இன்று நாட்டில் கொலைகள் அதிகமாகி வருகின்றன. ஓர் உயிரின் மதிப்பைக்கூட விளங்கத் தெரியாதவன் எப்படி அவன் மனிதனாக இருக்க முடியும்? சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் தைரியமாக கொலைக்காரர்கள் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்றால் பயம் கலந்த ஆச்சரியத்தையே உணர முடிகிறது. அதுவும் பெண்களின் மோகத்தால் நடக்கும் காதல் கொலைகன் தான் கொடூரமானவை.
காதல் கலாச்சாரம்
காதல் என்பது கட்டாயக் கலாச்சாரம் போல் ஆக்கப்பட்டு விட்ட இந்த காலத்தில் பல கொலைகளுக்கு அந்தக் காதலே பிரதான காரணம் என்றாகிவிட்டால் காதல் கலாச்சாரத்தை இதற்குப் பிறகும் புனிதமாகக் கருதிக் கொண்டிருந்தால் அதற்கு சிந்தனைக் கோளாறு என்று சொல்வதை விட வேறென்ன சொல்ல முடியும்? படுகேவலமான பல கலாச்சாரத்தை நாம் புனிதமாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்
ஆனால, அவற்றின் மூலம் ஒவ்வொரு நாளும் மனித சமுதாயம் அனுபவிக்கும் நஷ்டங்கள் சாதாரணமானவையல்ல. கெட்ட சிந்தனையால் மூளைச்சலவை செய்யப்படுவதையே சீரிய சிந்தனை என்று மார்தட்டிக் கொள்பவர்கள் இருக்கும் வரை அந்த நஷ்டங்களுக்கு முடிவு கிடைக்கப் போவதில்லை.
விசித்திரமான காதல் கொலைகள்
உத்திர பிரதேசத்தில் விஷ்ணு என்பவருக்கு ஒரு மகள். ஒரு நாள் அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை நான்கு மணிக்கு அவரது மகளின் அறையில் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனது மகளின் அறைக்குச் சென்றுள்ளார். அங்கே அவரது மகள் தனது காதலனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் கடுமையான கோபமடைந்தார். பின்பு தனது மகளின் காதலனை எச்சரித்தார். இதனால் அவருக்கும் மகளின் காதலனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு சண்டையாக மாறியது. அப்போது மகளும் அவரது காதலனும் சேர்ந்து அவரை மொட்டைமாடியிலிருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு 14 வயது சிறுவன் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்ட போது அச்சிறுமியை நெருப்பு வைத்து எரித்துவிட்டான்.
ஒருதலைக் காதலால் ஏற்படும் கொலைகளும் ஊடகங்கள் வாயிலாக பரவலாகவே வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பெண்ணுடன், தான் கொண்டிருந்த கள்ளத் தொடர்புக்கு அவளுடைய மகனே தடையாக இருந்தான், என்பதற்காக ஒன்பதே வயதான அச்சிறுவனை கள்ளக் காதல் கொண்டவன் கொன்று விட்டான், என்ற செய்தியையும் நாளிதழ்களில் படித்திருக்கிறோம்.
ஓர் உயிர் ஓர் உலகம்
சமீபத்தில் சென்னை கே. கே. நகரில் கல்லூரியின் வாசலில் காதலனால் கொல்லப்பட்ட ஓர் இளம்பெண்ணுடைய செய்தி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் தைரியமாக கொலை செய்யும் அளவுக்கு துணிச்சலை காதல் மனோநிலை கொடுக்கிறது, என்றால் காதல் - காமம் கண்ணைக் குருடாக்கும்; காதைச் செவிடாக்கும், என்று சொல்வது நிதர்சனமாக்கப் பட்டிருப்பதையே காட்டுகிறது. இது போன்று ஏகப்பட்ட கொலைகள் உலகம் முழுவதும நடந்து கொண்டிருக்கின்றன. கொலையாளிகளுக்கு அக்காரியம் சாதாரணமாகத் தெரியலாம்.
ஆனால், கொல்லப் பட்டவர்களைப் பொறுத்தவரை ஒர் உயிர் என்பது சாதரணமானதல்ல. அந்த உயிர் தான் அந்தக் குடும்பத்தின் தூணாக இருக்கும். ஒட்டுமொத்த குடும்பத்தார்களின் வாழ்க்கையும் அந்த ஓர் உயிரில் முடங்கிக் கிடக்கும். ஓர் உயிரைக் கொன்றவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதைப் போல என்று குர்ஆன் சொல்வதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது.
காதல் கண்ணைக் குருடாக்கும்
நபி (ஸல்) அவர்கள் நீ ஒன்றைப் பிரியப்படுவது கண்ணைக் குருடாக்கிவிடும்; காதைச் செவிடாக்கி விடும், என்று கூறியுள்ளார்கள், என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. ஒரு பெண்ணை அடைய வேண்டுமென்பதற்காக மனிதன் எதையும் செய்வான், என்பதற்கான சான்றுகளை வரலாற்றின் பல பக்கங்களில் பார்க்க முடியும்.
இஸ்லாத்தில் ஹிஜ்ரத் - நாடு துறத்தல் என்பது மிக முக்கியமான மிகுந்த நன்மைக்குரிய காரியமாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரா செய்து செல்வதென்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. நபித் தோழர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு செல்வதை யாவற்றையும் விட முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதற்காக தங்களுடைய சொத்துக்களை இழந்தார்கள். மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்தார்கள். தாய் தந்தை உறவுகளையும் பிரிய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள். எல்லாவற்றையும் தியாகம் செய்து மதீனாவுக்கு செல்வதையே முழுமுதற்கடமையாக நினைத்தார்கள். முயாஜிர் உம்மு கைஸ இந்நிலையில், ஒரு மனிதர் உம்முகைஸ் என்ற பெண்மணியைத் திருமணம் செய்யும் நோக்கில் ஹிஜ்ரத் செய்தார். அம்மனிதரின் பெயரும் அறியப்படவில்லை. ஒரு மனிதர் உம்முகைஸ் என்ற பெண்ணை திருமணம் செய்வதற்கு பெண் பேசினார். அப்பெண்மணி, ஹிஜ்ரத் செய்தால் தான் திருமணம் செய்ய முடியும். இல்லையானால் உங்களை கணவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்று கூறிவிட்டார். எனவே, அம்மனிதர் ஹிஜ்ரத் செய்தார். அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முஹாஜிர் உம்முகைஸ் - உம்முகைஸ் என்ற பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்தவர், என்று பெயரிட்டோம், என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (மஃரிஃபதுஸ் ஸஹாபா)
அம்மனிதருடைய இயற்பெயர் என்ன என்பதைக் கூட அறியமுடியவில்லை. முஹாஜிர் உம்மு கைஸ் என்றே சரித்திரத்தில் பிரபல்யமாகிவிட்டது. ஹிஜ்ரத் என்ற உயர்தரமான வணக்க வழிபாட்டை ஒரு பெண்ணுக்காக செய்தமையால் அவருக்கு ஹிஜ்ரத்தின் மூலம் அந்தப் பெண் வேண்டுமேனால் கிடைக்கலாம். ஹிஜ்ரத்துடைய நன்மை கிடைக்குமா? என்று சொல்ல முடியாது, என்பதை உணர்த்தும் விதமாக நபி (ஸல்) இன்னமல் அஃமாலு பின்னிய்யாத் - செயல்களெல்லாம் (அவற்றுக்கு நன்மைகள் வழங்கப்படுவது) நிய்யத்தை - செய்யும் நோக்கத்தின் அடிப்படையிலேயே அமையும். உலகைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலோ அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கிலோ ஹிஜ்ரத் அமைந்திருக்குமேயானால் அவன் எதற்காக ஹிஜ்ரத் செய்தானோ அதையே பெற்றுக்கொள்வான், என்று கூறினார்கள்.
காதலுக்காக கலீஃபாவின் தலை!
நான்காம் கலீஃபா அலீ (ரலி) அவர்களை திட்டமிட்டு கொலை செய்தவன் இப்னு முல்ஜம் என்பவன் ஆவான். அவன் ஒரு பெண்ணைச் சந்திந்தான். அவளுடைய அழகில் மயங்கி விட்டான். அவளைத் திருமணம் செய்ய ஆசை கொண்டான். அப்பொழுது அந்தப் பெண்மணி இப்னு முல்ஜம் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அலி (ரலி) அவர்களைக் கொலை செய்தாக வேண்டும், என்ற நிபந்தனையும் கட்டாயமாக்ககினாள்.
ஏற்கனவே கொலைத் திட்டத்தில் இருந்த இப்னு முல்ஜமுக்கு இது பெரிய காரியமாகத் தெரியவில்லை. அவள் விரும்பியதையே அவளுக்கு மஹராகவும் வழங்கி கொலை செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கினான். இறுதியாக அவன் மூலம் அலி (ரலி) அவர்கள் ஷஹிதாக்கப் பட்டுவிட்டார்கள்.
லைலா மஜ்னூன்
லைலா மஜ்னூனுடைய கதை சரித்திரத்தில் பிரபல்யமானது. மஜ்னூன் மூலம் அவருடைய தந்தைக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவதற்காக மகனை கஃபதுல்லாஹ்வுக்கு அழைத்துச் சென்று மகாமெ இபுறாகீம் இருக்கும் இடத்தில் மஜ்னூனை நிறுத்தி லைலாவின் மீதுள்ள மோகத்திலிருந்து தௌபா செய்யுமாறு உத்தரவிட்டார். இதைக் கேட்ட மஜ்னூன் எல்லா பாவங்களிலிருந்தும் மன்னிப்பு தேடுகிறேன். ஆனால், லைலவுடைய பிரியத்திலிருந்து தௌபா செய்ய மாட்டேன், என்று சொன்னது மட்டுமல்ல, இறைவா அவளின் மீதுள்ள மோகத்தை ஒரு போதும் என்னுடைய உள்ளத்தை விட்டும் அகற்றிவிடாதே! யாரெல்லாம் இந்த துஆவுக்கு ஆமீன் சொல்கிறாரோ அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!, என்றும் கூறினார்.
No comments:
Post a Comment