Sunday, 8 May 2016

தண்ணீர் வியாபாரம்




மார்ச் மாதம் அரசியல் சமூக சூழலில் பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றில் ஒன்று உலக தண்ணீர் தினம். ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டம் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று 1992 ஆம் ஆண்டு அறிவித்ததன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அவ்வப்போது வேற்றுக் கிரகத்தில் தண்ணீர் பற்றிய தகவல் வந்தாலும் தண்ணீர் இருப்பதற்கான உறுதியான நம்பகமான தகவல் எதையும் இதுவரை விண்ணியலால் தரமுடியவில்லை. பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. நீர், உயிரின் ஆதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமுடியாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய்விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.

நீர், நாகரிங்களின் பிறப்பிடம்:
நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து நதி, யூப்பிரடிஸ், தைகிறீஸ் போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர், என்பது புலனாகின்றது.

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. அணு மின்நிலையம், நூல் பனியன் தொழிற்சாலை, உலோகக் கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுவதால் மீன்கள், ஆடுமாடுகள் இறப்பதையும் அந்த நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றியும் அன்றாடம் நிறையச் செய்திகளைத்தான் பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம். உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்ட்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 லட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. இருக்கும் நீர்ஆதாரங்களைப் பாதுகாப்பது நீர் நிர்வாகத்தின் முக்கிய அம்சம். ஆனால் இன்று தொழிற்சாலை கழிவுகள் ஆறுகளையும், ஏரிகளையும் சுதந்திரமாக மாசுபடுத்துகின்றன.

தூங்கி விழித்தவன் தன் கைகளை மும்முறை கழுவுவதற்கு முன் தண்ணீர் பாத்திரத்தில் கைவிட வேண்டாம். ஏனெனில் கரங்கள் இரவில் உலாவிய இடம் அவனுக்குத் தெரியாது என்றார்கள் நபி (ஸல்). (அபூதாவூத்) அவ்வாறே தண்ணீர் குடங்களை நன்றாக மூடி வைய்யுங்கள் என்று எச்சரித்தார்கள். (முஸ்லிம்) குளிக்கப் பயன்படும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம். குளிப்பு கடமையானவர் அதில்மூழ்கியும் குளிக்க வேண்டாம். அதிலிருந்து இறைத்தெடுத்து உபயோகிக்கட்டும் என்று அறிவுறுத்தினார்கள். ஏனெனில்இவற்றின் மூலம் தண்ணீர் மாசுபடும். 

நீர் வியாபாரம்:
இன்று தொழிற்சாலைகள் மூலம் தண்ணீரை மாசுபடுத்தி விட்டு அந்த மாசு படிந்த தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக சுத்திகரிப்பு தொழிற்சாலைகளை ஏற்படுத்தி பணம் பண்ணுவது தான் இன்றைய நிலை. கிருமிகளை பரவச் செய்வது முதற்கொண்டு தீவிர சிகிச்சை வரை அனைத்துமே தொழில் மயமாகிவிட்டது.
ஏறத்தாழ 35 அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் வியாபாரம் லாபகரமான  ஒரு தொழிலாக கருதப்பட்டது, கிடையாது. ஆனால், இப்போது பிரான்ஸின் பிரபல நிறுவனமான சூயஸ் உலகின் மிகப்பெரிய தண்ணீர் வியாபார நிறுவனம். தனியார் தண்ணீர் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது.

தண்ணீர் எல்லாருக்கும் பொதுவானது. நபி (ஸல்) அவர்கள் நீரை விற்பதை தடை செய்துள்ளார்கள். பொதுவுடைமை பெற்ற தண்ணீரை யாரும் விற்பனை செய்ய முடியாது. எனினும், தனது முயற்சியால் அந்த தண்ணீரை எடுத்து ஓரிடத்தில் ஒன்று சேர்த்து அதை விற்பனை செய்தால் கூடும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் காட்டிற்கு சென்று விறகு வெட்டி முதுகில் சுமந்து வந்து அதை விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விட சிறந்தது, என்று கூறியுள்ளார்கள். (புகாரி)

எனவே இன்றைய மினரல் வாட்டர் விற்பனை ஷரீஅத்தில் தடை செய்யப்பட்டதல்ல. தவிர தண்ணீரை குடிநீர் தொழிற்கூடத்தில் பத்து நிலைகளில் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு தான் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பதை கூடாது, என்று சொல்ல முடியாது. அதற்காக நீர் நிலைகளை அரசு தனியார் மயமாக்கி சேவைத் துறையை வியாபாரமாக்குவதை நியாயப் படுத்த முடியாது. 

``நீர் வளங்களுக்காக தேசங்களுக்கிடையே தீவிர போட்டி நிலவுகின்ற இன்றைய சூழலில் வன்முறை மோதல்களுக்கான வித்துக்கள்தண்ணீர் பிரச்சனைகளில் பொதிந்திருப்பதை காண்கிறேன் என்றார் ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான்.

இந்த இடத்தில் குர்ஆன் விடுக்கும் அறிவிப்பையும், எச்சரிக்கையையும் மனதில்இருத்திக் கொள்ள வேண்டும். வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையைஇறக்கினோம். பிறகுபூமியில்அதனைதேக்கி வைத்தோம். நாம் அதனை வற்ற வைக்கவும் சக்தியுள்ளவர்களாவோம் (23 : 18). உங்களது நிலத்தடி நீர் வற்றிப் போடீநுவிட்டால்தண்ணீர் ஊற்றுக்களை உங்களுக்காக வெளிக் கொணர்பவன்யார்? என்றுசிந்தித்த துண்டா? (67:30). இன்று நிலத்தடி நீர் ஆயிரக் கணக்கான அடிகளைத் தாண்டி விட்டது. ஆனால்அல்லாஹ்வின் பக்கம் ஒரு அடி கூட முன்னேறியதாகத் தெரியவில்லை.

உலக நீர்ஆதாரம்
நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு தண்ணீரை வானிலிருந்து இறக்கினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். உலக நீராதாரம் இதையே உணர்த்துகிறது. இன்றைய உலகின் பெரும்பகுதி தண்ணீர். ஆனால் மனிதனுடைய உபயோகத்திற்காகக் கிடைப்பது குறைவே! மொத்த நீரில் கடல்நீர் மட்டும் 97.5 சதவீதம், பனிப்பாறைகள் 2 சதவீதம், நிலத்தடி நீர் 0.5 சதவீதம், மண்ஈரப்பதம் 0.11சதவீதம், ஆறுகள்0.0001சதவீதம், குளம் ஏரி 0.175சதவீதம். இதுதான் உலகின் மொத்த நீர் ஆதாரம். மொத்த தண்ணீரில் வெறும் 0.031சதவீதம் நீர் மட்டுமே கடலிலிருந்து ஆவியாகி மழையாகப் பொழிகிறது. இதிலும் வேடிக்கை என்னவென்றால்0.031சதவீதத்தில்0.024 சதவீதம் மீண்டும் கடலையே அடைந்து விடுகிறது. வெறும் 0.007 சதவீதம் நீர் மட்டுமே நிலத்திற்குக் கிடைக்கிறது. (குர்ஆன் அவ்ர் மாஹௌலியாத்) இதுவே அல்லாஹ்வின் அளவு மதிப்பீடு.

நீர் சுழற்சி
அவர்கள்படிப்பினை பெறுவதற்காக நாம் இந்த தண்ணீரை அவர்களுக்குமத்தியில்சுழற்சி நிலையில்அமைத்துக் கொடுத்தோம். (அல்குர்ஆன் - 25:50) இந்த வசனத்தைப் படித்து விட்டு விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர். உலகில்உள்ள நீர் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறது. எல்லா நீரும் கடலை அடைகிறது.

அங்கிருந்துஆவியாகி, மேகமாகி மீண்டும் பூமிக்குத் திரும்புகிறது. தற்சமயம் நமது உடலில்உள்ள நீர் அதற்கு முன்னால் யார் உடலில் இருந்தது என்று யாருக்குத் தெரியும்? தண்ணீர் தனது ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட கால அளவு தங்குகிறது. பிறகு கூடாரத்தை வேறிடத்திற்குமாற்றுகிறது. கடல்நீர் 1000வருடமும், பனிப்பாறைகள் ஆயிரத்து ஒரு லட்சம் ஆண்டுகள் வரையிலும், நிலத்தடி நீர் பத்திலிருந்து100வருடமும், மண்ஈரப்பதம் சில மாதங்களும், ஆகாய நீர் வெறும் பத்து நாட்களும் தனது நிலையில் தங்குகிறது. இதுவே அல்லாஹ்கூறிய நீர் சுழற்சி. (குர்ஆன் அவ்ர் மாஹௌலியாத்)

நபி (ஸல்) யின் நீர் நிர்வாகம்
அரபு நாடு நீர் குறைவான பகுதி தான். நபி (ஸல்) அவர்கள் கூட மதீனாவை மழை குறைவான பகுதியாக அறிவித்தார்கள். (முனத் அஹ்மது 3/177) எனவே, நீரை முறைப்படுத்துவதற்கு முறையான திட்டங்களுடன் செயல்பட்டார்கள்என்பது சரித்திரம்.

ஸஃது பின் உப்பாதா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் ஸஃதுடைய தாயார் மரணித்து விட்டார். அவருக்காக எதை தர்மம் செய்வது சிறந்தது? என்று கேட்ட போது, நீர் பற்றாக்குறையை உணர்ந்திருந்த நபி (ஸல்) தண்ணீர் என்றுபதிலளித்தார்கள்.ஸஃது (ரலி) அவர்களும் உடனே ஒரு கிணற்றைத் தோண்டி, இது உம்மு ஸஃதுக்கு சமர்ப்பணம் என்று தண்ணீர் தர்மம் செய்தார்கள். (நூல்: அபூதாவூத்) இலாமிய பொதுப் பணித்துறையின் செயலாக்கம் இந்த தண்ணீர் தர்மத்தின் மூலமே ஆரம்பித்துள்ளது. (உவயே ஸஹாபா)

மதீனா வாழ்முஸ்லிம்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருந்த சமயம் ஒரு யூதன் தனக்கு சொந்தமான கிணற்றுத் தண்ணீரை விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். யார் இந்த கிணற்றையே விலைக்கு வாங்கி முலிம்களுக்கான நீர் வசதியை தாராளமாக்குவாரோஅவருக்குசுவனம் பரிசாகக் கிடைக்கும் என அறிவித்தார்கள். உடனே உமான் கனீ (ரலி) அக்கிணற்றை வாங்கிமுலிம்களுக்காக வக்ஃப் செய்தார்கள். (திர்மிதீ)

தண்ணீர் நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் (அமைச்சர்கள்) எல்லொருக்கும் பங்கிட்டுவிட்டு கடைசில்தன்பங்கை எடுப்பவராக இருக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள்நவின்றார்கள். (அபூதாவூத்). ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபியவர்களுடன் பிரயாணத்தில்இருந்தோம். தண்ணீர் பகுதியை நெருங்கிய போது தண்ணீரை முறைப்படுத்தி சுத்தமாக்கி உபயோகிப்பதற்குத் தோதுவாக ஒரு தடாகத்தில்சேகரிப்பதற்காக இரண்டு நபர்களை முன்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவ்விருவரின் உழைப்பால்உண்டான ஹவுள்என்பதால் நபி (ஸல்) அவர்கள்கூட அந்த இரண்டு தோழர்களின் அனுமதியுடன் தான் தண்ணீரை உபயோகித்தார்கள். (முலிம்) மற்றொரு முறை நபி (ஸல்) ஸஹாபாக்களுடன் சென்ற போது நாளை தபூக்கின் நீர்ஊற்றுக்கு வருவீர்கள். நீங்கள்அவ்விடத்தைஅடைந்தால் நான் வருவதற்கு முன் அந்த தண்ணீரை யாரும் தொடக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். அந்த ஊற்றில் சிறிதளவு நீரே ஊறிக் கொண்டிருந்தது. (முஸ்லிம்)

நீர்ப் பாதுகாப்பு
முதலில் எடுக்க வேண்டிய நடவடிக்கை  நீர் ஆதாரங்களை காக்க வேண்டும், தற்பேது எத்தனை குளங்கள் இருந்த இடத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, ஏரிகள் இருந்த இடங்கள் எத்தனை காலனிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே தேங்கி நிற்க வேண்டிய நீர் எங்கே சென்று நிற்கும்? நீர் இருந்த இடத்தை காலி செய்து விட்டு அங்கே நாம் குடிபோனேம். இப்போது மழை, வெள்ளம் என்று வரும் போது குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment