Thursday, 19 December 2013

தெரிந்ததும் தெரியாததும்: ஈஸா (அலை) - ஏசுநாதர்




ஈஸா (அலை) அவர்கள் பிறந்த நாளை (டிசம்பர் 25) கிருஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் குறித்து தெளிவான - சரியான கொள்கையைப் போதிக்கிறது, இஸ்லாம். ஒவ்வொரு முஸ்லிமும் அந்தக் கொள்கையை அறிந்து அப்படியே நம்பவும் வேண்டும்.

குறிப்பாக அதிகமான முஸ்லிம் குழந்தைகள் கிருத்தவப் பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் இந்தக்காலத்தில் ஈஸா (அலை) அவர்கள் பற்றிய விவரங்களை குழந்தகளின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும். கிருஸ்துமஸ் நெருங்கி விட்டால் நம்முடைய பிள்ளைகள் கிருஸ்துமஸ் தாத்தா பற்றி பேச ஆரம்பித்து விடுகின்றனர். கிருஸ்துமஸ் கீதம், கிருஸ்துமஸ் மரம் போன்ற தகவல்களையெல்லாம் அறிந்து கொள்கின்றனர். ஆனால் இவையனைத்தும் கிருத்தவ மதம் சார்ந்த விஷயம். கொள்கை சார்ந்த விஷயம்.

இஸ்லாமியக் கொள்கைகள் கிருத்தவப் பிள்ளைகளின் மனதில் பதிவதை எப்படி கிருத்தவர்கள் விரும்பமாட்டார்களோ அதைவிடப் பன்மடங்கு நம்முடைய மனதில் மாற்று மத கொள்கைகள் பதியக்கூடாது. அறிவது என்பது வேறு. நம்புவது என்பது வேறு. இன்று இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் கிருத்தவக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றுவதை நாம் மறுக்க முடியாது.

ஓரிறைக் கொள்கை பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பற்றியும் நம்முடைய குழந்தைகள் எந்த அளவுக்கு தெரிந்திருக்கின்றனர்? கிருத்தவ மதம் தொடர்பான தகவல்களை சாதாரணமாக பேசும் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கொள்கைகளை ஏன் படித்துக் கொடுக்கக் கூடாது. கிருஸ்துமஸ் தாத்தா பற்றி பேசும் பிள்ளைகள் முஹம்மது (ஸல்) அவர்கள் பறறி ஏன் பேசக்கூடாது?

இயேசு - ஈஸா (அலை) யார்?:
ஈஸா (அலை) அவர்களுக்கு உரிய மரியாதையை இஸ்லாம் கொடுத்திருக்கிறது. அவர் அல்லாஹ்வால் நேர்வழி காட்டுவதற்காக அனுப்பப்பட்ட நபி. அவரும் அல்லாஹ்வுடைய ஓர் அடியாரே தவிர கடவுளோ கடவுளின் குழந்தையோ அல்ல. அவர் சிலுவையில் அறையப்படவில்லை, போன்ற ஆதாரப்பூர்வமான கொள்கைகளை மார்க்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அல்லாஹ்வுக்கும் ஒரு குமாரன் இருக்கிறான், என்று சொல்பவர்களை குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது. அந்த மோசமான கொள்கையால் சக்தி வாய்ந்த மலைகளும் ஆடிப்போய் நிற்கின்றன, என்பது குர்ஆன் கூறும் தகவல்.

கிருத்தவக் கொள்கைகள் முற்றிலும் குர்ஆனுக்கு முரணானவை. ஈஸா (அலை) அவர்களை கிருத்தவர்கள் எப்படி நம்பியிருக்கிறார்கள்? என்பதே ஒரு குழப்பமான விஷயம். இயேசு கடவுளா? அல்லது கடவுளின் குமாரரா? முக்கடவுளா? ஒரு கடவுளா? இறைவன், இயேசு, பரிசுத்த ஆவி மூவரும் கடவுள். ஆனாலும் மூன்று பேரும் சேர்ந்து ஒரே கடவுள் தான், என்றும் கூறுகின்றனர். இந்தக் கொள்கைக்கு விளக்கம் சொல்ல வந்த மதத் குருமார்கள் பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர். பிரிவுச் சட்டங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் கடவுட்கொள்கையிலேயே முரண்பாடு இருந்தால் அதை என்னவென்று சொல்வது?

முரண்பாட்டின் மொத்த உருவம்:
கிருத்தவர்களில் இபியூனீ பிரிவினர் ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று ஏற்றுக் கொண்டால் நம்முடைய ஏகத்துவக் கொள்கையை பாதுகாக்க முடியாது. என்பதால் இயேசு முழுமையான கடவுள் அல்ல; கடவுளுக்கு ஒப்பானவர், என்று கூறிவிட்டனர். இது போன்று பல பிரிவினர்கள் தோன்றினர்.

ஆறாவது நூற்றாண்டில் யஃகூபி பிரிவினர் தோன்றினர். அவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவன் என்றே வாதிட்டனர். ஆறாம் நூற்றாண்டு இஸ்லாம் தோன்றிய ஆரம்ப காலம். அச்சமயத்தில் இந்த பிரிவினர் மூலம் சிரியா போன்ற நாடுகளில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. நிச்சயமாக அல்லாஹ், மர்யமுடைய மகன் ஈஸா தான், என்று சொன்னவர்கள் காஃபிர்களாகி விட்டார்கள்... என்று அல்குர்ஆன் (5:17) இந்தப் பிரிவினரைச் சாடுகிறது. (நூல்: ஈஸாயிய்யத் கியா ஹே)

ஏசு கடவுளல்ல:
ஈஸா (அலை) அவர்கள் மனிதர் தான்: கடவுளல்ல, என்று சொல்லக்கூடிய பிரிவினர்கள் அவ்வப்போது கிருத்தவர்களிடையே தோன்றத்தான் செய்தார்கள். எனினும் தேவாலயப் பொறுப்பாளர்கள் அவர்களை வளர விடவில்லை. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய arians  என்ற பிரிவினர் இயேசு படைக்கப்பட்ட மனிதர் தான் என்று நமபியிருந்தனர். அதற்கு முன் 3 ம் நூற்றாண்டிலேயே இந்தக் கொள்கையுடையவர்கள் தோன்றியிருந்தனர். முவஹ்ஹிதீன் - ஏகத்துவவாதிகள் (untairians) என்ற பிரிவினர் இன்றும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவர்களும் ஈஸா (அலை) அவர்களை சிறந்த மனிதராகவே கருதுகின்றனர். கடவுள் என்று சொல்லவில்லை. திரியோகத்துவ - முக்கடவுள் கொள்கையை முற்றிலுமாக மறுக்கின்றனர். (நூல்: யஹுதிய்யதோ நஸ்ரானிய்யத் - தர்யாபாதி)

உண்மையைச் சொல்லும் இன்ஜீல்:
கிருத்தவ மதத்தில் முக்கிய நபராக கருதப்படும் பவுல் என்பவருக்கும் ஈஸா (அலை) அவர்களுடன் இருந்த பர்னபாஸ் ஹவாரி என்பவருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த பவுல் ஈஸா (அலை) அவர்களுடைய உண்மை நிலையை மறைத்து விட்டதால் இந்தப் பிரிவினை ஏற்பட்டது. இன்று பவுல் சொல்லி வைத்தவை தான் கிருத்தவக் கொள்கையாக உள்ளன.

ஈஸா நபிக்கு இறக்கப்பட்ட இன்ஜீலை இன்று பார்க்க முடியாது. ஈஸா (அலை) அவர்களுக்குப் பின் பல பைபிள்கள் தோன்றின. எனினும் நான்கு பேர் எழுதிய நூற்களுக்கு மட்டுமே புதிய ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. மற்றவற்றை கிருத்தவத் தலைமை நிராகரித்து விட்டது. இதற்கிடையே பர்னபாஸ் ஹவாரி எழுதிய (கிருத்தவர்கள், உலகை விட்டும் மறைத்துவிட்ட) ஒரு பைபிள் (ஏறத்தாழ 250 வருடங்களுக்கு)  முன்னால் கண்டெடுக்கப்பட்டது. இந்த பைபிள் கிருத்தவ உலகையே நடுநடுங்கச் செய்துவிட்டது. ஏனெனில் அதில் கிருத்தவ மதத்தின் கொள்கைள் உடைத்தெறியப் பட்டுள்ளன.

ஈஸா நபி பற்றிய உண்மையான தகவல்கள் கூறப்பட்டுள்ளன, என்பது மட்டுமல்லாது அதில் இறுதி நபி முஹம்து (ஸல்) அவர்களுடைய கண்ணியமான பெயரும் கூறப்பட்டுள்ளது. ஈஸா நபி கடவுளோ கடவுளின் குமாரரோ இல்லை. மேலும் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. அல்லாஹ் அவரை வானுலகிற்கு உயர்த்திவிட்டான், போன்ற சத்தியமான கருத்துக்களும் பர்னபாஸுடைய இன்ஜீலில் கூறப்பட்டுள்ளன. ஆனால் இன்றோ இந்த இன்ஜீலை எழுதியது ஒரு முஸ்லிம் என்று பேசப்படுவது எவ்வளவு பெரிய வேடிக்கையான சேதி? (ஈஸாயிய்யத் கியா ஹே?)

சத்தியத்தை எடுத்துச் சொல்லி கிருத்தவர்களை விளங்க வைக்க வில்லையானாலும் அவர்கள் விரிக்கும் வலையிலிருந்து நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சிலுவை யுத்தத்தில் தோற்றபின் ஆயுதத் தாக்குதலை கலாச்சாரத் தாக்குதலாக மாற்றியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஃபிரான்ஸிலிருந்து வெளியான ஒரு நூலில் இப்படி கூறப்பட்டுள்ளது: 13 ம் நூற்றாண்டின் இறுதியில் சிலுவை யுத்தம் முடிந்துவிட்டாலும் ஐரோப்பிய சிந்தனையில் சிலுவைக் கலாச்சாரம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. (அல்ஹவார் பைனல் அத்யான்)
எனவே, கிருத்தவக் கலாச்சாரத்தையும் கொள்கைகளையும் முஸ்லிம்களிடம் திணிப்பதற்கு தொடர்ந்து முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களை கிருத்தவர்களாக மாற்றும் வேலையும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. எனவே விசுவாசிகளே! (மிக எச்சரிக்கையாக இருந்து) உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் - 66:5) இல்லையெனில் தலையில் கூடை நிறைய பிரியாணியை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தில் பிச்சை எடுத்த கதையாகத் தான் நம் நிலை ஆகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

Monday, 9 December 2013

ஸஃபர் மாதம் - ஒரு வரலாற்றுப் பார்வை



ஸஃபர் மாதம் தொடர்பாக மௌட்டீக காலம் முதற்கொண்டு பல மூடநம்பிக்கைகள் இருந்ததை வரலாற்றில் காண முடியும். ஸஃபர் அது வயிற்றுப் புழு. மனிதனுடைய வயிற்றில் இருந்து அவனை கொன்று விடுகிறது. அவனுக்குரிய மரண நேரம் வருவதற்கு முன்பே இறந்து விடுகிறான், என்று நம்பினர். ஸஃபர் மாதத்தையே பீடை மாதமாக கருதினர். (அவ்னுல் மஃபூத்)


ஸஃபர் மாதத்தை பீடை மாதமாக கருதப்பட்டது.  மௌட்டீக காலத்தில் இந்த மாதத்திற்கு ஸஃபருல் கைர் - நல்ல ஸஃபர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நல்லது என்று நம்பியதால் நல்லதாகவோ கெட்டது என்று நம்பியதால் கெட்டதாகவோ ஆகப்போவதில்லை, என்பதே நம்முடைய நம்பிக்கை. (அத்தியரா)  


ஸஃபர் மாதம் முஹர்ரம் மாதத்திற்கு அடுத்து வருகிறது. முஹர்ரம் யுத்தம் ஹராமாக்கப்பட்ட மாதம். எனவே அதற்கு அடுத்து வரும் ஸஃபர் மாதத்தில் அதிமான யுத்தங்களும் குழப்பங்களும் நடக்கும் என்று நம்பினர். (நபிய்யுர் ரஹ்மா)


எனினும் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் புரட்சிகரமான பல நிகழ்வுகளை வரலாறு நெடுகிலும் காணமுடியும். நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் எது? என்பதில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஒரு கருத்தின் படி அது ஸஃபர் மாதம் என்றும் கூறப்பட்டுள்ளது.  (மௌசூஅதுத் திஃபாஃ அன் ரஸூலில்லாஹ் ஸல்)


ஹதீஸ் கலை வல்லுணர் இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் தான் பிறந்தார்கள். (ஸியரு அஃலாமின் நுபலா)


