குர்ஆன் சொல்லும் பெருவெடிப்பு big bang
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாகக்
கொண்டாடுகிறோம். இந்த கட்டுரையைப் படிக்கும் போது அந்த தினம் முடிந்திருக்கும். எனினும்,
குர்ஆனிய அறிவியல் தொடர்பான
சில செய்திகளையும் அறிந்து கொள்வோம். சூரியன், சந்திரன், பூமி இவற்றைப் பற்றி அறியாதவர் இந்த
பூமியில் இருக்கமுடியாது. நாம் வாழக்கூடிய வீடு, சென்னையில் உள்ள ஒரு பகுதியின் வீதியில்
உள்ளது. சென்னை தமிழத்தின் ஒரு மாவட்டம். தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம். இந்தியா
ஆசியாக் கண்டத்தின் ஒரு நாடு. ஆசியா உலகின் ஏழு கண்டங்களில் ஒரு கண்டம். ஏழு கண்டங்களையும
சேர்த்து பூமியின் கால்பகுதி கூட இருக்காது. இந்த பிரபஞ்சத்தில் பூமி முழுவதும சேர்ந்தாலும்
அது பூமியில் நம்முடைய வீடு அளவுக்குக் கூட இருக்காது. இந்த இந்த பூமி சூரியனை மையமாக
வைத்து சுற்றிவரக் கூடிய ஒன்பது - இல்லை- எட்டு கோள்களில் ஒன்று. நாம் பார்க்கக்கூடிய
சூரியன் இரவில் நம் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்களைப் போல ஒரு நட்சத்திரம் தான்.
மற்ற நட்சத்திரங்களை விட சூரிய நட்சத்திரம் நமக்கு நெருக்கமாக இருப்பதால் வட்டமாகவும்
பெரிதாகவும் தெரிகிறது. இது போன்ற கோடானு கோடி நட்சத்திரங்கள் சேர்ந்தது தான் ஒரு கேலக்ஸி.
நம்முடைய சூரியன் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்திற்கு பால்வழி மண்டலம் மில்கீ வே என்று சொல்லப்படும். இது போல் இந்த பிரபஞ்சத்தில்
600 மில்லியனுக்கும்
அதிகமான கேலக்ஸிகள் உள்ளன. ஒவ்வொரு கேலக்ஸியிலும் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள்
இருக்கும். அப்படியானால், இந்த பூமியில் வாழும் நாமும் நம்முடைய பங்களாவும் எவ்வளவு பெரியது?
என்பதை சிந்தித்துக்
கொள்ளுங்கள். எண்ணலடங்காத கேலக்ஸிகள் கொண்ட விரிவான அதே சமயம் வினோதம் நிறைந்த இந்த
நம்முடைய பிரபஞ்சம் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு நொடியில் அணுவினும் சிறிய
ஒன்றிலிருந்து பெருவெடிப்பினால் தோன்றியிருக்கும், என்று அறிவியல் கொள்கை கூறுகிறது.
மொத்தத்தில் நாம் பார்க்கும் படைப்புகள் அனைத்தும் ஆரம்பத்தில் ஏதோ ஒன்றிலிருந்து வெடித்துச்
சிதறியதன் மூலம் உண்டாகியிருக்கின்றன. இது பற்றி குர்ஆனில் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா?
என்று பார்ப்போம். பிக்பேங்க்:
குல்அவூது பிரப்பில் ஃபலக். மின்ஷர்ரி மாகலக்.... - (இருட்டிலிருந்து
வெடித்து வரும்) அதிகாலையின் இரட்சகனைக் கொண்டு, அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து
பாதுகாவல் தேடுகிறேன், என்று நபியே நீர்கூறுவீராக!
ஃபலக் என்ற சொல் ஃபல்க்- திடீரென பிளக்குதல், வெடித்தல் என்ற வேர்ச்சொல்லிலிருந்து
வந்த வார்த்தை. அதாவது ஒரு மாபெரும் வெடிப்பின் (க்ஷஐழு க்ஷஹசூழு) மூலம் வெளியானவை
என்பதே இந்த வார்த்தையின் பொருள். எனினும் பயமுறுத்தக்கூடிய இருளிலிருந்து வெடித்துக்
கொண்டு பகல் வருவதால் நடைமுறையில் ஃபலக் என்ற வார்த்தைக்கு காலை - சுபுஹ் நேரம் என்று
தஃப்ஸீர்களில் பரவலாக கூறப்பட்டுள்ளது. இல்லையானால் ஃபல்க் என்ற வார்த்தை எல்லா வகையான
வெடிப்புக்கும் சொல்லப்படும். இமாம் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள், ஃபலக், என்ற வார்த்தை முழு படைப்பையும் உள்ளடக்கிக்
கொள்ளும், என்று
கூறியுள்ளார்கள். (தஃப்ஸீருல் குர்துபீ) பிக் பேங்க் பற்றி தஃப்ஸீரில்:
அல்லாஹ் (மற்றொன்றிலிருந்து) எதையெல்லாம் பிளந்தெடுக்கிறானோ
அவையனைத்தையும் ஃபலக் என்ற வார்த்தை உள்ளடக்கிக் கொள்ளும், என்று தஃப்ஸீர் ராஜியில் கூறப்பட்டுள்ளது.
