ஷாஃபியீ, ஹனஃபீ, மாலிகீ, ஹம்பலீ ஆகிய நான்கு மத்ஹபுகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது
யாவரும் அறிந்ததே! எனினும் இன்று மத்ஹபுகள் தேவையில்லை. இமாம்களை பின்பற்றக்கூடாது.,
என்று ஒரு பிரிவினர்
கூறிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத், நஜாத் காரர்கள், கைரு முகல்லிதீன்கள்,
அஹ்லெ ஹதீஸ்,
ஜம்யிய்த்து அஹ்லில்
குர்ஆன் வல்ஹதீஸ் போன்ற பெயர்களால் அறியப்படுகின்றனர்.
குர்ஆன் ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும், என்ற நல்ல வாசகத்தைக் கூறி
மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கினறனர். மத்ஹபுகள் என்றால் என்ன? இமாம்களைப் பின்பற்றுவது என்றால்
என்ன? என்பதை
நாம் அறியாமல் இருப்பதால் தான் இது போன்ற குழப்பவாதிகள் மக்களை மிக எளிதாக வழிகெடுத்து
விடுகின்றனர். அவர்கள் மத்ஹபுகள் பற்றி மக்களிடம்
செய்யும் பிரச்சாரம் முற்றிலும் தவறானது. ஏதாவது ஒரு ஃபிக்ஹ் (சட்ட) நூலில் கூறப்பட்டுள்ளவற்றைப்
பார்த்து கண்மூடித்தனமாக நாம் பின்பற்றுவதைப் போல் இவர்கள் பேசித்திரிகிறார்கள்.
தக்லீத் - இமாம்களைப் பின்பற்றுதல் என்றால் என்ன?
என்பது பற்றி தெரிவதற்கு
முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலம் முதற்கொண்டு ஒவ்வொரு காலத்திலும் மார்க்கத்தின்
படி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு எம்மாதிரியான திட்டத்தின் படி செயல்பட்டார்கள்?
போன்ற சில அடிப்படையான
விஷயங்களை அறிந்து கொள்வோம். தக்லீத் எப்பொழுது அவசியமாகிறது?:
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது என்பதே இஸ்லாத்தின் முதலிடமும்
முக்கியத்துவம் பெற்ற அடிப்படைக் கொள்கை. அல்லாஹ்வின் கட்டளைகளை மக்கள் அறிந்து கொண்டு
அவனுடைய பொருத்தத்தைத் தேடித்தரும் காரியங்களை ஏற்று கோபமூட்டும் காரியங்களை விட்டும்
விலகி நடப்பதற்காகவே நபிமார்கள் அனுப்பப் படுகிறார்கள். அவர்களில் கடைசியாக வந்த இறைத்தூதர்
நம் உயிரினும் மேலான முஹம்மதுர் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள்ஆவார்கள். குர்ஆன் சுன்னாவை
பின்பற்றித் தான் வாழ வேண்டும். அவ்விரண்டையும் புறக்கணித்து விட்டு (அல்லாஹ்,
ரஸுல் நேரடியாகவோ மறைமுகமாகவோ
சொல்லாதவற்றை) மற்ற எதையுமோ யாரையுமோ அவர்
அதை சுய இஷ்டப்படி சொல்கிறார், என்ற அடிப்படையில் பின்பற்றினால் அவர் இஸ்லாத்தின் வட்டத்தை
விட்டும் வெளியேறி விடுவார், என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அல்லாஹ் ஒருவன், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவது,
சுவர்க்கம் நரகம் போன்றஇஸ்லாமியக்
கொள்கைகனை தெளிவாகவே குர்ஆன் விளக்கி வைக்கிறது. தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற சட்டங்கள் குர்ஆனில் தெளிவாகவே
கூறப்பட்டுள்ளன. இவற்றில் எந்த இமாமையும்
தக்லீத் செய்யத் தேவையில்லை. இமாம்களைப் பின்பற்றுவது என்றால் குர்ஆனையும் ஹதீஸையும்
விட்டு விட்டு எல்லா விஷயத்திலும் இமாம்களை தக்லீத் செய்வது போன்ற மாயையை அசத்தியவாதிகள்
ஏற்படுத்தயுள்ளனர்.
தொழுகைகளின் ரக்அத்களின்
எண்ணிக்கை தொழுகைக்கு உளூ கட்டாயம், ஒவ்வொரு தொழுகைக்கும் அதற்காக குறிப்பிடப்பட்ட நேரம் உள்ளது,
கஃபாவை முன்னோக்குவது,
தங்கம் வெள்ளியில் ஜகாத்
கடமை, ஸஹர் முடிந்த நேரத்திலிருந்து சூரியன்
மறைவு வரை தான் நோன்பின் நேரம், வேண்டுமென்றே சாப்பிட்டாலோ குடித்தாலோ நோன்பு முறிவது ரமளான்
மாதத்தில் தான் நோன்பு கடமை மக்காவுக்குச் சென்று தான் ஹஜ் செய்ய வேண்டும்,
துல்ஹஜ் மாதத்தில் தான்
ஹஜ் செய்ய வேண்டும், ஸஃபா மர்வாவுக்கு மத்தியில் தான் ஸயீ செய்ய வேண்டும், பெண்கள் மாதவிடாய் காலத்தில தொழவோ நோன்பு வைக்கவோ கூடாது,
வியாபாரம் ஹலால்,
வட்டி ஹராம்,
விபச்சாரம் ஹராம்,
பொய், புறம், இட்டுக்கட்டுதல் போன்றவை கூடாது,
சாராயமும் சூதாட்டமும்
ஹராம் போன்ற சட்டங்களில் யாரும் எந்த இமாமையும் பின்பற்றத் தேவியில்லை.
இவை சில உதாரணங்கள் தான். இல்லையானால் இது போன்ற ஏராளமான
சட்டங்கள் உள்ளன. அவையனைத்தும் குர்ஆனில் தெளிவாகக் கூறப்ட்டுள்ளன. அல்லது நபியவர்களின்
காலத்திலிருந்து அவை நபிவழி என்று உலக முஸ்லிம்களால் சொல்லப்பட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டும்
வந்திருக்கின்றன. எனவே அவற்றில் எந்த இமாமையும் தக்லீத் செய்ய வேண்டிய அசியமும் ஏற்படவில்லை.
மார்க்கத்தை அனைவரும் சுயமாக விளங்க முடியுமா?:
குர்ஆனும் ஹதீஸும் தெளிவாகவே இருக்கின்றன, என்பதில் யாருக்கும் எந்த
சந்தேகமும் இருக்கக் கூடாது. அதற்காக குர்ஆன் ஹதீஸுடைய மொழிபெயர்ப்பை படிப்பவர்கள்
அனைவரும் உள்ளதை உள்ளபடியே விளங்கிக் கொள்வார்கள், என்று சொல்ல முடியாது. நிறைய தகவல்கள்
குர்ஆனில் கூறப்பட்டிருக்கும். அவற்றை எல்லா மனிதர்களாலும் நேரடியாக விளங்கிக் கொள்ள
முடியாது. இந்த குர்ஆன் அனைவருக்கும் சமமாக விளங்கிவிடுமென்றால் நபியை அனுப்ப வேண்டிய
தேவேயே ஏற்பட்டிருக்காது. ழீபூநிபூலீஞூபூசிஞூலீபூரி னிதூசிபூயுஞூரீபூ ரிசிக்ஷிதூரீஞூகீபூ
சிதூழிஷலிபூயுக்ஷிதூலீபூ சிதூசிலீக்ஷிபூரிசீதூ பிபூரி லீஷக்ஷிதூசிபூ னிதூசிபூயுஞூவீதூபிஞூ
.... நாம் இந்த உபதேசத்தை (குர்ஆனை) உம்மீது
இறக்கியருளியிருக்கிறோம், இது எதற்காகவெனில் மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றை நீர்
அவர்களுக்குத் தெளிவாக விளக்கி வைக்க வேண்டுமென்பதற்காகவும் அவர்களும் சிந்தித்துணர
வேண்டும் என்பதற்காகவும்! (அல்குர்ஆன் - 16:44) குர்ஆன் அரபியில் இருந்தும் நபித்தோழர்கள்
சில வசனங்களை விளங்கமுடியாமால் நபியவர்களிடம் வந்து விளக்கம் கேட்டிருக்கின்றனர். எல்லா ஹதீஸ்களையும் அனைவராலும் சமமாக விளங்கிக்
கொள்ள முடியாது. ஹதீஸ் கிரந்தங்களில் வெளிப்படையாக ஒன்றுக்கொன்று முரணாகத் தெரியும்
நபிமொழிகளை அதிகமாகக் காண முடியும். ஹதீஸுடைய வாசகம் ஒன்று தான். அதிலிருந்து பல கருத்துக்களை
விளங்க முடியும். இதற்குரிய தீர்வுகளை எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியாது. அதற்கென
தனித் தகுதி பெற்றவர்கள் தான் ஆய்வு செய்து தீர்வு சொல்ல முடியும்.
நோயிக்கு சிகிச்சை செய்வதற்காக பல வருடம் மருத்துவம் படிக்க
வேண்டும். வீடு கட்டுவதற்குத் தனியாக படிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு துறைக்கும் அதற்கென
தனியாக காலம் ஒதுக்கி படிக்க வேண்டும். இப்படி உலக நடைமுறைக்கே தனித்திறமை தேவைப்படும்
போது மார்க்க விளக்கத்திற்கு மட்டும் எந்தத் தகுதியும் தேவையில்லை. ஒவ்வொரு பாமரனும்
சுயமாக விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்?
குர்ஆன், ஹதீஸை அனைவருக்கும் சமமாக விளங்கிக் கொள்ள முடியாது,
என்பதை பல நபிமொழிகளும்
வலியுறுத்துகின்றன. அலி (ரலி) அவர்களிடம் ஒரு தடவை அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லாத வஹீயுடைய
தகவல் ஏதும் தங்களிடம் உள்ளதா? என்று கேட்கப்பட்ட போது ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கும் குர்ஆனுடைய
விளக்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, என்று சத்தியமிட்டுக் கூறினார்கள். (புகாரி)
இதன் மூலம் அல்லாஹ் சிலருக்கு பிரத்தியேகமாக குர்ஆனுடைய
விளக்கத்தை வழங்குகிறான், என்பதை விளங்க முடிகிறது. அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ
அவருக்கு தீனுடைய விளக்கத்தை வழங்குகிறான். நான் பங்கு வைப்பவன் தான். அல்லாஹ் தான்
வழங்குகிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) லீபூறீக்ஷிபூகீபூ ரிசிசிக்ஷிபூவீஷ நீபூலிஞூஹிரி
சீபூபிதூநீபூ பிபூபூரிசிபூழிதூக்ஷீ பூழீபூநீபூரிவீபூரி ளிஷபிக்ஷிபூ நிபூஹிக்ஷிபூரிவீபூரி
னிதூசிபூக்ஷீ பிபூலீஞூ சிபூபிஞூ யுபூசீஞூபிபூநீஞூவீபூரி பூகீஷலிக்ஷிபூ ஜிபூரிபிதூசிதூ
தூஞூவீபு சிரிபூ தூஞூவீபூ சிபூவீஷ க் ழீபூகீஷலிக்ஷிபூ ஜிபூரிபிதூசிதூ தூஞூவீபு னிதூசிபூக்ஷீ
பிபூலீஞூ வீஷழீபூ நிபூஞூபூவீஷ பிதூலீஞூவீஷ
என்னுடைய பேச்சைக் (ஹதீஸ்களைக்) கேட்டு அவற்றை நன்கு மனனம்
செய்து மனதில் பாதுகாத்து வைத்து பின்னர் அவற்றை அது வரை கேட்காத ஒரு நபரிடம் அந்தத்
தகவல்களைக்கூறி ஒப்படைத்துவிடும் அடியாரை அல்லாஹ் செழிப்பாக்கி வைப்பானாக!. (ஏனெனில்)
ஃபிக்ஹை (நபிமொழிகளை மனனம் செய்து) சுமந்து கொண்டிருக்கக் கூடிய எத்தனையோ பேருக்கு
எவ்வித ஃபிக்ஹும் (மார்க்க ஞானமும்) இருப்பதில்லை. (அவர் நபிமொழிகளை மனனம் மட்டும்
தான் செய்து வைத்திருக்கிறார்.) ஃபிக்ஹை மனதில் தாங்கியிருப்பவர்கள் எத்தனையோ பேர்
தங்களை விட அதிக விளக்கமுள்ளவர்களிடம் (கொண்டு போய் சேர்க்கிறார்கள்.) (நூல்;
தாரமீ)
ஹதீஸை அறிவிப்பவர் அதன் கருத்தை முழுமையாக விளங்கியிருக்க
வேண்டிய அவசியமில்லை. அந்த அறிவிப்பாளர் மார்க்க ஞானத்திலும் விளங்கும் திறனிலும் தன்னை
விட மேம்பட்டவர்களிடம் கொண்டு போய் ஒப்படைக்கும் போது அவர்கள் அந்த நபிமொழியின் உண்மையான
கருத்தை விளங்கிக் கொள்வர்கள் என்பதை மேற்கூறப்பட்ட இந்த நபிமொழி உணர்த்துகிறது.
ஹதீஸ்கலை வல்லுணர்களின் நடைமுறை:
சுயமாக நான் ஹதீஸ்படி அமல் செய்கிறேன், என்பதை விட மார்க்க வல்லுணர்கள்
ஹதீஸின் படி எப்படி அமல் செய்தார்களோ அவ்விதம் அமல் செய்வதே மிக உறுதியானதும் பலமானதுமாகும்,
என்று இமாம் மாலிக்
(ரஹ்) அவர்கள் கூறினார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (மிகப் பெரும் ஹதீஸ்
கலை வல்லுணர்.) நபிமொழி ஃபுகஹாக்களைத் தவிர மற்றவர்களுக்கு (மொழிபெயர்ப்பை மட்டும்
பார்ப்பதால்) வழிகெட்டுப்போக காரணமாகிவிடலாம், என்று கூறுகிறார்கள். இப்னு வஹப்
(ரஹ்) அவர்கள், ஒரு லட்சத்து இருபதாயிரம் நபிமொழிகளை கோர்வை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட
ஹதீஸ் கலை வல்லுணரும் கூட எந்த மனிதரிடம் ஹதீஸ்
மட்டும் இருந்து ஃபிக்ஹில் பின்பற்றத் தகுந்த ஒருமுன்மாதிரி இல்லையானால் அவர் வழிகெட்டுப்
போய்விடுவார். எங்களை இமாம் மாலிக், இமாம் லைய்ஸ் (ரஹ்) போன்ற (மார்க்கச் சட்ட வல்லுணர்கள்)
மூலம் அல்லாஹ் (காப்பாற்றிவிட்டான். அப்படி மட்டும்) வழிகெட்டுப் போவதை விட்டும் பாதுகாக்கவில்லையானால்
நாங்கள் வழிகெட்டுப் போயிருப்போம், என்று கூறுகிறார்கள். (இக்திலாஃபெ அயிம்மா அவ்ர் ஹதீஸெ நபவீ)
யாரும் யாரையும் பின்பற்றத் தேவையில்லை. அனைவராலும் மார்க்கத்தை
தாமாக விளங்கிக் கொள்ள முடியுமென்றால் குர்ஆன், ஹதீஸ் கிரந்தங்கள், ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரம்
பற்றிய அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்து, மக்களின் முன் வைத்துவிட்டு இவர்கள்
ஒதுங்கிக்கொள்ளட்டும். இதுவும் கூட அவர்களுடைய விளக்கத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட
மொழிபெயர்ப்பாகத் தான் இருக்கும். இத்தனை வருடங்களாக
இதற்காக மக்களை குழப்பிக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு இந்த வேலையை
செய்திருக்கலாம். இவர்கள் மேடைபோட்டு விளக்கம் சொல்லத் தேவையில்லை. எந்த பத்திரிக்கையும்
நடத்தத் தேவையில்லை. இதை ஏற்றுக்கொள்ள வில்லையானால் மத்ஹபுகள் தேவையில்லை, என்று சொல்லி விட்டு தங்களுடைய
சொந்த மத்ஹபை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மக்களை நிர்பந்திக்கிறார்களா?
ஹதீஸும் தக்லீதும்:
னிதூலீக்ஷிபூ ரிசிசிக்ஷிபூவீபூ சிபூரி யுபூஞூலிதூறீஷ ரிசிஞூநீதூசிஞூபிபூ
ரிலீஞூழிதூபூரிநீரி யுபூலீஞூழிபூதூநீஷவீஷ பிதூலீஞூ ரிசிஞூநீதூலிபூரிஹிதூ ழீபூசிபூரீதூலீஞூ
யுபூஞூலிதூறீஷ ரிசிஞூநீதூசிஞூபிபூ லிதூபூலிஞூறீதூ ரிசிஞூநீஷசிபூபிபூரிஞிதூ ஜிபூழிக்ஷிபூக்ஷீ
னிதூபூரி சிபூபிஞூ யுஷலிஞூதூ நீபூரிசிதூபிரி ரிழிக்ஷிபூஷிபூபூ ரிசிலீக்ஷிபூரிசீஷ கீஷஞிஷழீசீரி
ஸிஷவீக்ஷிபூரிசிரி பூசீஷயிதூசிஷழீரி பூநிபூஞூழிபூழீஞூரி லிதூமீபூயுஞூகீதூ நீதூசிஞூபிபு
பூறீபூசிக்ஷிஷழீரி ழீபூநிபூறீபூசிக்ஷிஷழீரி
நிச்சயமாக அல்லாஹ் அடியார்களிடமிருந்து மார்க்க அறிவை
ஒட்டுமொத்தமாக பறித்துக்கொள்ள மாட்டான். எனினும் மார்க்க வல்லுணர்களை மரணமடையச் செய்வதன்
மூலம் மார்க்க அறிவை (உம்மத்திடமிருந்து) கைப்பற்றிக்கொள்வான். கடைசியாக மார்க்க அறிவு
படைத்த் எந்த ஆலிமும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது மக்கள் மார்க்க அறிவற்றவர்களை
தங்களின் தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் பிரச்சினைகளுக்கு ஃபத்வா கேட்பார்கள்.
எந்த மார்க்க ஞானமுமின்றி ஃபத்வா கொடுப்பார்கள். அவர்களும் வழிகெட்டுப் போவார்கள்.
(மக்களையும்) வழிகெடுத்து விடுவார்கள். (புகாரி)
இந்த நபிமொழியின் மூலம் மக்கள் மார்க்க வல்லுணர்களிடம்
ஃபத்வா கேட்டு அதன்படி செயல் படவேண்டும், என்பதை விளங்க முடிகிறது. இது தான் தக்லீத். எல்லாரும்
அவர்களாக மார்க்கத்தை விளங்கிக் கொள்வார்களென்றால் மக்கள் இவர்களிடம் ஃபத்வா கேட்பார்கள்,
ஃபத்வா கொடுப்பவரும்
வழிகெடுவார். கேட்பவரையும் வழிகெடுத்துவிடுவார், என்று கூறிய நபியவர்கள், மார்க்கத் தீர்வை கேட்டதைப்
பற்றி எதுவும் கூறவில்லை. அஸ்வத் பின் யஜீத்
அவர்கள் கூறுகிறார்கள்: எங்களிடம் மஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஆட்சியராகவும் மார்க்கத்தை
கற்றுக்கொடுப்பவராகவும் ஏமனுக்கு வந்தார்கள். ஒரு மனிதர் இறந்து விட்டார். அவருக்கு
ஒரு மகளும் ஒரு சகோதரியும் வாரிசாக இருந்தார்கள். பாகப்பிரிவினை எப்படி செய்வது?
என்று மஆத் (ரலி) அவர்களிடம்
கேட்டோம். அதற்கவர்கள், மகளுக்கு பாதி சொத்தும் சகோதரிக்கு மீதி பாதி சொத்தும் கொடுக்க
வேண்டும், என்று
நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே தீர்ப்பு செய்தார்கள். (புகாரி- 6237)
மஆத் (ரலி) அவர்களின் ஃபத்வாவுக்கு எந்த ஆதாரத்தையும்
கேட்கவில்லை. இங்கு நபியவர்களின் காலத்திலேயே தக்லீத் நடந்துள்ளது.
தகுந்த மார்க்க ஞானமின்றி யாராவது ஃபத்வா - மார்க்கத்
தீர்ப்பு வழங்கினால் அந்தக் குற்றம் ஃபத்வா கொடுத்தவரையே சாரும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்) ஆதாரத்தை அறியாமல் ஃபத்வா கேட்டு
அமல் செய்வது குற்றமாக இருந்தால் இந்த ஹதீஸில் ஃபத்வா வழங்கியவரை மட்டும் ஏன் பாவி
என்று கூறவேண்டும்? நன்றாக ஆய்வு செய்யாமல் தவறாக சட்டம் சொன்னதால் சொன்னவர் பாவியானது போல் ஆதாரத்தை
உறுதி செய்யாமல் ஃபத்வாவை ஏற்றுக்கொண்டவரையும் பாவி என்று ஏன் சொல்லவில்லை.
ஒரே இமாமைத் தான் பின்பற்ற வேண்டுமா?
1. மதீனாவாசிகள் (ஹஜ்ஜுக்கு வந்திருந்த
போது) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு சட்டத்தைப் பற்றி கேட்டார்கள். அதாவது,
ஒரு பெண்ணுக்கு ஹஜ்ஜில்
கடமையான தவாஃபெ இஃபாளாவைச் செய்த பிறகு மாதவிடாய் வந்துவிடடால் அந்த பெண் (தவாஃபெ விதாஃ)
செய்யாமல் மக்காவிலிருந்து புறப்பட்டு விடலாமா? என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் போகலாம், என்று கூறினார்கள். மதீனாவாசிகள், ஜைதுபின் ஸாபித் (ரலி) (அவர்கள் தவாஃபெ
விதா செய்யாமல் புறப்படக்கூடாது, என்று கூறுகிறார்கள். எனவே) அவர்களுடைய கருத்தை விட்டு விட்டு
உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று கூறிவிட்டனர். (புகாரி)
மற்றொரு அறிவிப்பில் நீங்கள் ஃபத்வா கொடுத்தாலும் சரி
கொடுக்கா விட்டாலும் சரி ஜைது (ரலி) அவர்களுடைய கருத்து தவாஃப் செய்யாமல் செல்லக்கூடாது,
என்பது தான். (ஃபத்ஹுல்
பாரி) இன்னொரு அறிவிப்பில் இப்னு அப்பாஸ் அவர்களே! நாங்கள் உங்களைப் பின்பற்ற மாட்டோம்.
நீங்கள் ஜைதுக்கு மாற்றமாக சட்டம் சொல்கிறீர்கள், என்று கூறினார்கள். அதற்கு இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அப்படியானால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். நான்
சொன்ன சட்டத்திற்கு நபிமொழியை ஆதாரமாகக் கூறுவார்கள், என்று கூறினார்கள் (முஸ்னது அபீதாவூத்)
இந்த நிகழ்ச்சியின் மூலம் இரண்டு விஷயங்கள் விளங்குகிறது.
1. மதீனா வாசிகள்
ஜைதுபின் ஸாபித் (ரலி) அவர்களை தக்லீத் செய்கிறார்கள். அவர்களுக்கு முரணாக மற்றவர்களுடை
ய கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. அதாவது ஒரே இமாமைப் பின்பற்றுகிறார்கள்.
2. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆதாரத்தை
எடுச்சொல்லியும் கூட அதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஜைது (ரலி) அவர்களுடைய மார்க்க
அறிவின் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் நீங்கள் ஜைத் (ரலி) அவர்களை
மட்டும் தக்லீத் செய்து ஷிர்க் செய்து விட்டீர்கள். பாவம் செய்து விட்டீர்கள் என்று
கூறி அவர்களை பாவிகளாக ஆக்கவில்லை. ஆதாரத்தைக் கூறி மீண்டும் அது பற்றி ஜைது (ரலி)
அவர்களிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள், என்ற கருத்துப்படியே பதில் கூறி அனுப்பினார்கள். அவ்வாறே
இந்த மக்கள் மதீனாவுக்கு சென்று இது பற்றி விசாரித்தார்கள். பிறகு ஜைத் (ரலி) அவர்களும்
ஆதாரம் கிடைத்த பின் தங்களுடைய ஃபத்வாவை வாபஸ் பெற்றுக்கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி-
தக்லீத் கீ ஷரயீ ஹைசிய்யத்)
கேள்வி: மதீனாவாசிகள் தக்லீத் செய்தால் உம்முஸுலைமுடைய
ஹதீஸைப் பற்றி ஆய்வு செய்திருக்க மாட்டார்களே?
பதில்: இது தக்லீதைத் தவறாக விளங்கியதால் எழும் கேள்வி.
இல்லையானால் தக்லீத் செய்பவர்கள் ஹதீஸிலிருந்து ஆதாரத்தைத் தேடக்கூடாது, என்று கிடையாது. இமாமைப் பின்பற்றுபவர்கள்
ஒன்றும் கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. நபித்தோழர்களின் காலத்தில் நபிமொழியை நபியவர்களிடம்
நேரடியாகக் கேட்டவர்கள் இருந்தார்கள். எனவே, ஹதீஸைக் கேட்பது மட்டுமே போதுமானது.
அமல் செய்து விடலாம். ஆனால் தற்காலத்தில் அப்படியில்லை.
ஹதீஸ் கிடைத்தால் அது ஆதாரப்பூர்வமானதா? இல்லையா? என்பது பற்றி நீண்ட ஆய்வு
செய்யவேண்டும். அதற்குத் தகுதியுள்ளவர்கள் மட்டுமே செய்யமுடியும், என்பதையும் இந்த இடத்தில்
விளங்க வேண்டும்.
2. அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்களிடம்
சிலர் வந்து ஒரு சட்டத்தைப் பற்றி விளக்கம் கேட்டனர். அதற்குரிய பதிலைக் கூறிவிட்டு
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமும் கேட்டுக்கொள்ளுங்கள், என்று கூறினார்கள். அதன்படி அவர்கள்
இப்னுமஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்ட போது அபூமூஸா (ரலி) அவர்களுக்கு மாற்றமாக சட்டம்
கூறினார்கள். இதை அவர்களிடம் போய் கூறியபோது இந்த மார்க்க அறிவு நிறைந்த அறிஞர் (இப்னு
மஸ்வூத் ரலி) உங்களிடம் இருக்கும் வரை என்னிடம் கேட்காதீர்கள், என்று கூறிவிட்டார்கள். (புகாரி)
இந்த நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில்
நடைபெற்றது. அச்சமயம் கூஃபா நகரில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களை விட வேறொரு பெரிய மார்க்க
வல்லுணர் யாரும் இருக்கவில்லை, எனபதும் குறிப்பிடத்தக்கது. (ஃபத்ஹுல் பாரி) குறிப்பிட்ட ஒரு
நபரிடம் மட்டும் சட்டங்களைக் கேட்டு அமல் செய்வது தவறாக இருந்திருந்தால் நபித்தோழர்
அவ்வாறு செய்திருக்க மாட்டார். அவர்கள் தான் நம்மிடம் மார்க்கத்தைக் கொண்டு வந்து சேர்த்தவர்கள்.
அவர்கள் விளங்கியது தவறு, என்று யாரும் கூறமுடியாது.
3. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபியவர்கள்
யமன் தேசத்திற்கு (ஆட்சியராக) அனுப்பிய போது உங்களிடம் ஏதாவது பிரச்சினைக்கு தீர்வு
கோரப்பட்டால் எப்படி தீர்வு செய்வீர்கள்?, என்று கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அல்லாஹ்வின் வேதத்தைக்
கொண்டு என்றார்கள். நபி (ஸல்): அதில் அதற்கான தீர்வு கிடைக்க வில்லையானால் என்ன செய்வீர்கள்?
முஆத் (ரலி): அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டல்படி.
நபி(ஸல்): அதிலும் தீர்வு கிடைக்க வில்லையானால்?
முஆத்(ரலி): அப்பொழுது என்னுடைய சிந்தனை சக்தியின் மூலம்
(குர்ஆன், சுன்னா
உதவியுடன்) இஜ்திஹாத் - ஆய்வு செய்வேன். அதில் எக்குறைவும் செய்யமாட்டேன். அப்பொழுது
நபியவர்கள் முஆதின் இதயத்தைத் தட்டி, அல்லாஹ்வின் தூதர் விரும்பும் விதத்தில் ரஸுலுல்லாஹ்வின்
தூதருக்கு தௌஃபீக் செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், என்று கூறினார்கள். (திர்மிதீ)
இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட ஒரே இமாமைப் பின்பற்றுவதற்குத்
தெளிவான ஆதாராம். முஆத் (ரலி) அவர்களை யமனுக்கு அனுப்புகிறார்கள். அங்குள்ள மக்கள்
இவர்கள் செய்யும் தீர்வைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பொதுவான உலகப்பிரச்சினையில்
மட்டுமல்ல. மார்க்க ரீதியான எல்லா சட்டங்களிலும் இவர்கள் சொல்வதைத் தான் கேட்கவேண்டும்.
குர்ஆன் சுன்னாவில் நேரடியாக ஒரு சட்டம் கிடைக்க வில்லையானால் அதற்காக ஆய்வு செய்து
முடிவு செய்பவற்றையும் மக்கள் கேட்டு நடக்க வேண்டுமென்பதை நபியவர்கள் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.
மார்க்கம் தெரியாதவர்கள் அறிந்தவர்களிடம் கேட்டு அமல்
செய்யலாம் என்றால் அதற்குத் தகுதியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் கேட்டு அமல் செய்யலாம்
தானே! குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே கேட்டு அமல் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?
உண்மையிலேயே மார்க்கத்தைப் பின்பற்றும் எண்ணத்தில் தகுதியான
மார்க்க வல்லுணர்களின் கருத்துக்களை ஏற்று அமல் செய்வதாக இருந்தால் யாருடைய மத்ஹபைப்
பின்பற்றினாலும் தவறில்லை தான். ஆனால் கால சூழ்நிலை மாறி மக்களிடம் மனோஇச்சைப் படி
நடப்பது பரவலாகிவிட்ட காலத்தில் மத்ஹபுகள் மாறி மாறி அமல் செய்யலாம், என்று கூறவது மார்க்கத்தின்
பார்வையில சரியாகாது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களும் (சில) தொழுகைக்கு
பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நபித்தோழர்கள், ஆடை சிறியதாக இருந்ததால் அதை
தங்களுடைய கழுத்துப் பகுதியில் சேர்த்து கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் பின்வரிசையில்
இருக்கும் பெண்கள் ஸஜ்தாவில் இருந்து மேலே வரும்போது கீழ்வழியாக மறைவிடங்கள் தெரிந்து
விடக்கூடாது, என்பதற்காக ஆண்கள் முழுமையாக எழுந்து அமரும் வரை பெண்கள் யாரும் ஸஜ்தாவில் இருந்து
எழக்கூடாது, என்று அறிவிக்கப்பட்டிருந்தது. (புகாரி) - 1/162)
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே இருக்கிறார். அவருடன் தாமதிக்காமல்
தொடர்ந்து பின்துயர வேண்டும் என்பதும் மற்ற நபிமொழிகளின் மூலம் விளங்க முடிகிறது. ஆனால்
இங்கு ஒரு ஃபித்னாவைத் தடுப்பதற்காக ஆண்கள் எழுந்து உட்கார்ந்த பிறகு (தாமதித்து) எழுந்திருக்கும்
படி நபியவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இமாமை விடத் தாமதிக்கக் கூடாது, என்பதற்காக பெண்களுக்கு,
நீங்கள் ஸஜ்தாவிலிருந்து
உடனே எழுந்து உங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கலாம். ஆனால்
அப்படிச் சொல்லப்படவில்லை. தாமதிக்கக் கூடாது என்றாலும் அப்படி தாமதிக்க வில்லையானால்
ஏதாவது ஃபித்னா ஏற்பட்டு விடும், என்றால் தாமதிப்பது கட்டாயமாகி விடுகிறது.
அவ்வாறே ஒரே இமாமைப் பின்பற்ற வில்லையானால் ஃபித்னா ஏற்பட்டு
விடும் என்றிருக்கும் போது ஒரே இமாமைப் பின்பற்றுவது காட்டாயமாகி விடுகிறது. ஒரே இமாமைப்
பின்பற்ற வில்லையானால் மார்க்கத்தை தங்களுடைய மனோஇச்சைக்கு அடிமையாக்கி விடுவார்கள்,
என்பதற்கு தற்காலத்தில்
ஆதாரம் சொல்லி விளக்க வேண்டியதில்லை.
இன்று ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது என்ற பெயரை வைத்துக்
கொண்டு நாங்களும் ஆய்வாளர் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட மக்களுக்குத் தோதுவாக
மார்க்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஜகாத் விஷயத்தில் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலிருந்து
இன்றுவரை வந்த ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்துக்களையும் புறக்கணிப்பவர்களைப்
பார்க்க வில்லையா?
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதற்குப் பிறகு
உங்களில் யாரிடமாவது பிரச்சினைக்கு தீர்வு கேட்கப்பட்டால் அல்லாஹ்வுடைய வேதத்தில் உள்ளதைக்
கொண்டு தீர்ப்பு செய்யட்டும். அல்லாஹ்வுடைய வேதத்தில் கிடைக்க வில்யைனால் நபியவர்கள்
கொடுத்த தீர்ப்பைக் கொண்டு தீர்வு செய்யட்டும். குர்ஆன், சுன்னாவில் கிடைக்காத ஒரு பிரச்சினை
வந்து விட்டால் (முன்னோர்கள்) நல்லோர்கள் செய்த தீர்வைக் கொண்டு தீர்ப்பு செய்யட்டும்.
இறைவேதம், நபிவழி,
நல்லோர்களின் வழி ஆகிய
எதிலும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லையானால் இஜ்திஹாத் எனும் மார்க்க ஆய்வை மேற்கொள்ளட்டும்.....
(நஸயீ 2/305)
ஆய்வு செய்வதற்கு தகுதியுள்ளவர்களும் கூட குர்ஆன்,
ஹதீஸில் இல்லை. எனவே
நான் என்னுடைய சுயஅறிவைப் பயன்படுத்துவேன், என்று சொல்லக்கூடாது, என்றே இப்னு மஸ்வூத் (ரலி)
அவர்களுடைய இந்த கூற்று உணர்த்துகிறது. முன்னோர்கள் நல்லோர்கள் என்ன தீர்ப்பு செய்திருக்கிறார்கள்?
என்பதை கவனத்தில் கொண்டே
ஆய்வு செய்ய வேண்டும். முன்னோர்கள் யாருக்கும் ஹதீஸ் கிடைக்க வில்லை, எனக்குத் தான் எல்லா ஹதீஸும்
தெரியும், என்று
பெருமையடிப்பவர்களை என்ன சொல்வது? குர்ஆனும் ஹதீஸும் நபியவர்களின் காலத்திலிருந்து நேரடியாக நம்முடைய
கம்ப்யூட்டரில் வந்து குதித்தது போல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
மத்ஹபுகள் உருவாக்கப்பட்டவையல்ல:
நான்கு மத்ஹபுகளும் ஏதோ நாமாக உருவாக்கி வைத்துக் கொண்டது
போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மத்ஹபுகள் உருவாக்கப்பட வில்லை. மார்க்க
வழிகாட்டல்படி வாழ வேண்டும், என்ற சிந்தனை மிகைத்ததன் காரணமாக மத்ஹபுகள் தானாக உருவானவை தான்,.
உருவாக்கப்ட்டவை அல்ல
என்பதற்கு சரித்திரமே சான்றாகும். இன்று சரித்திரத்தை மறைத்து விட்டு மக்களை ஏமாற்றிக்
கொண்டிருக்கின்றனர்.
நபித்தோழர்கள் பல ஊர்களுக்கு பரவிச் சென்றதால் அவர்களுக்குப்
பின் தாபியீன்களுடைய காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் தனி மத்ஹப் உருவானது. ஏறத்தாழ ஜநூறு
மத்ஹபுகள் இருந்ததாக சரித்திரத் தகவல். மத்ஹபுல் ஹஸன் பஸரீ, மத்ஹபு இப்னு ஷுப்ருமா, மத்ஹபுல் அவ்ஜாயீ,
மத்ஹபு சுஃப்யானுஸ்
ஸௌரீ, மத்ஹபு
இஸ்ஹக் பின் ராஹவைஹ், மத்ஹபு இப்றாஹிமுல் கலபீ, மத்ஹபு இப்னு ஜரிர் ஆகிய மத்ஹபுகள் ஆரம்பகாலத்தில் இருந்த மத்ஹபுகளில்
குறிப்பிடத்தக்கவையாகும். காலப்போக்கில் அந்தந்த மக்ஹபுகளில் மாணவர்கள் இல்லாததினாலோ
அவர்களின் தீர்வுகள் எழுத்து மூலம் பாதுகாக்கப் படாததாலோ நான்கைத தவிர மற்றவை இன்று
இல்லாமல் போய்விட்டது. இன்று இவர்கள் தனியாக நாங்கள் ஆய்வு செய்கிறோம் என்ற போர்வையில்
நான்கு மத்ஹபுகளை நானூறு மத்ஹபுகளாக ஆக்க முயற்சிக்கின்றனர்.
நான்கு இமாம்கள்:
1. இமாம் அபூஹனீஃபா (ரஹ்) பிறப்பு - ஹிஜ்ரி
80; இறப்பு
- 150 2. இமாம்
மாலிக் (ரஹ்) பிறப்பு - ஹிஜ்ரி 93; இறப்பு - 179
3. இமாம் ஷாஃபியீ (ரஹ்) பிறப்பு - ஹிஜ்ரி
150; இறப்பு
- 204
4. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) பிறப்பு
- ஹிஜ்ரி 164; இறப்பு - 241
பெரும் ஹதீஸ் கலைவல்லுணர்களும் மார்க்கச் சட்டவல்லுணர்களின்
கருத்துக்களை ஏற்று அமல் செய்திருக்கிறார்கள். வகீஃபின் ஜர்ராஹ் (ரஹ் -வஃபாத் ஹிஜ்ரி
197) அவர்கள்
இமாம் அபூஹனீஃபா அவர்களுடைய மத்ஹபின் படி ஃபத்வா கொடுப்பவர்களாக இருந்தார்கள்.
ஹதீஸ் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்ற யஹ்யா பின் ஸயீதுல்
கத்தான் (ரஹ்) அவர்கள் (வஃபாத் -198) இமாம் அபூஹனீஃபா அவர்களுடைய மத்ஹபின் படி ஃபத்வா கொடுப்பார்கள்.
அபூஹனீஃபா (ரஹ்) அவர்களுடைய கருத்துக்களை விட அழகான கருத்தை நாம் கேட்டதில்லை. அவர்கள்
கூறிய அதிகமான கருத்துக்களை நாம் ஏற்றிருக்கிறோம், என்றும் கூறினார்கள்.
யஹ்யப்னு முஈன் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் அறிவிப்பாளர்களைப்
பற்றி கருத்து சொல்லும் தகுதி பெற்ற மாபெரும் மேதை. அப்படிப்பட்ட மாமேதையும் கூட இமாம்
அபூஹனீஃபாவுடைய ஃபிக்ஹ் தான் ஃபிக்ஹ், மக்களையும் அவர்களுடைய மத்ஹபின் படி அமல் செய்பவர்களாகவே
பெற்றுக்கொண்டேன், என்று கூறுவார்கள். (நூல்-அல்ஜாவாஹிருல் முளீஆ ஃபீதபகாதில் ஹனஃபிய்யா, தாயிஃபயெ மன்சூரா) )
நான்கு மத்ஹபுகள் மட்டும் தானா?:
தகுதியுள்ள எந்த இமாமையும் பின்பற்றலாம் தானே?
இந்த நான்கு இமாம்களை
மட்டும் தான் பின்ப்றற வேண்டுமா? அவர்களை விடச்சிறந்த நபித்தோழர்களை ஏன் பின்பற்றக்கூடாது?,
போன்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த நான்கு மத்ஹபுகளை மட்டுமே பின்பற்றும் நடைமுறை ஏறத்தாழ
ஹிஜ்ரி 400 ஆம்
ஆண்டுகளில் ஆரம்பமானதாக சரித்திரம் மூலம் அறியமுடிகிறது. அதற்கு முன்பு தக்லீத் நடைமுறையில்
இருந்தாலும் இந்த நான்கு இமாம்களை மட்டுமே பின்பற்றும் நடைமுறை இருக்கவில்லை. அதே சமயம்
இந்த நான்கைத் தான் பின்பற்ற வேண்டும், என்பதின் கருத்து ஆரம்ப காலத்தில் இருந்த மற்ற மத்ஹபுகளெல்லாம்
தவறானவை என்பதல்ல. எல்லாரும் கூடி எல்லா மத்ஹபையும் விட்டுவிட வேண்டும், என்று ஒன்றுபட்ட முடிவு ஒன்றும்
செய்யப்படவில்லை. எனினும் மக்களுக்கு பின்பற்றும் விதமாக இந்த நான்கு மத்ஹபுகள் நிறைவான
முறையில் இருந்தன. எனவே, பின்பற்றினார்கள்.
நான்கு இமாம்களுடைய மாணவர்கள் அவர்களுடைய மாணவர்கள்,
மாணவர்களுடைய மாணவர்கள்
என தொன்றுதொட்டு வந்தனர். அவர்கள் அந்தந்த இமாம்களின் மத்ஹபை மக்களிடம் பரவலாக்கினர்.
அந்தந்த மத்ஹபில் தோன்றிய மார்க்க ஆய்வாளர்கள் மத்ஹபின் சட்டங்களை முறைப்படுத்தினர்.
அந்த சட்டங்களுக்கான ஆதாரங்களை ஒன்று திரட்டினர். ஒவ்வொரு இமாமின் அடிப்படைச் சட்டங்கள்
தொகுக்கப் பட்டிருந்தன. அந்த சட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு காலத்திலும் வந்த வல்லுணர்கள்
அந்தந்த காலத்தில் தோன்றும் புதிய புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். வாழ்க்கையில்
தோன்றும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் படியாக அடிப்படைச் சட்டங்களும் பிரிவுச்
சட்டங்களும் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
அந்த இமாம்கள் தொகுத்த சட்டங்கள் உண்மையிலேயே அவர்களுடையது
தான் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கின்றன. வாழ்வியல் தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும்
ஏராளமான பிரிவுச் சட்டங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. ஹதீஸில் வந்துள்ளதா?
இமாம் அபூஹனீஃபாவைப் பின்பற்றுங்கள்! ஷாஃபியீ இமாமைப்
பின்பற்றுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? ஹதீஸில் வ்நதுள்ளதா? என்று கேட்பது மடத்தனமான கேள்வி.
பிற்காலத்தில் புகாரி, முஸ்லிம் தோன்றி நபிமொழிகளைத் தொகுப்பார்கள். அதைப் பார்த்து அமல் செய்யுங்கள்!
என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளதா?, அல்லாஹ் பிச்சைக்கு தொழுகை கடமை என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா?
என்றும் கேட்கலாம்.
இது போன்ற கேள்வியைத் தான் நம்மிடம் கேட்கிறார்கள்.
குர்ஆன், ஹதீஸில் மாற்றுக் கருத்துக்கிடமின்றி தெளிவாக கூறப்படாத
விஷயங்களில் அந்த இமாம்களின் தீர்வை எடுத்து நடக்கிறோம். அதற்குரிய தகுதிகள் அவர்களிடம்
இருக்கின்றன. எனவே அவர்களைப் பின்பற்றுகிறோம். இங்கே பெயர் நோக்கமல்ல; தரமும் தகுதியும் தான் முக்கியம்.
அப்படிப்பட்ட தகுதியுள்ளவர்களிடம் கேட்க வேண்டுமென்பது குர்ஆனுடைய கட்டளை. பூரிசீஞூநிபூசிஷழீரி நிபூவீஞூசிபூ ரிசிக்ஷிதூரீஞூகீதூ
னிதூலீஞூ ரீஷலீஞூழிஷபிஞூ சிபூரி ழிபூநீஞூசிபூபிஷழீலீபூ
Can i get the number of this hadhees
ReplyDeleteமுஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு (ஆட்சியராக) அனுப்பிய போது உங்களிடம் ஏதாவது பிரச்சினைக்கு தீர்வு கோரப்பட்டால் எப்படி தீர்வு செய்வீர்கள்?, என்று கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு என்றார்கள். நபி (ஸல்): அதில் அதற்கான தீர்வு கிடைக்க வில்லையானால் என்ன செய்வீர்கள்?
முஆத் (ரலி): அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டல்படி.
நபி(ஸல்): அதிலும் தீர்வு கிடைக்க வில்லையானால்?
முஆத்(ரலி): அப்பொழுது என்னுடைய சிந்தனை சக்தியின் மூலம் (குர்ஆன், சுன்னா உதவியுடன்) இஜ்திஹாத் - ஆய்வு செய்வேன். அதில் எக்குறைவும் செய்யமாட்டேன். அப்பொழுது நபியவர்கள் முஆதின் இதயத்தைத் தட்டி, அல்லாஹ்வின் தூதர் விரும்பும் விதத்தில் ரஸுலுல்லாஹ்வின் தூதருக்கு தௌஃபீக் செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், என்று கூறினார்கள். (திர்மிதீ)