அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது, என்று கூறும் குர்ஆன் அதற்கு அடுத்தபடியாக பெற்றோர்களிடம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டுமென்று கூறி பெற்றோர்களின் முக்கியத்துவத்தை முதன்மைப் படுத்தியிருக்கிறது, குர்ஆன். எனினும், அந்த பெற்றோர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யுமாறு - அல்லாஹ்வுக்கு இணை வைக்குமாறு உத்தரவிட்டால் அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம், என்றும் குர்ஆன் கூறுகிறது. பெற்ற தாயை வணங்கக் கூடாது, என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அப்படியிருக்கும் போது தாய் நாட்டை வணங்கி வழிபட வேண்டுமென்பதை எப்படி இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும்?
வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம், என்பதாகும். அல்லாஹ்வைத் தவிர வேறெதையும் வணங்குவது இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவதற்குச் சமம். உயிரினும் மேலாக முஸ்லிம்கள் மதிக்கும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கூட கடவுளாகப் போற்றிவிடக்கூடாது, என்று இஸ்லாம் போதிக்கிறது. சூரியன், சந்திரன், பூமி அனைத்தும் மனிதனுடைய பயன்பாட்டுக்காக அல்லாஹ்வால் படைக்கப் பட்ட படைப்புகளே தவிர வணங்குவதற்குத் தகுதியானவை அல்ல, என்பதை இஸ்லாமிய இறைவேதம் திருக்குர்ஆன் அழுத்தமாகக் கூறுகிறது. இந்நிலையில் இந்து மதத் தெய்வங்களை ஒப்பிட்டு பாடப்பட்ட வாந்தே மாதரம் என்ற பாடலை அனைத்து மதத்தினரும் பாட வேண்டுமென்று சொல்வது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட மத சுதந்திரத்திற்கு முரணாக அமைந்து விடாதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வந்தே மாதரம் பாடுவதை காட்டயமாக்க வேண்டுமெபது குறித்து ஓர் எழுத்தாளர் தெரிவிக்கையில் வந்தே மாதரம் எழுதப்பட்டிருக்கும் மொழி வங்காளம். வங்காள மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட மேற்குவங்கமாநிலத்திலேயேஇப்படிஒருநடைமுறைகிடையாது. அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் அங்கேயே இருக்கிறது. அது இந்து மதசார்பான பாடல் என்கிற விமர்சனம் மற்ற மதத்தினர் மட்டுமின்றி மத அடையாளங்களைத் துறந்தவர்கள், முற்போக்காளர்கள் மத்தியிலும் உள்ளது, என்று கூறியுள்ளார். தமிழகத்தில் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலச் சாரியார் தலைமையில் 1930 ஏப்ரல் 13 ம் நாள் தமிழ் வருடப்பிறப்பன்று திருச்சி தி.சொ. சௌ. ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரக வீரர்கள் கிளம்பினர்.... மறுநாள் காலை பிரார்த்தனையில் வந்தே மாதரம் ஏசுவே கிருபை தாரும் என்ற கீதங்கள் பாடப்பட்டன. முஸ்லிம் தொண்டர்கள் குர்ஆனிலிருந்து வசனங்களை வாசித்தார்கள். (நூல்:விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்.)
இதன் மூலம், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்தப் பாடல் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்ததாகவே கருதப்பட்டது. அனைத்திந்திய மக்களால் அங்கீகரிக்கப் பட்ட தேசிய கீதமாகப் பார்க்கப் படவில்லை. எனவே தான் கிருத்தவர்கள், முஸ்லிம்கள் வந்தே மாதரம் என்ற வாசகத்தை உச்சரிக்கவில்லை. 1923ல் நடந்த க ங்கிரஸ் மாநாட்டில் வந்தேமாதரம் பாடிய போது அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த முகம்மது அலி அவர்கள் மேடையிலேயே இதைக்கண்டித்து வெளிநடப்புச் செய்தார்.
கவிஞர் இக்பால் அவர்கள் ஸாரேஜஹான்சேஅச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற கீதத்தை இயற்றினார். இந்தப் பாடலின் பொருள் அகில உலகிலும் சிறந்தநாடு எங்கள் இந்தியா என்பதாகும். முஸ்லிம் கவிஞர் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறார். இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை, என்பதை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ரவீந்திரநாத்தாகூர் எழுதிய ஜனகனமன என்பதே தேசிய கீதமாக இருக்கட்டும் என்று 1950ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
2009 ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரமாகிய டெல்லியில் ஜம்மியத்துல் உலமாசபையின் மாநாடு நடந்தது. இரண்டு நாட்கள் நடந்தஅந்தமாநாட்டில்முதல்நாளில்தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. வந்தேமாதரம் என்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்பதும் தீர்மானங்களில் ஒன்றாகும்.
அனைத்து மதத்தினரும், மதத்திற்கு அப்பாற்பட்டவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் தான் எல்லோருக்கும் பொதுவாக இருக்கமுடியும். மதசார்பற்ற இந்தியத் திருநாட்டில் இதை உணர்ந்து நாட்டின் பெரும்பான்மை மக்களும் பாடல் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
யூசுபிய்யயா ராஷித் - ஆகஸ்ட் 2017 (தலையங்கம்)
No comments:
Post a Comment