இவ்விளக்கத்தைக் கூறிய இமாம் ராஸீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்: நீ படைப்புகளை
சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் அதிகமானவை வெடிப்பின் மூலம் தான் வெளியாகியிருக்கும்,
என்பது மட்டுமல்ல,
ஆரம்பத்தில் இல்லாமை
என்ற இருட்டுக் கடலை படைத்தல் - உண்டாக்குதல், என்ற பிரகாசத்தைக் கொண்டு வெடிக்கச்
செய்தான். இந்த கருத்தே மிகவும் பொருத்தமானது., (தஃப்ஸீர் ராஜி - 11/372)
இன்றைய விஞ்ஞான ஆய்வுகளும் இக்கருத்தையே நரூபிக்கின்றன.
பிக்பேங்க் எனும் மகா வெடிப்பு ஒரு சூன்யமில்லாத சூன்யத்திலிருந்து மிகப் பெரிய சக்தி
வெடித்துச் சிதறி இந்த பிரபஞ்சம் படிப்படியாக உருவானது, என்று விஞ்ஞானம் கூறுகிறது. பாதுகாப்பு
தேடுங்கள்:
மாபெரும் வெடிப்பின் மூலம் சிதறி ஓடிக்கொண்டிருக்கும்
இந்த அனைத்து படைப்புகளுக்கும் இரட்சதகன் நான் தான். என்னுடைய கட்டளையின் மூலம் தான்
இந்த பெருவெடிப்பு நடந்தது. இருட்டைப் பிளந்து பகல் வெளியாவதும் என்னுடைய கட்டளையால்
தான். தரையைப் பிளந்து மரம் வெளியாவதும் என்னுடய கட்டளையால் தான். மேகத்தைப் பிளந்து
கொண்டு மழை கொட்டுவதும் என்னுடைய கட்டளையால் தான். பாறையைப் பிளந்து தண்ணீர் வெளியாவதும்
என்னுடைய கட்டளையால் தான். அறியாமையைப் பிளந்து அறிவாற்றல் வெளிப்படுவதும் என்னுடைய
கட்டளையால் தான். கருமுட்டை வெடித்து கருதரிப்பதும் என்னுடைய கட்டளையால் தான். வயிற்றைப்
பிளந்து குழந்தை வெளியாவதும் என்னுடைய கட்டளையால் தான். ஒன்றுமே இல்லாத, ஆனால், மிகவும் அடர்த்தியான ஒரு சூன்யத்திலிருந்து
ஒரு சில மைக்ரோ வினாடி காலத்தில் பெரு வெடிப்பின் மூலம் இந்த முழு பிரபஞ்சமும் வெளிவந்ததும்
என்னுடைய உத்தரவினால் தான். எனவே எல்லா படைப்புகளும் என்னுடைய கட்டுப்பாட்டில் தான்
இருக்கின்றன. அவற்றின் மூலம் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் என்னுடைய வல்லமையைக்
கொண்டு தான் நடைபெறும். ஆகையால் பட்புகளின் தீங்கிலிருந்து, வெடித்துச் சிதறியவற்றின் இரட்சகனாகிய
என்னைக் கொண்டே பாதுகாவல் தேடுங்கள், என்று அல்லாஹ் கூறுவது போல் உள்ளது. (குல்அவூது பிரப்பில்
ஃபலக்) விரிவடையும் பிரபஞ்சம்:
பெருவெடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது? விஞ்ஞானி ஜன்ஸ்டீன் இந்த பிரபஞ்சத்தை
ஒரு பலூனுக்கு ஒப்பிடுகிறார். அந்த பலூன் மீது ஆங்காங்கே இருக்கும் புள்ளிகளை கேலக்ஸிகளாக
கற்பனை செய்வோம். தொடந்து அந்த பலூனை ஊதிக்கொண்டிருந்தால் அந்த புள்ளிகளுக்கு மத்தியில்
உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகும். ஊதப்படாமல் இருந்த பலூன் மீது நெருக்கமாக
இருந்த புள்ளிகள் பலூனை ஊத ஊத விலகிக் கொண்டே செல்வதைக் காணலாம். இதே போன்று பெருவெடிப்புக்குப்
பிறகு இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இன்றும் விரிகிறது. இனியும்
விரியும். ஒரு கணக்குப்படி ஒரு கேலக்ஸி மற்றொரு கேலக்ஸியை விட்டும் வினாடிக்கு 980 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று
கொண்டிருந்தால் இந்த பிரபஞ்சத்தின் பரப்பளவைத் தான் கற்பனை செய்ய முடிகிறதா?
இதைத் தான் அல்லாஹ் குர்ஆனில்,
வானத்தை (பிரபஞ்சத்தை) நாம் நம் வலிமையினால் படைத்தோம்.
மேலும் நாம் விரிவுபடுத்துபவர்களாகவும் இருக்கிறோம், (51:47) என்று கூறுகிறான் போலும்.
இந்த வசனத்தின் பல கருத்துக்களில் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருப்பதையும்
ஏற்றுக்கொள்ளலாம். இங்கு விரிவுபடுத்தினோம், என்றோ விரிவுபடுத்துவோம் என்றோ கூறவில்லை.
தொடர்ந்து விரிவடைதல் என்ற கருத்தைத் தரும் விரிவுபடுத்தக்கூடியவன் - விசாலமாக்குபவன்
என்ற வார்த்தை ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. தொடர்ந்து இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே
இருக்கிறது. ஒரு கேலக்ஸி மற்றொரு கேலக்ஸியை விட்டும் ஒவ்வொரு வினாடியும் 980
கி.மீ. தூரம் விலகிச்
செல்கிறது, என்றால் அல்லாஹ்வின் இந்த வசனம் நடப்பு விஞ்ஞானத்துடன் எந்த அளவுக்கு பொருந்திப்
போகிறது, என்பதை
சிந்திக்க முடிகிறது. இப்பவும் ஒரு எழுத்து எழுதுவதற்குள் நாம் 980 கி.மீ. தூரம் தூக்கி வீசப்பட்டு
விட்டோம். இவ்வளவு வேகமான பயணத்திற்கு மத்தியிலும் அதைப் பற்றிய எந்த உணர்வும் சிந்தனையும்
இல்லாமல் நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே போன்று வாழ்க்கையில் ஏற்படும்
எப்படிப்பட்ட பிரச்சினையிலும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அல்லாஹ்வின் பொருத்தத்தை
மட்டுமே இலக்காகவும் இலட்சியமாகவும் கொள்ள வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களையெல்லாம்
கூட ஒதுக்கிவிட்டு ஒரு ஆரம்பகால மாணவனைப் போல் படித்தால் கூட வானவியல் - விண்வெளி உங்களைச்
சுண்டி இழுத்துவிடும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் அத்துனை வசீகரமாக இருக்கிறது. பல
ஆச்சர்யங்களயும் அதிசயங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. இதைக் காணும் போதெல்லாம்
நாம் எத்தனை சிறிய அற்பமான ஓர் உயிர் என்பது நமக்கு வெளிப்பட்டு நம்முடைய சாமான்யத்தன்மை
வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வின் செயலாகிய இந்த படைப்பில் நம்மை ஈர்க்குமளவுக்கு
அதிசயங்கள் நிறைந்திருக்கிறதென்றால் அவனுடைய கலாம் - பேச்சாகிய குர்ஆனுடைய வசனங்களில்
நாம் ஆழ்ந்து கவனம் செலுத்தினால் எவ்வளவு நிறைவான அதிசயங்களையும் அறிவுப் பொக்கிஷங்களையும்
பெற்றுக் கொள்ள முடியும்! ஒருமுறை சர். சி.வி.ராமன், கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா
திரும்பிக்கொண்டிருந்த போது, "கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என யோசித்தார். இதை அவர் ஆராய்ந்து
1928, பிப்.,
28ல்,
"ராமன் விளைவை'
கண்டுபிடித்தார்.
"நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம்
மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம், தண்ணீரில் தோன்றுகிறது' என கண்டுபிடித்தார். இதற்காக
1930ம் ஆண்டு,
இயற்பியலுக்கான நோபல்
பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
Allah Akber!!! Marvelous details in simple way!
ReplyDelete