Monday, 13 February 2017

நவீன விஞ்ஞானத்திற்கு வித்திட்ட முஸ்லிம்கள்





பிப்ரவரி மாதம் விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. சர்.சி.வி. ராமன் தனது ராமன் விளைவை அதாவது ஒளிச்சிதறல் விதியை 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று தான். கண்டுபிடித்தார். இதை அடிப்படையாக வைத்து  பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப் படுகிறது. கலிலியோ 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலி நாட்டில் பிறந்தர். இவரை நவீன வானவியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை மற்றும் நவீன அறிவியலின் தந்தை என்றும் அழைக்கின்றனர்.

கோப்பர்நிகஸ் 1473 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி போலந்து நாட்டில் பிறந்தார். பூமியை மையமாகக் கொண்டே மற்ற கோள்கள் இயங்குகின்றன, என்ற பூமி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கொள்கையை முதன்முதலில் அறிவித்தவர் இவர்தான், என்று பரவலாகக் கூறப்டுகிறது. பூமி மற்றும் இதர கோள்கள் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகின்றன, என்பது சூரிய மையக்கொள்கை என்று அறியப்படுகிறது.

இந்த சூரியன் மையக் கொள்கையை உண்மையில் உலகுக்கு முதன்முதலில் அறிவித்தவர் யார்? பூமிமையக் கொள்கையை வலியுறுத்திக் கொண்டிருந்த டாலமியின் கொள்கையைத் தவறு என்று உலகுக்கு உணர்த்தியது யார்? கோபர்நிக்கஸ் அந்தக் கொள்கையை அறிவிக்கும் போது உலகின் அனைத்துத் தரப்பாலும் அது ஏற்றுக்கொள்ளப் பட்டு பிரபல்யமாக ஆனது. அவருக்குப் பின் வந்த கலீலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி மூலம் அந்தக் கொள்கை மேலும் வலுவடைந்தது.

ஆனால், நீண்ட காலத்திற்கு முன்னாலேயே முஸ்லிம் ஆய்வாளர்கள் சூரிய மையக் கொள்கையை அறிவித்துவிட்டனர், என்பது மட்டுமல்ல; கோபர்நிகஸ் கூட இந்தக் கொள்கையை அரேபிய ஆய்வாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார், என்பதே உண்மை.

அஹ்மது ஸஜஸ்தானீ
கி.பி. 951 ஆம் ஆண்டில் விண்ணியல் மற்றும் கணிதவியல் ஆய்வாளர் அபூஸயீத் அஹ்மத் ஸஜஸ்தானி பிறந்தார். இவர், கோபர்நிகஸுக்கு ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, பூமி அமைதியாக இருக்கவில்லை. சுற்றிக் கொண்டிருக்கிறது, என்று தெளிவாகவே அறிவித்தார். அத்துடன் அவர் நின்று விடவில்லை. பூமி சுற்றுகிறது என்ற கொள்கையை அடிப்படையாக வைத்தே விண்ணியல் ஆய்வுகளை தொகுத்தார். இதற்கு முன்னால் இது போன்று யாருமே செய்ததில்லை. (நூல்: நாம்வர் முஸ்லிம் ஸாயின்தான்)

அபூரைஹான் (973-1048)
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த விண்ணியல், கணிதவியல் போன்ற பல துறைகளில் சிறப்புற்று விளங்கிய அபூ ரய்ஹானுல் பைரூனீ 1017 ஆம் ஆண்டு கஜினிக்கு வந்தார். அங்கு ஓர் ஆயவகத்தை நிறுவி ஆகாயத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார். பைரூனி சூரியன் மையக் கொள்கையையும் சூரியன் சந்திரனை விடவும் வெகு தூரத்தில் இருக்கிறது, என்றும் அறிவித்தார்.

இப்னு ஷாத்திர் (1304-1375)
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னு ஷாதிர் பிரசித்தி பெற்ற முஸ்லிம் வானவியல் ஆய்வாளர். அவருடைய காலத்திலும் பூமி நிலையாக இருப்பதாகவே மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்னு ஷாதிருடைய வான்ஆய்வுகள் அனைத்தும் டாலமியுடைய பழைய கொள்கை தவறு என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தன. டாலமியுடைய கொள்கை தவறு என்பதை பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், அக்கால மக்களுக்கு இதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் பூமி மையக் கொள்கையை மதக் கொள்கையாகவே சில் மதங்கள் அறிவித்திருந்தன.

எனினும், இப்னு ஷாதிர் விடவில்லை. ஆய்வுப்பூர்வமான ஆதாரங்களையும் தத்துவங்களையும் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தால் காரியம் நடக்காது. சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் வெளிப்படையான ஆதாரத்தை முன்வைத்தார்.

சூரிய உதயம் மாறுபடுவது ஏன்?
இப்னு ஷாதிர் மக்களிடம் இப்படி கூறினார்: நீங்கள் பார்க்கும் இந்த உலக அமைப்பு டாலமியுடைய பூமி மையக் கொள்கையுடன் சிறிதும் ஒத்துப்போகாது. ஏனெனில், வானில் உள்ள சூரியனும் நட்சத்திரங்களும் வெளிப்பார்வைக்கு தெரிவது போல் கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகிறது, பூமி தான் மையத்தில் சுற்றாமல் அமைதியாக இருக்கிறது, என்று வைத்துக்கொண்டால் ஒவ்வொரு நாளும் சூரிய உதயமும் மறைவும் ஒரே இடத்தில் தான் நிகழ வேண்டும். ஆனால், அப்படி நிகழ்வதில்லை.

வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நேர்கிழக்கில் உதயமாகி நேர்மேற்கில் மறைகிறது. மற்ற நாட்களில் வடகிழக்கிலோ தென்கிழக்கிலோ உதயமாகி வடமேற்கிலோ தென்மேற்கிலோ தான் மறைகிறது. ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் இடமும் மறையும் இடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகிறது, என்றால் ஒரே இடத்தில் உதயமாகி ஒரே இடத்தில் மறைய வேண்டியது தானே! வடக்கு தெற்காக ஏன் மாறிக் கொண்டிருக்க வேண்டும்? போன்ற கேள்விகளை முன்வைத்தார்.

ஒவ்வொரு நாளும் சுரியன் உதயமாவதையும் மறைவதையும் கவனித்தால் ஒவ்வொரு பாமரனுக்கும் விளங்கிக் கொள்ளமுடியும்.. இன்று தலையைத் தூக்கி வானத்தைப் பார்ப்பதற்கு மக்களுக்கு எங்கே அவகாசம் கிடைக்கிறது. அதையெல்லாம் பார்த்து சிந்தித்து அல்லாஹ்வின் வல்லமையை விளங்குதவற்காகத் தான் நம்மைப் படைத்திருக்கிறான். குறைந்தபட்சம் நம்முடைய வீட்டுத் திண்ணையில் விழும் சூரிய ஒளியைக் கவனித்தாலும் கூட ஒவ்வொரு நாளும் சூரிய ஒளி விழும் இடம் மாறுவதை வைத்து இதை விளங்கிக் கொள்ள முடியும்.

இதைவிட பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவது சில நட்சத்திரங்கள். நட்சத்திரங்களும் கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன, என்றால் எல்லா நட்சத்திரங்களும் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால், வருடம் முழுவதும் எல்லா நட்சத்திரங்களும் தெரிவதில்லை. சில சமயம் சில நட்சத்திரங்கள் மறைந்து விடுகின்றன. இவையெல்லாம் பூமியை மையாமாக வைத்து சூரியனும் நட்சத்திரங்களும் சுற்றவில்லை, என்பதை தெளிவுபடுத்துகின்றன. பூமிதான் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகிறது, என்கிற சூரிய மையக் கொள்கையை நிரூபித்தார். ஆனால், கோபர் நிக்கஸுக்குத் தான் இந்தக் கொள்கை சொந்தமானது, என்று பேசப்படுகிறது.

ஜர்காலி:
ஸ்பெயினைச் சார்ந்த விண்ணியல் விஞ்ஞானி 1029 ஆம் ஆண்டு பிறந்தார். உஸ்துர்லாப் என்று சொல்லப்படும் வான் கிரகங்களையும் சூரியன், சந்திரன் பற்றியும் தகவல் சேர்க்கப் பயன்படும் ஒரு கருவியை நவீன அமைப்பில் வடிவமைத்தார். அக்கருவியை செயல்படுத்தும் முறை பற்றி ஒரு நூலை எழுதினார். இந்த நூலை ஒரு யூதர் லத்தீன் மொழியில் மொழியாக்கம் செய்தார்.

1087 ஆம் ஆணடு ஜர்காலி மரணித்த பிறகு ஸ்பெயினுடைய (ஒரு பகுதியின்) அரசர் பத்தாம் அல்பான்சோ ஸ்பானிய மொழியில் அந்நூலை மொழிபெயர்ககச் செய்தார். முஸ்லிம்கள் ஸ்பெயினை வெற்றி கொண்ட நாள் முதல் இன்று வரை ஜர்காலியைப் போன்று ஒரு வானவியல் ஆய்வாளரை ஸ்பெயின் தந்திடவில்லை, என்று அல்அஃலாம் என்ற நூல் கூறுகிறது. (1/79) இவர் தான் நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளை கூறினார், என்றும் கூறப்படுகிறது. இபனு ஷாதிருக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர் இவர், என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பியடித்த கோபர்நிக்கஸ்
நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளை உருவாக்கியவர் கோபர்நிக்கஸ் தான் என்று உலகமே கூறினாலும் அவர் அந்தக் கொள்கைகளை முஸ்லிம்களிடமிருந்து தான் அவர் காப்பியடித்தார், என்பது மறுக்க முடியாத உண்மை. ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாக மேற்கத்திய ஆய்வாளார்கள் இந்த உண்மையை மூடி மறைத்துக் கொண்டிருந்தனர். 20 ஆம் நூற்றாண்டில் தான் உண்மையை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தனர்.

ஓர் ஆங்கிலேய ஆய்வாளர் முஸ்லிம்களுடயை படைப்புகள் பற்றி ஆய்வு செய்தார். அவர் அது பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதில் கோபர்நிக்கஸ் கண்டுபிடித்தவை என்று சொல்லப்படுகிற அதிகமான கொள்கைகளை இப்னு ஷாதிர் என்ற முஸ்லிம் அறிஞரிடமிருந்தே அவர் எடுத்திருக்கிறார், என்பது 1950 ஆம் ஆண்டில் நிரூபணமாகி விட்டது, என்று கூறியுள்ளார்.

இது தவிர கோபர்நிக்கஸ் பிறந்த போலந்து நாட்டில் 1973 ஆம் ஆண்டு அரபியில் எழுதப்ப்ட சில கையேடுகள் கண்டெடுக்கப் பட்டன. இதன் மூலமும் முஸ்லிம்களிடமிருந்து காப்பியடித்தது உறுதியாகிறது. (நூல்: அத(ஸ)ரு உலமாயில் அரப் வல்முஸ்லிமீன் ஃபீதத்வீரி இல்மில் ஃபலக்)
கோபர்நிக்கஸ் தன்னுடைய நூற்களில் ஜர்காலியுடைய கருத்ததுக்களை பல தடவை மேற்கோள் காட்டியுள்ளார். ஜர்காலியுடைய நூற்களிலிருந்து நிறைய பலன்களைத் தான் பெற்றிருப்பதாகவும் அவரிடமிருந்து தன்னுடைய கொள்கையை பெற்றுக் கொண்டதாகவும் கோபர்நிக்கஸ் தன்னுடைய நூல்களில் ஒப்புக்கொள்கிறார். (நூல்: அல்ஹைஅத்துல் உஸ்தா)

No comments:

Post a Comment