வாழ்வைப் பாழாக்கும் T
V
தகவல் தொழில் நுட்பத்தின் தாறுமாறான வளர்ச்சியால் விளையும் நன்மைகள் நீளமானவை.
என்றால் தீமைகள் அகலமானவை; ஆழமானவை; அழுத்தமானவை, என்று சொல்லவேண்டும். கண்டுபிடிப்புகளில் ஒவ்வொன்றும்
பின்னது முன்னதைவிட தீமையில் தீவிரமாகவே இருந்திருக்கிறது. ஆனால் டி.வி. மட்டும் இதில்
விதிவிலக்கு. ஏனெனில், தகவல் தொழில் நுட்பம் தொலைக்காட்சியைத் தாண்டி தொலைதூரம் சென்ற பிறகும் டி.வி.
யின் மூலம் பாவங்கள் பன்மடங்காக பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்குப் பின்னர்
வந்த இன்டர்நெட் போன்ற நவீன கண்டுபிடிப்புகளின் பாதிப்புகளை விட டி.வி. ஆதிக்கத்தின்
மூலம் வரும் பாதிப்பின் தாக்கம் தாங்க முடியாததாகவே இருக்கிறது.
எங்கும் எதிலும் T V :
கம்ப்யூட்டர் மற்றும் இணையதளத்தில் நிறைய லாபங்கள் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதிகமாக
தீமைக்காகவே பயன்படுத்துகின்றனர். இணையதளத்தின் மூலம் இளைஞர்களின் சிந்தனை சிதறடிக்கப்
படுகிறதென்றால் சின்னத்திரையில் சிறுபிள்ளைகள் முதல் இல்லத்தரசிகள் வலை அனைவருடைய வாழ்க்கையும்
பாழாகிவிடுகிறது. வீட்டில் மட்டுமல்ல; நாம் அதை விட்டும் விலகி ஓடினாலும் தொலைக்காட்சி துரத்திக்கொண்டே
வருகிறது. இல்லை! கூடவே வருகிறது. பேருந்தில் ஏறினாலும் T V பிளாட்பாரத்தில் இறங்கினாலும் T V சினிமா தியேட்டரிலும் T V ஆப்ரேஷன் தியேட்டரிலும் T V டீ கடையிலும் T V பெட்டிக் கடையிலும் T V ஆஸ்பத்திரியில் காத்திருப்போர் அறையில் மட்டுமல்ல;
சிகிச்சை அறையிலும்
ஆட்கொண்டிருக்கிறது T V இப்படி எங்கு திரும்பினாலும் சின்னத்திரையே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
T V ஏன் கூடாது?
உலகச் செய்திகளை தெரிந்து கொள்கிறோம். வியாபாரச் செய்திகள், மருத்துவத் தகவல்கள்,
விஞ்ஞான ஆய்வுகள் பற்றிய
அரிய தகவல்கள் போன்றவற்றை T V மூலம் அறிந்து கொள்ளமுடிகிறதே என்று கேட்பது காதில் விழுகிறது.
இவை கூட மார்க்க வரம்பிற்குட்பட்டு ஒளிபரப்பப்படுவதில்லை என்பது ஒரு புறமிருக்க இதற்காகத்தான்
இன்று T V பயன்படுத்தப்படுகிறதா? என்பதே கேள்வி. 99 சதவீதம் பேர் சினிமாவுக்காகவும்
சீரியலுக்காகவும் தான் பயன்படுத்துகின்றனர். நாய் பூனை போன்ற மிருகங்களின் வாழ்க்கை
முறைகளை படமாக்கிக் காட்டுகிறோம் என்று கூறிக் கொண்டு அவை ஒன்றையொன்று கொஞ்சுவதையும்
புணர்ச்சி செய்வதையும் காட்டுகிறார்களாம். கல்வி ஒளிபரப்பு என்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும்
ஆபாசம் நிறைந்து காணப்படுகிறதாம்!
இசைக்கு இசையும் உம்மத்:
இசைக்கருவிகளை இல்லாமலாக்குவகற்காக அனுப்பப்பட்ட நபியின் உம்மத் அதை விலை கொடுத்து
வாங்கிக்கொண்டிருக்கிறதே! (இன்று இலவசமாகவே வந்துவிடுகிறது.) இசைக்கருவிகளை ஆகுமாக்கக்கூடிய
கூட்டத்தினர் என்னுடைய சமுதாயத்தில் தோன்றுவார்கள், எனறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி) மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். மதி மயக்கத்தை ஏற்படுத்தும்
செய்திகளை விலை கொடுத்து வாங்குகிறாாகள். அவர்கள் எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின்
பாதையை விட்டும் பிறழச்செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான், என்று குர்ஆன் கூறும். இத்தகையோருக்கு
இழிவுபடுத்தும் வேதனை உள்ளது, என்றும் எச்சரிக்கிறது. (31:6) நபியவர்களின் காலத்தில் குர்ஆனை யாரும்
கேட்கக்கூடாது என்பதற்காக ஒருவன் பாட்டுபாடக்கூடிய ஓர் அடிமைப் பெண்ணை வாங்கிவந்தான்.
குர்ஆனை கேட்காதீர்கள். அதை விட இனிமையாக இருக்கும் இந்த இசையைக் கேளுங்கள்! என்று
ஏளனமாகக் கூறினான்.அவனுக்குப் பதிலடியாகவே இந்த இறைவசனம் இறங்கியது.
லஹ்வுல் ஹதீஸ்- T V
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள “லஹ்வல் ஹதீஸ்” என்ற வார்த்தைக்கு ‘மெய்மறக்கச்செய்யும் பேச்சு,
மற்றவற்றை மறக்கச்செய்து
மனதை முழுக்க தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் விஷயம்’ என்று பொருள் தரக்கூடிய கருத்துச்
செறிவுள்ள வார்த்தை. இப்படிப்பட்ட பேச்சுக்களை விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காக?
மக்களை அல்லாஹ்வுடைய
மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காக. ஷரீஅத்தை ஏளனமாக விலைமதிப்பற்றதாக ஆக்குவதற்காக!
இப்பொழுது சொல்லுங்கள்! குர்ஆன் கூறும் “லஹ்வல் ஹதீஸ்” என்ற வார்த்தை T V யுடன் எப்படி ஒத்துப்போகிறது
என்று!
இராக்கதை கூடாது:
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சீரியலில் உட்கார்ந்துவிட்டால்
உலகமே மறந்துபோய்விடும். தொழகையிலும் குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் கழிய வேண்டிய
இரவுகள் (ரமளானுடைய இரவுகளும்) இப்படி வீணாகின்றன. நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப்பின்
இராக்கதை பேசவேண்டாமென்று தடை செய்திருக்கிறாாகள். (திர்மிதீ) இரவில் கதை பேசிக்கொண்டிருந்தால்
எப்படி ஃபஜ்ருக்கு எழ முடியும்? ஆனால் இன்று T V யில் தான் இரவின் பெரும்பகுதி கழிகிறது. கிரிக்கெட் போட்டி
நடந்தால் கேட்கவே தேவையில்லை. இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தூக்கத்தை தொலைக்காட்சி
முன் தொலைத்துவிட்டால் பிறகென்ன? மறுநாள் தொழுகை மட்டுமல்ல, உலகவேலையும் கெட்டுவிடும்.
ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆடுவதால் நமது நாட்டுக்கு ஏற்படும் மனித உழைப்பின்
இழ்பபின் மதிப்பு 2007-ம் ஆண்டிலேயே 2000 கோடி என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இரவெல்லாம் T V க்கு முன்னால் விழித்திருந்தால்
பகலில் எப்படி வேலை செய்ய முடியும்? சுபுஹ் (காலை) நேரத்தில் தூங்கினால் வாழ்வாதாரம் சேதாரமாகிவிடும்
என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்திருக்கிறார்கள். (தர்கீப்) காலை நேரத்தில்
எனது உம்மத்தினருக்கு பரக்கத்-அபிவருத்தி செய்திடுவாயாக! என்று துஆ செய்திருக்கிறார்கள்.(அபூதாவூத்)
இந்த நபிமொழியை அறிவிக்கும் ஸக்ர் (ரலி) அவாகள் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக வியாபாரத்தை
ஆரம்பித்து செழிப்பாக வாழ்ந்தது வரலாறு.
சினிமா நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் நம்மின் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள்.
நாமோ முட்டாள்தனமாக நம்முடைய பொருளாதாரத்தையும் கூடவே அருளாதாரத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்.
அருள் கொட்டும் ரமளான் மாதத்திலாவது இந்த முஸீபத்திலிருந்து நம்முடைய குடும்பம் விலகியிருக்க
வேண்டும்.
வெளிச்சமாகும் இருட்டறை:
T V யின் மூலம் ஒவ்வொரு வீடும் தியேட்டராகிவிட்டது. எனவே தான் சின்னத்திரை
என்ற அடையாளப்பெயர் கிடைத்திருக்கிறது. பாலியல் குற்றங்களையும் கிரிமினல் குற்றங்களையும்
சினிமா தான் கற்றுக்கொடுக்கிறது. கொலை திருட்டு போன்ற குற்றங்களை சினிமா பாணியில் கச்சிதமாக
செய்து முடிக்கும் தகவல்களைப் பற்றி அவ்வப்போது நாளிதழ்களில் படிப்பதில்லையா?
இருட்டறையில் நடக்க
வேண்டிய காரியங்களை காட்சிகளாக - இருட்டறைகளையும் வெளிச்சமாக்கும் காட்சிகளாக காட்டப்படுகிறதென்றால்
வாலிபர்களின் சிந்தனைகளை கெடுப்பதற்கு இதை விட வேறென்ன வேண்டியதிருக்கிறது?
அந்த ஒளி நம்முடைய வீடுகளிலும்
நுழைந்தால் உலகிற்கு வழியும் ஒளியும் காட்டவேண்டிய சமுதாயம் இருண்டு போவதை விட்டும்
எப்படி தடுக்க முடியும்?
அலங்கோலமாகும் அரங்கம்:
இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு
இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை உண்டு. அல்லாஹ் அறிகிறான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
(அல்குர்ஆன்-24:19) விரும்புகிறவர்களுக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் அவற்றை பரத்துவதும் அப்படிப்பட்ட
விகாரமான காரியங்களை செய்வதும் அவற்றை பார்ப்பதும் எவ்வளவு பெரிய குற்றம்?!
‘நடத்தை கெட்டவள்’
என்று அன்னை ஆயிஷா
(ரலி) அவர்கள் மீது களங்கம் கற்பித்த கயவர்கள் விஷயத்தில் இந்த இறைவசனம் இறங்கியது.
ஆனால் இன்று T V யின் மூலம் இந்த வசனத்தின் வாசகத்திற்கு நடைமுறை விளக்கம் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. அரை நிர்வாணக் காட்சிகளால் அரங்கமே அலங்கோலமாகிறது. அந்தக்காட்சிகளை
திரும்பத்திரும்ப பார்ப்பதால் அதன் மீதுள்ள வெறுப்பு வெகுதூரம் சென்று விடுகிறது. அதே
போன்றதொரு அசிங்கம் அகிலம் முழுவதும் அரங்கேறுகிறது. பெற்ற தந்தையுடன் குடும்பம் நடத்துவேன்.
வேறு கணவன் வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு காலம் சென்று விட்டதென்றால் இதை விட மானக்கேடு
வேறென்ன வேண்டும்? குடும்ப சகிதம் அமர்ந்து T V பார்த்தால் இது போன்ற விகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கும்.
அசிங்கம் பகிரங்கலாமா?:
அசிங்கத்தை காட்சியாக்குவதும் அதைப்பார்ப்பதும் ஒரு புறமிருக்கட்டும். அதைப்பற்றி
பேசுவதைக் கூட இஸ்லாம் விரும்பவில்லை. மானக்கேடான காரியங்களுக்கு தண்டனை வழங்கவேண்டுமே
தவிர போதுமான ஆதாரமின்றி அது பற்றி பேசுவதும் அந்தக்காட்சிகள் தொலைக்காட்சியில் பகிரங்கமாவதும்
சமூகத்தில் வித்தியாசமான விகாரமான சிந்தனையைத்தகான் தூண்டிவிடும். ஒருவன் மானக்கேடான
காரியத்தை கண்டால் -தடுக்க முடியவில்லையானால்- கண்டுகொள்ளாமல் போய்விட வேண்டும். விபச்சார
குற்றம் நிரூபணமாவதற்கு நான்கு சாட்சிகள் தேவை. அதாவது நாலு பேர் பார்க்கும் விதத்தில்
ஒருவன் தவறு செய்ய ஆரம்பித்தால் அது சமூகத்தையே கெடுத்துவிடும். நான்கு சாட்சயின்றி
ஓரிருவர் மட்டும் பார்த்துவிட்டு அதை மக்களிடம் பகிரங்கமாக பேசிக் கொண்டிருந்தால் பேசியவனுக்கு
80 கசையடி கொடுக்க
வேண்டும். இது தான் குர்ஆனுடைய சட்டம். குற்றவாளியை தண்டிப்பது அவனுக்காக மட்டுமல்ல.
மக்களுக்கு படிப்பினையாகவும் தான். அசிங்கத்தை ஆதாரமின்றி பேசிப்பேசியே சமூக சிந்தனையை
கெடுப்பவனை சும்மா விடமுடியுமா என்ன?!
கலாச்சார சீரழிவு:
T V யில் வரும் நட்சத்திரங்களையே தங்களுடைய வாழ்க்கை வழிகாட்டியாக
எடுத்துக்கொள்கின்றனர். அவர்களுடைய நடை, உடை, பாவணை அனைத்துமே மாறிப்போய்விடுகிறது. முடி அலங்காரத்தை கூட
சினிமா தான் முடிவு செய்கிறது. தலையில் கூடை நிறைய பிரியாணியை வைத்துக்கொண்டு தெரு
முழுக்க பிச்சை எடுத்த கதையாக குர்ஆன், ஹதிஸ் மூலம் அகிலத்திற்கே வழி காட்ட வேண்டிய முஸ்லிம்
சமுதாயம் சினிமா கலாச்சாரத்திடம் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது வெட்கமாக இல்லையா?
குழந்தை பிறந்தவுடன் காதில் பாங்கு சொல்லவேண்டும். பேச ஆரம்பித்தால் கலிமா சொல்லிக்
கொடுக்க வேண்டுமென்ற உயர்ந்த கலாச்சாரத்தை போதிக்கிறது நமது மார்க்கம். ஆனால் இன்று
T V சப்தத்திலேயே
குழந்தை பிறக்கிறது. வீட்டில் ஓடிக் கொண்டிருக்கும் தாக்கம் குழந்தையின் ஆழ்மனதை பாதிக்கிறது.
பேச ஆரம்பிக்கும் போதே சினிமா நடிகர்களின் பெயரை தெளிவாக உச்சரிக்கத் தெரிகின்றது.
பையன் சினிமா வசனத்தை அதே பாணியில் பேசிக்காட்டுகிறான். அதை பெற்றோர்களும் ரசிக்கின்றனர்.
ஏழு வயதாகும் போது பையனை தொழச் சொல்ல வேண்டுமென்று மார்க்கம் சொல்லித் தந்திருக்கிறது.
அவனுக்கு ஃபாத்திஹா சூராவை சொல்லித் தரக்கூடாதா?
ஒழுக்க சீர்கேடு:
நாங்கள் டிவியில் சினிமா பார்ப்பதில்லை. ரிலாக்ஸுக்காக காமடி மட்டும் தான் பார்க்கிறோம்.
என்று சொல்வார்கள். ஆனால் ஒழுக்க சீர்கேட்டுக்கு அது மட்டுமே போதும். தாய் தன் வயிற்றில்
பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு வேதனையை சகித்துக்கொண்டு குழந்தை பெற்றெடுப்பதென்பது
இயற்கையாக தாயின் மீது அன்பையும் மரியாதையும் ஏற்படுத்தும். குர்ஆனும் இந்த சிரமங்களை
சுட்டிக்காட்டி பெற்-ேர்களுக்கு நன்றி செலுத்தியும் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறும்
அறிவுறுத்துகிறது. “தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடக்கவேண்டுமென்று மனிதனுக்கு நாம் கட்டளையிட்டோம்.
அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனை
பெற்றெடுத்தாள். மேலும் அவனை சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால்குடி மறக்கடிப்பதற்கும்
முப்பது மாதங்கள் ஆகின்றன... ... (அல்குர்ஆன்-46:15) ஆனால் இன்று சினிமாக்கள் அல்லாஹ்வின்
வல்லமையையும் தாயின் சிரமங்களையும் கேலிக்கூத்தாக்கி பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துவதை
மண்ணுக்குள் புதைத்து விடுகின்றன. இது போன்ற காமடிகளையும் இஸ்லாமிய வாலிபர்களும் சிறுவர்களும்
சொல்லி சிரித்துக் கொண்டிருந்தால் நம்முடைய இஸ்லாமுக்கும் ஈமானுக்கும் இலக்கணம் என்னவாக
இருக்குமோ?!
வேதக்காரர்களாகிய (யூத கிருத்தவ) பெண்களை திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தும்
உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய ஆட்சி காலத்தில் மார்க்கத்தில் தடுக்கப்படவில்லையானாலும்
அவர்களை திருமணம் முடிப்பதால் இஸ்லாமிய கலாச்சாரம் இல்லாமல் போய்விடுகிறது. அவர்களுடைய
மதகலாச்சாரத்தை புகுத்துகிறாாகள் என்பதற்காக வேதக்கார பெண்களை திருமணம் செய்யாதீர்கள்
என்று உமர் (ரலி) அவர்கள் தடுத்தார்கள். (தஃப்ஸீரு மஆரிபுல் குர்ஆன்) உமர் (ரலி) அவர்கள்
ஆகுமாக்கப் பட்டதையே தக்க காரணத்துடன் வேண்டாமென்று கூறினார்கள். ஆனால், இன்று கலாச்சார சீர்கேட்டின்
மொத்த உருவமாக இருக்கும் T V யை காரணங்கள் பல கூறி பாதுகாக்க முனைகிறோம்.
No comments:
Post a Comment