Monday, 10 March 2014

என்ன செய்யப் போகிறோம்?




காலையில் விழித்ததிலிருந்து தூங்கும் வரை என்னுடைய தொழில், என்னுடைய குடும்பம், என்னுடைய வருமானம் இப்படியே சதாவும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். யாரையும் சொல்லவில்லை. முஸ்லிம் வீட்டிலேயே பிறந்து முஸ்லிமாக வாழ்பவர்களைத் தான் சொல்கிறேன். இப்படி சிந்திக்கக் கூடாது, என்று சொல்லவில்லை. வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கக் கூடாது, என்று தான் சொல்கிறேன்.


புதிதாக இஸ்லாத்திற்கு வந்த ஒருவர் தன்னுடைய குடும்பத்தாரையும் இஸ்லாத்திற்கு அழைப்பு கொடுக்க வேண்டுமென்ற பேரார்வத்தில் இருக்கிறார். தன்னுடைய சகோதரியிடம் இஸ்லாத்தைப் பற்றி பேசியிருக்கிறார். அவரிடமிருந்து வந்த பதில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்று கூறியிருக்கிறார். 

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லையென்றால் ஒரு தவாறன கருத்து பட்டி தொட்டிகளின் பெண்களின் மனதிலும் ஆழப் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. என்றால் முஸ்லிம் தீவிரவாதி என்ற சொல்லாடலை ஊடகங்கள் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது? என்பதை உணர முடிகிறதா?

ஒரு உயிரைக் கொல்வது உலகையே கொள்வதற்கு சமம், என்று குர்ஆன் தான் கூறுகிறது. பெரும் பாவங்களில் கெலை செய்வது கொடிய பாவம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமையில் மக்களுக்கு மத்தியில் முதன்முதலாக தீர்வு செய்யப்படக்கூடிய முதல் குற்றம் கொலை தொடர்பானது தான், என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சாந்திசமாதானத்தை தன்னுடைய அடையாளப் பெயரிலேயே கொண்டிருக்கக்கூடிய ஒரு மார்க்கத்துடன் தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி பேசியது மட்டுமல்ல, இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்ற நேர்முரணான சிந்தனையை உருவாக்கி விட்டிருப்பது மடத்தனத்தின் உச்சகட்டமில்லையா?

யுத்தங்கள் இஸ்லாமிய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாறு நெடுகிலும் உலக மகா யுத்தத்தைக் காண முடியும். ஏன்? இந்து வேதங்களில் யுத்தங்கள் பற்றி பேசவில்லையா? ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் யுத்தம் பற்றி பேசுகின்றனவே! மதநூற்களில் யுத்தம் பற்றி கூறப்பட்டிருக்கும் போது இஸ்லாத்தின் மீது மட்டும் ஏன் குற்றச்சாட்டு? சிலுவை யுத்தம் என்ற பெயரே மதயுத்தம் என்பதை அடையாளப்படுத்துகிறதே!

நடந்து முடிந்த 15 வது பாராளுமன்றத்தின் இறுதி நாட்களில் நாடே தலைகுனியும் விதமாக பல சம்பவங்கள் நடந்து விட்டன. குறிப்பாக, நாட்டின் பிரதிநிதிகளே பெப்பர் ஸ்பிரே அடித்ததும் கத்தியைக் காட்டியதும் சகிக்க முடியாதவை. ஆனால், இதை ஏதாவது முஸ்லிம் செய்திருந்தால் ஊடகங்கள் அதை எப்படி வருணித்திருக்கும்?

சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆங்கிலேயர்கள் தீவிரவாதிகள் என்று தான் கூறினர். முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பிரிவினையை ஏற்படுத்தினர். ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடிய முஸ்லிம் தியாகிகளை வஹ்ஹாபி என்று கூறி மக்கள் மனதில் வெறுப்பை மூட்டினர், என்பது தான் வரலாறு.

ஊடகங்களுடைய இது போன்ற படையெடுப்பை முறியடிப்பதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? இனிமேல் என்ன தான் செய்யப்போகிறோம்? நம் நாட்டின் சகோதர சமுதாயத்தவர்களின் மனதில் படிந்த கறையை முடிந்த வரை துடைதெடுப்பதற்கு என்ன செய்திருக்கிறோம்?

இஸ்லாத்தின் இனிய குணங்கள் பற்றி பேசுவது, எழுதுவதுடன் இன்முகத்துடன் நடந்து காட்டவேண்டும். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை வைத்து மற்ற முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தின் சத்தியக் கருத்துக்களை எடுத்துரைத்து அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க வேண்டும். நாம் மட்டுமல்ல, நம்முடன் கலந்திருப்பவர்களையும் சுவனத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி நேரம் ஒதுக்குவதற்கு நம்முடைய டைம்டேபிளை மாற்றியமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment