நன்றி! நன்றி!! நன்றி!!!
18. 5. 2013 சனிக்கிழமை அன்று யூசுபிய்யா அரபிக் கல்லூரியில் யூசுபிகளின்
சந்தித்தல் சிந்தித்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை
வெற்றி பெறச்செய்த அனைத்து யூசுஃபிகளுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும்) நன்றி.
அத்துடன் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்காக உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்
துஆ செய்த இனிய உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாகுமுல்லாஹு
கைரா.
நிர்பந்த காரணங்களால் கலந்து கொள்ள முடியாதவர்களைத் தவிர அனைத்து யூசுஃபிகளும்
இதில் கலந்துகொண்டது அனைவருக்கும் மனநிறைவைத் தந்தது. காலை ஃபஜ்ர் முதல் இரவு ஒன்பது
மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றது. எங்களின் ஆசான் அல்லாமா கீரனூரி (ரஹ்) அவர்களின் மறைவிற்குப்
பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இது அமையப்பெற்றதால் ஹள்ரத் அவர்களின் வழிகாட்டல்களையும்
ஹள்ரத் அவர்களுடன் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் மன நெகிழ்வுடன் யூசுபிகள் பரிமாறிக்கொண்டது,
அனைவரையும் கண்கலங்கச்
செய்தது. நிகழ்ச்சி நிரலில் அறிவித்த படி கருந்தரங்கம் இந்நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக
இருந்தது. யூசுஃபிகள் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான சேவைகளைப் பற்றி பலரும் நல்ல பல
கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் இறுதியில்
யூசுபிய்யாவின் முதீர் - ஹள்ரத் அவர்கள் உருக்கமான முறையில் ஏறத்தாழ அரை மணி நேரம்
உரையாற்றி துஆ செய்து யூசுபிகளை மனமகிழ்வுடன் வழியனுப்பி வைத்தார்கள்.
ALHAMDULILLAH!
ReplyDeletePraying, ALLAH(swt) will accept all these efforts for "HIDAYATH" to the Society.
P.s.
Suggest if can, pls record(Audio/Video) such gatherings/meetings
and share(upload) the applicable/related matters. JazakAllah hairen.