இன்று பொதுவாக பெண்கள் தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
மக்களின் நடைமுறையில் இருக்கும் எந்த செயலாக இருந்தாலும் அதற்கு மாற்றமாக ஏதாவது ஒரு
நபிமொழி கண்ணில் படாதா? என்று சிலர் கம்யூட்டர்களில துலாவிப் பார்க்கிறார்கள். நபி
(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள், என்ற நபிமொழி கண்ணில் பட்டவுடன்
எப்பொழுது வந்தார்கள்? எப்படிப்பட்ட நிலையில் வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எல்லா பெண்களும் வந்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் வருவதைக்
கட்டாயப் படுத்தினார்களா? போன்ற எதைப் பற்றியும ஆராயாமல் உடனடியாக எல்லா பெண்களையும் பள்ளிவாசலுக்குக்
கொண்டுவருவதையே தங்களுடைய குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர், சிலர்.
குடும்பசகிதம் ஜும்ஆ தொழுகைக்கு வருவதை ஃபேஷன் போல ஆக்கிவிட்டனர்.
எப்படிப்ப்டட சூழலில் எந்த அளவுக்கு நடைமுறையில் இருந்தது? எனபது பற்றியும் ஆராய வேண்டும். பெண்கள்
பள்ளிக்கு வருதல், என்பதை மட்டும் பார்க்கக் கூடாது. அதைச் சுற்றியுள்ள எல்லா நிலைகளையும் பார்த்து
விட்டு அதே முறைப்படி அந்தக் காரியத்தை அப்படியே அமுல்படுத்துவது தான் நபிவழியைப் பின்பற்றுவதற்கான
அடையாளமாகும். இது வரைக்கும் மக்கள் எப்படி நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்களோ
அதற்கு மாற்றமாக எதையாவது புரட்சிகரமாக செய்யவேண்டுமென்று நினைப்பது மார்க்கமென்று
யாரும் சொல்ல மாட்டார்கள். எப்படிப்ப்டட சூழலில் எந்த அளவுக்கு நடைமுறையில் இருந்தது?
எனபது பற்றியும் ஆராய
வேண்டும்.
பெண்கள் பள்ளிக்கு வருதல், என்பதை மட்டும் பார்க்கக் கூடாது.
அதைச் சுற்றியுள்ள எல்லா நிலைகளையும் பார்த்து விட்டு அதே முறைப்படி அந்தக் காரியத்தை
அப்படியே அமுல்படுத்துவது தான் நபிவழியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாகும். இது வரைக்கும்
மக்கள் எப்படி நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அதற்கு மாற்றமாக எதையாவது புரட்சிகரமாக
செய்யவேண்டுமென்று நினைப்பது மார்க்கமென்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
பெண்கள் பள்ளிக்கு வந்தார்களா?
1. நபி
(ஸல்) அவர்களுடைய காலத்தில் பெண்கள் பள்ளிக்கு கூட்டம் கூட்டமாக வந்தது போல் இன்று
மக்களுக்கு மத்தியில் பிரச்சாரமம் செய்யப்படுகிறது. ஆனால், பரவலாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வரமாட்டார்கள்,
என்ற அறிவிப்புகளையும்
நபிமொழிக் கிரந்தங்களில் காண முடியும். அஸ்மாஃ பின்த் யஜீத் அல்அன்ஸாரிய்யா (ரலி) அவர்கள் ஒரு தடவை நபி (ஸல்)
அவர்களிடம் மார்க்க ரீதியான பெண்ணுரிமை பற்றி பெண்கள் சார்பாக பேசுவதற்கு வந்ததார்கள்.
அச்சமயம் ஆண்கள் மார்க்க காரியங்களில் எந்த அளவுக்கு பங்கெடுத்து நன்மைகளை தட்டிச்
செல்கிறார்களோ அந்த அளவுக்கு பெண்கள் செய்வதற்கு சந்தர்பபம் அமைய வில்லையே,
என்பது பற்றி பேசும்
போது ஆண்கள் நோய்நலம விசாரிக்கச் செல்வார்கள். யுத்தத்திற்குச் செல்வார்கள்,
போன்ற பல செய்திகளைச்
சொல்லும் போது அவர்கள் ஜும்ஆவிலும் ஜமாஅத் தொழுகையிலு கலந்து கொள்வார்கள், என்ற தகவலையும் கூறுகிறார்கள்.
(ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ - 8369) அப்படியானால் பரவலாக பெண்கள்
பள்ளிவாசலும் தொழுகைக்காக வருவதில்லை, என்பதை அறிய முடிகிறது.
2. உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள்
ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடைய சமூகத்திற்கு வந்து மஸ்ஜிதுந்த நபவியில் தாங்களுடன்
தொழுவதைப் பிரியப்படுகிறேன், என்று கூறினார்கள். அச்சமயம் நபியவர்கள் நீ அவ்வாறு பிரியப்படுவது
எனக்கு புரிகிறது, என்று கூறிவிட்டு வீட்டுக்குள் எந்த அளவுக்கு மறைவாக தொழுவாயோ அந்த அளவுக்க சிறந்தது,
என்று கூறினார்கள்.
பிறகு அந்தப் பெண்மணி தன்னுடைய வீட்டின் கடைசிப் பகுதியில் மிகவும இருட்டான பகுதியில்
ஒரு மஸ்ஜித் - தொழுமிடம் கட்டச் சொன்னார்கள். அங்கேயே தொழுத்ர்கள். (முஸ்னத் அஹ்மது
- 27135)
இதன் மூலம் அந்தப் பெண்மணி பள்ளிவாசலுக்கு வரவில்லை,
என்பதை விளங்க முடிகிறது.
இது தவிர பரவலாக எல்லா பெண்களும் பள்ளிவாசலுக்கு வருபவர்களாக இருந்திருந்தால் இந்தப்
பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து அனுமதி கேட்கத் தேவையில்லை.
3. இஷாத் தொழுகையை வீட்டிலேயே தொழுது
கொண்டு பள்ளிவாசலுக்கு வராத ஆண்களைப் பற்றி எச்சசரிக்கை செய்யும் போது நபி (ஸல்) அவர்கள்
வீட்டில் பெண்களும் சிறுவர்களும் மட்டும் இல்லையானால் அவர்களுடைய வீடுகளுக்கு நெருப்பு
வைத்திருப்பேன், என்று கூறினார்கள். (முஸனதுத் தயாலிஸி- 2324, முஸ்னத் அஹ்மது - 8782)
இந்த ஹதீஸின் மூலமும் பெண்கள் பரவலாக பள்ளிவாசலுக்கு வரும்
நடைமுறை இல்லை, என்பதை விளங்க முடிகிறது. பள்ளிக்கு வராமல் வீட்டில் தொழுவதே பெண்களுடைய பர்தா
முறைக்கு சிறந்தது? என்று நபி (ஸல்) அவர்கள் போதிக்கும் போது அவ்வளவு பெண்களும் பள்ளிக்கு வந்திருப்பார்கள்,
என்று சொல்ல முடியாது.
அவ்வப்போது கடுமையான நிபந்தனைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட பெண்கள் வந்து செல்லக்கூடிய
நடைமுறை இருந்திருக்க நிலையில் இன்று பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவது தான் சிறந்தது,
என்பது போல் பிரகடனப்படுத்துவதை
எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
4. (மஸ்ஜிதுக்கு வந்து தொழுவதற்கு) உங்களுடைய
மனைவி அனுமதி கேட்டால் அவளைத் தடுக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி) அல்லாஹ்வின் அடிமைப் பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடுக்காதீர்கள்,
என்றும் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள. (முஸ்லிம்)
இந்த ஹதீஸ்களில் அனுமதி கேட்டால் மறுக்காதீர்கள்,
என்று சொல்வதைப் பார்க்கும்
போதும் எல்லா பெண்களும் கூட்டம் கூட்டமாக பள்ளிவாசலுக்கு வரமாட்டார்கள். தேவைப்படும்
போது தங்களுடைய கணவன்மார்களிடம் அனுமதி கேட்டுவிட்டு வருவார்கள், என்பதையும் விளங்க முடிகிறது.
கணவன்மார்களுடைய அனுமதியின்றி பள்ளிவாசலுக்கு செல்ல முடியாது, என்பதையும் விளங்க முடிகிறது.
இரவில் மட்டும்:
ஃபஜ்ர், மஃரிப், இஷா ஆகிய மூன்று தொழுகைக்கு மட்டும் பெண்கள் பள்ளிக்கு
வந்தனர், என்று
மௌலானா ஜகரிய்யா (ரஹ்) அவர்கள தங்களுடைய அவ்ஜஸுல் மஸாலிக் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே தான், இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் பெண்கள் இரவிலும் அதிகாலை இருட்டிலும் பள்ளிக்கு
வரும் பாடம், என்று ஸஹிஹ் புகாரியில் தலைப்பு அமைத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில்
இரவு நேரத்தில் பள்ளிக்கு வந்தார்கள். என்பைதை ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது.
இரவு நேரத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வர அனுமதி கொடுங்கள்,
என்று நபி (ஸல்0 கூறினார்கள். (முஸ்லிம்)
பொதுவாக பெண்கள் பள்ளிக்கு வரலாம், என்றிருந்தால் பகலில் அல்லாமல் இரவு நேரத்தில் மட்டும் அனுமதிக்க
வேண்டிய அவசியம் என்ன? நபி (ஸல்) அவர்கள் பகலுக்கும் இரவுக்கும் மத்தியில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.
அப்படியானால் நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக பகல் இரவுக்கும் மத்தியில் வேறுபாடு
காட்டியிருக்கிறார்களோ அதே காரணத்திற்காக முற்காலத்திற்கும் தற்காலத்திற்கும் வேறுபாடு
காட்டினால் அது எவ்வகையில் தவறாகும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சென்றார்கள்.
இன்று செல்ல வேண்டாம், என்பது தான் மார்க்கத்தை முறையாக விளங்குவதாக அமையும்.
உமர் (ரலி) அவர்களுடைய மனைவி சுபுஹ் தொழுகைக்கும் இஷா
தொழுகைக்கும் (மட்டும்) பள்ளி வாசலுக்குச் செல்வார்கள். அப்படிச் செல்வதை உமர் (ரலி)
அவர்கள் வெறுத்தாலும் அவர்கள் பள்ளிக்குச் செல்வதை விடவில்லை. இவ்வளவு ஆர்வமாகச் செல்லும்
பெண், எதற்காக
பகல் நேரத்தில் செல்லாமல் இரவில் மட்டும் சென்றார்கள்? என்ற கேள்விக்குரிய விடையில் தான்
மார்க்கத்தின் பரிபூணரணத் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும். இரவில் பெண்களுக்கான பாதுகாப்பு
அந்த காலத்தில் இருந்திருக்கிறது.
பகலில் ஃபித்னாவுக்கான சூழல் அதிகமாக இருந்திருக்கிறது.
இதையும் நாமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்து நடைமுறையை வைத்து விளங்கிக்
கொள்ளலாம். ஸஹாபிப் பெண்மணிகள் ஃபஜ்ர் தொழுகைக்கும் பள்ளிவாசலுக்கு போர்வையைப் போர்த்தியவர்களாக
வருவார்கள். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிச் செல்லும் போது இருக்கும் இருட்டின்
காரணமாக அவர்கள் யார் என்பதே அறியப்பட மாட்டார்கள், என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி, திர்மிதீ)
இதன் மூலம் எந்த பெண் செல்கிறார்? என்று குறிப்பாக அறிய முடியாத (இருட்டு) நேரத்திற்குள்ளாகவே
அவர்கள் வீடு திரும்பி விடுவார்கள். எனவே, யாரின் மூலமும் ஃபித்னாவில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் போது நறுமணம் பூசக்கூடாது,
என்று நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்.
நறுமணத்தின் மூலம் யாருக்கும் எந்தத் தவறான எண்ணமும் ஏற்படக்கூடாது, என்பதே இதன் நோக்கமாக இருக்க
முடியும்.
நறுமணம்:
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் போது நறுமணம் பூசக்கூடாது,
என்று நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்.
நறுமணத்தின் மூலம் யாருக்கும் எந்தத் தவறான எண்ணமும் ஏற்படக்கூடாது, என்பதே இதன் நோக்கமாக இருக்க
முடியும். பெண்கள் பள்ளிவாசலுக்கு அலங்கரித்துக் கொண்டு வரக்கூடாது, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா) ஒரு தடவை பெண்கள் பள்ளியிலிருந்து வெளியே செல்லும் போது ஆண்களுடன் கலந்து
விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அது சமயம் நபியவர்கள் பெண்களிடம், நீங்கள் ஆண்களை விட்டும் விலகி
பாதையின் ஓரத்தில் தான் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகு பெண்கள்
தங்களுடைய ஆடை சுவற்றுடன் உரசும் அளவுக்கு ஓரமாகச் செல்வார்கள். (அபூதாவூத்)
மஸ்ஜிதுந்நபவியில் பெண்கள் நுழைவதற்கான தனி வாசல் இருந்தது.
அந்த வழியாக இப்னு உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை செல்ல வில்லை. (அபூதாவூத்)
இப்படி பெண்கள் பள்ளிக்கு வந்தால் கூட காலத்தில் சிறந்த
பொற்காலத்திலும் இவ்வளவு நிபந்தனைகளை விதித்திருந்தார்கள். பெண்களும் ஆண்களைப் போல்
பள்ளிக்கு வரலாம், என்றிருந்தால் இத்தனை நிபந்தனைகளும் எச்சரிக்கைகளும் எதற்காக? எனவே பெண்கள் பள்ளிக்கு வருதல்,
என்பது சில குறிப்பிட்ட
நிபந்தனைகளுடன் தான் இருந்தது. அதாவது ஃபிதனா ஏற்படாத விதத்தில் வர வேண்டும். அத்துடன்
ஃபித்னா ஏற்படாத நேரத்தில் - காலத்தில் (இரவில்) வரவேண்டும், என்று அறிவுறுத்தப் பட்டிருந்ததது.
எனவே நபித்தோழர்களும் அந்த நபிமொழிகளை விளங்க வேண்டிய விதத்தில் விளங்கி கால சூழ்நிலை
மாறும் போது அதற்குத் தோதுவாக நபியவர்களின் வழிகாட்டலின் படி பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது,
என்பதை நடைமுறைப்படுத்தினார்கள்.
பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி வழங்கங்கூடிய நபிமொழிகளை நபித்தோழர்கள்,
எப்படி விளங்கினார்களோ
அவ்விதம் விளங்குவதே மார்க்கத்தின் நிலைபாடாக இருக்க முடியும். வானத்திலிருந்து நேராக
நமக்கு வஹி இறங்குவது போல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
நபியவர்களின் காலத்திற்குப் பிறகு ஸஹாபாக்கள்,
பெண்கள் பள்ளிக்கு வருவதை
விரும்பவில்லை. நபிமொழிளுடைய உண்மையான உட்கருத்தை விளங்கியே அவர்கள் இவ்வாறு முடிவு
செய்தனர். நபித்ததோழர்களின் காலத்திலும் கூட எல்லா பெண்களும் பள்ளிவாசலுக்கு வந்ததாகச்
சொல்ல முடியாது. உமர் (ரலி) அவர்கள் ஆதிகா (ரலி) அவர்களை திருமணம் செய்யும் போது என்னை
பள்ளிவாசலுக்கு செல்வதை விட்டும் தடுக்கக் கூடாது, என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே
நிகாஹ் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஜுபைர் பின் அவாம் (ரலி) அவர்கள்
அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் போதும் இதே நிபந்தனையை முன்வைத்தார்கள். இதன் மூலம்,
பரவலாக பெண்கள் பள்ளிக்கு
செல்வதில்லை, என்பதும் அப்படி யாராவது செல்ல நினைத்தால் திருமணத்திற்கு முன்பே அதற்காக நிபந்தனை
வைப்பதற்கான அவசியம் இருப்பதையும் உணர முடிகிறது.
பெண்கள் பள்ளிக்கு வருவதால் வணக்கததின் பெயரால் குற்றங்கள்
நடப்பதற்கான சூழல் உருவாகி விடக்கூடாது, என்பதில் நபித்தோழர்கள் கவனமாக இருந்தார்கள். பள்ளிவாசலுக்குப் போவதில் உறுதியாக இருந்த ஆதிகா
(ரலி) அவர்கள் கூட ஒரு நேரத்தில் மக்களிடம் மாற்றம் வந்து விட்டது, மக்கள் கெட்டுவிட்டனர்,
சீஹி ரிசிலீரிசீ என்ற
காரணம் கூறி மஸ்ஜிதுக்கு செல்வதை விட்டுவிட்டார்கள். (அத்தம்ஹித்) ஆதிகா (ரலி) அவர்களை
உமர் (ரலி) அவர்களும் ஜுபைர் (ரலி) அவர்களும் பள்ளிக்கு செல்வதை தடுத்தும் விடவில்லை.
உமர் (ரலி) அவர்கள் மிஹ்ராபில் தாக்கப் படும் போது மனைவி ஆதிகா (ரலி) அவர்கள் அந்த
ஜமாஅத்தில் தான் தொழுது கொண்டிருந்ததர்கள். அதற்குப் பிறகு ஜுபைர் (ரலி) அவர்களை திருமணம்
முடித்தார்கள். அப்பொழுதும் பள்ளிக்குச் சென்றார்கள். இரண்டு நபித்தோழரும் காலம் கெட்டுவிட்டதை
தங்களுடைய தூர நோக்கு சிந்தனையின் மூலம் உணர்ந்து விட்டனர். எனினும் ஆதிகா (ரலி) அவர்கள்
காலம் கெட்டுவிட்டதாக அதுவரை உணரவில்லை, என்பதால் தான் பள்ளிக்குச் சென்றார்கள்.
பள்ளிக்குச் செல்வது எல்லா நிலையிலும் கட்டாயம்,
என்றோ சுன்னத் என்றோ
கருதி செல்லவில்லை. எனவே தான் காலம் கெட்டுவிட்டதை எப்பொழுது உணர்ந்தார்களோ உடனடியாக
பள்ளிக்குச் செல்வதை விட்டுவிட்ர்கள். அவ்வாறே ஆயிஷா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்குப்
பிறகு காலசூழ்நிலை மாறிவிட்டதை உணர்ந்து கொண்டு, இன்றைய கெட்ட சூழ்நிலை நபி (ஸல்) அவர்களின்
காலத்தில் இருந்திருந்தால் நபியவர்கள் கண்டிப்பாக பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்திருப்பார்கள்,
என்று கூறினார்கள்.
(புகாரி)
தற்காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் எவ்வளவு
கேவலமான நிலைக்கு ஆளாக்கப் படுகிறார்கள், என்பது பற்றி யரும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. நபி
(ஸல்) அவர்கள் காலத்திலேயே இரவு தொழுகைக்கு பெண்கள் வருவார்கள். யார் என்று தெரியாத
அளவுக்கு இருட்டு இருக்கும் போதே வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள், என்றால் தற்காலத்தில் இரவிலும்
பகலிலும் பெண்களுக்கு பாதுகாப்பான நிம்மதியான சூழல் நிலவவில்லை. இப்படிப்பட்ட சோதனையும்
குழப்பமும் நிறைந்த காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது, என்று சொல்வது தான் மார்க்கத்தின்
பார்வையில் சரியானதாக இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்களுக்கு
ஆடைப் பற்றாக்குறை இருந்ததால் ஒரே ஆடையில் கழுத்தில் கட்டியவர்களாக தொழுவார்கள். இதனால்
பின் வரிசைகளில் பெண்கள் தொழும்போது இமாம் ஸஜ்தாவிலிருந்து எழுந்து விட்டாலும் உடனடியாக
பெண்கள் எழக்கூடாது. ஆண்கள் எழுந்து உட்கார்ந்த பிறகே பெண்கள் ஸஜ்தாவிலிருந்து எழ வேண்டுமென்று
பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (புகாரி) இங்கே நபி (ஸல்) அவர்கள்
இமாம் எழுந்து உட்கார்ந்தாலும் பரவாயில்லை. ஒரு ஃபித்னாவை விட்டும் தப்பிக்க வேண்டுமென்பதே
முக்கியம். எனவே, தாமதமாக ஸஜ்தாவிலிருந்து எழ வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள்.
தந்காலத்தில் பெண்கள் வெளியே சென்றால் தங்களை அலங்கரிக்காமல்
செல்ல மாட்டார்கள். நறுமணம் பூசாமல் செல்ல மாட்டார்கள். தவறு எங்கு நடந்தாலும் தவறு
தான். அதுவே இறையில்லாமகிய பள்ளிவாசலில் நடக்குமேயானால் அதைத் தடுப்பதற்குத் தோதுவான
முறையில் சட்டங்களை அமைக்க வேண்டும். நறுமணம் பூசிவிட்டு பெண்கள் பள்ளிக்கு வர வேண்டாம்,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அதோடு மட்டும் நிறுத்தவில்லை. எந்தப்பெண் நறுமணம் பூசிவிட்டாளோ அவள் நம்முடன்
இஷா ஜமாஅத்துக்கு வரவேண்டாம், என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
இந்த ஹதீஸ் நறுமணம் பூசும் பெண்களுக்கானது. பள்ளிவாசலுக்கு
வரும் போது நறுமணம் பூச வேண்டாம் எள்று ஒரு பக்கம் சொன்னாலும் நறுமணம் பூசிய பெண் பள்ளிக்கே
வர வேண்டாம், என்றும் சொல்லியிருக்கிறார்கள். எனவே, பெண்களின் நிலையைக் கவனித்து இங்கே நபி (ஸல்) அவர்கள்
சட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். எனவே, தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டிலேயே
தொழுது கொள்வதே பொருத்தமானது, அதுவே நபிமொழிகளின் மூலம் விளங்கப்படும் ஒன்றாகவும் இருக்கிறது.
நபித்தோழர்களும் அவ்வறே விளங்கினார்கள்.
No comments:
Post a Comment