Wednesday, 4 June 2014

பொதுசிவில் சட்டம் - podu civil sattam




இந்நூல் பற்றி...


இஸ்லாமிய சட்டங்கள் அனைத்துமே முஸ்லிம்களால் ஏற்று அமல் செய்யப்பட வேண்டியவையே! எனினும் இஸ்லாமிய கிலாஃபத் (ஆட்சி) இல்லாததால் குற்றவியல் சட்டங்களில் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முடியவில்லை. 

பொருளாதாரம் தொடர்பான எல்லா சட்டங்களிலும் முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களையே பின்பற்ற வேண்டும். எனினும் அதில் ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றால் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலேயே அவற்றுக்கு தீர்ப்பு வழங்க வேண்டுமென்று நீதிமன்றங்களை நிர்பந்திக்க முடியாது. 

ஏனெனில், பொருளாதார ஒப்பந்தங்கள் முஸ்லிம்களுக்கிடையில் மட்டுமே நிகழாது. முஸ்லிம் அல்லாதவர்களுடனும் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் நடைபெறலாம். 

ஆனால், திருமணம், விவாகரத்து, குலா, வாரிசுரிமை, போன்றவை முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டுமே நடைபெறும் ஒப்பந்தங்களாகும். எனவே, இந்த விவகாரங்களை முடிந்தவரை முஸ்லிம்கள் தங்களுடைய ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டு தீர்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நீதிமன்றங்களுக்கு செல்லக்கூடாது. அப்படியே சென்றாலும் நீதிமன்றங்கள் இந்த பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய சட்டங்களின் படியே தீர்ப்பு வழங்க வேண்டும். இது தான் இன்று வரை உள்ள இந்திய வராலற்றின் நிலைபாடு. 

ஆனால், இஸ்லாத்தின் எதிரிகள் இந்த நிலையை மாற்றவேண்டுமென்று துடிக்கின்றனர். குறிப்பாக, தற்போது ஆட்சியமைத்துள்ள கட்சி பொதுசிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்பதை தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே பகிரங்கப்படுத் தியுள்ளது. மக்கள் இதற்காக ஆட்சியை இவர்களுடைய கையில் வழங்கவில்லை, என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்.


ஆனால், முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் தங்களுடைய தனியார் சட்டத்தை விட்டுவிட்டு பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏற்றுக்கொள்ளவும் கூடாது. அது ஏன் என்பதைத் தான் இந்த சிறிய நூல் விளக்குகிறது. 

பொது சிவில் சட்டத்தின் ஆபத்தான விளைவுகள் என்ன? என்பதையும் பொதுசிவில் சட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் அது எவ்வாறு முஸ்லிம்களை படிப்படியாக இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. 2003 ஆம் ஆண்டிலேயே இந்நூல் தொகுக்கப்பட்டு பெருபாலும் நிறைவுற்றிருந்தது. எனினும், அது அச்சாக முடியவில்லை. இப்பொழுது அல்லாஹ்வின் கிருபையால் தேவையான திருத்தங்களுடனும் அதிகப்படியான தகவல்களுடனும் வெளியாகிறது. அல்லாஹ் இந்நூலின் மூலம் தொகுத்தவனுக்கும் படிப்பவர்களுக்கும் நிறைவான இறைநம்பிக்கையுயம் நிரந்தரமான இக்லாஸ் எனும் மனத்தூய்மையையும் தந்தருள்வானாக!



விலை    :     20/-
கிடைக்குமிடம்  :காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி
                                                பேராசிரியர், யூசுஃபிய்யா அரபிக்கல்லூரி 
                 திண்டுக்கல்.
                 செல்: 9976926131, 8925231372

Tuesday, 3 June 2014

பெருநாட்களும் வெடிக்கலாச்சாரமும்




முஸ்லிம் என்றால் அவனுடைய ஒவ்வொரு காரியத்திலும் இஸ்லாத்தின் தனித்தன்மை பளிச்சிட வேண்டும். ஏன்? அவனுடைய பேச்சில் கூட இஸ்லாமியம் தொணிக்க வேண்டும். அதற்காக நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு சின்னச்சின்ன விஷயத்திலும் பயிற்சி கொடுத்தார்கள்.


மக்கள் நடைமுறையா? மார்க்க நடைமுறையா?:

ஐந்து நேரத் தொழுகைகளில் கடைசியாக தொழப்படும் தொழுகைக்கு குர்ஆனில் இஷா என்று பெயரிடப்பட்டுள்ளது. எனினும், கிராமவாசிகள் இரவில் நன்றாக இருட்டிய பின் ஒட்டகத்தில் பால் கறப்பார்கள். எனவே, அதே அர்த்தத்தில் இஷா தொழுகைக்கு அத்தமா தொழுகை என்று சொல்லி பழகி விட்டார்க்ள. எனினும் நபியவர்கள் இந்த கிராமாவாசிகள் உங்களுடைய தொழுகையின் பேரில் உங்களை மிகைத்து விடவேண்டாம். அதன் பெயர் (அத்தமா தொழுகை இல்லை) இஷா தொழுகை தான்என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

 இப்படி தொழுகையின் பேரை உச்சரிப்பதில் கூட மக்கள் பழகிய பேரைக் கூறாமல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பெயர் தான் உச்சரிக்கப் படவேண்டும், என்பதில் கவனமாக இருந்தார்கள். பேசும் வார்த்தையிலேயே மாற்று மதக் கலாச்சாரமல்ல, மக்களின் நடைமுறைக் கலாச்சாரத்தை விட இஸ்லாமியக் கலாச்சாரத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றிருக்கும் போது மற்ற காரியங்களைப் பற்றி என்ன பேச வேண்டியிருக்கிறது


நாட்டுப் பழக்கமா? நபிகளாரின் பழக்கமா?:
இஸ்லாம் வருவதற்கு முன்பு மௌட்டீக காலத்தில திருமண வைபவங்களில் மணமக்களை வாழ்த்தும் போது பிர்ரிஃபாயி வல்பனீன்இரண்டு பேருக்கும் மத்தியில் ஒட்டும் உறவும் உண்டாகட்டும். ஆண்குழந்தைகள் பிறக்கட்டும், என்று நாங்கள் வாழ்த்திக் கொண்டிருந்தோம். எப்பொழுது இஸ்லாம்  வந்ததோ எங்களுடைய நபி பாரகல்லாஹு லக்கும் வபாரக ஃபீகும் வபாரக அலைக்கும்என்று கற்றுக்கொடுத்தார்கள், என்று பனூதமீம் என்ற கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் கூறுகிறார். (ஃபத்ஹுல் பாரீ)

 நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது பிர்ரிஃபாயி வல்பனீன்என்று (மக்கள்) சொல்லும் இடத்தில் துஆ செய்தால் பாரகல்லாஹு லக்க வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்என்று கூறுவார்கள். (திர்மிதீ) பிர்ரிஃபாயி வல்பனீன்என்ற வார்த்தை (பெண் குழந்தையை வெறுக்காமல் கூறினால்) அர்த்த்தைக் கவனித்து எந்தத் தவறும் இல்லை. ஆனாலும் இஸ்லாமியம தொணிக்க வில்லை. மொட்டீக காலத்தில் அப்படி கூறியிருக்கலாம். ஆனால் இஸ்லாம் வந்த பின் அதை விடச் சிறந்த வார்த்தையை தேர்ந்தெடுத்து தந்திருக்கும் போது அதை விட்டு விட்டு ஊர் பழக்கம், நாட்டுப் பழக்கம் என்று சொல்லிக் கொண்டு சுன்னத்தை விட்டு விட முடியாது. 

எனவே தான், அகீல் பின் அபீதாலிப் (ரலி)  திருமணம் முடித்த போது அவரிடம் பிர்ரிஃபாயி வல்பனீன்என்று கூறி வாழ்த்தப்பட்டது. அப்பொழது அகீல் (ரலி) அவர்கள் இவ்வாறு சொல்லாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று சொல்லுங்கள்!, என்று தடுத்தார்கள்.             


பெருநாட்கள் இரண்டு தான்:
மதநல்லிணக்கம் என்பது மாற்று மதத்தார்களின் மத ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமென்பதோ அவர்களுடைய திருவிழாக்களில் பங்கெடுக்க வேண்டுமென்பதோ அவர்களுடைய கடவுளர்களுக்கு மாலை அணிவிக்க வேண்டுமென்பதோ அவர்களுடைய பண்டிகைகளை நாமும் கொண்டாட வேண்டுமென்பதோ கிடையாது. மாற்று மதத்தார்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்ளவேண்டுமென்று இஸ்லாத்தைப் போல் எந்த மதமும் சொல்லியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல, அதன் படி நடந்து காட்டிய சரித்திரமும் நம்மிடம் இருக்கிறது.   


அவ்வாறே பண்டிகை விஷயத்திலும் மார்க்கம் தெளிவான வழிகாட்டலைத் தந்திருக்கிறது. இஸ்லாத்திற்கு முன்பு இருந்த பண்டிகைகள் இஸ்லாம் வந்த பிறகு முஸ்லிம்களுக்கு அவை தடை செய்யப்பட்டு விட்டன. முஸ்லிம்களுக்கு இரண்டே பெருநாள் தான். அதைத் தவிர வேறொரு பண்டிகை கிடையாது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் இரண்டு பண்டிகைகளில் விளையாடி அந்நாட்களை கொண்டாடினார்கள். அவ்விரண்டு நாளும் பகல் இரவு சமமாக இருக்கும் நாட்களாக இருந்தன. (மார்ச்-21, செப்டம்பர்-23) நயிரோஜ், மெஹர்ஜான் என்று அவ்விரண்டு நாட்களுக்கும் சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்களைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் ஜாஹிலிய்யா - மொட்டீக காலத்தில் இந்நாட்களில் விளையாடுவோம், என்று மக்கள் கூறினர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உஙகளுக்கு அவற்றை விடச் சிறந்த இரண்டு நாட்களை மாற்றித் தந்திருக்கிறான். அவை, “நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளும்என்று கூறினார்கள். (அபூதாவூத்) 


மதநல்லிணக்கமா? இறைநிராகரிப்பா?:

மொகலாய மன்னர்களில் ஒருவரான அக்பர் மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு முரணான புதிய மதத்தைத் தோற்றுவித்தார். அதற்கு தீனெ இலாஹி என்று அவர் பெயரிட்டுக்கொண்டார். தீபாவளி, ஹோலி, தசரா போன்ற பண்டிகைகளை முஸ்லிம்களும் கொண்டாட வேண்டும், என்பது அந்த மதத்தின் ஒர் அங்கம். அதன் விளைவாக முஸ்லிம்களுடைய கொள்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இறுதியில் முஜத்தித் அல்ஃபெதானீ அவர்களுடைய புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாகத்தான் இந்திய முஸ்லிம்களின் இஸ்லாமியம் பாதுகாக்கப்பட்டது. (நூல்: ரவாதாரி அவ்ர் மக்ரிப்)


மத ரீதியான பண்டிகைகளை அந்தந்த மதத்தவர்கள் தான் கொண்டாட வேண்டும். இஸ்லாமிய கலச்சாரத்தை மற்றவர்கள் எடுத்து நடந்தால் முஸ்லிம்கள் வரவேற்பார்கள். அதே போல் மற்ற மதக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் எடுத்து நடந்தால் அந்த மதத்தவர்கள் அதை சந்தோஷமாக வரவேற்கலாம். இது அவரவர்களின் விருப்பம்.

 அதே சமயம் முஸ்லிம்கள் இஸ்லாமியக் கொள்கைக்கு முரணான மாற்று மதக் கலாச்சாரத்தை எடுத்து நடக்கலாமா? என்பதை இஸ்லாம் தான் முடிவு செய்ய வேண்டும்.


ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்றவை மதம் சார்ந்த பண்டிகைகள். பொங்கல் அன்று பொங்க வைத்து முஸ்லிம்கள் சூரியனை கும்பிட முடியுமா? உலகில் ஓரிறைக் கொள்கைக்கு முரணாக சூரியனும் வணங்கப்படுவதால் சூரியன் உதயமாகும் போதும் மறையும் போதும் உச்சியில் இருக்கும் போதும் முஸ்லிம்கள் தொழவும் கூடாது, என்று வலியுறுத்தப் பட்டிருக்கும் போது அவர்களுடைய பண்டிகையிலேயே எப்படி பங்கெடுத்துக் கொள்ள முடியும்

மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளின் போது முஸ்லிம்களும் மற்ற நாட்களில் இல்லாத உணவு வகைக்கு ஏற்பாடு செய்தால் நம்முடைய கொள்கையை எங்கு அடகு வைத்து விட்டோம். மாற்று மதத்தவர்கள் கண்ணியப் படுத்துவது போல் முஸ்லிம்களும் அந்நாளை கண்ணியப் படுத்தும் விதமாக, மற்ற நாட்களில் வாங்காத ஒரு பொருளை (மதிய உணவுக்காகவோ   அல்லது மற்றதற்காகவோ) வாங்கினால் அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது ஹதியா கொடுத்தால் அவர் காஃபிராகி விட்டார். ஏகத்துவக் கொள்கைக்கு முரணõன்றி அந்நாளை கண்ணியப் படுத்தும் எண்ணமின்றி ருசõயாக சாப்பிடும் எண்ணத்தில் வாங்கினாலோ அல்லது பழக்கப்படி ஹதியா கொடுத்துக் கொண்டாலோ அவர் காஃபிராக மாட்டார் எனறாலும் அதுவும் மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாக இருப்பதால் அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும், என்று அபுல் மஹாஸினுல் ஹனஃபீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: மிர்காத் ஷரஹுல் மிஷ்காத் 3/543)


முஸ்லிம்களும் வெடிக்கலாச்சாரமும்:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு எதுவும் இல்லை, என்பது இஸ்லாத்தின் அழுத்தமான கொள்கை. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மற்றும் உயிரினங்கள் உட்பட அனைத்தும் அல்லாஹ்வின் பட்ைபபுக்கள் தான். 

மதநல்லிணக்கம் என்ற பெயரால் கொள்கையில சமரசம் செய்து கொள்ளமுடியாது. ஆயுத பூஜை அன்று முஸ்லிம்களும் பொரி வைத்து துஆ ஓத முடியுமா? தீபாவளியன்று முஸ்லிம்கள் வெடி வெடித்தால் (காசை கரியாக்குவதால் பொருளாதார நஷ்டம், சுற்றுச் சூழல் மாசுபடுவது, உயிருக்கு ஆபத்து போன்றவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்) அது இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கைக்கு முரணில்லையா

தமிழகத்தின் சில பகுதிகளில் முழுக்க மழுக்க இறைப் பெருமையையும் ஏகத்துவத்தையும் தியாக உணர்வையும் வெளிப்படுத்த வேண்டிய இரு பெருநாட்களிலும் கூட முஸ்லிம்கள் வெடி வெப்பதிலும் வான வேடிக்கைகளை நிகழ்த்துவதிலும் ஈடுபடுடுகின்றனர். முஸ்லிம்கள் இதைத் தான் பெருநாள் கொண்டாட்டமாக கருதி விட்டார்களா?   முஸ்லிம்களிடம் இந்த வெடிக் கலாச்சாரம் எப்படி வந்து நுழைந்தது

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை சந்தோஷப்படுத்துவதற்காக வெடிபொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள், என்றால் அல்லாஹ், ரஸுலுடைய கோபத்தை சம்பாதித்து விட்டு பிள்ளைகளை சந்தோஷப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது? மார்க்க நடைமுறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய நாம் மாற்றார்களின் நடைமுறைகளை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும். 

நம்முடைய மதத்தை விற்பதற்குப் பெயர் மதநல்லிணக்கமல்ல; அவர்களுடைய பண்டிகைகளை நாம் கண்டிப்ப்ாக குறை கூறவில்லை. குறை கூறவும் கூடாது. அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக்கொண்டிருப்போரை (கடவுளர்களை) நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக விரோதத்தினால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். (அல்குர்ஆன்- 6:108)  அதற்காத அவற்றையே நாமும் செய்ய வேண்டுமென்றால் நம்மை ஏன் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்?


இந்தியா ஆங்கிலேயர்களின் கைகளில் அடிமைப்பட்டுக் கிடந்த போது விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றன. நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்களும் ஹிந்துக்களும் கூட்டாக பாடூபட வேண்டுமென்பதற்காக சில சமயம் முஸ்லிம்கள் தங்களுடைய கொள்கையையும் கூட விட்டுவிட்டார்கள். சிலர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வதற்குப் பதிலாக நமஸ்தே அலைக்கும், வஅலைக்கும் நமஸ்தே என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். (நூல்: ரவாதாரி அவ்ர் மக்ரிப்)

 முஸ்லிம்கள் மதநல்லிணக்கம், ஒற்றுமை என்ற பெயரில் மார்க்கக் கொள்கைகள் விஷயத்தில் வரம்பு மீறி நடந்தனர். ஆனால் இன்று விடுதலைப் போரட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட முஸ்லிம்களின் பெயர்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 


மதநல்லிணக்கத்தின் முன்மாதிரி:
மதநல்லிணக்கம் என்பது நம்முடைய கொள்கையில் நாம் உறுதியாக இருந்து கொண்டு மற்றவர்களுடைய கொள்கைகளை நாம் சகித்துக் கொள்வதும் அவர்களுடைய மத விவகாரங்களில் நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.

 ஒரு நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் மாற்று மதத்தவர்களும் வாழ்கிறார்கள். அவர்களுடைய மதத்தில் சாராயம் சாப்பிட்டுக் கொள்ளலாம், என்றிருந்தால் அவர்களை சாராயம் குடிக்கக் கூடாது, என்று தடுக்க முடியாது. இஸ்லாத்தில் சாராயம் குடிப்பது ஹராம். தடுக்கப்பட்டுள்ளது, என்பதற்காக நாட்டின் மாற்று மத பிரஜைகளும் குடிக்கக் கூடாது, என்று சொல்வதற்கு இஸ்லாமிய அரசுக்கு உரிமை கிடையாது. (கிதாபுல் ஃபதாவா 1/308)

உடல் நலத்திற்குக் கேடு போன்ற காரணங்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கை அமுல்படுத்தினால் அது வேறு விஷயம்.


லாஇக்ராஹ ஃபித்தீன்மார்க்கத்தில் எந்த நிர்ப்நதமுமில்லை, என்று குர்ஆன் பகிரங்கமாக அறிவிக்கிறது. யாரையும் நிர்பந்தப்படுத்தி முஸ்லிமாக்கக் கூடாது, என்ற இறைச்சட்டத்தை ஒவ்வொரு இஸ்லாமிய ஆட்சியாளர்களும் கடைபிடித்து வந்தனர். சர் அருனால்ட் என்ற ஆய்வாளர் ல்ழ்ங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ர்ச் ண்ள்ப்ஹம் என்ற தம்முடைய நூலில் இஸ்லாம் நற்குணத்தால் தான் பரவியது, என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

 (உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில்) ஒரு வயது முதிர்ந்த யூதர் யாசகம் கேட்பதைக் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய வாலிபத்தை பயன்படுத்தி விட்டு வயோதிபத்தில் சுற்றித் திரிய விட்டுவிடக்கூடாது என்பதற்காக பொதுநிதியத்திலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது.

 கஃபா மஃமூனுடைய அரசவையில் முஸ்லிம்களுக்கும் கிருத்தவப் பாதரியாருக்கும் மத்தியில் விவாதம் நடந்தது. இறுதியில் பாதிரியார் தோற்றுப்போனார். க­ஃபா பாதிரியிடம், இப்பொழது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கவர், நிர்பந்தமாகவா? என் விருப்பப்படியா? என்று கேட்டார். இல்லை, “உங்கள் விருப்பப்படிஎன்று க­ஃபா கூறினார். அதற்கவர் மறுத்துவிட்டார்.  அவருடைய தங்குமிடத்திற்கு அனுப்பி வைக்கும் போது யாரும் தாக்கி விடக்கூடாது, என்பதற்காக இராணுவ பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார், ­ஃபா. (நம்மிடத்தில் சமாதான ஒப்பந்தம் செய்த) முஸ்லிமல்லாதவருக்கு ஒரு முஸ்லிம் அநியாயம் செய்தால் நான் அல்லாஹ்வுக்கு முன் அந்த முஸ்லிமல்லாதவருக்காக வாதாடுவேன், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ரவாதாரீ அவர் மக்ரிப்)  எந்த சமூகத்தவரின் விரோதமும் நீங்கள் (அவர்களிடம்) நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களை கண்டிப்பாக தூண்டிவிடக் கூடாது. (எவ்வளவு விரோதமிருந்தாலும்) நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்என்பது குர்ஆனுடைய கட்டளை. 5:8) 

எனவே, மற்ற மதத்தவர்களிடம் மனிதாபிமானத்துடனும் நீதத்துடனும் நடந்து கொள்ள வேண்டும், என்பதே மார்க்கத்தின் நிலைப்பாடு. அதற்காக இஸ்லாத்தின் தனித்தன்மையையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் விட்டுவிடக்கூடாது, என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 


பண்டிகைகளின் பண்டங்கள்:
அசைவ உணவு வகைகள் (சிலவற்றைத் தவிர) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப் பட்டதாக இருந்தால் தான் முஸ்லிம்கள் அதை சாப்பிட முடியும். அவை தவிர மற்ற பழங்கள், காய்கறி போன்றவற்றை மாற்று மதத்தவர்கள் நம்ககு கொடுத்தாலும் அவற்றைச் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இஸ்லாம் தாராளமாக நடந்து கொள்கிறது. மாற்று மதத்தவர்களின் உணவு என்பதற்காக அதை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. 

அதே சமயம் ஓரிறைக் கொள்கைக்கு முரணான எதையும் இஸ்லாம் அனுமதிக்காது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் மாற்று மதத்தவர்கள் ஏதாவது உணவுப் பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தால் பூஜிக்கப்பட்ட பிரசாதமாக இருந்தால் அதை நாம் சாப்பிடக்கூடாது. (பெரும்பாலும் அந்த பண்டங்களை நமக்குத் தரமாட்டார்கள்.) அவர்கள் தங்களுடைய வீட்டில் செய்த (பூஜிக்கப்படாத) பண்டங்களை கொடுத்தால் (அது நம்முடைய மார்க்கத்திலும ஹலாலாக இருக்கும் பட்சத்தில்) வாங்கி சாப்பிடுவதில் தவறில்லை. (கிதாபுல் ஃபதாவா - 1/303)  


ஒரு தடவை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மாற்று மத செவிலித்தாய்மார்கள் எங்களிடம இருக்கிறார்கள். அவர்களுடைய பண்டிகை தினங்களிலெல்லாம் எங்களுக்கு ஏதாவது ஹதியா கொடுக்கிறார்கள். நாங்கள் அதைச் சாப்பிடலாமா? என்று ஒரு பெண்மணி கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த நாளுக்காக (பண்டிகை தினத்திற்காக) அறுக்கப்பட்டதை சாப்பிடாதீர்கள். எனினும் அவர்களுடைய மரங்களிலிருந்து (பழங்களைக் கொடுத்தால்) சாப்பிட்டுக் கொள்ளுங்கள்!”, என்று கூறினார்கள். (நூல்: தஃப்ஸீருல் குர்துபீ- 2/224)

நோன்பை முறிப்பவை



(உள்ளே) நுழைவது தான் நோன்பை முறிக்கும். வெளியாவதின் மூலம் அல்ல, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னது அபீயஃலா - 4826) (உடலுக்குள்) நுழைவதைக் கொண்டு தான் நோன்பு முறியும். வெளியானால் நோன்பு முறியாது, என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸன்னஃப் இப்னு அபிஷைபா)

நிர்பந்த நிலையில் பல் பிடுங்கலாம். எனினும் மருந்தோ அல்லது இரத்தமோ உள்ளே சென்றுவிடக்கூடாது. (அஹ்ஸனுல் ஃபதாவா - 4/435)  

உளூவை நிறைவாக செய். நாசிக்கு தண்ணீர் செலுத்து. நோன்பாளியாக இல்லையானால் நாசியின் உள்பகுதி வரை அதிகப்படியாக தண்ணீர் செலுத்தி சுத்தம் செய் என்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள், என்று லகீதுப்னு ஸப்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: திர்மிதீ - 718)


இதன் மூலம் வாய் வழியாக சாப்பிட்டால் தான் நோன்பு முறியும் என்றில்லை. நோன்பாளியின் மூக்கு வழியாக ஏதாவது உள்ளே சென்றாலும் நோன்பு முறியும் என்று விளங்க முடிகிறது. சளியை விழுங்குவதால் நோன்பு முறியாது. எனினும் ஷாஃபியீ மத்ஹபின்படி வாய்ப் பகுகதிக்கு வந்து விட்ட சளியை வேண்டுமென்றே விழுங்கினால் நோன்பு முறிந்து விடும். எனினும் ஒருவர் முறையாக முயற்சித்தும் துப்ப முடியவில்லையானால் நோன்பு முறியாது.      

யாராவது மறந்த நிலையில் சாப்பிட்டாலோ குடித்தாலோ தன்னுடைய நோன்பை பூர்த்தி செய்யட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ் தான் சாப்பிட வைத்தான். பருகவைத்தான். (நூல்: புகாரி- 1797,  முஸ்லிம்- 1952)


யாருக்காவது பேசும் போது உதட்டின் ஓரம் எச்சிலின் மூலம் ஈராமகிறது. பிறகு அது உள்ள சென்று விடுவதால் நோன்பு முறியாது.        

நோன்பாளி ஒரு பொருளை ருசி பார்ப்பதில் தவறில்லை, என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுனார்கள். (நூல்: பைஹகீ)
நோன்பாளி தக்க காரணமின்றி டூத் பேஸ்ட் உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நோன்பு முறியாது என்றாலும் மக்ரூஹ் ஆகும். உடனடியாக வாய் கொப்பளித்து விட வேண்டும். எதுவும உள்ளே போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேஸ்ட் உள்ளே போய் விட்டால் நோன்பு முறிந்து விடும். (மஸாயிலே ரோஜா, அஹ்ஸனுல் ஃபதாவா)     

ஒருவர் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது விந்து வெளியாகிவிட்டால் நோன்பைக் களா செய்ய வேண்டும். எனினும் கஃப்பாரா அவசியமில்லை.  

(தானாக) வாந்தி வந்தாலோ அல்லது தூக்கத்தில் விந்து வெளியானாலோ இரத்தம் குத்தி எடுத்தாலோ நோன்பு முறியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ் எண்: 2028) நபியவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் இரத்தம் குத்தி எடுத்திருக்கிறார்கள். எண்- 2024 நூல்- அபூதாவூத்) 

உடலிலிருந்து ஊசி மூலம் இரத்தம் எடுப்பதால் நோன்பு முறியாது. எனினும் இரத்த தானத்தின் மூலம் பலகீனம் ஏற்பட்டு நோன்பு முடியாமல் போய்விட்டால் மக்ரூஹ் ஆகும். (மஸாயிலே ரோஜா, அஹ்ஸனுல் ஃபதாவா)


தலை அல்லது வயிற்றில் காயம் உள்வரை ஊடுருவியிருந்தால் அந்த காயத்தில் (ஈரமான) மருந்து போடுவதால் நோன்பு முறிந்துவிடும். மற்ற காயங்களுக்கு மருந்திடுவதால் நோன்பு முறியாது. (மஸாயிலே ரோஜா)   

வாயில் ஈ நுழைந்து விட்டால் நோன்பு முறியாது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: மய்யஸூமு வமய்யுஃப்திரு ..... 2/204)


நறுமணம்:
நறுமணத்தை நுகர்வதால் நோன்பு முறியாது. காற்று மட்டும் வாய் அல்லது மூக்கினுள் போவதாலும் நோன்பு முறியாது. பத்தி போன்றவற்றின் புகையை வேண்டுமென்றே உள்ளிழுத்தால் நோன்பு முறிந்து விடும் (ஃபதாவா மஹ்மூதிய்யா) பீடி, சிகரெட் குடிப்பதன் மூலமும் நோன்பு முறியும். 