நபிப்பட்டம் கிடைத்து 14 ஆம் ஆண்டு 26 ஆம் தேதியன்று (கி.பி. 622, செப்டம்பர் - 12) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து (மதீனாவுக்கு) புறப்படுவத்றகு முன் அவர்களை கொலை செய்வது பற்றி எதிரிகள் ஆலோசனை நடத்தினர். (நவூது பில்லாஹ்) குரைஷிகளின் பாராளுமன்றமாகிய தாருந்நத்வாவில் இதற்கான கூட்டம் நடந்தது. ஷைத்தான் இந்த கூட்டத்தொடருக்கு தலைவனாக இருந்தான். எல்லா குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து கொலை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், என்ற கருத்தை ஏற்று அப்படியே முடிவு செய்தான். மறுநாள் பிறை 27 ஆன்று நபியவர்கள் புறப்பட்டார்கள். ஆனால் எதிரிகளின் இந்த திட்டம் பலிக்க வில்லை. அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றிவிட்டான்.


உலக சரித்திரத்தில் தடம் பதித்த இந்த ஹிஜ்ராவுடைய நிகழ்வு இந்த ஸஃபர் மாதத்தில் தான் ஆரம்பமானது. (அர்ரஹிகுல் மக்தூம்) 


நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாது:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான் அப்வா அல்லது வத்தான் யுத்தத்திற்காக நபியவர்கள் புறப்பட்டார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவர்களை எதிர்கொள்வதற்காக நபியவர்கள் 60 முஹாஜிரீன்களுடன் சென்றார்கள். இதில் அன்ஸாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுவே நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாதாகும். சண்டை எதுவும் நடக்கவில்லை. எதிரிகள் தப்பித்துவிட்டனர். எனினும் இந்த பயணத்தில் பனூளம்ரா என்ற கோத்திரத்தாருடன் நபியவர்கள் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் வாதில் குரா யுத்தம் நடந்தது. கைபர் யுத்தம் முடிந்து திரும்பும் போது இவர்களுடைய கோட்டை முற்றுகையிடப்பட்டது. இங்கும் இஸ்லாத்தை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்த யூதர்கள் இருந்தனர். நான்கு நாள் முற்றுகைக்குப் பின் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.


யுத்தத்திற்கான அனுமதி:
எந்த காரியமாக இருந்தாலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் செய்ய முடியும். முஸ்லிகளை எதிர்க்கும் எதிரிகளுடன் யுத்தம் செய்வதற்கும் அல்லாஹ்வின் அனுமதி தேவை.


ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதம் 12 ஆம் தேதியன்று இறைநிராகரிப்பாளர்களுடன் யுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கும் இறைவசனம் இறங்கியது. எவர்களுக்கு எதிராக போர் புரியப்படுகிறதோ அவர்களுக்கு (யுத்தம் செய்ய) அனுமதியளிக்கப் பட்டுவிட்டது.ஏனெனில் அவர்கள்கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான். (22:39)

இதுவே யுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கும் முதல் வசனமாகும். இதற்கு முன்பு யுத்தம் செய்யக்கூடாது, என்ற கருத்து கொண்ட 72 வசனங்கள் இறங்கியிருந்தன.


திருமணம்:
ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் (கி.பி 626 ஜுன்) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். (முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்)


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் நபி (ஸல்) அவர்கள்  ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். கைபர் யுத்தத்தில ஸபிய்யா கைதியாக பிடிக்கப்பட்டார். தலைவரின் மகளாக இருந்ததால் யூதர்கள் மணமகிழ்ந்து இஸ்லாத்தை தழுவலாம் அல்லது முஸ்லிம்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளலாம், என்பதற்காக திருமணம் செய்து கொண்டார்கள்.


நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்ததும் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான். அப்பொழுது பாத்திமா (ரலி) அவர்களுக்கு வயது 19. அலீ (ரலி) அவர்களுக்கு 24 வயது.


ஸரிய்யது ரஜீஃ:
அளல், காரா ஆகிய இரு கோத்திரத்தார் வேண்டிக்கொண்டதற்கிணங்க மார்க்கத்தை படித்துக் கொடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பத்து தோழர்களை ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ஸஃபர் மாதம் அனுப்பி வைத்தார்கள். போகும் வழியில் ரஜீஃ என்ற இடத்தில் எதிரிகள் 200 பேர் வழிமறித்து சூழ்ந்து கொண்டனர். இவர்கள் தப்பிப்பதற்கு வழி இல்லாமல் எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் எட்டு பேரை அங்கேயே ஷஹிதாக்கி விட்டனர். குபைப் (ரலி) ஜைத் (ரலி) ஆகிய இருவரையும் மக்காவுக்கு அழைத்துச் சென்று எதிரியின் கைகளில் விற்றுவிட்டனர். அவர்கள் அங்கே சில காலம் கைதியாக வைக்கப்பட்டனர். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் கொன்றுவிட்டனர்.


இஸ்லாம்:
யமாமாவின் அதிபதி துமாமா பின் உஸால் (ரலி) (ثمامة بن اثال)அவர்கள் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஹர்ரம் அல்லது ஸஃபர் மாதத்தில் தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். துமாமா ஒரு படைநடவடிக்கையில் கைதியாக பிடிக்கப் பட்டார். அவர் மதீனாவுக்கு கொண்டு வரப்பட்டு மஸ்ஜிதுந்நபவீயின் தூணில் கட்டிவைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரை அவிழ்த்து விடுமாறு உத்தரவிட்டார்கள். துமாமா (ரலி) அவர்கள் விடுதலையாகிச் சென்று குளித்துவிட்டு மீண்டும் நபியவர்களிடம் வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு முஹர்ரம் ஸஃபர் மாதத்திற்கிடையில் ஏமனிலிருந்து (دوس) தூஸ் கபீலாவினர் நபியவர்களிடம் வந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே! இந்த சந்திப்பின் மூலம் 70 அல்லது 80 தூஸ் குடும்பத்தைச் சார்ந்த 400 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.


ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் அம்ர் பின் ஆஸ் (ரலி) காலித் பின் வலீத் (ரலி) உதுமான் பின் அபீதல்ஹா (ரலி) ஆகியோர் மதீனா வந்து நபியவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினர்.


ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் ஏமனில் இருந்து பனு உத்ரா என்ற கோத்திரத்தைச் சார்ந்த 12 பேர் கொண்ட ஒரு குழு வந்தது. இக்குழுவினர் அனைவரும் நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு திரும்பினர். (நூல்: முஃமின்கே மாஹோஸால்)

Sunday, 8 December 2013

Thanks Giving Day



உதவிக்கு நன்றி செலுத்துவது மனிதனுடைய இயற்கை குணம். ஆனால், இன்று செய்யும் உதவிக்கு நன்றி தெரிவிக்கா விட்டாலும் அதைப் பற்றி குறை கூறாமல் இருந்தாலாவது பரவாயில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. மனிதனிடமிருந்து நன்றி விசுவாசம் எடுபட்டுப் போய்விட்டதால்``நன்றியுள்ள பிராணி நாய் என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நன்றியுணர்வில் எல்லோருமே மனிதனைவிட மிருகத்திற்கு முதலிடம் கொடுப்பது தான் நடைமுறை.

அமெரிக்கர்களுக்குநன்றி

குழந்தைகள்தினம்,ஆசிரியர்தினம், எய்ட்ஒழிப்பு தினம்...... இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை உண்டாக்கி வைத்திருப்போர், அமெரிக்காவில் ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை ThanksGiving Day நன்றிதெரிவிக்கும் தினமாக கொண்டாடி வருகின்றனர். உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் யார்? யார்? என்று எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பில்இரண்டாம் (முதல்) இடத்தைப் பிடித்தவர் ஜார்ஜ் புஷ். உலகத்தின் போலீகாரர் என்ற கற்பனையில் ஈராக்கை அடுத்து அவரது இலக்கு ஈரானா? கூட கொரியாவா? என்றெல்லாம் கேள்விகள்எழுப்பின உலக ஊடகங்கள்.
ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து முதலாளித்துவத்தின் அதிவாரம்ஆடிப்போயுள்ளது. நன்றி செலுத்தும் விதம்

இலாத்தின் பார்வையில்``நன்றி என்பது ஒரு தினத்தோடு மட்டுமல்ல; மனித வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இறைவேதத்துக்கு இணையான இறை பாக்கியம் வேறில்லை என்பதால் நோன்பின் மூலம் குர்ஆன் அருளப்பெற்ற காலத்தில்``நன்றி செலுத்துவதை மார்க்கக் கடமை யாக்கியுள்ளது இலாம்.

விண்ணையும் மண்ணையும் மனிதனுக்காகவே இயங்கவைத்த அனைத்துலக இரட்சகனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ``அல்ஹம்து லில்லாஹிரப்பில்ஆலமீன் இந்த அண்டசராசரத்தைப் படைத்து பராமரிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுவதை ஒவ்வொரு தொழுகையிலும் அவசியமாக்கப் பட்டுள்ளது.

``எவரேனும் ஒருவருக்கு கொடை வழங்கப்பட்டால் வசதியிருப்பின் அவரும் கொடையளித்தவருக்குப் பகரமாக தானும்
வழங்கட்டும். அப்படியில்லை அவரை மனதாரப் புகழட்டும் என்றும், மற்றோர் அறிவிப்பில்``உதவியவருக்கு ஜஸாகல்லாஹு கைரா - அல்லாஹ் உங்களுக்கு சிறந்த பகரத்தை வழங்குவானாக! என்று கூறிவிட்டால் புகழ வேண்டிய அளவுக்கு புகழந்து விடுகிறார் என்றும் நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (மிஷ்காத்) அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆவிடம் ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கியிருந்தார்கள். கடனைத் திருப்பி செலுத்தும் போது உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் அருள்வளம் (பரக்கத்)அளிப்பானாக! என்று துஆ செய்து விட்டு (ஒழுங்காக நிறைவேற்றுவதும் புகழ்வதும் கடன் கொடுத்தவருக்கு செய்யும் பிரதி உபகாரம் என்று கூறினார்கள். (இப்னுமாஜா)

இந்தக் காலத்தில் கடன் கொடுத்தவர், ``தன்னை பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. வாங்கிய கடனை உருப்படியாக திருப்பிக் கொடுத்து விட்டால் நானே உன்னைப் பாராட்டுகிறேன் என்ற நிலை தான் உள்ளது.

உதவிக்கு தகுந்த நன்றி
செய்யப்படும் உதவியின் முக்கியத்துவம் மற்றும் சிரமத்திற்கு தகுந்தவாறு நன்றியும் அமைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சுய தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றிருந்தார்கள். திரும்பி வருவதற்குள் இப்னு அப்பா (ரலி) அவர்கள் உளூ செய்வதற்கு தண்ணீர் எடுத்து வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்து இந்த தண்ணீரை வைத்தது யார்? என்று வினவினார்கள். இப்னு அப்பா (ரலி) அவர்கள் தான் வைத்தார்கள் என்று அறிவிக்கப்பட்டதும், ``யாஅல்லாஹ்! அவருக்கு மார்க்க விஷயத்தில் நல்ல விளக்கத்தை கொடுப்பாயாக!என்று துஆ செய்தார்கள். இங்கு இப்னு அப்பா (ரலி) அவர்களின் உதவி சாதாரணமானது தான். ஆனால்நபியவர்களின் நன்றியுணர்வில் வெளிப்பட்ட பிரார்த்தனையோ மிக மிக உயர்ந்தது. ஏனெனில், எந்த நேரத்தில் எந்த வேலையை செய்ய வேண்டுமென்பதை யாரும் சொல்லாமல் தாங்களாகவே விளங்கி தண்ணீர் எடுத்து வைத்திருந்தார்கள்.

செய்த காரியம் சாதாரணமாக இருந்தாலும் அதற்காக செய்த சிந்தனை பாராட்டுக்குரியது எனவே தான் நபி (ஸல்) அவர்கள் ``இந்தவிளக்கம் மார்க்கவிஷயத்திலும் பொங்கி வழியட்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தாடியிலிருந்த ஒரு பொருளை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் தட்டி விட்டதற்காக ``நீங்கள் வெறுக்கும் காரியத்தை அல்லாஹ் உங்களை விட்டு நீக்குவானாக! என்று பிரார்த்தித்தார்கள். (அல்அத்கார்) இப்படி சின்னச் சின்ன உதவிக்கும் உடனடியாக நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

தேங்சொல்லாமா?
இன்று எல்லா இடங்களிலும் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது நாகரீகமாகக் கருதப்படுகிறது. நாம் பேசுவதில் பாதி வார்த்தை ஆங்கிலக் கலப்புடன் தான்இருக்கிறது. ``கக்கூ என்று சொல்வதை விட ``டாய்லட் என்று சொல்லி விட்டால் புனிதமான இடத்திற்கு சென்று வந்ததாக நினைப்பு. எந்த மொழியின் மீதும் நமக்கு வெறுப்பில்லை. ஆனால் குர்ஆனுடைய மொழியை விரும்புவது இறை நம்பிக்கையாளரின் பண்பாடு. எனவே தேங் என்று சொல்வதை விட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த கருத்துச் செறிவுள்ள துஆவாகிய ``ஜஸாகல்லாஹு கைரா என்று அரபியிலே சொல்வதை பரவலாக்க வேண்டும். அதையே கண்ணியமாகவும், நாகரிகமானதாகவும் கருதும் மனோநிலை நம்மிடம் உருவாக வேண்டும்.

நன்றி மறப்பது......
``தர்மம் செய்யுங்கள்; அதிகமாக பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் உங்களை நரகவாசிகளில் அதிகமாகப் பார்த்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் பெண்களை நோக்கி கூறிய போது அதற்குக் காரணம் என்ன? என்று புத்திக்கூர்மையுள்ள ஒரு பெண் கேட்டார். நீங்கள்அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவரிடம் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்கிறீர்கள் என்று நபி (ஸல்)அவர்கள் காரணம் கூறினார்கள். நன்றி மறப்பது நரகவாசியாகஆக்கிவிடுமளவு கொடூரமானது. ஏனெனில் கணவனுக்கு நன்றி செலுத்தாதவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு எப்படி நன்றி செலுத்துவார்கள். எனவே தான் நபி (ஸல்) அவர்கள்``மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்று எச்சரித்தார்கள்.

336- حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً فَهَلَكَتْ فَبَعَثَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَجُلاً فَوَجَدَهَا فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَصَلَّوْا فَشَكَوْا ذَلِكَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ لِعَائِشَةَ جَزَاكِ اللَّهُ خَيْرًا فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ تَكْرَهِينَهُ إِلاَّ جَعَلَ اللَّهُ ذَلِكِ لَكِ وَلِلْمُسْلِمِينَ فِيهِ خَيْرًا. - رواه البخاري


عن أسمة بن زيد قال : قال رسول الله صلى الله عليه و سلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء - رواه الترمذي

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أُتِيَ بِالْجَنَازَةِ لَمْ يَسْأَلْ عَنْ شَيْءٍ مِنْ عَمَلِ الرَّجُلِ وَيَسْأَلُ عَنْ دَيْنِهِ فَإِنْ قِيلَ عَلَيْهِ دَيْنٌ كَفَّ عَنِ الصَّلاَةِ عَلَيْهِ وَإِنْ قِيلَ لَيْسَ عَلَيْهِ دَيْنٌ صَلَّى عَلَيْهِ فَأُتِيَ بِجَنَازَةٍ فَلَمَّا قَامَ لِيُكَبِّرَ سَأَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَصْحَابَهُ هَلْ عَلَى صَاحِبِكُمْ دَيْنٌ قَالُوا دِينَارَانِ فَعَدَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَقَالَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ هُمَا عَلَيَّ يَا رَسُولَ اللهِ بَرِيءَ مِنْهُمَا فَتَقَدَّمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَصَلَّى عَلَيْهِ ، ثُمَّ قَالَ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَكَّ اللَّهُ رِهَانَكَ كَمَا فَكَكْتَ رِهَانَ أَخِيكَ إِنَّهُ لَيْسَ مِنْ مَيِّتٍ يَمُوتُ وَعَلَيْهِ دَيْنٌ إِلاَّ وَهُوَ مُرْتَهِنٌ بِدَيْنِهِ وَمَنْ فَكَّ رِهَانَ مَيِّتٍ فَكَّ اللَّهُ رِهَانَهُ يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ بَعْضُهُمْ هَذَا لِعَلِيٍّ خَاصَّةً أَمْ لِلْمُسْلِمِينَ عَامَّةً فَقَالَ بَلْ لِلْمُسْلِمِينَ عَامَّةً - رواه الدرقطني

2424- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا وَكِيعٌ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيُّ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ اسْتَسْلَفَ مِنْهُ حِينَ غَزَا حُنَيْنًا ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ أَلْفًا ، فَلَمَّا قَدِمَ قَضَاهَا إِيَّاهُ ، ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْوَفَاءُ وَالْحَمْدُ. - رواه ابن ماجه