குறைந்து வரும் பெண்ணினம்
ஒவ்வொர் ஆண்டும் ஜூலை 11 ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக
கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் மக்கள் தொகை அந்நாட்டின் வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு
கொண்டிருப்பதால் அது பற்றி ஒவ்வொரு நாடும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஒரு நாளை ஒதுக்கி
கொண்டாடினால் மட்டும் போதாது. மக்கள் தொகை எப்படி கூடினாலும் வறுமையை விரட்டுவதற்கு
தூர நோக்கு திட்டங்கள் அவசியம். இன்று உலகில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை
தோராயமாக வேண்டுமானால் கணக்கிட்டுக்கொள்ளலாம். துல்லியமாக யாரும் கணக்கிட முடியாது.
கம்ப்யூட்டரால் கூட கணிக்க முடியாது. ஆதம் (அலை) ஹௌவ்வா (அலை) ஆகிய இருவரின் மூலம்
அதிகமான ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் பரவச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. (4:1)
கோடானு கோடி மக்கள்
தோன்றி மறைந்திருக்கிறார்கள். இன்றும் முழு உலகிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இனியும் யுக முடிவு நாள் வரை வர இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அதிகமான என்ற ஒரு
வார்த்தையில் அல்லஹ் உள்ளடக்கி விட்டான்.
2011 பிப்பரவரியில் நிறைவடைந்த 15 வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகை 121 கோடி என தெரிய வந்துள்ளது.
மொத்தத்தில் மக்கள் தொகை கூடியிருந்தாலும் வளர்ச்சி விகிதம் முன்பை விடக் குறைந்திருக்கிறது.
மக்கள் தொகை கூடினாலும் குறைந்தாலும் அது இயற்கையாக அமைந்தால் எல்லா தரப்பிலும் சம
விகிதத்தில் இருக்கும். ஆனால், செயற்கையாக குறைக்க நினைத்தால் அது தாறுமாறான ஏற்றத்தாழ்வைத்
தான் உண்டாக்கும். இப்பொழுது அது தான் நடந்துள்ளது. இன்று ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை சம விகிதத்தில அமையவில்லை. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்
ஆண், பெண் பாலின
விகிதம் 1000:940 ஆக இருக்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பது தான் யதார்த்தம். யுத்தகளம்
போன்றவற்றில் பெண்களின் இறப்பை விட ஆண்களின் இறப்பே அதிகமாக இருக்கும். இதை சமாளிப்பதற்கு
பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அப்படித்தான்
இருந்தது. இன்று நிலை தலைகீழாகி விட்டது. பெண்களின் எண்ணிக்கையும் குறைவு. காதல் தோல்வி,
தேர்வில் தோல்வி போன்ற
காரணங்களால் அவர்களின் தற்கொலையும் அதிகமாக நிகழ்கிறது.
சிறுமிகளுக்கு தட்டுபபாடு:
இதை விட ஆபத்து என்னவெனில் ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின்
எண்ணிக்கை அதே வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகப் பெரும்
சரிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த 1961 ம் ஆண்டில் 1000:978 என்ற விகிதத்திலும், 2001 ல் 1000:927 ஆக இருந்த சிறுவர்,
சிறுமியரின் பாலின விகிதம்
தற்போது 1000:914 என்ற அளவை எட்டயிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையின் நிலை என்னவாகும்?
என்பதே கேள்விக்குறி
தான். இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து விடும்
என்கிற அபாய ரிபோர்ட்டை ஹெல்த் டுடே (ஜூன் 2011) வெளியிட்டுள்ளது. திருமண உறவுகளில்
இந்த விகிதாச்சாரம் எதிரொலிப்பதால் வருங்கால தலைமுறை சமூக உறவுகளில் விரும்பத் தகாத
மாற்றங்களை எதிர் கொள்ள நேரிடும். ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் ஏற்படும். பாலின விகிதம் இப்படி
சரிந்தால் ஒரு தலைமுறையே ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் அபாயம் இருப்பதாக அமைச்சர்
பரூக் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
தொடரும் சிசுக் கொலை:
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்திருபதற்கு என்ன
காரணம்? இது
சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. யாவரும் அறிந்ததே! மகளிர் தினம், அன்னையர் தினம் என பல நினைவு
தினங்கள் கொண்டாடப்பட்டும் என்ன பிரயஜோனம்? இது போன்ற நினைவு தினங்கள் மட்டும்
பிரச்சினைக்கு தீர்வாகி விடுமா? இன்று பெண்ணுரிமை இயக்கங்களுக்குத் தான் என்ன குறைவு?