நோன்பு நோற்ற நிலையில் நபியவர்கள் சுர்மா இட்டதாகவும் பைஹகீயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனஸ் (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் சுர்மா போட்டிருக்கி-ர்கள். (நூல்: அபூதாவூத்-2030) 


ஊசி போடுதல் இரத்ததானம் செய்தல்:
நபியவர்கள் ஸஹர் நேரம் முடிந்து ஃபஜ்ர் உதயமான பின் குளித்திருக்கிறார்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல்: புகாரீ - 1795) 
அனஸ் (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தண்ணீரை ஊற்றி குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வார்கள். (நூல்: மய்யஸூமு வமய்யுஃப்திரு.... 1/202) 
இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் ஒரு துணியை நனைத்து தங்களின் மேல் போட்டுக்கொண்டார்கள்.


குளிப்பதின் மூலம் உடலுக்கு உற்சாகமும் குளிர்ச்சியும் கிடைக்கிறது. நபியவர்களும் நபித்தோழர்களும் அந்த நோக்கத்திற்காக குளித்திருக்கிறார்கள். தண்ணீர் உடலுக்குள்ளே செல்வதால் தான் உடலுக்கு குளிர்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது. 

நம்முடைய உடலில் கண்ணுக்குத் தெரியாத ஏகப்பட்ட துவாரங்கள் இருக்கின்றன.3 1/2 கோடி ரோம துவாரங்களும் 8 கோடி வியர்வை துவாரங்களும் இருக்கின்றன. 

உடலில் வெளிப்படையான துவாரங்களின் மூலம் ஏதாவது உள்ளே சென்றால் தான் நோன்பு முறியும். கண்ணுக்குத் தெரியாத ரோம, வியர்வை துவாரங்களின் மூலம் உள்ளே சென்றால் நோன்பு முறியாது, என்று மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் மூலம் அறிய முடிகிறது. 

ஊசி போடுவதாலோ குலுக்கோஸ் ஏற்றுவதாலோ நோன்பு முறியாது. எனினும் முடிந்த வரை நோன்பு காலத்தில் இதைத் தவிர்த்திட வேண்டும். நோன்பு திறக்கும் வரை ஒத்திப் போடுவதே நல்லது. ஊசியின் மூலம் மருந்து ஏற்றினாலும் சரி, சத்து ஏற்றினாலும் சரி அதன்மூலம் நோன்பு முறியாது.

 எனினும் நிர்பந்த நிலையின்றி சத்து ஊசி போடுவதும் தக்க காரணமின்றி குலுக்கோஸ் ஏற்றுவதும் மக்ரூஹ் என்று இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமீ 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடதிய ஃபிக்ஹீ செமினாரில் முடிவு செய்யப்பட்டது. 

இருதய வியாதியால் பாதிக்கப்ட்டவர்களுக்கு நாவுக்குக் கீழே ஒரு மாத்திரை வைக்கப்படும். இதன் மூலம் மிக விரைவில் பலன் கிடைக்கும். இந்த மருந்து தொண்டை வழியாக குடலை அடைவதில்லை. நாவுக்குக் கீழே உள்ள கண்ணுக்குத் தெரியாத துவாரங்களின் மூலம் இரத்தத்தை அடைகிறது. இது போன்ற மாத்திரை வைக்கும் போது எச்சிலுடன் மருந்தை விழுங்குவதை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொண்டால் நோன்பு முறியாது. 

குடல் தொடர்பான வியாதிகளுக்காக பின்துவாரம் வழியாக கருவியை ((endoscope)) மட்டும் நுழைப்பதால் நோன்பு முறியாது. (அதன் ஒரு பகுதி உடலின் வெளியே இருக்கும். இருக்க வேண்டும்) எனினும் அந்தக் கருவியில் மருந்தோ அல்லது ஈரமான பொருளோ இருந்தால் நோன்பு முறிந்து விடும். (நூல்: நவாகிளெ ஸொம் ஸே முதஅல்லிக் நயே மஸாயில் - இந்திய இஸ்லாமிக் ஃபிக் அகாடமீ)