உலக கழிவறை தினமா? நீங்கள் சிரிப்பது காதில் விழுகிறது. இது சிரிக்கிற விஷயமல்ல!. சீரியஸானது.
உலக அளவில் 260 கோடி நபர்கள் (உலக மக்கள் தொகையில் 40 சதவீதம்) இப்போது கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல்
இருக்கிறார்கள். இதில், 98 கோடி பேர் சிறுவர்
சிறுமியர்கள்.
இவர்கள் வயல்வெளிகள், ஆறு மற்றும் குளக்கரைகள், கடற்கரைகள், தெரு ஓரங்களை அசிங்கப்படுத்தி
வருகிறார்கள். இதன் மூலம் பரவும் நோய்கள் கணக்கில் அடங்கா..!
உலகம் முழுவதும் உள்ள கழிவறை தொடர்பான 15 அமைப்புகள் 2001 ல் கூடி நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிப்பறை
தினம் என அறிவித்தன. அதன் பிறகு ஆண்டு தோறும் உலக கழிவறை தின உச்சி மாநாடு நடத்தப்பட்டு
வருகிறது. ஒவ்வொரு கழிவறை அமைப்பும் தான் சார்ந்துள்ள நாடுகளில் தூய்மையான கழிவறைகளை
உருவாக்க பாடுபட்டு வருகின்றன.
அந்தத் தினத்தின் போது சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள உலக கழிவறை அமைப்பு
(World Toilet Organisation - WTO) பெண்கள், கைக்குழந்தை இருக்கும் பெண்கள்,
பார்வையற்றவர்கள் ஆகியோருக்கு
அதிக வசதியுடன் கூடிய தூய்மையான கழிவறைகளை அமைக்க உதவி வருகிறது. இந்த அமைப்பில் இப்போது
சுமார் 105 உறுப்பினர்கள்
இருக்கிறார்கள்.
டபிள்யூ.டி.ஓ, 2005 ல் உலகின் முதல் உலக கழிவறை கல்லூரியை (World Toilet College) தொடங்கியது. கழிவறை வடிமைப்பு,
பராமரிப்பு,
பள்ளிக் கூட சுகாதாரம்,
அவசரக்கால சுகாதாரம்
போன்றவை குறித்து இந்த கோர்ஸ்களில் சொல்லித்தரப்படுகிறது. நம் ஊர் பள்ளிக்களில் இன்றும்
கூட பல இடங்களில் வயது வந்த பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் சிறு நீர் கழிக்க
கூட மறைவிடம் இல்லாத அவநிலை காணப்படுகிறது. நாட்டில் கழிவறைகளே இல்லை என்றால் நிலைமை
எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்... நம்மை சுற்றி இருக்கும் நோய்கள் எத்தனையாக
இருக்கும்.
நாட்டில் பல இடங்களில் கழிவறை வசதி இருக்கிறது. ஆனால், தண்ணீர் வசதி இல்லாததுதான் பெரும்பிரச்னையாக
இருக்கிறது. ஆண்டு தோறும் தண்ணீர் மற்றும்
சுகாதாரக் குறைவு தொடர்பான நோய்கள் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்
மரணம் அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள்தான்
அதிகம்.
கழிவறை ஒழுக்கம்:
எல்லாத் துறையிலும் வழிகாட்டியிருப்பது போல் இஸ்லாம் சுகாதார விஷயத்திலும் நிறைவான
தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது.
மலஜலம் கழிக்கும் முறைகளையெல்லாம் உங்கள்
நபி கற்றுக்கொடுக்கிறாரே என்று கேவலமாகக் கேட்ட ஒருவரிடம் நபித்தோழர் சல்மான் ஃபாரிஸீ
(ரலி) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு எங்களுக்கு எங்கள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு
ஒழுக்க முறைகளைக் கற்றுத் தந்தார்கள்.
1. நாங்கள் மல ஜலம் கழிக்கும் போது கஃபதுல்லாஹ்வை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ
உட்காரக் கூடாது.
2. வலது கரத்தால் சுத்தம் செய்யக் கூடாது.
3. மூன்று கற்களைவிட குறைவான கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யக்கூடாது.
4. விட்டை அல்லது எழும்பின் மூலம் சுத்தம் செய்யக்கூடாது. (திர்மிதீ)
தொழுகை, நோன்பு மட்டுமல்ல முறையாகச் செய்தால் இதுவும் கூட புனிதமாகிவிடும், என்பதை ஸல்மான் (ரலி) அவர்கள்
உணர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய சுய தேவையை நிறைவேற்றச் சென்றால் (உட்காரும்
போது) பூமியை நெருங்குவதற்கு முன் ஆடையை உயர்த்த மாட்டார்கள், என்று அனஸ் (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
நிர்பந்தத் தேவை இருந்தாலே தவிர எக்காரணம் கொண்டும் ஆடை முழங்காலுக்கு மேல் சென்றுவிடக்
கூடாது. மலஜலம் கழிக்கும் போது நிர்பந்தமாக ஆடையை விலக்க வேண்டும். அதுவும் தேவையான
அளவுக்கு அந்த நேரத்தில் மட்டுமே விலக்க வேண்டும். ஆனால், இன்று முழங்காலுக்கு மேல் ஆடையை உயர்த்துவதில்
கூச்ச சுபாவமே இல்லாமல் போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்தார்கள்,
என்று யாராவது சொன்னால்
அதை நம்பாதீர்கள்! நபியவர்கள் உட்கர்ந்து தான் சிறுநீர் கழிப்பார்கள். (திர்மிதீ)
இங்கு சிறுநீர் கழிக்காதே:
ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது, என்று கூறப்படுவதுண்டு. அதற்காக,
சிறு பிள்ளைத்தனமாக
கண்ட இடத்திலெல்லாம் சிறுநீர் கழித்துவிட முடியுமா? நம்முடைய மறைவிடத்தை யாரும் பார்த்துவிடக்கூடாது,
என்றே யோசிப்பதில்லை.
சுகாதாரச் சீர்கேட்டை நினைத்துப் பார்ப்பது பற்றி கேட்கவா வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் வசிப்பதற்கு வீடு தேடுவதைப் போல் சிறுநீர் கழிக்க இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்,
என்று நபிமொழிகளில்
வந்துள்ளது. குடியிருக்கும் வீட்டை அவ்வளவு
சீக்கிரத்தில் முடிவு செய்துவிடுகிறோமா?
அதே போல் சிறுநீர் கழிக்கும் இடம் தன்னுடைய உடலையும் ஆடையையும்
அசுத்தமாக்காத விதத்திலும் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்காத விதத்திலும் யார்
கண்ணிலும் படாத விதத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டும். பொது இடங்களில் அரசு கட்டியிருக்கும்
இலவச கழிப்பிடங்களைக் கூட மக்கள் முறையாக பயன்படுத்துவதில்லை, என்பதே உண்மை. நான்கு முழ
தூரத்தில் கழிப்பிடம் இருந்தும் அதுவரை நடந்து செல்ல சோம்பல் பட்டு நின்ற இடத்திலேயே
அடித்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையமே நாறிப்போகிறது, என்பது மட்டுமல்ல,
அதன் மூலம் கிருமிகள்
உருவாகி நோய் பரவ காரணமாக அமைகிறது.
சிறுநீரை வீட்டில் பாத்திரத்தில் தேக்கி வைக்கக்கூடாது. அந்த வீட்டில் வானவர்கள்
நுழைய மாட்டார்கள், என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித் - 1/204)
ஆரேக்கியமான மனிதனுக்குப்
பக்கத்தில் சிறுநீர் வைப்பதால் மட்டுமே கிருமிகள் தொற்றி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது,
என்று விஞ்ஞானம் கூறுகின்றது.
பள்ளிவாசல் எப்போதும் பொதுமக்கள் கூடும் இடாமாக இருப்பதால் இறையில்லத்தின் வாசல்களில்
சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள். (மராஸீலு அபீதாவூத்)
தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் மட்டுமல்ல, ஓடும் தண்ணீரிலும் சிறுநீர் கழிப்பதை
தடை செய்தார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித்) ஆற்றுத் தண்ணீர் சிறுநீர் கழிப்பதால் அசுத்தமாகிவிடாது,
என்றாலும் சுத்தத்தையும்
சுகாதாரத்தையும் பராமரிப்பதில் ஒவ்வொரு தனிமனிதுனுக்கும் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே
இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.
சாபத்திற்கு பயப்படாதவர்கள்:
நடைபாதையிலும் நீர்த் தேக்கத்திலும் மக்கள் (இளைப்பாறுவதற்காக) நிழல் தரக்கூடிய
நிழற்கூடங்களிலும் மலம் கழிக்க வேண்டாம். இது மக்களுடைய சாபத்திற்குக் காரணமாகிவிடும்,
என்றார்கள் இறைத்தூதர்
(ஸல்) மக்களுடைய சாபத்தைப் பயப்படாதவர்களை என்ன செய்ய முடியும்?! ஆற்றங்கரையிலும் பழம் தரும்
மரத்தடியிலும் மலம் கழிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மலஜலம்
கழிப்பதில் கூட இவ்வளவு ஒழுக்கங்களை போதித்து அதையும் நன்மை தரும் புனிதாமான காரியமாக
மாற்றியிருக்கிறது இஸ்லாமிய மார்க்கம். ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் தான் அறிவு ஜீவிகள்
அதன் பக்கம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment