாயத்தையே இறக்கி வைத்திருக்கும் போது சூனியம் ஒன்றுமில்லை, என்று சொல்வது அவர் சூனியம் செய்யப்பட்டதன் விளைவோ என்னவோ தெரியவில்லை.

5. நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்தான். ஒரு நாள் இதனை முறையிட்டார்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து கூறினார்கள். யூத சமுதாளத்தைச் சார்ந்த இன்ன மனிதர்  உங்களுக்கு சூனியம் வைத்திருக்கிறார். இந்த கிணற்றிலே இவ்வாறு முடிச்சுப் போட்டிருக்கிறார், என்று கூறினார். எனவே நபியவர்கள் ஒருவரை அனுப்பி அதனை வெளியே எடுத்தார்கள். இன்னும் அந்த முடிச்சை அவிழ்த்தார்கள்..... (புகாரி)

6. நபி (ஸல்) அவர்கள் ஏழு பெரும்பாவங்களை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள், என்று கூறிவிட்டு இணைவைப்பதற்கு அடுத்தபடியாக சூனியத்தைப் பற்றித்தான் கூறினார்கள். (புகாரி)

சூனியத்தின் ஆணிவேர் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் படவில்லை என்பதற்கு நவீன ஆய்வாளர்கள் எடுத்து வைக்கும் இறுதிவாதம் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டவர்களை  அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு அற்றுப்போகும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள், என்று எண்ணும் போது நபிகள் நாயகத்தின் ஆன்மீக  பலத்தைவிட எதிரிகளின் ஆன்மீக பலம் அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும், என்பதாகும்.

6- சூனியம் என்பது தீய ஜின்கள், ஷைத்தான்களின் சக்தியைப் பயன்படுத்தி செய்யப்படும் மாற்றமாகும்.இறைத்தூதர்  மூஸா (அலை) அவர்களின் உள்ளத்தைக் கூட அச்சம் பற்றிக் கொண்டது. (அல்குர்ஆன்-20;67)

சூனியக் காரர்களின் சக்தியை வெளிப்படுத்த முடியாமல் செய்திருக்கலாம். ஆனால் தன் தூதரின்  மூலம் தன் சக்தியை வெளிப்படுத்த நினைத்த இறைவன் சூனியத்தாக்குதல் மூஸ் (அலை) அவர்களையே பாதிக்கக்கூடிய அளவுக்கு இறுதிவரை  விட்டுக் கொடுத்து தன் அற்புத ஆற்றலை இலேசாக வெளிப்படுத்தினான். மூஸா (அலை) அவர்களின் ஒரேயொரு கைத்தடியை பெரும் பாம்பாக மாற்றி உருவாக்கப்பட்டு நெளிந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பாம்புகளையும் விழுங்கச் செய்தான். அப்போது ஷைத்தானிய ஆற்றலான சூனியம் தோற்றுப்போனது; பலவீனமானது. இறைவனின் ஆற்றலே உயர்வானது உண்மையானது. மூஸா (அலை) அவர்கள் தான் இறைவனின் தூதர் என்பதை உணர்ந்து ஈமான் கொண்டார்கள்.  (அல்குர்ஆன்-20;73)

7-யூதர்கள் தங்களின் ஷைத்தானிய சக்தியின் அதிகப் பட்ச தாக்குதலாக மிகப் பேராசைப்பட்டு உருவாக்கிய அந்த சூனியத்தை வெறும் 11 வசனங்களை ஓதுவதின் மூலம் சுத்தமாக துடைத்தெறிந்தான். (அந்த வசனம் சூரத்துல் ஃபலக், சூரத்துன் னாஸ்) அப்போது அண்ணலாருக்கு கொடுக்கப்பட்டுள்ள அற்புதமும் ஆன்மீக பலமும் கலங்கரை விளக்காய் பிரகாசித்தது.

السحر وحقيقته


السحر وحقيقته

1- قوله تعالى: {وَاتَّبَعُوا مَا تَتْلُوا الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنْفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ}(1)

وجه الاستدلال: الآية تدل على أن للسحر حقيقة من وجوه الأول: أن الله سبحانه وتعالى قد أخبر فيها عن السحر وأنه مما يعلم ويتعلم وأن متعلمه يكفر بذلك وهذه الصفات لا تكون إلا لماله حقيقة، مما يدل على أن له حقيقة(2).


الثاني: أن الله تعالى قد أخبر في هذه الآية بأن للسحر آثاراً محسوسة كالتفريق بين المرء وزوجه والأثر دليل على وجود المؤثر وأن له حقيقة(3).


الثالث:كما أخبر الله تعالى في هذه الآية بأن للسحرضرراً لا يتحقق إلا بإذنه، والاستثناء دليل على حصول الآثار بسببه والضرر أو الأثر لا يكون إلا مماله حقيقة(4).


2- قوله تعالى: {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ}(5)
__________
(1) آية 102 سورة البقرة.
(2) انظر شرح النووي على صحيح مسلم ج14 ص 174.
(3) انظر تفسير القرطبي ج2ص46، وشرح النووي على صحيح مسلم ج14 ص 174 أضواء البيان ج4 ص437
(4) تفسير الرازي ج3 ص213.
(5) سورة الفلق.

وجه الاستدلال: أن الله تعالى أمرنبيه صلى الله عليه وسلم في هذه السورة بالاستعاذة من شر النفاثات في العقد وهن السواحر كما فسرها جمهور المفسرين(1) مما يدل على أن للسحر حقيقة وأثرا(2) إضافة إلى ذلك أن هذه السورة وسورة الناس باتفاق جمهور المفسرين سبب نزولهما(3) سحر لبيد بن الأعصم اليهودي لرسول الله صلى الله عليه وسلم
ولو لم يكن له حقيقة وأثر لما أنزلت هاتان السورتان لإبطال أثره.


ثانياً: الأدلة من السنة وهي كثيرة منها ما يلي:

1- أخرج البخاري بسنده إلى عيسى بن يونس عن هشام عن أبيه عن عائشة رضي الله عنها قالت: سحر رسول الله صلى الله عليه وسلم رجل من بني زريق يقال له لبيد بن الأعصم حتى كان رسول الله صلى الله عليه وسلم يخيل إليه أنه فعل الشيء وما فعله حتى إذا كان ذات يوم، أو ذات ليلة - وهو عندي لكنه دعا ودعا، ثم قال "يا عائشة أشعرت أن الله أفتاني فيما استفتيته فيه. أتاني رجلان فقعد أحدهما عند رأسي والآخر عند رجلي فقال أحدهما لصاحبه ما وجع الرجل؟ قالا: مطبوب(4)
__________
(1) انظر تفسير ابن كثير ج4 ص573 ومختصر تفسير الطبري ص707 والتفسير القيم ص563.
(2) انظر أضواء البيان ج4 ص437، ونيل الأوطار ص 363 والمغني ج8ص151 وشرح المهذب ج19ص240 وفتح المجيد ص222
(3) أسباب النوزل للنيسابوري ص347 وأسباب النزول للسيوطي ص550 والتفسير القيم ص567 وتفسير القرطبي ج2ص546 وقد يقول قائل كيف أن سورة الفلق مكية ويكون سبب نزولها ماوقع من سحر للنبي صلى الله عليه وسلم في المدينة ؟ ويجاب على ذلك بأن سورة الفلق ليست مكية وإنما هي من السور المختلف فيها والأرجح أنها مدنية كما في الصحاح، قال الألوسي بعد أن حكى الخلاف ورجح أنها مدنية قال:فلا يلتفت لمن قال بمكيتها وحتى لوسلمنا بأنها مكية فإنه لا يلزم منه أنها لا تكون علاجاً للسحر. انظر الناسخ والمنسوخ ص 144 وروح المعاني ج30ص 278والسحر بين الحقيقة والوهم ص69.
(4) المطبوب: المسحور.
قال:ومن طبه؟ قال لبيد بن الأعصم.قال في أي شيئ؟ قال في مشط ومشاطة(1) وجف طلع(2) نخلة ذكر.قال: وأين هو؟ قال في بئر ذروان(3).فأتاها رسول الله صلى الله عليه وسلم في ناس من أصحابه، فجاء فقال: يا عائشة كأن مائها نقاعة الحنا(4) وكأن رؤوس نخلها رؤوس الشياطين(5) قلت يا رسول الله أفلا استخرجته؟ قال قد عافاني الله فكرهت أن أثير على الناس فيه شراً فأمر بها فدفنت(6)
وفي رواية لمسلم "فقلت يا رسول الله أفلا أحرقته"(7)
ويقول الإمام النووي عن الروايتين: "كلاهماصحيح: فطلبت أن يخرجه ثم يحرقه والمراد إخراج السحر"(8).


وجه الاستدلال: الحديث كما نرى يروي واقعة سحره عليه الصلاة والسلام ابتداءً من تغيرعادته صلى الله عليه وسلم حتى إنه يخيل إليه أنه فعل الشيء ولم يفعله وانتهاءً بقراءة المعوذتين وحل العقد ونزع الإبر وما بين ذلك من دعائه صلىالله عليه وسلم ثم نزول الملكين ونقاشهما فيما حصل له صلى الله عليه وسلم ثم ذهابه إلى البئر في جماعة من أصحابه وإخبار عائشة فيما حصل. وطلبها رضي الله عنها استخراجه، قوله صلى الله عليه وسلم "إن الله شفاني" كل هذا لا يكون إلا فيما له حقيقة وأثر بيّن(1).


2- ما رواه البخاري بسنده إلى أبي الغيث عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال:"اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن؟ قال:الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وأكل الربا، وأكل مال اليتيم، والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات"(2)

وجه الاستدلال: أن الرسول صلى الله عليه وسلم أمرنا باجتناب السبع الموبقات وعد منها السحر بل جعله في المرتبة الثانية بعد الشرك بالله. مما يدل على أن له حقيقة.
__________
(1) انظر: التفسير القيم ص 571 والتفسير الكبير للرازي ج3ص213، وشرح النووي على صحيح مسلم ج14 ص174 وتفسير القرطبي ج2ص213.
(2) واه البخاري في كتاب الوصايا. باب قوله تعالى {إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْماً إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَاراً وَسَيَصْلَوْنَ سَعِيراً} برقم 2615 ورواه مختصرا بلفظ"اجتنبوا الموبقات الشرك بالله والسحر"في كتاب الطب باب الشرك والسحر من الموبقات برقم 5431


3- قول الرسول صلى الله عليه وسلم: "من تصّبح بسبع تمرات عجوة(1) لم يضره ذلك اليوم سم ولا سحر"(2)

وجه الاستدلال: أن الرسول صلى الله عليه وسلم أرشدنا إلى ما فيه وقاية من السحر ولايتوقى إلاشيء له حقيقة وأثر بين،كما أنه قارنه بالسم والسم متفق بأن له حقيقة وأثراً فكذلك إذاً السحر(3).


ثالثاً: الدليل من الواقع: كذلك من أدلة أهل السنة على أن للسحر حقيقة: الواقع المشاهد وما اشتهر بين الناس من عقد الرجل عن امرأته حين يتزوجها فلا يقدرعلى إتيانها.وحل عقده فيقدر عليها بعد عجز عنها حتى صار متواتراً لا يمكن جحده.
وروى من أخبار السحرة ما لا يكاد يمكن التواطؤ على الكذب فيه(4).
كل هذا دليل ظاهر على أن للسحر حقيقة والله أعلم.
(1) ضرب من أجود تمر المدينة والينه. انظر فتح الباري ج10 ص 238.
(2) رواه البخاري في كتاب الطب باب الدواء بالعجوة للسحر برقم 5769، ومسلم في كتب الأشربة باب فضل تمر المدينة. انظر:صحيح مسلم المطبوع مع شرح النووي ج14ص2.
(3) انظر: السحر بين الحقيقة والخيال ص66.
(4) انظر: المغني لابن قدامه ج8ص151.

الكتاب : حقيقة السحر وحكمه في الكتاب والسنة
إعداد : الدكتور عواد بن عبد الله المعتق


وقال الحافظ ابن كثير في "تفسيره" (ج1 ص254): فصل: حكى أبوعبدالله الرازي في "تفسيره" عن المعتزلة أنّهم أنكروا وجود السحر قال: وربما كفّروا من اعتقد وجوده، قال: وأما أهل السنة فقد جوّزوا أن يقدر الساحر أن يطير في الهواء، أو يقلب الإنسان حمارًا والحمار إنسانًا، إلا أنّهم قالوا: إن الله يخلق الأشياء عندما يقول الساحر تلك الرّقى والكلمات المعيّنة، فأما أن يكون المؤثر في ذلك هو الفلك والنجوم فلا، خلافًا للفلاسفة والمنجّمين والصابئة، ثم استدل على وقوع السحر وأنه بخلق الله تعالى بقوله تعالى: {وما هم بضارّين به من أحد إلاّ بإذن الله?(1)}.
ومن الأخبار بأن رسول الله صلى الله عليه وعلى آله وسلم سحر، وأن السحر عمل فيه، وبقصة تلك المرأة مع عائشة رضى الله عنها، وما ذكرت تلك المرأة من إتيانها بابل وتعلمها السحر، قال: وبما يذكر في هذا الباب من الحكايات?الكثيرة.

رجال زائغون سنّوا للناس سنةً سيئةً
من هؤلاء الزائغين الرافضة على اختلاف أصنافهم فقد قدحوا في أفاضل الصحابة رضوان الله عليهم، وردّوا من الشرع مالا يوافق أهواءهم،

ومنهم بعض رءوس الاعتزال:
__________
(1) ? ... ... سورة البقرة، الآية: 102.

واصل بن عطاء، فقد قدح في أصحاب الجمل وعلي ومن معه، كما في "الفرق بين الفرق" (ص100) ومنهم: عمرو بن عبيد بن باب، قال بفسق تلك الطائفتين المتقاتلتين يوم الجمل، كما في "الفرق بين الفرق" (101)، ومنهم: إبراهيم النّظام، كما في "الفرق بين الفرق" (ص134) فأئمة الضلال من الروافض والمعتزلة هم الذين جرّءوا الناس على رد السنن الصحيحة، وعلى القدح في الأئمة الأثبات، وكل من انحرف من أمة محمد صلى الله عليه وعلى آله وسلم وسلك هذا السبيل فهو سالك سبيلهم، وهم الذين جرّءوا المستشرقين على الطعن في السنة المطهرة، وأصل الضلال في هذا الباب هم أئمة الاعتزال، وأما الرافضة فإنّهم يطعنون طعنًا سخيفًا غير معقول ولا مقبول، لأنّهم كما يقول شيخ الإسلام ابن تيمية: أجهل الناس بالمعقول والمنقول.
الكتاب : ردود أهل العلم على الطاعنين في حديث السحر