நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஒரு பக்கம் தஃவத் எனும்
அழைப்புப் பணியாக இருந்தால் மறு பக்கம் துஆ எனும் பிரார்த்தனையாக இருக்கும். நபித்துவத்தின்
வெளிப்பாடு அழைப்புப் பணியாக இருந்தால் நிறைவான இறையடிமைத்துவத்தின் வெளிப்பாடு துஆவாக
இருக்கும். இதைத் தான் அஷ்ஹது அன்ன முஹம்மதன் அóப்துஹு வரஸுலுஹு என்று சொல்கிறோம்.
திட்டமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹóவõன் அடியாராகவும் அவனுடைய தூதராகவும் இருக்கிறார்கள். இரண்டு
தன்மையும் நபியவர்களிடம் நிறைவாக இருóந்திருக்கிறது.
தூதரின் பணியை நிறைவாகச் செய்து விட்டதற்கு இறுதி ஹஜ்ஜின்
போது நபித் தோழர்களிடம் ஒப்புதல் பெற்று அல்லாஹóவையே சாட்சியாக ஆக்கினார்கள். அடிமைத்துவத்திலும்
நபியவர்கள் கடைசி எல்லையை அடைந்து விட்டார்கள், என்பதற்கு அவர்கள் ஓதிய துஆக்கள் இன்று
நம்முன் சான்றுகளாக இருக்கின்றன. அத்துடன் ஒவ்வொரு துஆவும் நபித்துவத்தை உண்மைப்படுத்தும்
முஃஜிஸா எனும் அற்புதச் சான்றாகவும் திகழ்கிறது.
அழைப்புப்பணி நபிóக்கும் மக்களுக்கும் மத்தியில் உள்ள
தொடர்பாகும். ஆனால் துஆ என்பது அல்லாஹóவுக்கும் (அடியாருக்கும்) நபிக்கும் மத்தியில் உள்ள தொடர்பாகும்.
அல்லாஹóவிடம்
கேட்கும் போது அடியானுடைய இயலாமை வெளிப்படுகிறது. தான் அல்லாஹóவுக்கு அடிமை என்பதை ஒப்புகóகொள்ள வைக்கிறது. உலகம் படைக்கப்பட்டது
முதல் உலக இறுதி நாள் வரை வரக்கூடிய மக்களில் அல்லாஹóவின் நிறைவான அடிமை என்று போற்றப்படுவதற்குத்
தகுதியானவர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தவிர வேறுயாரும் இருக்க முடியாது. எனவே தான்
குர்ஆனில் நபியவர்களின் உயர்ந்த தன்மையைப் பற்றி கூறுபோது அல்லாஹóவின் அடிமை என்று போற்றுகிறான்.
தன்னுடைய அடியாருக்கு வேதத்தை இறக்கிவைத்த அல்லாஹóவுக்கே புகழனைத்தும். (18-1)ஹரம் ஷரீஃபிலிருந்து மஸ்ஜிதுல்
அக்ஸாவுக்கு தன்னுடைய அடியாரை இரவோடு இரவாக அழைத்துச் சென்றவன் மகா பரிசுத்தமானவன்.
(17-1)
நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட காலத்தில அல்லாஹóவுக்கும் அடியார்களுக்கும்
மத்தியிலó உள்ள
தொடர்பு உடைபட்டுப் போயிருந்தது. அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மொட்டீக காலத்தில் மக்கள்
கண்டதையெல்லாம் தெய்வமாக ஆக்கி அவற்றிடமே தம்முடைய தேவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
படைத்தவனிóன்
தன்மைகளை படைப்புகளுக்கு இருப்பதாக நம்பக்கூடியவர்கள் படைத்தவனிடம் எப்படி தேவையைக்
கேட்பார்கள்? மழைக்கு ஒரு கடவுள், செல்வத்துக்கு ஒரு கடவுள், கல்விக்கு ஒரு கடவுள், இப்படி எண்ணற்ற கடவுளர்கள்
இருக்கும் போது ஏக இறைவனுடைய நினைவு வருவது அரிதிலும் அரிதாகிவிடும்.
இப்படிப்பட்ட நிலையில் தான் நபியவர்கள் இவ்வுலகுக்கு வந்து
இறைத்தொடர்பை இறுக்கமாக்கி படைப்புகளை படைத்தவனுடன் இணைத்தார்கள். அந்த இணைப்பின் பெரும்பகுதி
நபியவர்களின் அற்புதமான துஆக்களில் வெளிப்படும். அல்லாஹóவுகóகும் அடியானுக்கும் மத்தியில் எந்தத்
தடையும் இல்லை. அவன் நேரடியாக அல்லாஹóவிடம் கேட்கமுடியும், என்ற சிந்தனையை உருவாக்கினார்கள்.
நபியவர்கள் அல்லாஹóவிடம் முறையிடும் ஒவ்வொரு வார்த்தையும்
ஆழமாக அழுத்தமாக அமையப் பெற்றிருப்பது தான் தனிப்பெரும் சிறப்பம்சம். அவை இறைத்தன்மையை
அறிமுகப்படுத்துவதில் அற்புதமானவை. மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான தவ்ஹீத்
எனும் ஏகத்துவம், ரிஸாலா எனும் இறைத்தூதுத்துவம், மறுமை வாழ்வு, அல்லாஹó வழங்கிய அருட்கொடைகளை நினைவுகூர்வது
போன்றவை துஆக்களின் மூலமாகவும் போதிக்கப்பட்டிருக்கிறது, எனóறால் துஆ என்பது இறைஞ்சுதல் மட்டுமல்ல,
இறைக்கொள்கைளையைப் போதிக்கும் போதனையாகவும் இருக்கிறது
என்பதைவிட வேறென்ன சிறப்பு தேவை?
நம்மில் நிறைய பேருக்கு துஆ செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.
தொழுகை மட்டும் தானே கடமை, எனóற நினைப்பு அதிகமான தொழுகையாளிகளை திக்ரு, துஆக்களை விட்டும் தடுத்துவிடுகிறது.
இன்னொரு பக்கம் ஒரு சாரார் இவையெல்லாம் வீண்வேலை, என்ற மனோநிலையை பரவலாக்குவதில் ஓரளவு
வெற்றியும் கண்டுளóளனர். எது எப்படியிருந்தாலும் துஆவில் தான் அடியானுடைய அடிமைத்தனம் பளிச்சிடுகிறது,
என்கிற போது அதில் கொஞ்சம்
கவனம் செலுத்தினால் நம்முடைய மறுவுலக வாழ்வு மணமாகும் அதே சமயம் இவ்வுலக வாழ்வும் வளமாகிவிடும்
என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
சிந்தித்துப் பார்த்தால் மனிதன் எந்த ஒரு வினாடியும் தேவையற்றவனாக
இருக்க முடியாது. வீட்டில் இருந்தாலும் கடைவீதியில் இருந்தாலும் மகிழ்ச்சிகரமான வைபவங்களில்
இருந்தாலும் துக்க நிலையில் இருந்தாலும் அந்தந்த நேரங்களில் பல தேவைகளுடன் தான் மனிதன்
இருப்பான். நாம் விருந்தாளியாகச் சென்றிருக்கும் போது வெளிப்படையாக எந்தத் தேவையும்
இல்லாதது போலத் தெரியலாம். எனினும் ஏராளமான தேவைகள் இருக்கவே செய்கின்றன. வெயில் கடுமையாக
இருக்கிறது. கரண்ட் இல்லை. வியர்வை கொட்டுகிறது. இந்நிலையில் வெப்பத்தை குறைத்துக்
கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. குளிர் அதிகமாகும் போது வெப்பம் தேவைபóபடுகிறது. இந்த உலகமோ அல்லது
மனிதனோ ஒரே நிலையில் இருக்க முடியாது. எனவே, எல்லா நிலையிலும் மனிதன் பல தேவைகளுடன்
தான் இருக்கிறான்.
வெப்பம் அதிகமாகும் போது மின்விசிறி அல்லது ஏசி யை இயக்குவதற்கு
முன் யாஅல்லாஹó வெப்பத்தைப் போக்கிவிடு, என்று துஆ செய்து கொளóளூங்கள். யாரையாவது எதிர்பார்த்துகó
கொண்டிருந்தால் அல்லது
வாகனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் வாயில் வந்தபடி திட்டாமல் யாஅல்லாஹó
அந்த நபரை அல்லது வாகனத்தை
சீக்கிரம் வரச்செய்வாயாக, என்று மனதால் துஆ செய்து விட்டு பிறகு அவருக்கு போன் போடுவது
போன்ற காரியங்களைச் செய்யுங்கள்.
வாகனத்தில் ஏறி அமர்ந்த பின் சுன்னத்தான துஆக்களை ஓதுவதுடன்
யாஅல்லாஹó எந்த
ஆபத்துமில்லாமல் சேரவேண்டிய இடத்தில் சேரவைப்பாயாக. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை
விட்டும் பாதுகாப்பாயாக. வாகனக்கோளாறு ஏற்படுவதை வõட்டும் பாதுகாப்பாயாக, என்று கூறி துஆ செய்து கொண்டால்
நமகóகு நம்முடைய
திறமையின் மீதிருக்கும் நம்பிக்கையை விட அல்லாஹóவின் மீதிருக்கும் நம்பிக்கை அதிகமாகும்.
எனவே தான், நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தேவைகளயும் அல்லாஹóவிடமே கேளுங்கள். செருப்புவார்
அறுந்து போனாலுமó (அதைக்கூட) அல்லாஹவிடமே கேளுங்கள், என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். (திர்மிதீ)
திர்மிதீ ஷரீஃபின் அடுத்த ஹதீஸில் உப்பைக் கூட அல்லாஹóவிடம் கேட்டுப்பெறுங்கள்,
என்று கூறினாார்கள்.
ஒரு தடவை காலித் பின் வத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து தங்களுடைய வசிப்பிடத்தின்
நெருக்கடி பற்றி முறையிட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்துங்கள். அல்லாஹóவிடம் வசதி வாய்ப்பு - விசாலத்தைக்
கேளுங்கள் என்று கூறினார்கள். (தப்ரானி) தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக
உலகியல் ரீதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன் அல்லாஹóவிóன் ஞாபகம் வரவேண்டுமென்பதை நபியவர்கள்
வலியுறுத்தியுள்ளார்கள்.
ஒரு பொருள் கிடைத்து விடும், என்று உறுதியாகத் தெரிந்த பிறகும்
கூட அதற்காகவும் துஆ செய்வதே தவக்குல் எனும் அல்லாஹóவை சார்ந்திருப்பதில் நிறைவானதாகும்.
நோனபு திறக்கப் போகிறோம். முன்னால் கஞ்சி, வடை, பழங்கள், தண்ணீர், குளிர்பானம் என பலவகையான உணவுப்பொருட்கள் இருக்கின்றன. இப்பொழுதும்
கூட, யாஅல்லாஹó
இந்த ரிஜ்கை எனக்கு
நஸீபாக்கிவைப்பாயாக. இதனை எனக்கு ருசிக்கச் செய்வாயாக. இதனை முறையாகச் செரிக்க வைப்பாயாக.
இதன் மூலம் எனக்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் தருவாயாக, என்று துஆ செய்து கொள்ள வேண்டும்.
இல்லையானால் ரிஜ்க் முன்னால் இருந்தும் கூட கைக்கு கிடைத்தது
வாயிக்கு கிடைக்காமல் போய்விடலாம். அல்லது அதன் மூலம் அஜீரணக்கோளாறு ஏற்பட்டு உடல்
நலம் கெட்டுவிடலாம். உணவு கிடைப்பது எனóபதும் அதை நாம் சாப்பிடுவது என்பதும் தனித்தனி அருட்கொடை
என்பதை உணர்த்துவதற்காக நபியவர்கள் சாப்பாட்டுக்குப் பின் ஓத வேண்டிய துஆக்களில்,
எனக்கு உணவு வழங்கி
அதனை சாப்பிட வைத்த அல்லாஹóவுக்கே புகழனைத்தும், என்று இரண்டு நிஃமத்தையும் தனித்தனியாக
நினைவுகூர்ந்து புகழ்ந்திருக்கிறார்கள்.
நாம் மற்றவர்களிடம் துஆ செய்யக் கேட்டுக்கொள்வது நல்ல
பழக்கம், என்பது
மட்டுமல்ல நம்மை விட வயதிலும் தரத்திலும் குறைந்தவர்களிடம் துஆ செய்யக் கேட்டுக்கொள்வது
பணிவின் வெளிப்பாடு. (நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் துஆ செய்யுமாறு வேண்டியிருக்கிறார்கள்.
உவைசுல் கர்னீ (ரஹó) அவர்களைக் கண்டால் அவரிடம் உங்களுக்காக அல்லாஹóவிடம் பாவமன்னிப்பு கோரும் படி கேட்டுக்கொள்ளுங்கள்,
என்று நபி (ஸல்) கூறினார்கள்
என்பதற்காக உமர் (ரலி) தாங்கள் இஸ்லாமிய உலகின் கஃபாவாக இருக்கும் போது அவர்களை சந்ததித்தார்கள்.
அச்சமயத்திலும் கூட ஒரு ஜனாதிபதி குடிமக்களில் ஒருவரிடம் தமக்காக இஸ்திஃபார் செய்யுமாறு
கேட்டுக்கெர்ண்டார்கள்.
என்னுடைய உஸ்தாது கீரனூரி ஹள்ரத் (ரஹó) அவர்களுடைய சிறப்பையும் பெருமையையும்
பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய தேவையில்லை. 2009 ஆண்டு அடியேன் ஹஜ்ஜுக்கு செல்தற்காக
மத்ரஸாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் போது பெரிய ஹள்ரத் (ரஹó) அவர்களை சந்திக்கச் சென்றேன்.
அப்போது கண்ணீர் மல்க எனக்காக துஆ செய்யுங்கள், என்று கேட்டுக் கொண்டபோது எதற்கும்
தகுதியில்லாத என்னிடம் இப்படிக் கூறுவது அவர்களுடைய உயர்ந்த அந்தஸ்தையே வெளிப்படுத்துகிறது.
நாம் யாரைப் பார்த்தாலும் அல்லது போனில் பேசினாலும் கடைசியில்
துஆ செய்யுங்க, என்று முடிக்கிறோம். அது தான் இலவசமாகக் கிடைக்கிறது, என்பதற்காக, என்று பேசிக்கொண்டாலும் இந்த
வேண்டுகோள் உண்மையில் நம்முடைய வாழ்வின் நல்லது கெட்டதை தீர்மானிக்கக் கூடியதாக ஆகிவிடலாம்.
ஆனால் துஆ செய்யுங்க, என்று சொல்வது பல சமயங்களில் வெறும் சம்பிரதாய அளவில் மட்டுமே நின்று போய்விடுகிறது.
துஆவுடைய மகத்துவமோ அதன் உயர்ந்த பலன்களோ நம்முடைய கவனத்திற்கு வருவதில்லை.
ஏதாவது சொல்லி பேச்சை முடிக்க வேண்டுமே, என்பதற்காக துஆ செய்யுங்க,
என்று கூறிவிடுகிறோம்.
கேட்பவருக்கும் அவருடைய வேண்டுகோளைப் பற்றி எந்த கவனமும் இருப்பதில்லை. துஆ செய்யுங்கள்
என்று நம்மிடம் வேண்டும்போதே அல்லாஹó நல்லதை நடக்கச் செய்வானாக, அல்லாஹó பரக்கத் செய்வானாக, அல்லாஹó ரஹóமத் செய்வானாக, போன்ற துஆக்களை அந்தந்த இடத்திற்குத்
தகுந்தவாறு சொல்லிவிட்டால் அப்பொழுதே பொறுப்பு நிறைவேறிவிடும். அத்துடன் நாம் தனியாக
துஆ செய்யும் போது, யாஅல்லாஹó, எங்களிடம் யாரெல்லாம் துஆ செய்யும்படி வேண்டினார்களோ, என்று கூறி அவர்களுக்காகவும் துஆ செய்ய
வேண்டும்.
மற்றவர்களிடம் துஆ செய்யக் கேட்டுக்கொள்வதின் மேன்மையை
நபியவர்கள் தொழுகைக்குப் பின் ஓதிய இந்த துஆவை சிந்தித்துப் பார்த்தால் விளங்கிக் கொள்ளமுடியும். யா அல்லாஹ் கடலிலும் திடலிலும் உன்னுடைய அடியார்களில்
ஆண்களோ பெண்களோ தங்களுடைய முழு வாழ்நாளிலும் செய்யக்கூடிய எல்லா (நல்ல) துஆக்களிலும்
எங்களையும் சேர்த்துக் கொள்வாயாக. அவ்வாறே நாங்கள் செய்யக்கூடிய (நல்ல) துஆக்களிலே
அவர்களையும் சேர்த்துக் கொள்வாயாக. எங்களையும் அவர்களையும் மன்னித்தருள்வாயாக. (கன்ஜுல்
உம்மால் - 4977)
No comments:
Post a Comment