முஸ்லிம் என்றால் அவனுடைய ஒவ்வொரு காரியத்திலும் இஸ்லாத்தின்
தனித்தன்மை பளிச்சிட வேண்டும். ஏன்? அவனுடைய பேச்சில் கூட இஸ்லாமியம் தொணிக்க வேண்டும். அதற்காக
நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு சின்னச்சின்ன விஷயத்திலும் பயிற்சி கொடுத்தார்கள்.
மக்கள் நடைமுறையா? மார்க்க நடைமுறையா?:
ஐந்து நேரத் தொழுகைகளில் கடைசியாக தொழப்படும் தொழுகைக்கு
குர்ஆனில் இஷா என்று பெயரிடப்பட்டுள்ளது. எனினும், கிராமவாசிகள் இரவில் நன்றாக இருட்டிய
பின் ஒட்டகத்தில் பால் கறப்பார்கள். எனவே, அதே அர்த்தத்தில் இஷா தொழுகைக்கு அத்தமா தொழுகை என்று
சொல்லி பழகி விட்டார்க்ள. எனினும் நபியவர்கள் “இந்த கிராமாவாசிகள் உங்களுடைய தொழுகையின்
பேரில் உங்களை மிகைத்து விடவேண்டாம். அதன் பெயர் (அத்தமா தொழுகை இல்லை) இஷா தொழுகை
தான்” என்று
கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
இப்படி தொழுகையின் பேரை உச்சரிப்பதில் கூட மக்கள் பழகிய
பேரைக் கூறாமல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பெயர் தான் உச்சரிக்கப் படவேண்டும்,
என்பதில் கவனமாக இருந்தார்கள்.
பேசும் வார்த்தையிலேயே மாற்று மதக் கலாச்சாரமல்ல, மக்களின் நடைமுறைக் கலாச்சாரத்தை விட
இஸ்லாமியக் கலாச்சாரத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றிருக்கும்
போது மற்ற காரியங்களைப் பற்றி என்ன பேச வேண்டியிருக்கிறது?
நாட்டுப் பழக்கமா? நபிகளாரின் பழக்கமா?:
இஸ்லாம் வருவதற்கு முன்பு மௌட்டீக காலத்தில திருமண வைபவங்களில்
மணமக்களை வாழ்த்தும் போது “பிர்ரிஃபாயி வல்பனீன்” இரண்டு பேருக்கும் மத்தியில் ஒட்டும்
உறவும் உண்டாகட்டும். ஆண்குழந்தைகள் பிறக்கட்டும், என்று நாங்கள் வாழ்த்திக் கொண்டிருந்தோம்.
எப்பொழுது இஸ்லாம் வந்ததோ எங்களுடைய நபி “பாரகல்லாஹு லக்கும் வபாரக
ஃபீகும் வபாரக அலைக்கும்” என்று கற்றுக்கொடுத்தார்கள், என்று பனூதமீம் என்ற கோத்திரத்தைச்
சார்ந்த ஒருவர் கூறுகிறார். (ஃபத்ஹுல் பாரீ)
நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது “பிர்ரிஃபாயி வல்பனீன்”
என்று (மக்கள்) சொல்லும்
இடத்தில் துஆ செய்தால் “பாரகல்லாஹு லக்க வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்”
என்று கூறுவார்கள்.
(திர்மிதீ) “பிர்ரிஃபாயி வல்பனீன்” என்ற வார்த்தை (பெண் குழந்தையை வெறுக்காமல் கூறினால்) அர்த்த்தைக்
கவனித்து எந்தத் தவறும் இல்லை. ஆனாலும் இஸ்லாமியம தொணிக்க வில்லை. மொட்டீக காலத்தில்
அப்படி கூறியிருக்கலாம். ஆனால் இஸ்லாம் வந்த பின் அதை விடச் சிறந்த வார்த்தையை தேர்ந்தெடுத்து
தந்திருக்கும் போது அதை விட்டு விட்டு ஊர் பழக்கம், நாட்டுப் பழக்கம் என்று சொல்லிக் கொண்டு
சுன்னத்தை விட்டு விட முடியாது.
எனவே தான், அகீல் பின் அபீதாலிப் (ரலி) திருமணம் முடித்த போது அவரிடம் “பிர்ரிஃபாயி வல்பனீன்”
என்று கூறி வாழ்த்தப்பட்டது.
அப்பொழது அகீல் (ரலி) அவர்கள் இவ்வாறு சொல்லாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப்
போன்று சொல்லுங்கள்!, என்று தடுத்தார்கள்.
பெருநாட்கள் இரண்டு தான்:
மதநல்லிணக்கம் என்பது மாற்று மதத்தார்களின் மத ஆலயங்களுக்கு
செல்ல வேண்டுமென்பதோ அவர்களுடைய திருவிழாக்களில் பங்கெடுக்க வேண்டுமென்பதோ அவர்களுடைய
கடவுளர்களுக்கு மாலை அணிவிக்க வேண்டுமென்பதோ அவர்களுடைய பண்டிகைகளை நாமும் கொண்டாட
வேண்டுமென்பதோ கிடையாது. மாற்று மதத்தார்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்ளவேண்டுமென்று
இஸ்லாத்தைப் போல் எந்த மதமும் சொல்லியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல, அதன் படி நடந்து காட்டிய சரித்திரமும்
நம்மிடம் இருக்கிறது.
அவ்வாறே பண்டிகை விஷயத்திலும் மார்க்கம் தெளிவான வழிகாட்டலைத்
தந்திருக்கிறது. இஸ்லாத்திற்கு முன்பு இருந்த பண்டிகைகள் இஸ்லாம் வந்த பிறகு முஸ்லிம்களுக்கு
அவை தடை செய்யப்பட்டு விட்டன. முஸ்லிம்களுக்கு இரண்டே பெருநாள் தான். அதைத் தவிர வேறொரு
பண்டிகை கிடையாது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் இரண்டு பண்டிகைகளில்
விளையாடி அந்நாட்களை கொண்டாடினார்கள். அவ்விரண்டு நாளும் பகல் இரவு சமமாக இருக்கும்
நாட்களாக இருந்தன. (மார்ச்-21, செப்டம்பர்-23) நயிரோஜ், மெஹர்ஜான் என்று அவ்விரண்டு நாட்களுக்கும் சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்களைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் ஜாஹிலிய்யா - மொட்டீக
காலத்தில் இந்நாட்களில் விளையாடுவோம், என்று மக்கள் கூறினர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள்,
அல்லாஹ் உஙகளுக்கு அவற்றை
விடச் சிறந்த இரண்டு நாட்களை மாற்றித் தந்திருக்கிறான். அவை, “நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப்
பெருநாளும்” என்று கூறினார்கள். (அபூதாவூத்)
மதநல்லிணக்கமா? இறைநிராகரிப்பா?:
மொகலாய மன்னர்களில் ஒருவரான அக்பர் மத நல்லிணக்கம் என்ற
பெயரில் இஸ்லாத்திற்கு முரணான புதிய மதத்தைத் தோற்றுவித்தார். அதற்கு தீனெ இலாஹி என்று
அவர் பெயரிட்டுக்கொண்டார். தீபாவளி, ஹோலி, தசரா போன்ற பண்டிகைகளை முஸ்லிம்களும் கொண்டாட வேண்டும்,
என்பது அந்த மதத்தின்
ஒர் அங்கம். அதன் விளைவாக முஸ்லிம்களுடைய கொள்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இறுதியில்
முஜத்தித் அல்ஃபெதானீ அவர்களுடைய புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாகத்தான்
இந்திய முஸ்லிம்களின் இஸ்லாமியம் பாதுகாக்கப்பட்டது. (நூல்: ரவாதாரி அவ்ர் மக்ரிப்)
மத ரீதியான பண்டிகைகளை அந்தந்த மதத்தவர்கள் தான் கொண்டாட
வேண்டும். இஸ்லாமிய கலச்சாரத்தை மற்றவர்கள் எடுத்து நடந்தால் முஸ்லிம்கள் வரவேற்பார்கள்.
அதே போல் மற்ற மதக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் எடுத்து நடந்தால் அந்த மதத்தவர்கள் அதை
சந்தோஷமாக வரவேற்கலாம். இது அவரவர்களின் விருப்பம்.
அதே சமயம் முஸ்லிம்கள் இஸ்லாமியக்
கொள்கைக்கு முரணான மாற்று மதக் கலாச்சாரத்தை எடுத்து நடக்கலாமா? என்பதை இஸ்லாம் தான் முடிவு
செய்ய வேண்டும்.
ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்றவை மதம் சார்ந்த பண்டிகைகள். பொங்கல் அன்று
பொங்க வைத்து முஸ்லிம்கள் சூரியனை கும்பிட முடியுமா? உலகில் ஓரிறைக் கொள்கைக்கு முரணாக
சூரியனும் வணங்கப்படுவதால் சூரியன் உதயமாகும் போதும் மறையும் போதும் உச்சியில் இருக்கும்
போதும் முஸ்லிம்கள் தொழவும் கூடாது, என்று வலியுறுத்தப் பட்டிருக்கும் போது அவர்களுடைய பண்டிகையிலேயே
எப்படி பங்கெடுத்துக் கொள்ள முடியும்?
மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளின் போது முஸ்லிம்களும்
மற்ற நாட்களில் இல்லாத உணவு வகைக்கு ஏற்பாடு செய்தால் நம்முடைய கொள்கையை எங்கு அடகு
வைத்து விட்டோம். மாற்று மதத்தவர்கள் கண்ணியப் படுத்துவது போல் முஸ்லிம்களும் அந்நாளை
கண்ணியப் படுத்தும் விதமாக, மற்ற நாட்களில் வாங்காத ஒரு பொருளை (மதிய உணவுக்காகவோ அல்லது மற்றதற்காகவோ) வாங்கினால் அல்லது மற்றவர்களுக்கு
ஏதாவது ஹதியா கொடுத்தால் அவர் காஃபிராகி விட்டார். ஏகத்துவக் கொள்கைக்கு முரணõன்றி அந்நாளை கண்ணியப் படுத்தும்
எண்ணமின்றி ருசõயாக சாப்பிடும் எண்ணத்தில் வாங்கினாலோ அல்லது பழக்கப்படி ஹதியா கொடுத்துக் கொண்டாலோ
அவர் காஃபிராக மாட்டார் எனறாலும் அதுவும் மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாக இருப்பதால்
அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும், என்று அபுல் மஹாஸினுல் ஹனஃபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: மிர்காத் ஷரஹுல் மிஷ்காத் 3/543)
முஸ்லிம்களும் வெடிக்கலாச்சாரமும்:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு எதுவும்
இல்லை, என்பது
இஸ்லாத்தின் அழுத்தமான கொள்கை. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மற்றும் உயிரினங்கள் உட்பட அனைத்தும் அல்லாஹ்வின் பட்ைபபுக்கள்
தான்.
மதநல்லிணக்கம் என்ற பெயரால் கொள்கையில சமரசம் செய்து கொள்ளமுடியாது. ஆயுத பூஜை
அன்று முஸ்லிம்களும் பொரி வைத்து துஆ ஓத முடியுமா? தீபாவளியன்று முஸ்லிம்கள் வெடி வெடித்தால்
(காசை கரியாக்குவதால் பொருளாதார நஷ்டம், சுற்றுச் சூழல் மாசுபடுவது, உயிருக்கு ஆபத்து போன்றவையெல்லாம்
ஒரு பக்கம் இருக்கட்டும்) அது இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கைக்கு முரணில்லையா?
தமிழகத்தின் சில பகுதிகளில்
முழுக்க மழுக்க இறைப் பெருமையையும் ஏகத்துவத்தையும் தியாக உணர்வையும் வெளிப்படுத்த
வேண்டிய இரு பெருநாட்களிலும் கூட முஸ்லிம்கள் வெடி வெப்பதிலும் வான வேடிக்கைகளை நிகழ்த்துவதிலும்
ஈடுபடுடுகின்றனர். முஸ்லிம்கள் இதைத் தான் பெருநாள் கொண்டாட்டமாக கருதி விட்டார்களா? முஸ்லிம்களிடம் இந்த வெடிக் கலாச்சாரம் எப்படி வந்து நுழைந்தது?
பெற்றோர்கள் தங்களுடைய
பிள்ளைகளை சந்தோஷப்படுத்துவதற்காக வெடிபொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள்,
என்றால் அல்லாஹ்,
ரஸுலுடைய கோபத்தை சம்பாதித்து
விட்டு பிள்ளைகளை சந்தோஷப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது? மார்க்க நடைமுறைகளை பிள்ளைகளுக்கு
அறிமுகப் படுத்த வேண்டிய நாம் மாற்றார்களின் நடைமுறைகளை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும்.
நம்முடைய மதத்தை விற்பதற்குப் பெயர் மதநல்லிணக்கமல்ல; அவர்களுடைய பண்டிகைகளை நாம் கண்டிப்ப்ாக
குறை கூறவில்லை. குறை கூறவும் கூடாது. அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக்கொண்டிருப்போரை
(கடவுளர்களை) நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக விரோதத்தினால்
அல்லாஹ்வைத் திட்டுவார்கள். (அல்குர்ஆன்- 6:108) அதற்காத அவற்றையே நாமும் செய்ய வேண்டுமென்றால் நம்மை ஏன் முஸ்லிம்
என்று சொல்லிக் கொள்ள வேண்டும்?
இந்தியா ஆங்கிலேயர்களின் கைகளில் அடிமைப்பட்டுக் கிடந்த
போது விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றன.
நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்களும் ஹிந்துக்களும் கூட்டாக பாடூபட வேண்டுமென்பதற்காக
சில சமயம் முஸ்லிம்கள் தங்களுடைய கொள்கையையும் கூட விட்டுவிட்டார்கள். சிலர் அஸ்ஸலாமு
அலைக்கும் என்று சொல்வதற்குப் பதிலாக நமஸ்தே அலைக்கும், வஅலைக்கும் நமஸ்தே என்று சொல்ல ஆரம்பித்து
விட்டனர். (நூல்: ரவாதாரி அவ்ர் மக்ரிப்)
முஸ்லிம்கள் மதநல்லிணக்கம், ஒற்றுமை என்ற பெயரில் மார்க்கக்
கொள்கைகள் விஷயத்தில் வரம்பு மீறி நடந்தனர். ஆனால் இன்று விடுதலைப் போரட்டத்தில் பங்கெடுத்துக்
கொண்ட முஸ்லிம்களின் பெயர்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
மதநல்லிணக்கத்தின் முன்மாதிரி:
மதநல்லிணக்கம் என்பது நம்முடைய கொள்கையில் நாம் உறுதியாக
இருந்து கொண்டு மற்றவர்களுடைய கொள்கைகளை நாம் சகித்துக் கொள்வதும் அவர்களுடைய மத விவகாரங்களில்
நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.
ஒரு நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அந்நாட்டில் மாற்று மதத்தவர்களும் வாழ்கிறார்கள். அவர்களுடைய மதத்தில் சாராயம் சாப்பிட்டுக்
கொள்ளலாம், என்றிருந்தால் அவர்களை சாராயம் குடிக்கக் கூடாது, என்று தடுக்க முடியாது. இஸ்லாத்தில்
சாராயம் குடிப்பது ஹராம். தடுக்கப்பட்டுள்ளது, என்பதற்காக நாட்டின் மாற்று மத பிரஜைகளும்
குடிக்கக் கூடாது, என்று சொல்வதற்கு இஸ்லாமிய அரசுக்கு உரிமை கிடையாது. (கிதாபுல் ஃபதாவா 1/308)
உடல் நலத்திற்குக் கேடு
போன்ற காரணங்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கை அமுல்படுத்தினால் அது வேறு விஷயம்.
“லாஇக்ராஹ ஃபித்தீன்” மார்க்கத்தில் எந்த நிர்ப்நதமுமில்லை,
என்று குர்ஆன் பகிரங்கமாக
அறிவிக்கிறது. யாரையும் நிர்பந்தப்படுத்தி முஸ்லிமாக்கக் கூடாது, என்ற இறைச்சட்டத்தை ஒவ்வொரு
இஸ்லாமிய ஆட்சியாளர்களும் கடைபிடித்து வந்தனர். சர் அருனால்ட் என்ற ஆய்வாளர் ல்ழ்ங்ஹஸ்ரீட்ண்ய்ஞ்
ர்ச் ண்ள்ப்ஹம் என்ற தம்முடைய நூலில் இஸ்லாம் நற்குணத்தால் தான் பரவியது, என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.
(உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில்) ஒரு வயது முதிர்ந்த யூதர் யாசகம் கேட்பதைக்
கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய வாலிபத்தை பயன்படுத்தி விட்டு வயோதிபத்தில்
சுற்றித் திரிய விட்டுவிடக்கூடாது என்பதற்காக பொதுநிதியத்திலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது.
கஃபா மஃமூனுடைய
அரசவையில் முஸ்லிம்களுக்கும் கிருத்தவப் பாதரியாருக்கும் மத்தியில் விவாதம் நடந்தது.
இறுதியில் பாதிரியார் தோற்றுப்போனார். கஃபா பாதிரியிடம், இப்பொழது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
என்று கேட்டார். அதற்கவர்,
நிர்பந்தமாகவா?
என் விருப்பப்படியா?
என்று கேட்டார். இல்லை,
“உங்கள் விருப்பப்படி”
என்று கஃபா கூறினார். அதற்கவர் மறுத்துவிட்டார். அவருடைய தங்குமிடத்திற்கு அனுப்பி வைக்கும் போது
யாரும் தாக்கி விடக்கூடாது, என்பதற்காக இராணுவ பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார், கஃபா. (நம்மிடத்தில் சமாதான ஒப்பந்தம்
செய்த) முஸ்லிமல்லாதவருக்கு ஒரு முஸ்லிம் அநியாயம் செய்தால் நான் அல்லாஹ்வுக்கு முன்
அந்த முஸ்லிமல்லாதவருக்காக வாதாடுவேன், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ரவாதாரீ
அவர் மக்ரிப்) “எந்த சமூகத்தவரின் விரோதமும் நீங்கள்
(அவர்களிடம்) நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களை கண்டிப்பாக தூண்டிவிடக் கூடாது.
(எவ்வளவு விரோதமிருந்தாலும்) நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்பது குர்ஆனுடைய கட்டளை.
5:8)
எனவே,
மற்ற மதத்தவர்களிடம்
மனிதாபிமானத்துடனும் நீதத்துடனும் நடந்து கொள்ள வேண்டும், என்பதே மார்க்கத்தின் நிலைப்பாடு.
அதற்காக இஸ்லாத்தின் தனித்தன்மையையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் விட்டுவிடக்கூடாது,
என்பதில் மாற்றுக் கருத்து
இருக்க முடியாது.
பண்டிகைகளின் பண்டங்கள்:
அசைவ உணவு வகைகள் (சிலவற்றைத் தவிர) அல்லாஹ்வின் பெயர்
சொல்லி அறுக்கப் பட்டதாக இருந்தால் தான் முஸ்லிம்கள் அதை சாப்பிட முடியும். அவை தவிர
மற்ற பழங்கள், காய்கறி போன்றவற்றை மாற்று மதத்தவர்கள் நம்ககு கொடுத்தாலும் அவற்றைச் சாப்பிடலாம்.
அந்த அளவுக்கு இஸ்லாம் தாராளமாக நடந்து கொள்கிறது. மாற்று மதத்தவர்களின் உணவு என்பதற்காக
அதை வெறுக்க வேண்டிய அவசியமில்லை.
அதே சமயம் ஓரிறைக் கொள்கைக்கு முரணான எதையும் இஸ்லாம்
அனுமதிக்காது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் மாற்று மதத்தவர்கள் ஏதாவது உணவுப்
பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தால் பூஜிக்கப்பட்ட பிரசாதமாக இருந்தால் அதை நாம் சாப்பிடக்கூடாது.
(பெரும்பாலும் அந்த பண்டங்களை நமக்குத் தரமாட்டார்கள்.) அவர்கள் தங்களுடைய வீட்டில்
செய்த (பூஜிக்கப்படாத) பண்டங்களை கொடுத்தால் (அது நம்முடைய மார்க்கத்திலும ஹலாலாக இருக்கும்
பட்சத்தில்) வாங்கி சாப்பிடுவதில் தவறில்லை. (கிதாபுல் ஃபதாவா - 1/303)
ஒரு தடவை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மாற்று மத செவிலித்தாய்மார்கள்
எங்களிடம இருக்கிறார்கள். அவர்களுடைய பண்டிகை தினங்களிலெல்லாம் எங்களுக்கு ஏதாவது ஹதியா
கொடுக்கிறார்கள். நாங்கள் அதைச் சாப்பிடலாமா? என்று ஒரு பெண்மணி கேட்டார்கள். அதற்கு
ஆயிஷா (ரலி) அவர்கள் “அந்த நாளுக்காக (பண்டிகை தினத்திற்காக) அறுக்கப்பட்டதை சாப்பிடாதீர்கள். எனினும்
அவர்களுடைய மரங்களிலிருந்து (பழங்களைக் கொடுத்தால்) சாப்பிட்டுக் கொள்ளுங்கள்!”,
என்று கூறினார்கள்.
(நூல்: தஃப்ஸீருல் குர்துபீ- 2/224)
No comments:
Post a Comment