Wednesday, 25 September 2013

நிலநடுக்கம் ஏன்?




செப் - 24- 2013
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.நில அதிர்வு காரணமாக கட்டடம் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்..
 
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின்தென்கிழக்கே250 கி.மீ. தொலைவில் உள்ளபலுசிஸ்தான் மாகாணத்தினை மையமாக கொண்டு நிகழ்ந்ததாகதகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரிக்டர் அளவு கோலில்7.8 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்க்த்தில் 80 பேர் பலியானார்கள். நேற்று7.7என்ற ரிக்டர் அளவில் பாகிஸ்தானை மையாக வைத்து கடுமையான பூகம்பம் உருவானது.இந்த பூகம்பத்தில் 80 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலி எண்ணிக்கைஅதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தின்அவரான் மாவட்டத்தில் தான் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
 

கராச்சி, ஐதராபாத், லர்கானா மற்றும் சிந்து மாகாணத்தின் ஒரு சில நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. லாகூர், ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களிலும்நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில நிமிடங்கள் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் அலறியடித்து வெ‌றியேறினர். 


சுனாமி - ஜப்பானியச் சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை. துறைமுகத்தையே நாசப்படுத்தும் அலை என்பதால் சுனாமி என்பர். ஆனால் அந்த சுனாமி துறைமுகத்தை மட்டுமல்ல. துணைக்கண்டத்தையே நாசப்படுத்துவது ஒரு புறமென்றால் இன்று சுனாமி என்ற் வார்த்தை முழு உலகையும் அச்சுறுத்தக் கூடியதாக மாறிவிட்டது. 
எந்த நிமிடத்தில் என்ன நடக்கும்? என்று தெரியவில்லை. எங்காவது பூகம்பம் என்றால் இங்குள்ள கடற்கரைகளெல்லாம் வெறிச்சோடி விடுகின்றன. கட்டிடங்கள் காலியாகி விடுகின்றன. மருத்துவமனைகள் மரத்தடிக்கு மாறிவிடுகின்றன. டான்ஸ் ஆடுபவர்கள் எப்படியெப்படியோ ஆடியிடுப்பார்கள். ஆனால் மேஜைகளின் இந்த லேசான ஆட்டத்திற்கு அனைவரும் ஆடிப்போய்விட்டனர். 

இந்த பூகம்பத்திற்கே இவ்வளவு பயம் என்றால் மறுமை வேதனை எவ்வளவு மகாக் கொடியது? வியாபாரத்தில் ஏற்படும் சிறு நஷ்டத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு பெருநஷ்டத்தை விட்டும் தவிர்ந்து கொள்வதற்காக என்னென்ன திட்டமெல்லாம் தீட்டுகிறோம். மறுமை வேதனையை ஞாபகப்படுத்தக்கூடிய இந்த பேரழிவுகள் எனும் சிறு வேதனையின் மூலம் ஏன் படிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடாது. அவர்களுக்கு (மறுமையில்) பெருவேதனை வருவதற்கு முன் இவர்களுக்கு (இவ்வுலகில்) சொற்ப வேதனை நாம் சுவைக்கச் செய்வோம். இவர்கள் (தங்களது பாவங்களை விட்டு) விலகிவிடக்கூடும், என்பதற்காக! (அல்குர்ஆன் - 32:21)


எப்பொழுதாவது நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் அந்தச் சமயத்தில் மட்டும் மக்களுக்கு அது  பற்றிய சிந்தனை இருக்கும், சில நாட்களுகுப் பிறகு மீண்டும் தங்களுடைய பழைய (பாவங்கள் நிறைந்த) வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். அல்லது எங்காவது ஆபத்து நடந்தால் நமக்கென்ன? என்று இருந்து விடுகின்றனர். 


ஆனால் உலகில் கொடுக்கப்டும் தண்டனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை என்றால் சுற்றி இருப்பவர்களுக்கு பாவத்தை விட்டும் மீள்வதற்கான படிப்பினையாக அமைய வேண்டும். மேலும் உங்களில் எவர்கள் சனிக்கிழமை வரம்பு மீறினார்களோ அவர்களைத் திட்டமாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அப்பொழுது அவர்களுக்கு நீங்கள் சிறுமை அடைந்த குரங்குகளாகி விடுங்கள் என்று நாம் கூறினோம். எனவே அதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும் அதற்குப் பின் வருவோருக்கும் படிப்பினையாகவும் (நம்மை) அஞ்சியவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் - 2:65, 66)  


இன்று முழு உலகமும் ஒரு கிராமம் போல் ஆகிவிட்டது. எங்கு என்ன நடந்தாலும் உடனடியாக உலகம் முழுவதும் தகவல் பரவிவிடுகிறது. இன்று ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் தானே பூகம்பம் ஏற்பட்டுள்ளது, என்று தைரியமாக இருந்துவிட முடியாது. இந்தோனேஸியாவில் நிலநடுக்கமென்றால் இந்தியாவும் இலங்கையும் நடுங்குமளவுக்கு அல்லாஹ்வின் தண்டனை அமைந்து விட்டது.


பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் எதுவும் நடப்பதில்லை. இது போன்று இவர்களுடைய அதிகமான எச்சரிக்கைகள் பீதியைக் கிளப்புவதற்குத் தான் பயன்படுகின்றன. அல்லாஹ் நாடி விட்டால் அறிவாளிகளின் அறிவையே மயக்கமடையச் செய்துவிடுகிறான். நீண்ட நேரம் ஆகியும் சுனாமி வராததால் எச்சரிக்கையை வாபஸ் பெற்றனர். பிறகு சுனாமி ஏற்படாததற்கு ஒரு காரணத்தையும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். எச்சரிக்கை விடுக்கும் போது இந்த காரணம் தெரியாமல் போய்விட்டது. 

குர்ஆனில் சுனாமி:
வஇயிதல் பிஹாரு ஃபுஜ்ஜிரத் சமுத்திரங்கள் ஓட்டிவிடப்படும் போது, வஇதல் பிஹாரு சுஜ்ஜிரத் கடல்கள் தீ மூட்டப்படும் போது - இவை உலக அழிவின் போது நிகழும் நிகழ்வுகள். இன்றைய கடல் கொந்தளிப்புகளை இந்நிகழ்வுகளின் நினைவூட்டலாகவும் சாம்பிலாகவும் உணர முடிகிறது. 

ஹிஜ்ரி 20 ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் நிலநடுக்கம் வந்தது. அப்பொழுது தங்களுடைய காலால் அடித்து, பூமியே! நீ ஏன் நடுங்குகிறாய்? உமர் உன் மீது நேர்மையான ஆட்சி புரியவில்லையா? என்று கேட்டார்கள். உடனடியாக நடுக்கம் நின்றுவிட்டது. 

பிறகு ஹிஜ்ரி 59 ஆம்  ஆண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது நாற்பது நாற்கள் வரை நீடித்தது. ஹிஜ்ரி 223 ஆம் ஆண்டு கிரானடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முழு நகரிலும் ஒரே ஒரு மனிதர் தான் தப்பமுடிந்தது. அனைவரும் மாண்டுவிட்டனர். 1917 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு லட்சம் பேர் மரணித்தனர்.  

1993 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா (அமெரிக்கா) வில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த இடத்தை மௌலானா பீர் துல்பிகார் ஸாஹிப் தாமத் பரகாதுஹும் அவர்கள் நேரில் கண்டதை பின்வருமாறு கூறுகிறார்கள்: மூன்று நிமிடம் நீடித்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய கட்டிடங்களெல்லாம் இடிந்து விழூந்து விட்டன. ஆனால், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்திலிருந்து 20 மீட்டர் தூரத்தில் ஒரு பள்ளிவாசல் இருந்தது. அப்பள்ளியின் ஒரு செங்கல் கூட விழவில்லை. (ஜல்ஜலா... முஷாஹதாதோ வாகிஆத்)
இன்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கடற்கறைகளையும் நாசப்படுத்திவிட்டன. ஏறத்தாழ இரண்டு லட்சத்து 22,000 பேர் இதில் மாண்டுபோயினர். தண்டனை கொடுக்கப்பட வேண்டிய இடத்திற்கு ஆயிரக்கணக்கானகி.மீட்டர்களுக்கு அப்பால் இந்த ராட்சஸ அலைகள் தோன்றுகின்றன.  

இறைக்கட்டளைப்படி புறப்படும் சுனாமி:
இந்தோனிசியக் கடலில் ஏற்பட்ட ராட்சஸ அலைகள் சுமார் 2000 கி.மீ. தூரத்தைக் கடந்து வந்து தமிழகக் கரையைத் தாக்கின. 600 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை இந்த அலைகள். அவை கடலுக்கடியிலேயே பயணிக்கின்றன. சுனாமி அலைகளால் நடுக்கடலில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நடுக்கடலில் அதன் உயரம் ஒரு அடி மட்டுமே இருக்கும். வழியில் நடுக்கடலில் வரும் கப்பலையோ படகையோ இந்த அலை எதுவும் செய்யாது. கடற்கரையைத் தாக்குவதற்காகவே அனுப்பப்பட்டவை அந்த அலைகள். அல்லாஹ் எந்த இடத்தில் அழிவை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தானோ அவ்விடத்தை நோக்கியே இந்த அலைகள் பயணிக்கின்றன. கடலுக்கடியில் ஒரு அடியாக இருந்த அலைகள் தாக்க வேண்டிய இடத்தை அடைந்தவுடன் அவை 50 அடி வரை உயர்ந்து விடுகிறன்றன. நகரங்களையும் பட்டிதொட்டிகளையும் நாசமாக்கி விடுகின்றன. 

கத்ரீனா, ரீடா:
உலகின் சட்டாம்பிள்ளையாக இருக்கும் அமெரிக்காவையும் இயற்கைச் சீற்றம் விட்டு வைக்கவில்லை. அங்கு தான் நாஸாவும் உள்ளது. அதன் நிபுணர்கள், பூமிக்கு அடியிலும் அதற்கு மேலேயும் உள்ள எதுவும் தங்களுக்கு தெரியாமல் போய்விட முடியாது, என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் கத்ரீனா, ரீட்டா புயல் வருவதை அவர்களால் அறியமுடிய வில்லை. அமெரிக்காவுடைய ஒரு பெரிய நகரத்தின் மீது வெள்ளம் பாய்ந்தோடியது. முழு நகரமும் மூழ்கிவிட்டது. அதில் 25,000 பேர் இறந்து போயினர். ஒன்றரை லட்சம் கட்டிடங்கள் தரைமட்டமாயின.  

நிலநடுக்கம் ஏன்?
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் மூன்று காரணங்களைக் கூறினார்கள். 1. பெண்கள் அந்நிய ஆண்களுக்காக (வெளியே செல்லும் போது, திருமண நிகழ்சிகளுக்கு செல்லும் போது, பள்ளிக்கூடம், காலேஜ் செல்லும் போது) நறுமணம் பூசும்போது நிலநடுக்கம் ஏற்படும். 2. பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் நிர்வாணமாக இருப்பதில் கூச்சப்படமாட்டார்கள். (விபச்சாரம் பரவலாகி விடும். 3. மதுவும் இசையும் பரவலாகிவிடும். இவையெல்லாம் நடக்க ஆரம்பித்துவிட்டால் நிலநடுக்கத்தை எதிர்பார்க்கலாம். (ஜல்ஜலா ... முஷாஹதாதோவாகிஆத் - முஸ்தத்ரக் ஹாகிம் - 8575)

எந்த சமுதாயத்தில் வட்டியும் விபச்சாரமும் சர்வசாதாரணமாக நடக்க ஆரம்பித்துவிடுமோ அவர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத் - 3809)

இன்று இந்த இரண்டு பாவங்களும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. உலகின் பொருளாதாரமே வட்டியின் மீது தான் அஸ்திவாரமிடப்பட்டிருக்கிறது. விகாரமான அசிங்கமான காரியங்கள் சட்டஅங்கீகாரம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. முளஃபராபாதில் ஒரு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஒருஹோட்டலில் இசைத்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதில் இளம் வயது ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அப்பொழூது ஏற்பட்ட நிலநடுக்கத்தில அந்த ஹோட்டல் புதையுண்டு போனது. பிறகு, மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டபோது அரைநிர்வாணத்தில் ஆண்கள், பெண்களுடைய சடலங்கள் மீட்கப்பட்டன. (ஜல்ஜலா.... முஷாஹதாதோ வாகிஆத்)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது போல் இசையும் இன்று பரவலாகிவிட்டது. அதைவிட்டும் தப்பிக்க நினைத்தாலும் தப்பிக்க முடிவதில்லை. பயணத்தில் இருந்தாலும் இசை. பள்ளிவாசலுக்கு வந்தாலும் மொபைல் இசை. செல்போன் இசை எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. முஸ்லிமல்லாதர்கள் ஹரமுக்குள் வரக்கூடாது. ஆனால் அவர்களுடைய இசை எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தவாஃப் செய்யும் போதும் செல்போன் இசை. ஜியாரா செய்யும் போதும் கைபேசி இசை.


டைட்டானிக்:
இறைவனை மட்டுமே நினைக்க வேண்டிய பேரபாயத்தைக் கடந்து செல்லும் கப்பல்களில் கூட நாடக அரங்கு, திரைப்படத் தியேட்டர், சொகுசு ஹோட்டல், நீச்சல் குளம் போன்றவை இருக்கின்றன. டைட்டானிக் என்ற சொகுசுக்கப்பல் மூழ்கியது நவீன கப்பல் பயணத்தின் மிகப் பெரிய வடு. மேற்கத்திலய பணக்கார நாட்டவர் அதை லேஸில் மறக்கமாட்டார்கள். 

அல்லாஹ்வை நினைக்க வேண்டிய கடலில் ஆடம்பரமும் உல்லாசமும் உச்சகட்டத்தை அடைந்தால் அல்லாஹ்வின் கருணை எங்கிருந்து கிடைக்கப்போகிறது? 1912 ல் டைட்டானிக் தன்னுடைய முதல் பயணத்திலேயே பெரிய பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் இறந்தனர். அந்தக் கப்பல் மூழ்கிய இடத்தல் இன்றும் ஆராய்ச்சி நடக்கிறது. இன்றும் கடலுக்கடியில் கிடைக்கும் பழைய அலங்காரப் பொருள்கள் எல்லாம் ரொம்பத் தலைக் கிறுக்கி ஆடாதே! என்று மனிதனுக்கான எச்சரிக்கைகள். (வினவுஙக்ள் விடைதருவோம்) 

பாவத்தில் மூழ்கிக்கிடப்பவர்களை தலை தூக்கிப்பார்ப்பதற்கே இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இரத்த ஓட்டம் சீராக நடப்பதற்கு இதயம் இயங்குகிறது. அவ்வாறே இறைதியானத்திலும் இதயம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் குறை ஏற்பட்டுவிட்டால் மாரட்பபு வருவது போல் நிலநடுக்கமும் ஏற்படுகிறது. நபி (ஸல் அவர்களுடைய காலத்தில் ஒரு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. நபியவர்கள் தங்களுடைய கரங்களை நிலத்தின் மீது வைத்தார்கள். நிறுத்து! இன்னும் உனக்கு நிலநடுக்கத்திற்கான உத்தரவு வரவில்லை, என்று கூறினார்கள். பிறகு தோழர்களை முன்னோக்கி, நீங்கள் பாவமன்னிப்பு தேடவேண்டுமென்று உங்களுடைய இரட்சகன் விரும்புகிறான். எனவே நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம், நீங்கள் புதிது புதிதாக செய்யும் (பாவங்களினால் தான்) நிலநடுக்கம் ஏற்படுகிறது. இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் நான் உங்களுடைன் ஒருபோதும் இருக்கமாட்டேன் என்று கூறினார்கள். (அல்உகூபாத்- 18)

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு தடவை ஒரு சட்ட மசோதாவை எழுதி தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பெரிய பெரிய நகரங்களுக்கு அதை அனுப்பிவைத்தார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்கள்: எங்காவது நிலநடுக்கம் ஏற்பட்டால் நீங்கள் நான்கு காரியங்களைச் செய்ய வேண்டும். 1. ஆரம்பமாக அல்லாஹ்விடம் தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பு தேடவேண்டும். இஸ்திக்பார் செய்யவேண்டும். நாம் செய்த பாவங்களை அல்லாஹ்வுக்கு முன்னிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2. நீங்கள் தனித்தனியாக அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். கெஞ்ச வேண்டும். வீட்டிலோ அல்லது மஸ்ஜிதிலோ தனித்தனியாக துஆ செய்ய வேண்டும். 3. விரும்பினால் அனைவரும் மைதானாத்திற்கு சென்று துஆ செய்யலாம். 4. உங்களுடைய செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் ஸதகா செய்ய வேண்டும். தர்மம் வரக்கூடிய பேராபத்துகளை நிறுத்திவிடுகிறது. (அல்ஜவாபுல் காஃபீ- ஐல்ஐலா)


நல்லவர்களுக்கும்:
சுனாமி, பூகம்பம் போன்ற பேராபத்துகளில் ஏராளமான நல்லவர்களும் சிக்கிக்கொள்கிறார்களே! என்ற கேள்வி எழலாம். ஆனால் உலகில் தீமைகள் மிகைத்துவிட்டால் வரக்கூடிய அழிவு நல்லவர்களையும் விட்டுவைக்காது. தீமைகள் நடக்கும் போது அதைத் தடுப்பதற்கு முனைய வேண்டும். நமக்கென்ன? என்று இருந்துவிட்டால் அது நல்லவர்களையும் தாக்கும். சமூகத்தில் பாவங்கள் மலிந்து விடுவதைப் பார்த்தபின்பும் மக்கள் அவற்றைத் தடுக்கவில்லையானால் அநியாயக்காரன் அநியாயம் செய்வதை பார்த்த பின்பும் அவனைத் தடுக்கவில்லையானால் அல்லாஹ்வின் வேதனை அனைவரின் மீதும் வருவது நெருக்கமாகிவிடும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) 

எனவே, இது போன்ற ஆபத்துகள் வருவதற்கு முன் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் காரியத்தில் ஈடுபடவேண்டும். அப்படி ஏதாவது ஆபத்து உலகில் எங்காவது நிகழ்ந்து விட்டாலும் அது உலகின் மற்றமக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒர் இடத்தில் வேதனை இறங்கினால் அது நல்லோர் பொல்லோர் எல்லோருக்கும் அது வேதனையாகி விடாது. நல்லவர்களுக்கு அது அந்தஸ்தை உயரச்செய்து விடும். மரணிப்பவர்களில் அதிகமானோர் நோன்பாளிகளாக இருக்கலாம். திடீர் மரணம் கூட ஷஹிதுடைய அந்தஸ்தைத் தேடித்தந்துவிடும். எனவே, எங்கு வேதனை வருகிறதோ அங்குள்ள அனைவரையும் பாவிகளாக எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு மனிதரும் தங்களைத் தாங்களே குற்றவாளிகளாகக் கருத வேண்டும். அல்லாஹ்வின்பால் மீள வேண்டும்.        

Friday, 20 September 2013

தண்டனை மட்டும் குற்றத்தைக் குறைக்குமா?



வல்லுறவில் ஈடுபட்டவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நிறைய இருந்தாலும், ஒரு வல்லுறவுக்கொலைக்கு மரண தண்டனை தரப்பட்டிருப்பது, இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை.

2012 டிசம்பர் 16 ஆம் தேதி, தில்லி துணை மருத்துவ மாணவி நிர்பயா (ஊடகம் சூட்டிய பெயர்) கூட்டுவல்லுறவுக் கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியின் தண்டனை என்பதைக் காட்டிலும் பெருந்திரள் விருப்பம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த வழக்கின் குற்றவாளிகள் 6 பேரில் ஒருவர் சிறையில் தனக்குத்தானே தூக்கு தண்டனை விதித்துக்கொண்டார். தற்போது நான்கு பேருக்கு தில்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. ஒருவர் பதினேழரை வயதுள்ள இளம் குற்றவாளி என்பதால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதித்தது சிறார் நீதிமன்றம்.
இந்த நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தாலும்கூட பெருந்திரள் உளவியல் சாந்தமடைந்திருக்கும். சமூக எதிர்ப்பே இருந்திருக்காது. இந்த தண்டனைக்கு எதிராக யாரும் குரல் எழுப்ப மாட்டார்கள் என்பது உறுதி. குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள் மட்டுமே இந்தத் தூக்கு தண்டனை மிக அதிகம் என்று கூறுவார்கள். இந்த சமூகம், அது வழக்குரைஞரின் வேலை என்றே கருதும். தூக்கு தண்டனைக்கு எதிரான அமைப்புகள் கூட இப்போதைக்கு, பெருந்திரள் சாபத்துக்கு ஆளாக விரும்பாமல், அமைதி காக்கும்!

கற்பழிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிப்பதோடு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அளித்தலை நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரைத்திருந்தது. பாலியல் வன்முறையில் ஈடுபடும் சிறப்புக் காவல் படையினருக்கும் இதே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற வழக்குகளைப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்காமல், குற்ற வழக்காகவே கருதி விசாரிக்க வேண்டும் என்றும்கூடப் பரிந்துரை செய்திருந்தது.

அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையே போதுமானது என்று வர்மா கமிஷன் பரிந்துரைத்த போதிலும், அரிய தருணங்களில் தூக்கு தண்டனை விதிக்கலாம் என்று மத்திய அமைச்சரவை தனது அவசரச்சட்டத்தில் குறிப்பிட்டது. பெருந்திரள் மனவெழுச்சியைக் கருதி இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது யாரும் இந்த மரண தண்டனையை விமர்சனம் செய்யவில்லை. சட்டம் நிறைவேறியது. தற்போது நீதிமன்றமும், இந்த வழக்கை அரியதான ஒன்றாகக் கருதி, தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

வர்மா கமிஷன் பரிந்துரைப்படி இவர்களுக்கு, "இறக்கும்வரை சிறையில் இருக்க வேண்டும்' என்று தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், பெருந்திரள் கோபத்துக்கும், விமர்சனங்களுக்கும் நீதிமன்றம் ஆளாகியிருக்கும். இனிமேல், நாடு முழுவதும் இதேபோன்ற வல்லுறவு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல் உரக்க ஒலிக்கும்.

"இவ்வாறு பெருந்திரள் விமர்சனங்களுக்காக தீர்ப்புகள் அமைவது சரியாக இருக்குமா? தூக்கு தண்டனையால் வல்லுறவுக் குற்றங்கள் குறைந்துவிடுமா?' என்று கேள்வி எழுப்பக்கூட ஒருவரும் முன்வர மாட்டார்கள்.

பாலியல் குற்றங்கள் உணர்ச்சி சார்ந்தவை. உணர்வெழுச்சியால் மட்டுமே நடைபெறுபவை. இதற்கான காரணிகளை கட்டுப்படுத்தாமல், தூக்கு தண்டனையால் மட்டுமே குற்றங்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா?

நாடு முழுவதும் தற்போது வல்லுறவு வழக்கில் ஈடுபடுவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் இளம் சிறார்களாக இருப்பது அதிகரித்துவருகிறது. காரணம் என்ன?

ஊடகம், சமூக வலைதளங்களில் காமக்கிளர்ச்சி தரும் படங்கள், காட்சிப்பதிவுகள், கட்டுப்படுத்தப்படாமல், அனைத்து வயதினரும் திறந்து பார்க்கும் விதத்தில் இருக்கின்றன. திரைப்படங்கள் காதல் தீயை வளர்க்கின்றன. வளர்இளம் சிறார்கள் அசாதாரண பாலியல் தூண்டுதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். புதுப்புது சேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்க, அழகான பெண்களையே வேலைக்கு அமர்த்துகின்றன. ஆடைகளையும் தீர்மானிக்கின்றன. இதனை எந்தப் பெண்ணியவாதியும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. காசு கொடுத்தால் எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்ப முடியும். அரசு எந்தத் தணிக்கையும் இல்லாமல் அவற்றை அனுமதிக்கிறது. மதுவுக்கும் வயது ஒரு தடையில்லை.

இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்தாதவரை, தூக்குதண்டனையால் மட்டுமே பாலியல் குற்றங்களையோ, வல்லுறவு நிகழ்வுகளையோ கட்டுப்படுத்திவிட முடியாது. உணர்வுபூர்வமாக மட்டுமே சிந்திக்காமல், அறிவுபூர்வமாகவும் அணுகினால் இது புரியும்.

கொலை செய்தவனைப் போலவே, கொலை செய்யத் தூண்டியவனுக்கும் அதே தண்டனையை சட்டம் பரிந்துரைக்கிறது. என்னசெய்ய, ஊடகங்களையோ, அரசையோ தண்டிக்க முடியாதே...
நன்றி: தினமணி தலையங்கம்- 14 செப்- 2013 

Wednesday, 18 September 2013

வாலிபர்களே! வாசிக்க வாருங்கள்!





தவறான கொள்கைகள் பரவலாவதற்கு சமுதாயத்தின் அறியாமையும் ஒரு முக்கிய காரணம். படிப்பது என்றால் தொழிற்கல்வி மட்டுமே ஞாபகத்தில் வருமளவுக்கு சமூகசூழல் மூலம் மூலைசளவை செய்யப் பட்டுள்ளது. மார்க்கம் படிக்க வேண்டுமென்ற சிந்தனை மருந்துக்காவது இருகிறதா? என்பது கேள்விக்குறிதான்.


அரை தூக்கத்துடன் செல்லும் குழந்தைகள் மக்தப்களில் எதைத் தான் பெற்றுக்கொள்வார்கள்? பிறகு இரவு வரை பள்ளிப்படிப்பிலேயே முடங்கி விடுவார்கள். ஜூம்ஆ உரையின் மூலம் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பள்ளிகளும் கல்லூரிகளும் தடையாக இருக்கின்றன. மாணவர்களுக்கு ஜூம்ஆ தொழுகை கிடைப்பதே கூட பல சமயங்களில் அரிதாகிவிடும். பள்ளி விடுமுறை காலமாக இருந்தால் சிறப்பு வகுப்புகள், கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு இறையாகி விடும். அல்லது விடுமுறை, சுற்றுலாவில் முற்றுப் பெற்றுவிடும். மார்க்க அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமே கிடைக்காது போய்விடுகிறது.


சுன்னத்தான முறைப்படி குளிப்பது எப்படி? என்று கூட தெரியாமல் மார்க்க ரீதியாக வியாக்கியானம் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மார்க்க அறிவின் அடிப்படை கூட தெரியாமல் ஹலால், ஹராம் பேச முற்பட்டு விடுகிறார்கள்.  அவர்களில் மிகச் சீராகவும் சிறப்பாகவும் செயல்படுபவர்கள் யார் என்று சோதிப்பதற்காவே பூமியின் மீது உள்ளவற்றை நாம் திண்ணமாக அந்த பூமிக்கு கவர்ச்சிய(த்தான்) ஆக்கியிருக்கிறோம் (அல்குர்ஆன் - 18:07) இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள அஹ்ஸன் அமல் என்றால் சீராகவும் சிறப்பாகவும் அழகு நிறைந்ததாகவம் இருக்கும் செயலுக்கு சொல்லப்படும்.


அதாவது, மனிதன் செய்யும் அமல்களில் இரண்டு தன்மைகள் இருப்பது கட்டாயம். ஒன்று இக்லாஸ் எனும் மனத்தூய்மை. எந்த அமலைச் செய்தாலும் இறைப் பொருத்தத்திற்காக மட்டுமே செய்ய வேண்டும். இரண்டாவது ஒரு காரியத்தை முழு பக்தியுடன் செய்தால் மட்டும் போதாது, அந்த அமல் மார்க்கம் காட்டித் தந்த வழிமுறைப்படியும் இருக்க வேண்டும்.
ஜூம்ஆ போன்ற சமயங்களில் நாம் கேட்கும் பயான்களின் மூலம் நம்முடைய மார்க்கப் பற்றை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால், மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்வதற்கு நாம் தனியாக நேரம் செலவு செய்து அதற்குரிய நூற்களைப் பார்த்து படித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்று படிப்பதற்கு யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. பயணத்திலோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போதோ ஆடியோ மூலமாக ஏதாவது பதிவு செய்யப்பட்ட பயான்களைக் கேட்டுக் கொள்ள முடியும். ஒரு நேரத்தில் இரு வேலைகளைச் செய்ய முடியாது. அப்படிக் கேட்பதன் மூலம் மனதில் பதியவும் செய்யாது. டைம்பாஸ் பண்ணுவதற்கு வேண்டுமானால் அப்படி கேட்டுக்கொள்ளலாம்.


எனவே, மார்க்க விஷயங்களைப் படிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கியாக வேண்டும். சட்ட நூற்கள் மற்றும் அவ்வப்போது வரும் மாத இதழ்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களைத் தவறாமல் படிப்பதற்கு நேரம் கிடைக்கும் போது மார்க்க நூற்களுக்கு மட்டும் நேரம் கிடைக்காமல் போய்விடுமா? நம்முடைய வீட்டு டேபிள்களில் உருவப்படம் நிறைந்த செய்தித் தாள்களுக்கு இடமிருக்கும் போது மார்க்க சட்ட நூற்களுக்கு ஏன் இடமிருக்கக் கூடாது. செய்தித் தாள்களுடன் மார்க்க இதழ்களும் டேபிளில் இருந்தால் யாராவது அதைப் படிக்கும் போது அவர் மார்க்க அறிவைப் பெற்றுக் கொள்வதுடன் நமக்கும் அதற்கான நன்மையும் கிடைத்துவிடுமே!


வாலிபர்கள் தங்களுடைய பள்ளி, கல்லூரி விடுமுறையை ஷரீஅத்தைக் கற்றுக் கொள்வதில் முக்கியத்துவம் கொடுத்தால் தவறான கொள்கைகள் நமக்குள்ளே ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளலாம்! முஸ்லிம்கள் ஆட்சி செய்வதால் மட்டும் அது இஸ்லாமிய ஆட்சியாகி விடாது, என்பதைப் போல முஸ்லிம்கள் பத்திரிக்கை நடத்துவதால் மட்டும் அது இஸ்லாமிய பத்திரிக்கையாகி விடாது.


எனவே, சரியான கொள்கைகளை சொல்லக்கூடிய இஸ்லாமிய பத்திரிக்கைகளை தேடி படித்தறிவது அவசியம். இல்லையானால் அசத்தியவாதிகள் நம்மை மூளைச்சலவை செய்து விடுவார்கள். அல்லது மார்க்கம் தெரியாததால் நாம் பழகியதையெல்லாம் ஊர் நடைமுறைகளையெல்லாம் மார்க்கம் என்று விளங்கி விட முற்பட்டு விடலாம். சீர் வரிசையின்றி திருமணம் முடிப்பேன், என்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர் சொன்னாலும் கூட அவர் மத்ஹபை ஏற்காதவரா? என்று கேட்பவர்களும் நம்மில் உள்ளனர்.


வெறும் குர்ஆன் ஹதீஸுடைய மொழிபெயர்ப்பை மட்டும் பார்த்து விட்டு நாமாக எதுவும் முடிவு செய்து விடக்கூடாது. அல்லது தஃப்ஸீரு இப்னு கதீர் போன்ற ஏதாவது தஃப்ஸீரின் மொழிபெயர்ப்பைப் படித்து விட்டு மார்க்க சட்டங்களை முடிவு செய்து விடக்கூடாது.


குர்ஆன், ஹதீஸ், மற்றும் தஃப்ஸீர்களின் மூலம் மார்க்கத்தின் படி நடப்பதற்காக தேட்டங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். சட்டம் எடுப்பது அனைவருக்கும் சாத்தியமாகாது. எனவே, சட்டம் என்றால் தெளிவாக சட்டங்கள் எழுதப்பட்ட நூற்களைப் பார்த்தே அறிந்து கொள்ள வேண்டும். இன்று சிலர் இப்னு கதீர் மொழிபெயர்ப்பைப் பார்த்து விட்டு ஜகாத் சட்டத்தை முடிவு செய்வதோடு மட்டுமல்லாமல் சுன்னத் ஜமாஅத்தின் அங்கீகாரம் கிடைத்தது போல் அதை பொது இடங்களிலும் சொல்ல முற்பட்டு விடுகின்றனர். 


காதியானிகளும் மத்ஹப் மறுப்பாளர்களும் தோன்றுவதற்கு நம்முடைய உண்மையான சரியான கொள்கைகளையும் சட்டங்களையும் அறியாமல் இருந்ததே முதல் காரணம். நாம் நம்முடைய மார்க்கத்தை முறையாக அறிந்திருந்தால் தவறான கொள்கைக்கு வழி கிடைத்திருக்காது. குர்ஆனும் ஹதீஸும் அதிலிருந்து தொகுக்கப்பட்ட மார்க்க நூற்களும் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டப் போதுமானவை. நம்முடைய திருமணத்திற்கும் தலாக்கிற்கும் குடும்பவியலுக்கும் வணக்கவியலுக்கும் ஷரீஅத் சொல்லித் தரும் வழிமுறைகளை நாம் முன்னரே அறிந்திருந்தால் வழிதவறியவர்கள் நம்மை அடிபிரளச் செய்ய முடியுமா?



தமிழாக்கம் தேவை:
மக்கள் மார்க்கத்தை அறிவது கட்டாயம் என்று சொல்லும் போது மார்க்க அறிஞர்கள் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முழு மார்க்கத்தின் செய்திகளும் தமிழில் தரப்பட வேண்டும். எல்லாத் தூதர்களையும் அவரவரின் சமுதாய மொழியிலேயே (தூதுச் செய்தியை அறிவிப்பதற்காக) நாம் அனுப்பி வைத்தோம், (14:4) என்று குர்ஆன் கூறும். நம்முடைய தாய் மொழியில் மார்க்கச் செய்திகள் பரவலாகாத வரை மார்க்க அறிவாளர்களை உருவாக்க முடியாது.


இந்தயாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் தமிழகம், கேரளா தவிர ஏறத்தாழ மற்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் உர்தூ பேசுபவர்களாக இருப்பார்கள். வடநாட்டு உலமாக்கள் பிராந்திய மொழியில் மார்க்கத்தை தெளிவு படுத்துவதில் உலகிலேயே முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்கள், என்றே சொல்லலாம். அரபி மொழிக்கு அடுத்த படியாக உர்து மொழியிலேயே மார்க்க நூற்கள் அதிகமாக அமையப் பெற்றிருக்கின்றன. உர்தூ நூற்களில் எழுதப்பட்ட நூற்கள் அரபியிலும் கூட மொழிபெயர்க்கப் படுகின்றன. அவற்றுக்கு அரேபிய மார்க்க அறிஞர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இதே நிலையை ஏன் தமிழிலும் உருவாக்கக் கூடாது.


மக்கள் அரபியைப் படித்து மார்க்கத்தை விளங்க முற்பட வேண்டும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்களின் நிலை அப்படித் தான் இருந்தது. ஒரு நாடு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டால் அந்நாட்டு மக்களும் அரபி பேச கற்றுக் கொள்வார்கள். ஆரம்பத்தில் அரபு நாடாக இல்லாத நாடுகளிலும் இன்று அரபி பேசுகிறார்களென்றால் அது எப்படி சாத்தியமானது? அப்படி மக்கள் அரபியைக் கற்றுக் கொள்ளவில்லையானால் பிராந்திய மொழியில் மார்க்கத்தின் தகவல்களை மாற்றுவதற்கு எல்லா வித முயற்சிகளையும் செய்தாக வேண்டும். 


மாபெரும் ஜிஹாது:
இஸ்லாம் ஈரனில் நுழைந்த சமயம் அங்கே அரபி மொழி முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. (மக்களிடம் போதுமான அளவுக்கு அரபி மொழித்திறன் இல்லாமல் இருந்தது.) அப்பொழது மார்க்க அறிஞர்களும் மதபோதகர்களும் உடனடியாக மார்க்கத்தின் அனைத்து தகவல்களையும் பாரிஸீ மொழியில் மாற்றிவிட்டார்கள். இதன் மூலம் அந்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மார்க்கச் சட்டங்களை அறிந்து கொண்டனர்.


இந்தத் தகவலைத் தரும் தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் முஃப்தி நிழாமுத்தீன் (ரஹ்) அவர்கள், இன்று இந்தியாவிலும் (பள்ளிப் பாடத்திட்டத்தின் காரணமாக உர்தூ மொழிக்குப் பகரமாக) பிராந்திய பாஷைகள் பரவலாகி விட்டதால் ஈரானைப் போன்ற ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டு விட்டது. எனவே, தம்முடைய எல்லா மார்க்க போதனைகளையும் முடிந்த வரை சீக்கிரமாக பிராந்திய மொழிக்கு மாற்றுவது அவசியமாகும். சமுதாயத்தின் ஒவ்வொரு நபரையும் அவரவருடைய பொருளாதார வளம் மற்றும் மார்க்க அறிவுக்குத் தகுந்தவாறு (மார்க்க சட்டங்களை மொழி மாற்றம் செய்வதில்) அல்லாஹ்வுடைய கட்டளை எதிர்கொள்கிறது. இந்நேரத்தில் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது மிகப் பெரும் மார்க்கப் பணியாகவும் மார்க்க சாதனையாகவும் இருக்கிறது. மேலும் இது பெரும் ஜிஹாதாகவும் இருக்கிறது, என்று கூறியுள்ளார்கள். (முன்தகபாத் நிழாமுல் ஃபதாவா - 1/186)


நம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நம்முடைய ஆசான் அல்லாமா கீரனூரி ஹள்ரத் கிப்லா (ரஹ்) அவர்கள், மார்க்க அறிஞர்கள், பிழையின்றி சரியாக தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் பேராவல் கொண்டிருந்தார்கள். தங்களுடைய மாணவர்களிடம் அந்தத் திறமை முழுமையாக வெளிப்பட வேண்டுமென்பதற்காக முழு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். அதற்காக தமிழ் இலக்கண சட்டங்கள் மற்றும் சரியான தமிழ் எழுதுவதற்கு தேவையான தகவல்களையும் அத்தலீலு இலத் தமிழ் என்ற ஒரு சிறு நூலில் தமிழ் மொழியிலேயே தொகுத்து பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் அதைத் தாங்களே கற்றுக் கொடுத்தார்கள். அல்பலாகா எனும் அணி இலக்கணத்தைப் பயிலக்கூடிய மாணவர்கள் குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்து நயத்தை விளங்குவதுடன் உலமாக்கள் தங்களுடைய பேச்சிலும் எழுத்திலும் அணி இலக்கணத்தைப் பயன்படுத்தி மார்க்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்பதை ஆர்வமூட்டி ஹள்ரத் அவர்கள் இப்படி எழுதுகிறார்கள்:


அணியைப் பொறுத்தவரை உலக மொழிகள் அனைத்துக்கும் ஒரே அடிப்படை தான். ஒரு மொழியில் அணியைப் படித்தவர் பிற மொழிகளிலும் அதனை அழகாகக் கையாள முடியும். ஏனெனில் பொருள், கருத்து, வார்த்தை, வாக்கிய அழகு, நிலைமைக்கேற்க நயமாக உரைத்தல் என்பவை மொழிகளால் மாறுபடுவதில்லை.


எனவே, உலகிலேயே தன்னிகரற்ற மகா உன்னதமான அரபி அணியை படிக்கிற மாணவர்கள் அதனைத் தமிழில், முறையாக - அழகாக - உயர்வாகக் கையாளப் பழகி, அதை சேவை மனப்பான்மையோடு இஸ்லாமிய உயர்வுக்காக தமது பேச்சு - எழுத்து மூலமாக பயன்படுத்த வேண்டும். அதற்குரிய சரியான பயிற்சி தாய் மொழியான தமிழ் மொழியிலும் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பது என் நீண்ட கால ஏக்கம். அதற்கிணங்க அல்பலாகா உடைய பல நூல்களிலிருந்து சேகரித்த விஷயங்களை அரபியில் சுருக்கமாக கோர்வை செய்துள்ளேன். அத்துடன் தமிழில் பயிற்சிகளையும் சேர்த்துள்ளேன். காரணம் தமிழ் அணி தான் உங்களுக்கு முதல் தேவை. குர்ஆன், ஹதீதிலுள்ள அணி நயங்களையும் தமிழில் தான் எடுத்து வைக்கப்போகிறீர்கள். (அல்பலாகா)


இன்று வரை இந்த மார்ககம் நிலைத்திருக்கிறதென்றால் அது இந்த மார்க்க சேவையாளர்களின் தங்களை அர்ப்பணித்து பணியாற்றியதன் விளைவு தான், என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது.

Saturday, 7 September 2013

காதியானி மதம்



காதியானி மத்தின் பின்னணி
 அரசியல் சூழல் மாறுவதால் பல சமயங்களில் மார்க்க ரீதியாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை சூழ்ச்சியாளர்கள் தவறாகப் பயன்படுத்தி தவறான கொள்கைகளை மக்களிடம் திணிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அப்பொழுதெல்லாம் அவற்றை களையெடுப்பதற்கு தகுதியானவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்ததை சரித்திரம் நெடுகிலும் காணமுடியும்.  கி.பி 1857 ஆம் ஆண்டு, முதல் சுதந்திரப் போர் (சிப்பாய் கலகம்) நடந்தது. அதில் முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்திருந்தனர். ஆங்கிலேயனின் பிடியிலிருந்து நம்மை காப்பதற்கு புதிதாக யாராவது பிறந்து வரமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் இருந்தனர். இந்நிலைய மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் சாதகமாகப் பயன்படுத்திக கொண்டு தன்னை நபி என்று வாதிட ஆரம்பித்து விட்டான்.

மிர்ஸாவின் வரலாற்றுச் சுருக்கம்:
1839 அல்லது 1840 ஆண்டு பஞ்சாபில் உள்ள காதியான் என்ற ஊரில் மிர்ஸா பிறக்கிறார். முறையான மார்க்க அறிவைப் பெறாமலேயே குர்ஆனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார். தன்னுடைய உஸ்தாதைக் கூட வீட்டு வேலைக்காரன் என்று சொல்பரிடம் என்ன ஞானம் இருக்கப்போகிறது? மிர்ஸா தன்னை ஆரம்பத்திலேயே நபி என்று வாதிடவில்லை. கி.பி. 1879 ஆண்டிலிருந்து பராஹினெ அஹ்மதிய்யா என்ற நூலை தொகுக்க ஆரம்பிக்கிறார். அதில் குர்ஆன் யாராலும அது போன்று கொண்டுவர முடியாத அற்புதம் என்பதையும நபி (ஸல்) அவர்கள் இறைத்தூர் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார். அத்துடன் கிருத்துவம், ஆரிய மதத்திற்கு எதிராகவும் எழுதுகிறார்.  இஸ்லாத்தின் உண்மைத்துவத்தை நிலைநாட்டுவதற்காக நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏவப்பட்டிருக்கிறேன், என்று இந்நூலில் குறிப்பிடுகிறார். ஐந்து பாகங்கள் கொண்ட விரிவான இந்த நூல் வெளியானதும் தூரநோக்கு சிந்தனை கொண்ட மார்க்க அறிஞர்கள் வெகு சீக்கிரததில் இவர் தன்னை நபி என்று வாதிடுவார் என்று கூறிவிட்டனர். 1886 ஆம் ஆண்டு ஆரியர்களுடன் தான் செய்த விவாதத்தை தொகுத்து ஒரு நூல் வெளியிட்டார். இந்த நூற்களுக்குப் பின் சமூகத்தில் தனக்கு தனி அந்தஸ்து இருப்பதாக உணர்ந்தார். நாம் என்ன சொன்னாலும் ஏற்கும் ஒரு சமுதாயம் உருவானதை உணர்ந்தார். கிருத்தவர்கள், ஆரியர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டவர் முஸ்லிம்களிடம் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்.
1890 க்குப் பிறகு தான் எழுதிய நூற்களில் கியாம நாள் நெருங்கும் போது வருவார், என்று வாக்களிக்கப் பட்ட மஸீஹ் (ஈஸா) (அலை) நான் தான் என்று வாதிட்டார். 1900 க்குப் பிறகு எழுதிய நூற்களில் தன்னை ஒரு நபி என்று பகிரங்கமாக அறிவித்தார். மிர்ஸா காலராவால் பாதிக்கப்பட்டு  1908 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மரணிக்கிறார். மௌலானா ஸனாவுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மிர்ஸாவை எதிர்ப்பதில் பெரும்பங்கு எடுத்துக் கொண்டார்கள். இதனால் விரக்தியடைந்த மிர்ஸா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், நான் உண்மையிலேயே பொய்யனாக இருந்தால் அல்லாஹ் என்னை உங்களுடைய ஜீவிய காலத்திலேயே அழித்துவிடுவான். நீங்கள் பொய்யராக இருந்தால் என்னுடைய ஜீவிய காலத்திலேயே உங்களை நாசகார வியாதிகளின் மூலம் அழித்துவிடுவான், என்று கூறியிருந்தார். ஆனால் இந்த அறிக்கை வெளியான மறுவருடமே மிர்ஸா காலராவில் இறந்து விட்டார். ஆனால், மௌலானா ஸனாவுல்லாஹ் (ரஹ்) அவர்கள் அதற்குப் பின் பலவருடங்கள் வாழ்ந்தார்கள். மிர்ஸா ஒரு பொய்யன், என்பதை அல்லாஹ்வே வெளிப்படுத்திவிட்டான். அல்ஹம்துலில்லாஹ். மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டதால் அவனும் முஸ்லிம் அல்ல. அவனை ஏற்றுக் கொள்பவர்களும் முஸ்லிம்களல்ல, என்பது தெளிவாகிவிட்டது. எனினும், அவரிடம் இந்த ஒரு கொள்கை மட்டுமல்ல. அந்தக் கூட்டத்தை முஸ்லிம்களல்ல என்று கூறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

மிர்ஸாவின் கொள்கைகள்:
1. மிர்ஸா தன்னை நபி என்று வாதிட்டார்.
2. ஹள்ரத் ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார், என்று தெளிவுபடுத்தும் குர்ஆனுடைய கூற்றை மறுக்கிறார்.
3. ஹள்ரத் ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் வானத்தின்பால் உயர்த்தப்பட்டதையும் உலக முடிவு நாளின் நெருக்கத்தில் உலகிற்கு வருவார்கள், என்பதையும் மறுக்கிறார்.
4. மர்யம் (அலை) அவர்களையும் ஹள்ரத் ஈஸா (அலை) அவர்களையும் விகாரமான தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்.
5. ஹள்ரத் ஈஸா (அலை) அவர்களின் முஃஜிஸா எனும் அற்புதங்களை மறுக்கிறார்.
6. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறுகிறார்.
7.  الجهاد ماض الى يوم القيامةஜிஹாது கியாம நாள் வரை நடக்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், மிர்ஸா, ஜிஹாதின் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. இனி ஜிஹாது என்பதே இல்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாது செய்வது ஹராம் என்று குறிப்பிட்டார்.
8. தன்னை ஏற்க மறுக்கும் முஸ்லிம்களை காஃபிர்கள் என்றும் விபச்சாரத்தில் பிறந்தவர்கள் என்றும் ஏசுகிறார். இப்படிப் பட்ட கொள்கையுடைய ஒரு நபரும் அவரை ஏற்றுக்கொள்பவர்களும் தங்களை அஹ்மதிய்யா முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவர், காஃபிர்கள், என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தியா மற்றும் உலக நாட்டு மார்க்க வல்லுணர்கள் இவர்களை காஃபிர்கள் என்று ஃபத்வா எனும் மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உலமாக்களின் ஃபத்வாக்கள்:
1. கி.பி. 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஹிஜ்ரி - 1394) புனித மக்காவின் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி - இஸ்லாமிய் உலக கூட்டமைப்பு அஹ்மதிய்யா எனும் காதியானிகள் காஃபிர்களே, என்றும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும வெளியேறியவர்கள் என்றும் தீர்வு செய்து, நிச்சயமாக காதியானி என்ற மதம் தனது அருவருப்பான நோக்கங்களை மறைத்து இஸ்லாமிய பெயரிலேயே இஸ்லாத்தை அழித்தொழிக்க உருவான மதமாகும், என்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த கான்ஃப்ரன்ஸில் ஏறத்தாழ 104 நாடுகளைச் சார்ந்த மார்க்க வல்லுணர்கள் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்குப் பின் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானுடைய பாராளுமன்றத்தில் காதியானிகள் முஸ்லிமல்லாத சிறுபான்மையினர் என்று தீர்மானம் நிறைவேற்ப்பட்டது.
2. 1978 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கராச்சியில் நடைபெற்ற ஆசிய இஸ்லாமிய மாநாட்டில் காதியானிகள் காஃபிர்கள் என்று தீர்வு செய்யப்பட்டது.
3. 1985 ஆம் ஆண்டு ஜித்தாவின் மஜ்மவுல் ஃபிக்ஹில் இஸ்லாமி எனும் ஃபிக்ஹ் இஸ்லாமியின் கூட்டமைப்பு காதியானிகள் காஃபிர் என்று தீர்ப்பளித்தது.

காதியானி மதத்தினருடன் நம்முடைய அணுகுமுறை:
ராபிததுல் ஆலமில் இஸ்லாமி அறிவுறுத்தும் வழிமுறைகளில் சில:
1. அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தமது பகுதியில் காதியானிகள் பாடசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் எங்கெல்லாம தங்கள் அமைப்புகளை செயல்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் அவற்றுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். மேலும் காதியானிகள் பற்றியும் அவர்களின் கொள்கைகளை தெளிவுபடுத்தி மக்கள் காதியானிகளின் சதிவலையில் விழாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
2. இப்பிரிவினர் காஃபிர்கள் என்றும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும்.
3. காதியானி - அஹ்மதிய்யா ஜமாத்தாருடன் கொடுக்கல் வாங்கல் வைக்கக்கூடாது. பொருளாதார, சமூக, கலாச்சார அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். அவர்களுடன் திருமணபந்தம் வைததுக்கொள்ளக்கூடாது. அவர்களை முஸ்லிம்கள் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யக்கூடாது. அவர்களை காஃபிர்களாகவே நடத்த வேண்டும். இவை தவிர அவர்கள் அறுக்கும் பிராணிகளின் இறைச்சியை சாப்பிடக்கூடாது. அவர்களுடனான எல்லா உறவையும் துண்டித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் காஃபிர்கள் என்பது மட்டுமல்ல. இஸ்லாத்திலிருந்து மதம் மாறிய முர்தத்துகளாவார்கள். அவர்கள் முஸ்லிம்களாக இருந்து காதியானிகளாக மாறினாலும் சரி தலைமுறை தலைமுறையாய் காதியானிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் எந்த கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களுடன் வியாபாரத்தில் கூட்டாகக் கூடாது. நம்முடைய குடும்ப  மற்றும் சமூக வைபவங்களில் அவர்களை அழைக்கக்கூடாது. நாமும் அவர்களுடைய வீட்டுக்கு செல்வதோ அவர்களுடைய திருமணங்களில் கலந்து கொள்வதோ கூடாது. ஏனெனில் இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் குஃப்ரை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஜிந்தீக் - ஆவார்கள். இவர்கள் தௌபா செய்யாத வரை எந்த முஸ்லிமும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது.

இறுதி நபித்துவம்:
நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பது குர்ஆன், ஹதீஸின் மூலம் தெளிவாக விளங்கப்படும் கொள்கையாகும்.
உங்களுக்காக இன்று உங்களுடைய மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன். மேலும் உங்களின் மீது என்னுடைய அருட்கொடையை நிறைவு செய்துவிட்டேன். உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்க வழிமுறையாக அங்கீகரித்துவிட்டேன்.  (அல்குர்ஆன் 4:3)
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் நபி வருவார்கள் என்று நம்புவது அல்லாஹ் அருட்கொடையை நிறைவு செய்துவிட்டதாகக் கூறும் இந்த வசனத்தை நிராகரிப்பதாகும்.
முஹம்மது (ஸல் அவர்கள்) உங்களுடைய ஆண்களில் யாருக்கும் தந்தையாகமாட்டார். எனினும் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான். இந்த வசனமும் நபியவர்கள் இறுதி நபி என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த வசனத்தில் உள்ள காதமுந்நபிய்யீன் என்ற வார்த்தைக்கு அரபி அகராதிகளின் கருத்துப்படி இறுதி நபி என்ற பொருளே வரும். மிர்ஸா குலாம் அஹ்மது தம்முடைய குடும்பத்தில் கடைசி குழந்தையாக பிறந்தார். எனவே, தன்னை காதமுல் அவ்லாத் குழந்தைகளில் இறுதியானவர், என்று அவரே கூறியுள்ளார். எனவே, இந்த வார்த்தைக்கு இறுதி நபி என்பதை அவரும் ஏற்றாக வேண்டும். குர்ஆனில் பல இடங்களில் உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்ட வேதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் உமக்குப் பின்னர் வரும் நபி என்றோ வேதம் என்றோ கூறப்படவில்லை. இறுதி நபித்துவத்தை வலியுறுத்தும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.
இஸ்ரவேலர்களை அவர்களுடைய நபிமார்களே நிர்வகித்து கண்காணித்துக் கொள்வார்கள். ஒரு நபி இறந்துவிட்டால் அவருக்குப்பிறகு மற்றொரு நபி வருவார். எனினும் எனக்குப் பின்னால் எந்த நபியும் வரமாட்டார். கலீஃபாக்கள் இருப்பார்கள். அதிமாக இருப்பார்கள்..., என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
இஸ்ரவேலர்களின் சீர்திருத்தத்திற்காக தொடர்படியாக நபிமார்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தினருக்கு சீர்திருத்தத்திற்காக நபிமார்கள் அனுப்பப்பட மாட்டார்கள், என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது. நபியவர்கள் எனக்குப் பின்னால் கலீஃபாக்கள் வருவார்கள், என்று கூறியதன் மூலம் நபித்துவத்தின் ஒரு சிறு பகுதி கூட இனி கிடையாது. அது முற்றாக முழுமை பெற்றுவிட்டது, என்பதை விளங்கமுடிகிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே! முஃப்தீ ஷஃபீஃ (ரஹ்) அவர்கள் இறுதிநபித்துவத்திற்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான இறைவசனங்களையும் நபிமொழிகளையும் தங்களுடைய கத்மெ நுபுவ்வத் என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
ஆதார நூற்கள்: காதியானிய்யத் முதாலஆ வஜாயிஸா, மஸாயிலே காரியானீ, இஸ்லாம் அவ்ர் மிர்ஸாயிய்யத் கா உசூலீ இக்திலாஃப்,  மிஃயாருல் ஹக்.