கருவில் இருக்கும் குழந்தை
ஆணா? பெண்ணா?
என்று பார்ப்பதற்குத்
தடை இருந்தும் அந்தச் சட்டம் எந்தஅளவுக்கு அமுல்படுத்தப்படுகிறது? நாகரிகம் வளர்ந்து விட்டதாக
சொல்லப்படும் இந்தக் காலத்திலும் பெண் சிசுக் கொலை நடந்து கொண்டு தானே இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு விவசாயி தன்னுடைய பெண் குழந்தையை சுவற்றிலேயே
அடித்துக் கொன்றதாக பத்திரிக்கைத் தகவல்.
மௌட்டீக காலத்தில் நடந்தது:
நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப் பட்ட காலத்தில் மௌட்டீக
காலத்து மக்கள் பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு இவ்வளவு
காலம் சோறு கிடைத்ததை மறந்து விட்டு குழந்தைகளை அதிகமாகப் பெற்று யார் சோறு போடுவது?
என்று சிந்தித்தனர்.
பெண் குழந்தை பிறந்தாலே கேவலம் என்று கருதினர். பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று
சுபச் செய்தி சொல்லப்பட்டால் அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகிறது. துக்கத்தில் மூழ்கி
விடுகிறான். இந்தக் கேவலமான செய்தி கிடைத்து விட்டதே! என்பதற்காக இனி யார் முகத்திலும்
விழிக்கக் கூடாது, என்று மக்களை விட்டு ஒதுங்கிச் செல்கிறார். அவமானப் பட்டுக் கொண்டு அக்குழந்தையை
வைத்திருப்பதா? அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? என்று சிந்திக்கிறார். பாருங்கள்! இவர்கள் (இறைவனைப் பற்றி)
இவர்கள் எடுத்த முடிவு எவ்வளவு மகா கெட்டது! (அல்குர்ஆன் - 16:57;58)
தந்தைக்குப் பின்னால் அப்பா! அப்பா!! என்று பாசமாக ஓடி
வரும் பிள்ளையையும் ஈவிரக்கமின்றி தன்னுடைய கையாலேயே தூக்கி கிணற்றுக்குள் வீசிய நிகழ்வுகளையும்
வரலாற்றில் காண முடியும். அந்தக் காலத்திலேயே (தற்காலத்தைப் போல) புதைப்பது தவறு என்று
கூறி தடுத்தவர்களும் இருக்கத் தான் செய்தார்கள். ஆனால் குற்றச் செயல் ஓய்ந்த பாடில்லை.
இஸ்லாம் நிகழ்த்திய புரட்சி:
இப்படிப்பட்ட காலத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் உலகிற்கு
நபியாக அனுப்பப் பட்டார்கள். இந்த காட்டுமிராண்டித் தனமான காரியத்தை ஒழிப்பதற்காக நபியவர்கள்
பல திட்டங்களைத் தீட்டினார்கள். வெற்றி பெற்றார்கள். முஸ்லிமாகக் கூடிய பெண்களிடம்
நாங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டோம், என்ற ஒப்பந்தத்தையும் வாங்கும் படி குர்ஆன் உத்தரவிட்டது.
(அல்குர்ஆன்- 60:12) இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் வயதுக்கு ரவும் வரை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குகிறவர்
(நபியவர்கள் இரண்டு விரலையும் சேர்த்துக் காட்டி) நானும் அவரும் சுவனத்தில் இப்படி
சேர்ந்திருப்போம், என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் - 8/38) (கியாம நாளில்) உயிருடன் புதைக்கப்பட்ட
பெண் குழந்தையிடம் (பாவமென்றால் என்ன வென்றே தெரியாத நீ, எந்த குற்றத்திற்காக கொல்லப்பட்டாய்?
என்று கேட்கப்படும்
(81:8;9) என்ற
இறைவசனம் ஒரு பெரிய நூல் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரிய முஸீபத் என்று கருதப்பட்ட பெண்குழந்தையை பெரிய
ரஹ்மத் என்று மக்கள் மனதில் பதியுமளவுக்கு நபியவர்கள் நல்லுணர்வை எற்படுத்தினார்கள்.
அன்னாரின் காலத்திலேயே பெண் குழந்தைகளை விரும்பும் சமுதாயத்தையும் கண்டார்கள்,
என்பது சரித்திர உண்மை.
நபி (ஸல்) அவர்கள் உம்ராவை முடித்து விட்டு மக்காவிலிருந்து புறப்படும் போது ஷஹிதாகி
விட்ட ஹம்ஸா (ரலி) அவர்களுடைய (அனாதையான பெண் குழந்தை உமாமா, சச்சா! சச்சா! என்று சொல்லிக்
கொண்டு ஓடி வந்தது. உடனே அலி (ரலி) அவர்கள்
கையில் தூக்கிக் கொண்டு சொந்தம் கொண்டாடினார்கள். இன்னொரு புறம் ஜஃபர் (ரலி) அவர்கள்
இது என் சச்சாவின் மகள். அச்சிறுமியின் சின்னம்மா என்னிடம் (மனைவியாக) இருக்கிறார்.
எனவே, அக்குழந்தை
எனக்கே சொந்தம், என்று சொல்கிறார்கள். இந்த சந்தோஷமான காட்சியைக் கண்டு ரசித்த ஈருலகத் தலைவர் நபி
(ஸல்) அவர்கள், சின்னம்மா, அம்மாவுக்கு சமம், என்று கூறி ஜஃபர் (ரலி) அவர்களிடமே ஒப்படைத்தார்கள். (நூல்: புகாரீ) புதைத்த சமுதாயம்
எப்படி மாறி விட்டது? இது தான் புரட்சியின் இலக்கணம். சுகப்பிரசவம்
போதும்:
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் குடும்பத்தில் யாருக்காவது
குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வந்தால், ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்க மாட்டார்கள்.
ஆரோக்கியமாக பிறந்ததா? என்று கேட்பார்கள். ஆண் என்று சொல்லப்பட்டால் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்வார்கள். (நூல்
- அல்அதபுல் முஃப்ரத் ) இன்றைய நிலை:
இன்று பெரும்பாலும் குழந்தை பெற்றால் சாப்பாட்டுக்கு என்ன
செய்வது? என்ற
நிலை இல்லை. தற்காலத்தில் பெண்குழந்தையை வெறுப்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன.
பெண் பெரியவளாகிவிட்டால் அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமே! வரதட்சணை என்ற பெயரில்
லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டுமே! சீர் வரிசையும் வரிசை வரிசையாக கொடுக்க வேண்டுமே!
போன்ற பல காரணங்கள் தான் இன்று பெண் குழந்தையின் மீது வெறுப்பை அள்ளிக் கொட்டியுள்ளன.
ஆனால் இவையனைத்தும் ஷரீஅத்தில் இல்லாதவை. இவையெல்லாம் இல்லாமல் இருக்க முடியுமா?
என்று எதிர்வாதம் புரிபவர்கள்
அனைவரும் இதன் காரணமாக பெண்கள் கேவலமாகக் கருதப்படும் பாவத்திற்கும் பெண்சிசுவைக் பிறக்க
விடாமல் கருவிலேயே கலைத்து விடும் கொலைக்குற்றத்திற்கும் பெண்களுக்கிழைக்கப் படும்
கொடுமைகளுக்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக
வேண்டும்.
வரம்பு மீறிய ஆணாதிக்கம்:
சிரமப்பட்டு திருமணம் செய்து வைத்தாலும் அத்தோடு பிரச்சினை முடிந்த பாடில்லை. திருமணத்திற்குப்
பிறகும் பெண் துன்புறுத்தப்படுகிறாள். நகைக்காக பணத்திற்காக அவள் தாய் வீட்டுக்கு விரட்டப்
படுகிறாள். மனைவியிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளுமாறு உபதேசிக்கும் மார்க்க வழிகாட்டலைக்
கூட பெரும்பாலான ஆண்கள் கண்டு கொள்வதில்லை. அவள் தொழாமல் இருந்ததற்காகக் கூட கோபப்
படமாட்டார். ஆனால் தனக்கு ஏற்படும் சின்னச்சின்ன சிரமத்தையும் பெரிதுபடுத்தி விடுவார்.
ஆனால் இன்று தலாக் சொல்வது சாதாரணமாகி விட்டது. சின்னச் சின்ன பிரச்சினைக்கும் தலாக்
தான் தீர்வாகிறது. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. அல்லது
தலாக் கொடுக்காமலும் நல்ல முறையில் சேர்ந்து வாழமலும் கொடுமைப் படுத்துவதும் இன்று
சமூகத்தில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. பிறகு பெண் குழந்தை பிறப்பதை மக்கள் எப்படி விரும்புவார்கள்?
நபியவர்களின் காலத்தில்
நடந்ததைப் போன்றதொரு புரட்சி தற்காலத்திலும் நடந்தாக வேண்டும். அல்லாஹ் உதவி செய்யட்டும். நடப்பவையனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு
தான் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே! அவன் நாடியவர்களுக்கு
பெண் குழந்தையாகக் கொடுக்கிறான். நாடியவர்களுக்கு ஆண் குழந்தையாகக் கொடுக்கிறான். அல்லது
ஆணையும் பெண்ணையும் கலந்து கொடுக்கிறான். தான் நாடியவர்களை மலடாக - குழந்தையற்றவர்களாக
ஆக்குகிறான். நிச்சயமாக அவன் அறிந்தவனாககும் சக்தி மிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்
- 42:49;50)
பாலினம் மாறுபடுதுவதற்கு யார் காரணம்?:
அதே சமயம் ஒவ்வவொரு காரியத்திற்கும் காரணத்தையும் அல்லாஹ்
படைத்துள்ளான். ஆண்குழந்தை பெறுவதற்கும் பெண்குழந்தை பெறுவதற்கும் ஆணே காரணம் என்று
விஞ்ஞானம் கூறுகிறது. பெண் இனச் செல்லில் உள்ள இரு பால்குரோமசோம்களும் அமைப்பில் ஒரே
சீராக இருப்பதால் அவை ஒஒ எனப்படுகின்றன. ஆண் இனச் செல்லிலுள்ள .இரு பால்குரோமசோம்களும்
ஒரே சீராக இல்லாமல் பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கின்றன. பெரியதை ஒ என்றும் சிறியதை
ல என்றும் கூறுவர். ஆண் இனச் செல் முதிரும் போது இரண்டு வகை விந்தணுக்கள் உருவாகின்றன.
இவற்றில் ல உள்ள விந்தணு பெண்ணின் அண்டவணுவுடன்
சேர்ந்தால் ஆண் குழந்தையும் ஒ உள்ள விந்தணு பெண்ணின் அண்டவணுவுடன் சோந்தால் பெண்குழந்தையும் உண்டாகும். இதனால் பிறக்கப்போகும்
குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பவர் கணவர் தான், என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு அரேபியப் பெண், பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததற்காக
தன் பக்கமே வராமலிருந்த கணவனை கண்டித்து பின்வருமாறு பாடுகிறார்: (கணவர்) அபூஹம்ஸாவுக்கு
என்ன ஆனது? அவர் நம்மிடத்தில் வராமல் ஆண் குழந்தை பெற்றெடுக்க வில்லை, என்ற கோபத்தில் பக்கத்து வீட்டில்
இருக்கிறாரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது நம்முடைய கையில் இல்லை. நாங்கள் ஒரு பூமியைப்
போல. எங்களிடத்தில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அது தான் விளையும். (நூல்: தஃப்ஸீரு
ரூஹுல் மஆனீ- அத்-43; வசனம் 13)
எனவே, பெண் குழந்தை பெற்றதற்காக பெண்ணைக் குறை கூற வேண்டிய தேவையுமில்லை.
பெண் குழந்தையை வெறுக்க வேண்டிய தேவையுமில்லை. இந்தியத் திருநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை
கட்டிக்காப்பதற்கு பெண் குழந்தை மீதுள்ள வெறுப்பு அகன்றாக வேண்டும். தேவையற்ற சடங்குகளும்
சம்பிரதாயங்களும் ஒழிக்கப்பட்டாக வேண்டும். பெண்கள் அதிகமாவதை யுக முடிவு நாளின் அடையாளமாக
கூறப்பட்டுள்ளது. எனவே அதுவும் நடந்தே தீரும்.
No comments:
Post a Comment