ஜகாத் விஷயத்தில் முழுக்கவனம் இருக்க வேண்டும். மார்க்கம் வெறும் இரண்டரை சதவீதம் மட்டுமே கேட்கிறது. அந்தக் குறைந்த அளவு ஜகாத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டு நம்முடைய சொத்துக்களை ஹலாலாக்கிக் கொள்வதற்கான வழியைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்முடைய ஹலாலான செல்வமும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒவ்வொரு நபருக்கும் ஜகாத் கடமையாகும் தேதியன்று கணக்கிட்டு ஜகாத் கொடுத்து விடவேண்டும்.
வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு தேதிகளில் ஜகாத் கடமையாகலாம். அந்தத் தேதியில் செல்வத்தைக் கணக்கிடுவது கட்டாயமாகும். எனினும், ஒருவருக்கு ஜகாத் கடமையாகும் தேதி தெரியாமல் இருந்தாலோ அல்லது மறந்து விட்டாலோ வருடத்தில் சந்திர மாதத்தின் ஏதாவதொரு மாதத்தின் ஏதாவதொரு தேதியை (பிறையைக்) குறிப்பிட்டு அந்தத் தேதியில் ஒவ்வொரு வருடமும் கணக்கிட வேண்டும். சந்திர மாதத்தின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும்.
ஆங்கில மாதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக, ரமளான் பத்தாம் நாள் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு வருடமும் ரமளான் பத்தாம் நாள் கணக்கிட்டு ஜகாத் கொடுக்க வேண்டும்.
ஸஹர் உணவுக்கு நன்கொடை
ரமளான் மாதத்தில் தமிழகத்தின் பல பாகங்களில் ஸஹர் உணவுக்கான ஏற்பாடு செய்யப் படுகிறது. சில இடங்களில் ஒரு விலை நிர்ணயித்து டோக்கன் கொடுக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் இலவசமாகவே கொடுக்கிறார்கள். இப்படி இலவசமாக ஸஹர் உணவுக்கான ஏற்பாடு செய்பவர்கள் நன்கொடை வசூலில் ஈடுபட்டால் அவர்களுக்கு (நேர்மையான முறையில் ஏற்பாடு செய்து பொதுசேவை சிந்தனையுள்ளவர்களாக இருந்தால்) நம்முடைய செல்வத்திலிருந்து தாராளமாக உதவி செய்யலாம். அதற்காக அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும்.
எனினும், ஸஹர் உணவுக்காக நாம் கொடுக்கும் நன்கொடையை ஜகாத் கணக்கில் எழுதி விடக்கூடாது. ஏனெனில், ஸஹர் உணவை சாப்பிடுபவர்கள் அனைவரும் ஏழைகள் அல்லர். வசதியானவர்களும் இருப்பார்கள். அத்துடன் ஸஹர் உணவு பார்சலாக அவர்களிடம் முழுமையைக ஒப்படைக்கப் படுவதில்லை. வந்து சாப்பிடுவதற்கான அனுமதி மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜகாத் பணத்தை அதற்காகக் கொடுக்க முடியாது.
குமர் காரியத்திற்காக ஜகாத் பணம்
இன்று பலர் குமர் காரியத்திற்காக வசூல் செய்கிறார்கள். அவர்களில் உண்மையிலேயே குமர் காரியத்திற்காக உதவி நாடுபவர்களுக்கு வாரி வழங்குவது நன்மைக்குரிய செயலாகும். இன்று பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது என்பது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமமான காரியமாகி விட்டது. இந்நிலையில் அவர்களுக்கு ஜகாத் பணத்திலிருந்து உதவி செய்யலாம்.
ஏற்கனவே, அவர்களிடம் 612 1/2கிராம் வெள்ளி அளவுக்கு ரொக்கம் இருந்தாலும் ஜகாத்தாக அவர்களுக்குக் கொடுக்கலாமா? அப்பொழுது அவர்களுக்கு ஜகாத் கொடுப்பது கட்டாயமாகி விடுமே, என்ற சந்தேகத்திற்கு அல்லாமா காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள் பின்வருமாறு விளக்கம் கொடுக்கிறார்கள்:
ஜகாத் பெறத் தகுதியானவர்கள் இரண்டு வகையினர்களாக இருக்கிறார்கள்.
1. ஏழைகள், வசதி வாய்ப்பில்லாதவர்கள்.
2. குறிப்பிட்ட தேவையுள்ளவர்கள். உதாரணமாக வழிப்போக்கர்கள், கடனாளிகள்.
இவர்களில் முதல் வகையினருக்கு 612 1/2 கிராம் வெள்ளியின் அளவை விடக் குறைவாகக் கொடுக்க வேண்டும். அதைவிட அதிகமாகக் கொடுப்பது மக்ரூஹ் ஆகும். இரண்டாம் வகையினருக்கு அவர்களுடைய தேவை நிறைவேறும் அளவுக்கு கொடுக்க வேண்டும். வழிப்போக்கர்கள் பயணத்தின் செலவுக்கு போதுமானதாக இருக்க வேண்டும். அது மேற்கூறப்பட்ட தொதைகயை விட அதிகமாக இருந்தாலும் சரியே!
கடனாளிகள் தங்களுடைய கடனை அடைப்பதற்குத் தேவையான அளவுக்குக் கொடுக்க வேண்டும். குமர் காரியத்திற்கான தேவையுள்ளவர்கள் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கலாம். எனினும், பேணுதல் என்னவெனில் அதிகப்படியான தொகையை பெண்ணுடைய தாய், தந்தையின் பெயரிலும் கொடுக்கலாம். (நூல்:கிதாபுல் ஃபதாவா 8/336. 337)
வியாபாரப் பொருட்கள்
இறைவிசுவாசிகளே! நீங்கள் சம்பாதித்த நல்லவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (2:267) என்று கூறுகிறது, வியாபாரச் சரக்கிலிருந்து நாங்கள் ஸதகா கொடுக்க வேண்டுமென எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள், என்று ஸம்ரா பின் ஜுன்துப் (ரலி) கூறுகிறார்கள். (அபூதாவூத்)
ஒரு வியாபாரி ஒவ்வோர் ஆண்டும் தன்னுடைய சரக்கை கணக்கிட்டு பணத்திற்கு ஜகாத் கொடுப்பது போல் 2 1/2 சதவீதம் கொடுக்க வேண்டும். கடையில், குடோனில் எவ்வளவு சரக்குகள் இருக்கின்றன, என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு இரண்டரை சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும். எனினும், பெரிய அளவில் வியாபாரம் நடக்கும் போது அதிகமான விற்பனைப் பொருட்கள் இருக்கின்றன.
அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி துல்லியமாக கணக்கிடுவது நடைமுறை சாத்தியமில்லாமல் இருந்தால், எவ்வளவு சரக்கு இருக்கும் என்பதை தோரயமாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கலாம். இது போன்ற சமயத்தில் நாம் போடும் கணக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய அளவைவிடக் கூடுதலாக இருக்க வேண்டுமே தவிர குறைந்து விடக்கூடாது. எனவே, பேணுதல் அடிப்படையில் விசாலமாகவே கணக்கிட வேண்டும். (கிதாபுந் நவாஜில்)
வியாபாரத்திற்காக வைக்கப்பபட்டிருக்கும் எல்லாப் பொருளையும் கணக்ககில் எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபார நோக்கத்திற்காக இல்லாத ஃபர்னிச்சர்ஸ் போன்ற தளவாடப்பொருட்கள் கணக்கில் வராது. இவை உபயோகப் பொருட்களின் வரிசையில் சேர்ந்து விடும்.
ஜவுளிக்கடை பொம்மை உடுத்தியிருக்கும் புடவை வியாபாரப் பொருளாக கணிக்கப்படும். பொம்மை அதில் சேராது. கோழிகள் வளர்த்து முட்டை வியாபாரம் செய்தால் முட்டை மட்டுமே வியாபாரச் சரக்காகும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தளவாடப் பொருட்களில் சேரும். எனினும், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள், கடிகாரம், ரேடியோ போன்றவற்றை பழுது பார்க்கும் போது அவற்றோடு இணைக்கப்படும் உதிரிபாகங்கள் தளவாடப் பொருள்களாக ஆகாது. அவற்றை வியாபாரப் பொருட்களாக கருதப்படும். தொழிற்சாலைகளில் சரக்குகளை இடமாற்றம் செய்வதறக்காக உபயோகிக்கப்படும் வாகனங்களின் கிரயத்திற்கு ஜகாத் கொடுக்கத் தேவையில்லை.
வீடு, நிலம்
வீடு, நிலங்களை விற்பதற்காகவே வாங்கினால் அவை வியாபாரப் பொருளாகிவிடும். ஒவ்வொரு வருடமும் அதன் விலையைக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்க வேண்டும். தன்னுடைய உபயோகத்திற்காக ஒரு வீட்டை வாங்குகிறார். வியாபார நோக்கம் எதுவும் இல்லை. எனினும், லாபம் கிடைத்தால் விற்றுவிடலாம் என்ற எண்ணமிருப்பதால் மட்டும் அந்த வீடு வியாபாரப் பொருளாக ஆகிவிடாது. ஒருவர் நிலத்தை விற்பனைக்காக வாங்கினார்.
ஆனால் பிறகு அந்த இடத்தில் வீடு கட்டி வசிக்கலாம் என்று முடிவு செய்து விட்டால் அதன் பிறகு அந்த நிலத்திற்கு ஜகாத் தேவையில்லை. (அல்ஃபதாவல் ஹிந்திய்யா - துஹ்ஃபயெ ஜகாத்) வீடு, நிலம் தவிர எல்லாப் பொருளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
வீட்டுப் பாத்திரங்களில்:
வீடுகளில் ஏராளமான பாத்திரங்கள் உபயோகிக்கப் படாமல் இருக்கும். விசேஷ காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். இவை, வீட்டு உபயோகப் பொருள் என்பதாலும் வளர்ச்சியின்மையாலும் ஜகாத் கடமையாகது.
வாடகை வீடுகளில்
வீடு, கடை (ஆட்டோ, டேக்ஸி, ஃபர்னிச்சர்) மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றை வாடகைக்கு விட்டால் வரும் வாடகை வருமானத்திற்கு மட்டுமே ஜகாத் கடமையாகும். வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீடு அல்லது வாகனத்தின் கிரயத்திலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டிய கட்டாயமிலலை.
விலை நிர்ணயித்தல்
வியாபாரச் சரக்கை நாம் ஒரு விலையில் வாங்கியிருப்போம். அதன் பிறகு விலையில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலும் விலை கூடும். இந்நிலையில் எந்த விலையை கணக்கில் எடுத்துக் கொள்வது? சிலசமயம் குடோனில் ஏகப்பட்ட சரக்குகள் இருக்கும், அவை எப்பொழுது விற்பனையாகும், என்றும் சொல்ல முடியாது. இது போன்ற சமயங்களில் அவற்றுக்கு எந்த விலையை நிர்ணயம் செய்வது என்ற கேள்வி எழலாம்,
ஜகாத் கொடுக்கும் போது அப்பொருளின் மார்க்கெட் விலையை அடிப்படையாகக் கொண்டே ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது வருடம் நிறைவு பெறும் போது அப்பொருளின் மார்க்கெட் விலையை அடிப்படையாகக் கொண்டே ஜகாத் கொடுப்பது கடமையாகும். மொத்த விலை, சில்லரை விலை என இரண்டு விலை இருக்கிறது. மொத்த வியாபாரியாக இருந்தால் மொத்த விலையை வைத்து கணக்கிட வேண்டும். சில்லரை வியாபாரியாக இருந்தால் சில்லரை விலையை கணக்கிட வேண்டும். இரண்டு விதமாகவும் வியாபாரம் இருந்தால் ஏழைகளுக்கு அதில் பலன் கிடைக்கும் (சில்லரை) விலைக்கு முதலிடம கொடுக்க வேண்டும்

No comments:
Post a Comment